
திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் உள்ள எம்.பி க்கள் ரயில்வே வளர்ச்சி திட்டங்கள் குறித்து விவாதிக்க தெற்கு ரயில்வே பொது மேலாளர் தலைமையில் நாளை வெள்ளிக்கிழமை (16ம் தேதி) திருவனந்தபுரத்தில் கூட்டம் நடைபெற இருக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் வருவதால் கன்னியாகுமரி எம்.பி திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் நடைபெறும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்.
இதைப்போல் காவல்கிணறு முதல் திருநெல்வேலி மேலப்பாளையம் வரை உள்ள பகுதிகள் திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதிக்குள் உள்ளது. ஆனால் இந்த பகுதிகள் திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் வருகின்ற காரணத்தால் திருநெல்வேலி எம்.பிக்கும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து இந்த இரண்டு எம்.பிகளும் திருவனந்தபுரத்தில் வைத்து நடைபெறும் எம்.பி க்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு வழங்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் கலந்து கொள்ளும் தமிழக எம்பிக்கள் திருவனந்தபுரத்தில் இருந்து கொல்லம் செங்கோட்டை வழியாக தாம்பரம் வரை செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் தினசரி விரைவு ரயில் ஆக இயக்கவும் திருநெல்வேலி இல் இருந்து மேட்டுப்பாளையம் வழி செல்லும் வாராந்திர சிறப்புரைகளை தினசரி ரயிலாக இயக்கவும் வலியுறுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்
இதுபோல் திருவனந்தபுரம் புனலூர் பயணிகள் ரயிலை செங்கோட்டை வழி மதுரை வரை நீட்டிக்கவும் கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம் கொல்லம் வழியாக புனலூர் வரை எங்கும் வரையிலை செங்கோட்டை வழியாக திருநெல்வேலிக்கு நீடித்து இயக்கவும் நடவடிக்கை எடுக்க தமிழக கேரளா எம்பிக்கள் ரயில்வே உயர் அதிகாரிகளிடம் வலியுறுத்தவும் பொது மக்கள் விரும்புகின்றனர்
தற்போது திருவனந்தபுரம் நாகர்கோவில் டு இரட்டை வழி பாதை பணிகள் மந்த வேகத்தில் நடப்பது விரைந்து செயல்படுத்தவும் திருவனந்தபுரத்திலிருந்து கொல்லம் செங்கோட்டை வழியாக கோயம்புத்தூர் பெங்களூருக்கு விரைவு ரயில் புதிதாக இயக்கவும் ஏற்கனவே மீட்டர் கேஜ் பாதையில் இயங்கிய கோயம்புத்தூர் செங்கோட்டை கொல்லம் ரயிலை மீண்டும் இயக்கவும் பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் தற்போது எர்ணாகுளத்தில் இருந்து கொல்லம் செங்கோட்டை வழியாக வேளாங்கண்ணிக்கு இயங்கும் வாரம் இருமுறை ரயிலை வாரம் மூன்று முறை இயக்கவும் எர்ணாகுளத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு கொல்லம் செங்கோட்டை ராஜபாளையம் மதுரை வழியாக தினசரி ரயில் இயக்கவும் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்
கோரிக்கைகளை நாகர்கோவில் திருநெல்வேலி எம்பிக்கள் மற்றும் கேரளா எம்பிக்கள் தென்னக ரயில்வே பொது மேலாளர் இடம் வலியுறுத்த வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.





