டாஸ்மாக் விபரீதம்: கணவன் தலையில் அம்மிக் கல்லை போட்டுக் கொன்ற மனைவி!

கிரைம் நியூஸ் நெல்லை
murder
murder

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சுப்பிரமணிய பொத்தை தெருவை சேர்ந்தவர் குமார் வயது (40)கூலி தொழிலாளி. மனைவி இசக்கியம்மாள் (37) இரண்டு மகள்கள் அபி (17)அனிதா (15)அஜய் (12).

குமார் சென்னையில் கூலி வேலை பார்த்து வருகிறார். தற்சமயம் வேலை மில்லாமல் வீட்டில் இருந்தார். தினமும் குடித்துவிட்டு மனைவி மற்றும் மகளுடன் சண்டையிட்டு வருவார் என கூறப்படுகிறது.

குமாரின் குடிபோதை நடத்தையின் காரணமாக கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக அவருடன் யாரும் பேச்சு வார்த்தை கிடையாது என அக்கம்பக்கத்தினர் கூறினார்.

மேலும் குமாருக்கு அந்த பகுதியை சேர்ந்த மற்றொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும் இதனால் இசக்கியம்மாளுக்கும் அவர் கணவர் குமாருக்கும் அடிக்கடி சண்டையிட்டு வருவதாகவும் மகள்கள் கண்முண்ணே அசிங்கமாகவும் கெட்டவார்த்தகளில் பேசி மன உளைச்சலுக்கு ஆளாக்கி வந்துள்ளார்.

நேற்று மதியம் குமார் நல்ல குடிபோதையில் இசக்கியம்மாளிடன் சண்டையிட்டு வந்துள்ளார்.. வீட்டில் இருந்த கத்தியை வைத்து மனைவியையும் மகளையும் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார்.

ஆத்திரம் அடைந்த இசக்கியம்மாள் வீட்டில் இருந்த அம்மி கல்லை எடுத்து குமார் தலையில் போட்டுள்ளார். நிலை தடுமாறிய கீழே விழுந்த குமாரை அருகில் கிடைத்த கருங்கல்லை எடுத்து தாயுடன் மகளும் சேர்ந்து தந்தையை கொன்றனர்.

தகவல் அறிந்த அம்பை காவல் துறை கண்காணிப்பாளர் சுபாஷிணி விசாரணை நடத்தினர்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.