
குமரியில் ரூ. 50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
குமரி மாவட்டம் மேலகாட்டு விளை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ண ஜோதி. இவருக்கு நீண்ட கரை பி வில்லேஜ்க்கு உட்பட்ட பகுதியில் 51சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை பதிவு செய்வதற்காக கணபதிபுரம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது, சார்பதிவாளர் பனிமலர் ஜெசிங்டன், பத்திரப்பதிவு செய்வதற்கு ரூபாய் 50 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார்.
இதனையடுத்து, கிருஷ்ண ஜோதி லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் அளித்தார். போலீசாரின் அறிவுறுத்தல்படி 51 சென்ட் நிலத்தை பதிவு செய்ய ரூ 50 ஆயிரத்திற்கான லஞ்சப் பணத்தை சார் பதிவாளர் பனிமய ஜெசிங்டனிடம் கிருஷ்ண ஜோதி கொடுத்தார்.
அப்போது, அங்கு மறைந்திருந்த டிஎஸ்பி மதியழகன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார், பத்திரம் பதிவு செய்வதற்காக லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர் பனிமலர் ஜெசிங்டனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.