அம்பை அருகே கோர்ட் ஊழியர் அடித்து கொலை: மனைவி கைது!

கிரைம் நியூஸ் நெல்லை
murder-2-1
murder-2-1

அம்பை : நெல்லை மாவட்டம் அம்பை  அருகே  கோர்ட்டு ஊழியர்  அடித்து  கொலை செய்யப் பட்டார். இது  தொட‌ர்பாக  அவ‌ர்  மனைவி கைது செய்யப்பட்டார். 

அம்பை  அருகே  மணிமுத்தாறு  ஊரைச் சேர்ந்த  கனகசபாபதி வயத 54 அம்பை  கோர்ட்டில்  எழுத்தராக  பணி  செய்து  வருகிறார்.

இவரை  அவரது  மனைவியே இந்திரா வயது 56 தலையில்  கம்பியால்  அடித்துக்  கொலை  செய்துள்ளார். கொலையை  மறைக்க  குடி  வெறியில்  ஹார்ட் அட்டாக்  வந்து  இறந்த  தாக அடக்கம்  செய்ய  முயன்றுள்ளார். 

ஆனால்  சாவில்  மர்மம் இருப்பதாக கூறி  மணிமுத்தாறு  கிராம நல  அலுவலர்  போலீசில்  புகார் செய்தார்.  
அதைத்  தொடர்ந்து  கனகசபாபதி  உடல்  பாளை  மருத்துவமனைக்கு  பிரேத ப‌ரிசோதனை‌க்காக  போலீசார்  அனுப்பி  வைத்தனர்.

இந்த  மரணம் குறித்து  கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து மனைவி  இந்திராவை  கைது செய்தனர். 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.