October 13, 2024, 11:09 PM
28.8 C
Chennai

கனிமொழியின் தோழி பூங்கோதைக்கு என்ன ஆச்சு? ஏன் தற்கொலை முயற்சி?!

poongothai
poongothai

திமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக இன்று காலை பரபரப்பான தகவல் வெளியானது. அவர் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார் என்று கூறப்பட்டது. இதை அடுத்து அவரை நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அண்மையில் நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்கள் பிரிந்ததை அடுத்து, திமுக மாவட்டங்கள் நான்காக பிரிக்கப்பட்டு பொறுப்பாளர்கள்  நியமிக்கப்பட்டனர். தனக்கு மாவட்ட செயலாளர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த பூங்கோதைக்கு இது பெரும் ஏமாற்றமாக இருந்துள்ளது.    

அண்மையில் தென்காசி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சிவ பத்மநாபன் தலைமையில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில், பெயரளவுக்கு பங்கேற்ற பூங்கோதை, அங்கிருந்து உடனடியாக புறப்பட்டு விட்டாராம்.

இந்நிலையில் நேற்று கடையத்தில் நடந்த திமுக பூத் கமிட்டி கூட்டத்தில் மாவட்ட செயலாளருக்கும் பூங்கோதைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் நிர்வாகிகள் சிலர் பூங்கோதையை அவதூறாக பேசியுள்ளனர். இதை அடுத்து அவர் கையெடுத்து கும்பிட்டபடி வெளியேறியுள்ளார். இதன் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

பின்னர் கூட்டம் நடைபெற்ற இடத்தில் தரையில் அமர்ந்த பூங்கோதை தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.   அப்போது சிவ.பத்மநாபன், கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் சிவனு பாண்டியன் உள்ளிட்டோருக்கும் பூங்கோதைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வேண்டும் என்றே வம்பு வளர்க்கிறீர்களா, வெளியே போய்விட்டு மீண்டும் உள்ளே ஏன் வந்தீர்கள் என ஒருவர் ஆவேசமாகக் கேட்பதும், காலில் கூட விழுகிறேன், ஆளை விடுங்கள் என்பது போல, முன்னால் நிற்பவர்களின் காலைத் தொட்டுத் தொட்டு பூங்கோதை கைகூப்பும் காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. 

ALSO READ:  செங்கோட்டையில் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு 21வது பிறந்தநாள்!

இந்தக் கூட்டத்தில் தான் அவமானப்படுத்தப்பட்டதால் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார் பூங்கோதை. இந்நிலையில் இன்று காலை அவர் வெகு நேரமாகியும் படுக்கையை விட்டு எழவில்லை சந்தேகத்தில் அவரை எழுப்பிய போது அவர் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு தெரியவந்தது. இதையடுத்து அவரை நெல்லையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரது குடும்பத்தினர் அனுமதித்தனர்

அங்கு பூங்கோதை ஆலடி அருணாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதைத் தொடர்ந்து, நெல்லை ஷிஃபா மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், எம்எல்ஏவும் டாக்டருமான பூங்கோதை, சுயநினைவற்ற நிலையில் மருத்துவமனை கொண்டு வரப்பட்டதாகவும், சிகிச்சைக்குப் பிறகு கண்விழித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூங்கோதையின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அதேநேரம் பூங்கோதைக்கு ஐசியூவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டியிருப்பதாகவும் கூறியுள்ள மருத்துவமனை நிர்வாகம், மருத்துவர்கள் குழு அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும்  தெரிவித்துள்ளது

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரவெடி தடையை நீக்க சட்டப்படி நடவடிக்கை: எல்.முருகன் உறுதி!

தீபாவளி சீசன் நேரம் இது உங்களை பார்த்து வாழ்த்துவிட்டு,பிரதமரின் பல திட்டங்களை தங்களிடத்தில் சொல்ல வந்தேன். தங்களை சந்தித்தது மகிழ்ச்சி

சபரிமலை மண்டல மகரவிளக்கு சீஸன்; நவ.15ல் நடை திறப்பு!

திருத்தப்பட்ட நேரங்களுடன் கூடுதலாக, விர்ச்சுவல் வரிசையில் முன்பதிவு செய்பவர்களுக்கு 48 மணி நேர அருள் காலம் வழங்கப்படும்.

மதுரை மாவட்டத்தில் கன மழை!

சாலையில் கழிவு நீர் ஒடின. மதுரை யாகப்ப நகர் எம்.ஜி.ஆர் தெருவில் தேங்கியுள்ள நீரில் இரண்டு வாகனத்தில் சென்ற இருவர் தவறி விழுந்தனர்.

நவராத்திரி திருவிழா; முப்புடாதி அம்மன் திருவீதி உலா!

10ஆம் திருநாளான நேற்று அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்ட மலர் சப்பரத்தில் வாணவேடிக்கை மேளதாளம் முழங்கிட கோவில்

ஜனகை மாரியம்மன் கோயிலில் விஜயதசமி அம்பு எய்தல்!

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் விஜயதசமியை முன்னிட்டு அம்பு எய்தல் நடைபெற்றது