குலசை தசரா பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்..

1767630 kulasekarapatti - 2026
images 2022 09 26T172051.217 - 2026

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் தசரா பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது .தினசரி காலை முதல் இரவு வரை பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடக்கும். வரும் அக் 5-ந்தேதி நள்ளிரவு 12 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறும்.

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா பெருந்திருவிழா தமிழகத்தில் முதல் இடம் வகிக்கும் திருவிழாவாகும். தசரா திருவிழா தொடங்குவதையொட்டி நேற்று நண்பகல் காளி பூஜை நடந்தது. இரவு 9 மணிக்கு அன்னை முத்தாரம்மன் மற்றும் ஞானமூர்த்தீஸ்வரருக்கு காப்பு கட்டப்பட்டது. இன்று காலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிபட்டம் வைத்து கொடிஊர்வலம் முக்கிய தெருக்கள் வழியாக சென்றது. கொடிபட்டம் கோவிலுக்கு வந்ததும், காலை 9 மணிக்கு கோவில் முன்புள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது.

தொடர்ந்து கொடிமரத்திற்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜையும் தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. கோவில் கொடி ஏறியதும், விரதமிருந்து வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கோவிலில் காப்பு வாங்கி தங்களது வலது கையில் கட்டினர். சிலர் பூசாரி கையினாலும் காப்பு கட்டினர்.

ALSO READ:  தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கொடியேற்றம் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகள் கட்டுப்பாடுகளுடன் நடந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு தொற்று பரவல் நீங்கியதையடுத்து தசரா திருவிழாவில் எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. இதனால் தசரா திருவிழா கோலகலத்துடன் தொடங்கி உள்ளது. தசரா திருவிழா தொடங்கியதையொட்டி கோவிலில் தினசரி காலை முதல் இரவு வரை பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடக்கும். தினசரி மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை சமய சொற்பொழிவு மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து வரும். ஒவ்வொரு நாளும் இரவு 9 மணிக்கு ஒவ்வொரு திருக்கோலத்தில் அன்னை முத்தாரம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

வருகிற 5-ந்தேதி நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு பூஜையுடன் அன்னை முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி கடற்கரைக்கு சென்று மகிஷாசுரனை சம்ஹாரம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறும். இதில் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். முன்னதாக வேடம் அணிந்து வந்த பக்தர்கள் ஆடல், பாடல், தப்பாட்டம் கரகாட்டம், போன்ற பல்வேறு கலைஞர்களுடன் ஊர் ஊராகச் சென்று கலை நிகழ்ச்சி நடத்தி அம்மன் பெயரில் காணிக்கை வாங்குவது மிகவும் சிறப்பாகும். மாவட்ட காவல்துறை, போக்குவரத்து துறை, சுகாதாரத்துறை, வருவாய்த்துறை உட்பட பல்வேறு துறை அதிகாரிகள், குலசேகரன்பட்டினத்தில் முகாமிட்டு பக்தர்களுக்கான அனைத்து வசதிகளையும் செய்து வருகின்றனர்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்செந்தூர் குலசேகரன்பட்டினம் உடன்குடி பகுதி முழுவதும் ஆங்காங்கே தசரா பக்தர்களாகவே காட்சி தருகின்றனர். பக்தர்கள் வந்து செல்ல வசதியாக முக்கியமான ஊர்களில் இருந்து குலசேகரன் பட்டினத்திற்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

ஒரு தேசத்தின் ஆன்மா, அதன் மக்கள் தாம்.  மேலும் அந்த தேசத்தின் மக்கள் உறுதி பூண்டார்கள் என்று சொன்னால், எந்த ஒரு சக்தியாலும் அவர்களை அவர்களின் கனவிலிருந்து அகற்றிவிட முடியாது.   தேச நிர்மாணத்திலே மக்களின் பங்களிப்பின் இந்தச் சக்தி

கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

ஆண் பெண் உறவை நெறிப்படுத்த தர்மமும் மரபும் சில விதிமுறைகளை வகுத்தன. அவை குடும்ப அமைப்பை வலுப்படுத்தவும், சமுதாயத்தில் ஒழுக்கம்,  பண்பாடு, பாதுகாப்பு போன்றவற்றைப் பேணவும் உதவுகின்றன. 

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories