தூத்துக்குடியில் பட்டபகலில் வழக்குரைஞர் வெட்டிக் கொலை..

vikatan 2023 02 750262d8 d771 4adf 8aab 285173903ca9 IMG 20230222 WA0036 - 2026

தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியில் வழக்குரைஞர் ஒருவர் மர்ம நபர்களால் புதன்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.முன் விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என்று கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி அய்யனடைப்பு சோரீஸ்புரம் பகுதியைச் சேர்ந்த பிச்சைக்கண்ணு மகன் முத்துக்குமார் (43). இவர் தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணியாற்றி வந்தார். மேலும் இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நகை கடன் வழங்கும் நிதி நிறுவனம் நடத்தி வந்தார்.

இந்நிலையில், இவர் புதன்கிழமை மதியம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தனது நிதி நிறுவனத்தில் இருந்தாராம். அப்போது, அங்கு 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள், முத்துக்குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும், தற்போது கொலை செய்யப்பட்ட முத்துக்குமாரின் சகோதரர் சிவக்குமார் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் தூத்துக்குடி நீதிமன்றத்தின் அருகே மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முத்துக்குமார் சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்தார்.

எனவே, இதன் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என  காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும், இது குறித்து  காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தூத்துக்குடி கோரம்பள்ளத்தை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது சகோதரர்  கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ராஜேஷ் மற்றும் முத்துக்குமார் குடும்பத்தினருடைய முன் விரோதம் இருந்துள்ளது இதை அடுத்து 2019 ஆம் ஆண்டு முத்துக்குமாரின் தம்பி சிவக்குமார் தூத்துக்குடி நீதிமன்றம் அருகே வைத்து படுகொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் இன்று பிற்பகல் வழக்கறிஞர் முத்துக்குமார் நீதிமன்றத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள சோரிஸ் புரத்தில்  உள்ள தனது நகை அடகு கடைக்கு காரில் வந்துள்ளார். அப்போது காரிலிருந்து இறங்கும் போது ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை கீழே இழுத்துப் விட்டு, விரட்டி அவரது அலுவலகம் முன்பு கொடூரமாக வெட்டி படுகொலை செய்துள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த சிப்காட் காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று முத்துக்குமார் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

Entertainment News

Popular Categories