செங்கோட்டை, ஜன, 10: செங்கோட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் வைத்து பொங்கல் பண்டிகைக்கு ஒரு சில நாட்களில் இருக்கும் நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சமத்துவ பொங்கல் விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அரசு மருத்துவமனையில் புகையில்லா சமத்துவ பொங்கல் விழா மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது விழாவிற்கு தலைமை மருத்துவர் டாக்டர் ராஜேஷ்கண்ணா தலைமைதாங்கினார்.
மருத்துவர்கள் செவிலியர்கள் முன்னிலை வகித்தனா். ஆய்வக ஆய்வக நுட்பனர் ஹரிஹரநாராயணன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
பின்னா் மருத்துவமனை வளாகத்தில் படையலிட்டு புகையில்லா பொங்கல் வைத்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. அதனைதொடா்ந்து செவிலியா், மருத்துவா்கள், பணியாளா்களுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு செங்கோட்டை செல்வகணபதி மார்க்கெட்டிங் உரிமையாளர் ராஜி செல்வகணேஷ் மற்றும் தொழிலதிபர்கள் ரேகா, ரமேஷ், கணக்கப்பிள்ளைவலசை சண்முகத்தாய் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். டாக்டர்சுரேஷ், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.
முடிவில் மருந்தாளுநர் அப்பாஸ் மீரான் நன்றி கூறினார். விழாவில் மருத்துவா்கள், செவிலியா்கள், அலுவலக பணியாளர்கள் சமூக ஆர்வலா்கள், மருத்துவமனை ஆலோசனைக்குழு உறுப்பினா்கள், பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனர்.