நெல்லை மாவட்டத்தில் பழமையான மற்றும் புகழ் பெற்ற சிவ தலங்களுள் ஒன்று தென்காசியில் அமைந்துள்ள காசிவிஸ்வநாதர் ஆலயம். இந்த ஆலயத்தில் ஐப்பசி கல்யான திருவிழா கடந்த வாரம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் கடந்த 02.11.2018 அன்று நடைபெற்றது.
தேரோட்டத்தின் போது, அதில் வடம் பிடிக்கும் இரும்பு சங்கிலி பாராமரிப்பு இல்லாமல் அறுந்து விழுந்தது. இதனால் பக்தர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. அன்று முதல் இன்று வரை தென்காசி காசி விஸ்வநாதர் ஆலய நிர்வாகம் வடம் பிடித்து இழுக்கும் இரும்பு சங்கிலியை பரமரிப்பு இல்லாமல் கோவில் வாசலிலேயே தேங்கி இருக்கும் தண்ணீரில் போட்டு வைத்துள்ளது.
இப்படி இரும்புச் சங்கிலியை பராமரிப்பு இன்றி போட்டு வைத்தால், தேரோட்டத்தின் போது இத்துப் போய் வலுவிழந்த சங்கிலி அறுந்து போகாமல், ஒட்டிக் கொண்டா இருக்கும் என்று கேள்வி எழுப்புகின்றனர் பக்தர்கள்.
அறநிலையத்துறையின் இந்த அலட்சியமான போக்கு, பக்தர்கள் மற்றும் சிவனடியார்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இனியாவது உரிய நடவடிக்கை எடுக்குமா இந்து சமய அறநிலையத் துறை?
செய்தி: தென்காசி செய்தியாளர்
தேரோட்டத்தின் போது தேர் வட சங்கிலி அறுந்து போன காட்சி.. (வீடியோ)




