புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பழைய கோவில்பட்டி மஹா ஸ்ரீ திரிசூல பிடாரிஅம்மன் ஆலய கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது
விழாவையொட்டி ஸ்ரீ திரிசூல பிடாரிஅம்மன் யாக சாலையில் சித்தர் ராமதேவர் செல்வக்குமார் முன்னிலையில் யாக பூஜை தொடங்கியது. பின்னர் நவக்கிரக ஹோமம்,கோபூஜை மகாலட்சுமி ஹோமம், தீபாராதனை, நடைபெற்றது .தொடர்ந்து , யாகசாலையில் இருந்து பூசாரிகள் புனிதநீர் கலச குடங்களை வாத்திய முழக்கத்துடன் கொண்டுவந்தனர் கலச கடங்கள் கோவிலை வலம் வந்து விமானம், மூலாலயம் சேர்ந்தது பின்னர் கோபுர கலசத்தில் சித்தர் ராமத்தேவர் முன்னிலையில் கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் வெகு சிறப்பாகநடைபெற்றது.
ஆலயத்தில் மூலவர் பிடாரிஅம்மனுக்கு கலச புனித நீர் அபிஷேகம் தீபாராதனை நடந்தது. பின்னர் பிடாரிஅம்மன் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.கும்பாபிஷேக நிகழ்ச்சியில் அரசிய கட்சி பிரமுகர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள், பல்வேறுத்துறை அதிகாரிகள் பஞ்சாயத்து தலைவர்கள், மற்றும் இந்துசமய அறநிலையத்துறை திருக்கோவில் அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் இளைஞர்கள் பக்தர்கள் பங்கேற்றனர்.
புதுக்கோட்டை கோவில்பட்டி சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து பக்தர்கள் வருகை தந்து வழிபட்டனர். அனைவருக்கும்அன்னதானம் பிரசாதம் வழங்கப்பட்டது விழா ஏற்பாடுகளை நிர்வாகிகள் ,டாக்டர் ராமமூர்த்தி, ராமுக்கண்ணு, மற்றும் கோவில்பட்டி மஹா ஸ்ரீ திரிசூல பிடாரிஅம்மன் விழா குழுவினர்கள் பொது மக்கள் இளைஞர்கள் சிறப்பாக செய்தனர்
- டீலக்ஸ் சேகர், புதுக்கோட்டை