தஞ்சை  ஜல்லிக்கட்டு -26 பேர் காயம்-ஒரு காளை உயிரிழப்பு..

images 2023 03 04T190641.617 - 2026

தஞ்சாவூர் அருகே மாதாக்கோட்டையில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், காளைகள் முட்டியதில் 26 பேர் காயமடைந்தனர். மேலும், வாடிவாசலில் இருந்து வெளியே வந்த ஒரு காளை மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தது.

தஞ்சாவூர் அருகே மாதாக்கோட்டையில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில், 652 காளைகள், 370 வீரர்கள் கலந்துக்கொண்டனர். காளைகளையும், வீரர்களையும் மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்து களத்துக்குள் அனுப்பினர். தொடர்ந்து, ஜல்லிக்கட்டு போட்டியை தஞ்சாவூர் கோட்டாட்சியர் எம்.ரஞ்சித் துவக்கி வைத்தார். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் வாஷிங்மிஷின், ப்ரிட்ஜ், பீரோ, கட்டில், சைக்கிள், எவர்சில்வர் குடம், குவளை உள்ளிட்ட பல பரிசுப் பொருட்கள் உடனுக்குடன் வழங்கப்பட்டது.

1677932251355.jfif 1 - 2026
உயிரிழந்த காளை

அவிழ்த்து விடப்பட்ட காளையை அடக்க முயன்ற 9 வீரர்கள், 16 காளை உரிமையாளர்கள், ஒரு பார்வையாளர் என 26 காயமடைந்தனர். இதில் 12 பேர் உள்நோயாளிகளாக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்ககாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காலையில் தொடங்கிய ஜல்லிக்கட்டு மாலை 4.30 மணி வரை நடைபெற்றது. ஒவ்வொரு ஒரு மணி நேரத்துக்கும் 50 பேர் கொண்ட வீரர்கள் மாடு பிடிக்க களமிறக்கப்பட்டனர். தமிழ் பல்கலைகழக போலீஸார் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.

 இந்நிலையில், அரியலுார் மாவட்டம் வெங்கனுார் கிராமத்தை சேர்ந்த முத்துக்குமார் என்பவரது காளை ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றது. தொடர்ந்து, காளை வடிவாசலை விட்டு வெளியே ஓடியது. காளை உரிமையாளர் பிடிக்க துரத்திச் சென்றார். அப்போது, காளை மாதாக்கோட்டை பைபாஸ் மேம்பாலத்தின் மீது ஏறி ஓடியபோது, பாலத்தின் மேலே இருந்து கீழே தவறி விழுந்து அதே இடத்திலேயே உயிரிழந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories