











செங்கோட்டையில் ஆற்றங்கரைத் தெருவை அடுத்து, ஆற்றங்கரையை ஒட்டி, அமைந்திருக்கிறது ஸ்ரீ நித்யகல்யாணி அம்மன். செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் அனைவரும் காலை மாலை வேளைகளில் சென்று வணங்குவார்கள்.
சிறுவயதிலிருந்தே எனக்கு வீட்டுத் திண்ணையில் படுத்து தூங்கிதான் பழக்கம். கொசு கடித்தால், அதற்கு ஒரு வலை கட்டிக் கொண்டு, திண்ணையில் படுத்துக் கொள்வேன். சில நேரங்களில் திருடர்கள் யாரேனும் வருவதுபோல் தெரிந்தால், துரத்துவதற்கென்று ஒரு இளைஞர் பட்டாளமே இருக்கும்.
நள்ளிரவு நேரங்களில் கல்யாணி அம்பாள் தெருவில் வருவாள் என்று சில பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அப்போது சலங்கை சத்தம் கேட்கும் என்றும் சொல்லியிருந்தார்கள். அந்த எண்ணம் என் மனத்துக்குள் இருந்ததால், கண் முழிப்பு வரும் இரவு நேரங்களில் என் காதுகளிலும் சலங்கை சத்தம் கேட்கும். ஆனால் எதற்காகவும் பயம் கொண்டதில்லை. அச்சமற்ற வாழ்க்கையை அந்த கிராமப்புறம்தான் வழங்கியது. பெரியவர்கள் சொல்வார்கள்… அம்பாள்தாண்டா வரா…. எதுக்கு பயப்படணும்? என்பார்கள்.
என் நண்பன் ஒருவர். பெயர் துரை பாண்டி. சூரிய பாண்டியன் என்று பெயரை வைத்துக் கொண்டான். தற்போது, ரயில்வேயில் ஆர்.பி.எப். காவலராக பணிபுரிகிறான். பள்ளி நாட்களின்போது, இப்படித்தான் அவன் வீட்டுத் திண்ணையில் படுத்துக் கொண்டிருந்தான். சீசன் சமயம் என்பதால், நள்ளிரவில் மழை தூரத் தொடங்கியது. அப்படியே எழுந்து, பக்கத்தில் இருக்கும் அவன் தெருவில் இருந்து நடந்து வந்து, எங்கள் ஆற்றங்கரைத் தெரு வழியே வந்து, கல்யாணி அம்மன் கோயிலுக்குச் செல்லும் பாலத்துக்கு மேலே நின்றுகொண்டிருக்கிறான். யாரோ அவனை பாலத்துக்கு கூட்டி வந்திருக்கிறார்கள் போல் அவனுக்குத் தெரிந்திருக்கிறது. மழைத் துளி பட்டு திடீரென்று கண்விழித்துப் பார்த்தால்…
கீழே ஆற்றங்கரை ஓடிக்கொண்டிருக்கிறது.
இத்தனைக்கும், தெருவில் தேங்கியிருக்கும் மழை நீர் காலில் படாமல் தாவித் தாவி நடந்து வந்திருக்கிறான் – அதுவும் பிரக்ஞையில்லாமல்!
நல்லவேளையாக, அவனை கல்யாணித்தாயே காப்பாற்றியிருக்கிறாள் என்று பெரியவர்கள் சொல்லி, அதுமுதல் அவன் தெருவில் தூக்கம் போட வீட்டில் தடா போட்டார்கள்.
இப்படி எத்தனையோ அனுபவங்கள் பலருக்கு இருக்கின்றது.
இன்றளவும் முன்னினும் சிறப்பாக, நித்யகல்யாணி அம்மன் கோயிலுக்கு சிறப்புகளை செய்து பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள். அந்தக் கோயிலின் புகைப்படங்கள் இங்கே…







One of the detailed and elabirate summary of the Temple
And an impressive and inspiring collection of photos
please keep it up
I am also one of the devototees hailing from Senkottah
I am a native of Shencottah- mada theru. Read about Nithyakalyani amman temple. I had been to this temple.
By chance go u have Tel number it address of this tempke office gor organising some pooja.
I am a native of Shencottah- mada theru. Read about Nithyakalyani amman temple. I had been to this temple.
By chance go u have Tel number it address of this tempke office gor organising some pooja.