stalin photo shoot1
stalin photo shoot1

உங்களை நம்பித்தான் கழுத்துல கைல கிடந்த தங்கத்தை எல்லாம் பேங்க்ல அடமானம் வச்சி விவசாயம் செய்தோம்.
எப்போ முதல்வரே கடனை ரத்து பண்ணுவீங்க..?

டாஸ்மாக் சாராய கடையை மூடுவோம்னு நீங்க சொன்னதை நம்பி ஓட்டு போட்டோம். எப்போ எங்க தாலியை காப்பாத்துவீங்க முதல்வரே ?

மாசம் ஆயிரம் ரூபாய் தருவேன்னு சொன்னதை நம்பித்தான் ஓட்டு போட்டோம். எப்போ தருவீங்க முதல்வரே..?

நீங்க சொன்ன மாதிரி நீட்டை ரத்து பண்ணிட்டா எங்க வீட்டு புள்ளைகளும் டாக்டராகும்ன்னு நம்பித்தான் ஓட்டு போட்டோம்.
அதுங்க உங்களை நம்பி சாகுறதுதான் மிச்சம், எப்போ ரத்து பண்ணுவீங்க முதல்வரே..?

பெட்ரோல் டீசல் விலையெல்லாம் ஏறிட்டே போகுது, விளைஞ்ச காய்கறிகளெல்லாம் போக்குவரத்து செலவுக்கு தான் விக்குது. GSTயில வந்தா விலை குறையுமாம் ஆனா நீங்க எதிர்கிறீங்களாம்
நாங்க வயித்து பாட்டுக்கும் எங்க புள்ள குட்டிகள வளர்த்து கரை சேர்க்குறதுக்கு என்ன பண்ணுறது முதல்வரே..?

இதையெல்லாம் இங்கே எந்த ஊடகமும் கேப்பாரில்ல, அந்த சாமிக்கிட்டேயாவது சொல்லி அழலாம்ன்னு பார்த்தால் அதையும் பூட்டி வச்சிடீங்க. எப்போதான் கோயிலை திறப்பீங்க முதல்வரே..?

எங்களுக்கு விடியல் எப்போ தான் கிடைக்கும். அதையாவது சொல்லுங்க முதல்வரே..?

கருத்து: கா.குற்றாலநாதன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending