ஸ்வீட் பணியாரம்
தேவையானவை:
கோதுமை மாவு – 4 கப்,
அரிசி மாவு – ஒரு கப்,
வாழைப்பழம் – ஒன்று,
வெல்லம் – ஒன்றரை கப்,
ஏலக்காய்த்தூள் – சிறிதளவு,
எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை: வெல்லத்துடன் அது மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து, ஒரு கொதிவிட்டு இறக்கி வடிகட்டவும். இதனுடன் ஏலக்காய்த்தூள், மசித்த வாழைப்பழம், கோதுமை மாவு, அரிசி மாவு சேர்த்து, கெட்டியாகக் கரைக்கவும். அரை மணி நேரம் அப்படியே வைக்கவும். பிறகு, வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, மாவை சிறிய கரண்டியால் எடுத்து ஊற்றி, நன்கு வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: மாவை குழிப்பணியாரக் கல்லிலும் ஊற்றி எடுக்கலாம்.