கொரொனா பற்றி ஆய்வு செய்யும் சர்வதேச விஞ்ஞானிகள் அரண்டுபோய் நிற்கின்றார்கள், அவர்கள் முழு கவனமும் இந்திய தமிழக மாகாணம் பக்கம் திரும்பியிருக்கின்றது
கொரோனா உருவான யுகானின் சீன விஞ்ஞானிகள் முதல் அதற்கு தடுப்பு மருந்து தேடி ஆய்வுகளில் மூழ்கிய அமெரிக்க, ரஷ்ய, பிரிட்டிஷ் விஞ்ஞானிகளெல்லாம் இந்திய தமிழகத்திற்கு வர அவசரமாக கிளம்பிவிட்டனர், சிலர் விசா இல்லாமலே வந்து கொண்டிருக்கின்றனர்
பைசர், சைனோவிக், ஸ்புட்னிக், அஸ்ரா செனிக்கா போன்ற மருந்து நிறுவணங்கள் குழப்பத்தின் உச்சியில் உள்ளன. அவர்களால் இதை நம்பவே முடியாத நிலையில் திகைக்கின்றார்கள்
அமெரிக்க ரஷ்ய விண்கலமெல்லாம் தமிழக பக்கம் திருப்பி விடபட்டு கண்காணிக்கபடுகின்றன, சீனாவே குழம்பி போய் உள்ளது
ஆம், உருமாறிய கொரோனா வைரஸ்களில் ஏகபட்ட பிரிவுகள் உண்டு, டெல்டா வரை ஆபத்தானது
ஆனால் இந்தியாவின் தமிழக மாகாணத்தில் ஒரு கொரோனா கிருமி உள்ளது, இது ஆச்சரியமானது
அது கிறிஸ்தவ ஆலயத்தில் பரவாது, மசூதிகளில் பரவாது, தியேட்டர் மதுகடை பீச் போன்றவற்றிலும் பரவாது
சட்டசபை கூட்டமோ, தேர்தல் கூட்டத்திலோ பரவாது, பேருந்து நிலையம், ரயில் நிலையம், சந்தை, மீன்கடை, பள்ளி கல்லூரிகளெல்லாம் பரவாது
மேற்சொன்ன இடங்களில் கொரோனா கிருமியினை வலிய விட்டாலும் தற்கொலை செய்கின்றன
ஆனால் தமிழக இந்து ஆலயங்கள், இந்து திருவிழாக்கள், இந்து வழிபாடுகள் நடக்கும் இடத்தில் மட்டும் அக்கிருமி வெறியோடு பரவுமாம், இதனால் இந்து ஆலயங்களை பூட்டி அதன் விழாக்கள் எல்லாம் தடை செய்யபட்டிருகின்றன
இது இந்திய அரசின் இதர மாநிலங்களுக்கே மகா ஆச்சரியமான நிலையில் தலைநகர் டெல்லி இதுபற்றி ஆய்வுசெய்ய சர்வதேச விஞ்ஞானிகளுக்கு அழைப்பு விடுத்ததாக தெரிகின்றது
இதனால் உலகின் மொத்த கவனமும் தமிழக இந்து ஆலயத்தின் மேல் திரும்பியுள்ளன, ஏதோ ஒரு சக்தி அங்கே மட்டும் செத்துபோன கொரோனா கிருமிகளை உயிர்பித்து கொண்டிருக்கும் அதிசயம் பலத்த சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது
இலங்கையில் குறிப்பிட்ட நாளில் கடல் நீரில் விளக்கு எரிவது போல் இங்கு இந்து பண்டிகை காலங்களில் மட்டும் உருவாகும் கொரோனா உலகை உலுக்கியுள்ளது
கோவிலை தாண்டி இந்து சடங்குகள் நடக்கும் கடற்கரை, ஆற்றங்கரையிலும் இவை குபீர் என உயிர்பெற்றுவிடுமாம்
இந்த புதியவகை கொரோனாவுக்கு என்ன பெயர் இடுவார்கள் என இனிதான் தெரியவரும் எனினும் நாம் சில பெயர்களை முன்மொழியலாம்
அந்த உருமாறிய கொரோனாவின் பெயர்கள் “திராவிடம் ஸ்குவர்” “ஈ.ரேம்சாமி டெல்டா” “ஆண்ணா ஆல்பா” “கருணாநிதி தீட்டா” “காடுவெல் கால்குலஸ்” என இருந்தால் அர்த்தமானது
தமிழக இந்து ஆலயங்களில் மட்டும் பரவும் இந்த கொடூர வைரஸ் பற்றி விரைவில் பரபரப்பு அறிக்கைகள் வரும், நாமும் உங்களோடு ஆவலாக காத்திருக்கின்றோம்
~ ஸ்டான்லி ராஜன்