பசலை சூப்
தேவையானவை:
பசலைக்கீரை – ஒரு கட்டு,
ஃப்ரெஷ் கிரீம் – சிறிதளவு,
வெங்காயம், தக்காளி – தலா ஒன்று, கார்ன்ஃப்ளார் (சோள மாவு), வெண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன்,
மிளகுத்தூள், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
பசலைக்கீரையை சுத்தம் செய்து கழுவி, பொடியாக நறுக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். வாணலியில் வெண்ணெய் விட்டு உருக்கி… வெங்காயம், தக்காளி, கீரை, உப்பு சேர்த்து வதக்கி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேகவிட்டு இறக்கவும். ஆறிய பின் மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். கார்ன்ஃப்ளாரை சிறிதளவு தண்ணீரில் கரைத்து விழுதுடன் சேர்த்து சூடாக்கி, தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, ஒரு கொதிவிட்டு இறக்கவும். ஃப்ரெஷ் க்ரீம், மிளகுத்தூள் சேர்த்துப் பரிமாறவும்.