செல்’ல’போன் மொழி!

செல்போன் மொழியில உங்க மொழியும் சேர்ந்துடுச்சாம் மிஸ்டர் பிரைம் மினிஸ்டர்!
என்ன சொல்லுறீங்க!
மீட்டிங் ஹாலுல பேசுற காமா சோமா பார்ட்டிங்கல்லாம் இப்ப மைக்க புடிச்ச உடனே இதைத்தான் சொல்லுறாங்க… அதுவும் உங்களுக்கு புகழாரம் சூட்டிக்கிட்டே!
அப்படி என்ன சொல்லுறாங்கஜி
உங்க செல்போனை எல்லாம் சைலண்ட் மோட்ல போடுக்குங்க… அப்படின்னு சொல்லிக்கிட்டிருந்தவங்க எல்லாம் இப்போ உங்க செல்போனை மன்மோகன்சிங் மோடுல போடுங்கன்னு தெனாவட்டா பேசுறானுங்க…
அடடே அப்படியா?
அட இதுக்காவது உங்க மௌனத்தை கலைச்சீங்களே… அப்படியே ஊழல் ஒழிப்புல தீவிரமா இருக்கோம்னு உலகத்துக்கு காட்ட, எங்க கட்சி ஒழிப்புல மட்டும் இறங்கிட்டீங்க போலிருக்கு…
அட… அதெல்லாம் ஒண்ணுமில்லே… எல்லாம் நியாயப்படிதானே நடக்குது!
ஆமா… ஆமா …. அந்த ஊழல் ஒளிப்பு நியாயத்தைத்தான் எங்க கட்சின்னும் பாக்காம  செய்யிறோம்னு மேடமும் சொன்னாங்க.!!!!