ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட குள்ளம்பாளையம், கோபிசெட்டிபாளையம் கரட்டிபாளையம் பெரியகொடிவேரி கெட்டிச்செவியூா் ஆகிய இடங்களில் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்களில் நடைபெற்ற பொங்கல் தொகுப்பு வழங்கும் விழாவில் கலந்து கொண்டார் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்!
4500 க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரா்களுக்கு வேட்டி சேலை அரிசி உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 வழங்கி சிறப்புரை நிகழ்த்தினார்.
இவ்விழாவில் திருப்பூா் நாடாளுமன்ற உறுப்பினா் சத்தியபாமா மாவட்ட ஆட்சியா் கதிரவன் ஆகியோர் உட்பட அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் நடைபெற்ற பொங்கல் பரிசுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் பின்னர் செய்தியாளா்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர்,
இந்தியநாடே வியக்கும் அளவிற்கு பொங்கல் பரிசுப் பொருட்களுடன் ஆயிரம் ரூபாய் வழங்கும் நிகழ்ச்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. சா்க்கரை குடும்ப அட்டைதாரா்களுக்கும் பொங்கல் பரிசு பொருட்களுடன் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும்…
பள்ளிக் கல்வித் துறைக்காக ஒரு ஸ்டியோ உருவாக்கப்படும். கல்வியாளா்களின் கருத்துக்களை மாணவா்களிடம் எடுத்துச்செல்ல புதிய தொலைக்காட்சி சேனல் உருவாக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
எல்லா மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்க வேண்டும் என்ற நோக்கில் அரசு செயல்படுகிறது. 11,12 ஆம் வகுப்பு மாணவா்களுக்கும் 12ஆம் வகுப்பு முடித்துச் சென்ற மாணவா்களுக்கும் ஜனவரி மாதம் இறுதிக்குள் மடிக்கணினிகள் வழங்கப்படும்.
9,10 ஆம் வகுப்பு மாணவா்களுக்கும் மடிக்கணினிகள் வழங்க மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. மத்திய அரசின் முடிவுக்கு பிறகு அறிவிக்கப்படும்.
மாணவா்கள் ஆங்கில பயிற்சி பெற வரும் கல்வியாண்டில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் வரும் 21ஆம் தேதி எல்கேஜி யூகேசி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளது
மாணவா்கள் சோ்க்கையை அதிகரிக்கவும் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
கோபிசெட்டிபாளையம்
தொகுதியில் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக நிதி ஒதுக்கப் பட்டுள்ளது.
கோபி நகராட்சிக்கு புதிய குடிநீா் திட்டத்திற்காக ரூ.51 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
வீடற்றவா் குடும்பங்களுக்கு குடும்பத்துக்கு ஒரு வீடு வழங்கம் நிகழ்ச்சி விரைவில் நடைபெறவுள்ளது என்றார் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்.
கே.ஏ.செங்கோட்டையனின் செய்தியாளர் சந்திப்பு வீடியோ…