
குடிபோதையில் வாடகைக் காரை தாறுமாறாக ஓட்டிச்சென்ற இளைஞரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர்.
சென்னையை அடுத்த பம்மல் அம்பேத்கர் சாலையில் பொழிச்சலூரிலிருந்து பம்மல் அம்பேத்கர் சாலை வழியாக கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. கார் சாலையில் சீரற்ற வகையில் தாறுமாறாக வந்ததைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அப்போது, சாலையில் முன்னே சென்றுகொண்டிருந்த இரண்டு சக்கர வாகன ஓட்டிகள், சாலையில் நடந்து சென்ற.பொதுமக்கள் என கண்மூடித்தனமாக மோதிவிட்டு, கார் சென்று கொண்டிருந்தது. இதனைக் கண்டு அதிர்ந்த மக்கள், ஓடிச் சென்று அந்தக் காரை மடக்கிப் பிடித்தனர்.
பின்னர் காரிலிருந்து இளைஞர்கள் இருவரையும் காரை விட்டு கீழே இறங்குமாறு வற்புறுத்தினர். ஆனால் அந்த இருவரும், தன்னிலை மறந்து குடிபோதையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், பம்மல் சங்கர்நகர் காவல்நிலையத்திற்கு புகார் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த அந்த இடத்துக்கு வந்த காவல்துறையினர், ஓட்டுநர் தன்ராஜ் மற்றும்.துரை என்ற இருவரையும் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தச் சம்பவத்தால், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வீடியோ…