மோதிரத்த களவாண்டுட்டு… மண்பானைய கொடுத்துட்டீங்க போலிருக்கே!

Published:

stalin campaign - 2026

என்ன சாமீ… பூணூல தைரியமா வெளிய போட்டுட்டு போறளவுக்கு உங்களுக் கெல்லாம் எங்க மேல பயம் விட்டுப்போச்சு போல ?

ஆமாண்டா அம்பி, கேடுகெட்ட பசங்க ஆட்சி செஞ்சா… சாமி பூணூல் போட்டாலும் அறுக்குறா… மாமி செயின் போட்டாலும் அறுக்கறா. இப்பதான் கொஞ்சம் நிம்மதியா இருக்கோம்…

வண்டி எல்லாம் வாங்கி செழிப்பா இருக்கீங்க போல ?

இது… அப்பனோட திருட்டு சொத்துலயோ, இடஒதுக்கீட்டு யாசகத்துலயோ, ஓசி சோத்துலயோ வாங்குனதில்லடா அம்பி… உழைப்புல வாங்குனது

கோயில்ல மணியடிக்குறதுகூட உழைப்புல வருமாசாமீ ?

மேடைல… தப்புதப்பா நாலுபழமொழி சொல்றதவே, ஆடிட்டர வெச்சு உழைப்பு கணக்குல சேர்த்து, தனி பிளைட் வாங்கும் போது… ஜனங்களோட ஆத்ம திருப்திக்காக கோவில்ல மணியடிச்சு ஒரு டிவிஎஸ் வாங்குனது, உனக்கு பொறுக்கலையாடா அம்பி?

சரி சாமீ… பாத்து எங்களுக்கு ஓட்டுபோடுங்க…

இன்னும் நாலு தலைமுறைக்கு… உங்கள எதுத்து எந்த கழுத நின்னாலும் அதுக்கு வெறி கொண்டு ஓட்டு போடுறளவுக்கு, உன்னோட தோப்பனார் எங்களுக்கு செஞ்சுண்டு போயிருக்கார். இப்ப நீ வேற வந்திருக்கே… பேஷா போட்றலாம்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பழசெல்லாம் மனசுல வெச்சுக்காதீங்க. கையக் குடுங்க சாமீ… தீட்டு பட்றுமா ?

கட்டைல போற காலத்துல கூட… திமுககாரனுக்கு நக்கல் போகாதுடா அம்பி. தீட்டுக்காக கைய குடுக்க தயங்கல, ஒரு நிமிஷம் இரு… மோதிரத்த கைமாத்தி போட்டுக்கறேன். ஏன்னா… உங்க வரலாறு அப்படி !!! ????????????

கருத்து: சக்தி வெங்கடேசன்

Related articles

Recent articles

spot_img