
பாஜக., மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி, இன்று தனது 80வது பிறந்த நாளை திரு அயோத்தியில் கொண்டாடினார்.
அயோத்தியில் உள்ள காஞ்சி மடத்தில் இன்று காலை மிருத்யுஞ்சய ஹோமம், நவக்கிரக யோமம் உள்ளிட்ட ஹோமங்கள் நடைபெற்றன. அந்த நிகழ்ச்சிகளில் சுப்பிரமணியம் சுவாமி கலந்து கொண்டு, ஹோமம் செய்து பெரியோர்களின் ஆசிகள் பெற்றார்.

அயோத்தியில் தனது 80வது பிறந்த நாளைக் கொண்டாடியதற்காக பலரும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் சுப்பிரமணியம் சுவாமிக்குத் தெரிவித்துள்ளனர். கூடிய விரைவில் சதாபிஷேக சாந்தியை அவர் அயோத்தியில் அமையும் ராமர் கோயிலில் நடத்திக் கொள்வார் என்று தங்கள் வாழ்த்துகளையும் அவருக்கு தெரிவித்துள்ளனர்.

சுப்பிரமணியம் சுவாமியின் பிறந்த நாளைக் கொண்டாட விராட் ஹிந்துஸ்தான் சங்கம் ஏற்பாடுகளைச் செய்து வந்தது. ராமசேது பிரச்னையில் முக்கியப் பங்காற்றி பாதுகாத்த ஹிந்துத்துவ போராளி , ராமர் கோயில் அமைவதில் முக்கியப் பங்காற்றுபவர் என்றெல்லாம் அவரைப் பாராட்டி வாழ்த்துகள் பகிரப் படுகின்றன

அயோத்தியில் உள்ள ராம்சரித மானஸ் பவனில், மஹந்த் ஸ்ரீ ந்ருத்யகோபால் தாஸ் தலைமையில் நிகழ்ச்சி நடைபெறுகிறது!




