
இந்தியாவுடன் வழக்கமான போர் வந்தால், பாகிஸ்தான் தோல்வி அடையும் என பாக்., பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.
இம்ரான் கான், டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: நாங்கள் ஒரு போதும் அணு ஆயுத போரில் ஈடுபட மாட்டோம் என்பதில் தெளிவாக உள்ளேன். இரண்டு அணு ஆயுத நாடுகள் வழக்கமாக போரில் ஈடுபட்டால், அந்த போர், பெரும்பாலும் அணு ஆயுத போரில் தான் முடியும்.
போர் ஏற்படுவதில் இருந்து கடவுள் எங்களை தடுத்திருக்கிறார். இந்த போர், ஏற்பட்டால் பாகிஸ்தான் தோல்வி அடையும். போரில், ஒரு நாட்டிற்கு இரண்டு வாய்ப்புகள் கிடைக்கும். ஒன்று சரண் அடைவது. மற்றொன்று, தங்களின் சுதந்திரத்திற்காக மரணம் வரை போரிடுவது. இதில், பாகிஸ்தான், இரண்டாவது வாய்ப்பிற்காக தான் போராடும். ஓரு அணுஆயுத சக்தி நாடு மரணம் வரை போரிட்டால், அதனால், பல பின் விளைவுகள் ஏற்படும்.
இதனால் தான், நாங்கள் ஐக்கிய நாடுகள் சபையையும், அனைத்து சர்வதேச அமைப்புகளையும் நாடுகிறோம். அவை தற்போது உடனடியாக செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.