அதிமுக கூட்டணி பற்றி பாஜக தேசிய தலைமையே முடிவு செய்யும்-இபிஎஸ்..

1205362 admkedappadi - 2026

கூட்டணி பற்றி பாஜக தேசிய தலைமையே முடிவு செய்யும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் பதில் அளித்துள்ளார்.

அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி வலிமையாக உள்ளது என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறி உள்ளார். பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையும், கூட்டணி கட்சியான அ.தி.மு.க. தலைவர்களும் இதையே சொல்லி வருகின்றனர். எனவே எங்கள் கூட்டணி, மிக வலிமையான கூட்டணி. தி.மு.க. கூட்டணியிலும் பல சலசலப்பு இருக்கிறது.

பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலை தனது கருத்துகளை கூறி உள்ளார். அதனை சர்ச்சைக்குரியதாக பார்க்க வேண்டாம். அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி வலுவாக உள்ளதாக மத்திய மந்திரி எல்.முருகன் தெரிவித்தார்.

இதனிடையே 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு கூட்டணி உறுதியாகி விட்டதாக இப்போதே யாரும் சொல்ல மாட்டார்கள். கூட்டணியை பொறுத்தவரை எதுவுமே கல்லில் எழுதப்பட்ட வாக்கியம் இல்லை. அது தண்ணீரில் எழுதுவது போன்றது. இன்னும் 9 மாதங்கள் இருப்பதால் முன்னுரையும், முடிவுரையும் இப்போதே எழுதிவிட முடியாது.

தமிழகத்தில் 25 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெறும் அளவிற்கு எங்களின் வேட்பாளர்கள் இருக்க வேண்டும். மாற்றத்திற்கான எழுச்சியை இப்போதே பார்க்க ஆரம்பித்துவிட்டோம். 2024-ம் ஆண்டு தேர்தலுக்கு கூட்டணி உறுதியாகிவிட்டது என்பதை யாரும் இப்போதே சொல்ல மாட்டார்கள். என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

இந்தநிலையில், சேலத்தில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- கூட்டணி பற்றி பாஜக தேசிய தலைவர்கள் தான் முடிவு செய்வார்கள் மாநிலத்தில் உள்ளவர்கள் இல்லை. கூட்டணி தொடர்பாக மோடி, அமித்ஷா, நட்டா ஆகியோர் தான் எங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள்.

அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதாக பாஜக தேசிய தலைவர்களே சொல்லிவிட்டனர். அதிமுகவில் இருந்து விலகிய ஒரு சிலரை தவிர அனைவரும் மீண்டும் ஒன்று சேர வேண்டும் என்பதே விருப்பம் என்றார். கூட்டணி பற்றி பாஜக தேசிய தலைமையே முடிவு செய்யும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

Entertainment News

Popular Categories