December 6, 2025, 7:04 AM
23.8 C
Chennai

கோடிகள் இருந்தால்தான் வெற்றி இங்கே… தெருக் கோடியில் இருந்தாலும் ஜெயிக்கலாம் அங்கே!

pratab - 2025

இவர் தான் பாஜக.,வின் புதிய எம்.பி., பிரதாப் சந்திர சாரங்கி! தற்போது, ஒடிஸாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக., எம்.பி.!

1955ல் ஜனவரி 4ம் தேதி மிக ஏழ்மையான பிராமணக் குடும்பத்தில் ஒடிஸாவின் பாலாசோர் நிலாகிர் அருகே கோபிநாத்புர் என்ற கிராமத்தில் பிறந்தவர். 1975ல் உத்கல் பல்கலையின் கீழுள்ள பகிர் மோகன் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்தவர்.

சிறுவயதில் இருந்தே மிக எளிமையான ஆன்மிக வாழ்க்கை. ஆன்மிக எண்ணம் மேலோங்க, கோல்கத்தாவில் உள்ள ராமகிருஷ்ண மடத்துக்கு அடிக்கடி சென்று வந்தார். அங்கே தாமும் ஒரு சந்யாசியாசியாக வேண்டும் என்ற தம் விருப்பத்தை அவர்களிடம் வெளிப்படுத்தினார்.

ஒருநாள் ராமகிருஷ்ண மடத்தில் இருந்து அழைப்பு வந்தது. ஓடோடிப் போய் விழுந்து வணங்கினார். இவரது பயோடேடாவை அலசினார்கள் மடத்தில். அதில் அவரது விதவைத் தாயார் இன்னமும் கவனிப்பதற்கு வேறு நபர் இன்றி வாழ்ந்து கொண்டிப்பது தெரிந்தது. அவர்கள், இவரது தாயாரை முதலில் நன்கு கவனித்துக் கொள்ளும் படி, திருப்பி அனுப்பினார்கள்.pratab chandra sarangi - 2025

கிராமத்துக்கு வந்தார். அதே எளிய ஆன்மிக வாழ்க்கை. தன் நேரத்தை சமுதாயப் பணிகளில் செலவிட்டார். கிராமத்து மக்களுக்கு தன் சேவைகளை அர்ப்பணித்தார்.

பழங்குடியின கிராமங்கள் நிறைந்த பாலாசோர் மற்றும் மாயுர்பஞ்ச் மாவட்டங்களில், கண சிக்‌ஷா மந்திர் யோஜனா என்ற திட்டத்தின்கீழ், சமர் கர கேந்த்ரா என்ற பெயர்களில் பள்ளிகள் பல தொடங்கி வைத்தார்.

பின்னாளில் பாஜக.,வில் இணைந்தார். 2004, 2009 இரு முறையும் ஒடிசா சட்டமன்றத்துக்கு தேர்வாகி எம்.எல்.ஏ.,வாக சேவை செய்தார். தொடர்ந்து கடந்த 2014 ஆம் வருடம் பாலாசோர் தொகுதியில் பாஜக., சார்பில் போட்டியிட்டார். ஆனால் தோல்வி அடைந்தார்.

தொடர்ந்து, 2019 தேர்தலில் மீண்டும் போட்டியிட்டார். இம்முறை மக்கள் அவருக்கு அங்கீகாரம் அளித்தனர். அதே பாலாசோர் தொகுதி. பிஜு ஜனதா தளத்தைச் சேர்ந்த தற்போதைய எம்.பி., ரபீந்த்ர குமாரை 12,956 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து, முதல்முறையாக நாடாளுமன்றத்துக்குள் செல்கிறார்.

இவரை ஒரிசாவின் மோடி என அழைக்கிறார்கள்! காரணம் எளிய வாழ்க்கை! இந்த வயதிலும் எங்கும் சைக்கிள் பயணம். மண் சுவர் கொண்ட வீட்டில் இருந்து தில்லிக்கு பதவி ஏற்கச் செல்லும் மனிதர்.pratap 123 - 2025

பல கோடிகள் செலவு செய்தால் மட்டுமே தேர்தலில் நிற்பதற்கு சீட்டே வழங்கப் படும் என்ற நிலை இருக்கும் தமிழகம் எங்கே…! தெருக்கோடியில் இருந்தாலும் ஓர் ஏழை மனிதனை எம்.பி.யாக்கி அனுப்பி வைக்கும் ஒடிஸா எங்கே..?!

சாதாரண பெட்டி மற்றும் சில வேஷ்டிகளுடன் நாடாளுமன்றத்திற்கு அனுப்பி உள்ளது பாஜக! குறிப்பாக, ஒடிஸாவின் அறிவும் உணர்வும் சேர்ந்த வாக்காளர்கள்!

பிரதாப் சந்திர சாரங்கி, தேர்தலின் போது தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில்… இருந்து! 

pratab chandra sarangi affidavit - 2025

1 COMMENT

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories