madras christian college - 202634 மாணவிகள் இந்தக்கல்லூரி ஆசிரியர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகினோம் என்று நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுகிறது. ஆனால்,  தமிழகத்தில் மயான அமைதி! என்னவாக இருக்கும்?

இப்படித்தான் கேள்வி எழுப்புகின்றனர் சமூக ஊடகங்களில். சென்னை கிறிஸ்துவக் கல்லூரியின் மாணவிகள் 34 பேர் தாங்கள் கல்லூரி ஆசிரியரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப் பட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் கூறினர். ஆசிரியர் தாக்கல் செய்த மனு குறித்து பதிலளித்த உயர் நீதிமன்றம், கிறிஸ்துவக் கல்விக் கூடங்களில் படிப்பு சொல்லிக் கொடுக்கிறார்கள்; ஆனால் ஒழுக்கம் அறநெறி இவை போதிக்கப் படுகின்றனவா என்பது கேள்விக் குறி என்று குறிப்பிட்டார்.


கிறிஸ்துவ கல்வி நிறுவனங்கள் அறநெறியை போதிக்கின்றனவா என்றால்… மில்லியன் டாலர் கேள்விதான்!


 

இதைக் கேட்டு, பூனைக்குட்டி இப்போதுதான் வெளிவந்திருக்கிறது என்று கருத்து தெரிவித்தனர் சிலர். அதே நேரம், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சென்னையில் உள்ள கிறிஸ்தவ கல்லூரி பற்றி அவரின் தனிப்பட்ட கருத்தை பேசி உள்ளார். இது வருத்தம் அளிக்கிறது. அவரது கருத்து நீதிபதிகள் தங்கள் எல்லைக்குள் பேச வேண்டும் என்ற நிலையை மாற்றியிருக்கிறது… என்று கூறினார் மதிமுக., பொதுச் செயலர் வைகோ.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம்!

இந்நிலையில், ஊடகங்கள் இந்த விவகாரத்தில் மௌனமாக இருப்பது, அதன் கள்ளத்தனத்தைக் காட்டுகிறது என்று சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா யாரோ சிலர் பெயரைச் சொல்லி போன் கால் தான் பேசினார். ஆனால் அதை பெரிய அளவுக்கு ஊதிப் பெரிதாக்கி, பக்கம் பக்கமாக எழுதி கல்லா கட்டின பத்திரிகைகள். ஆனால் ஒரு பேராசிரியர் தங்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகவும், சீண்டலுக்கு ஆளாக்கியதாகவும் 34 கல்லூரி மாணவிகள் புகார் அளித்தும், மயான அமைதியில் திளைத்து தமிழகம் அமைதிப் பூங்கா ஆகி இருப்பது சந்தேகத்தைக் கிளப்புகிறது. இதன் பின்னணி சந்தேகத்துக்கு உரியதாக உள்ளது… என்று கூறுகின்றனர்.

இது குறித்து சமூக ஊடகமான டிவிட்டர் பதிவுகளில் கொட்டித் தீர்க்கும் சிலரது மனக்குமுறல்கள் இவை….

ALSO READ:  எனக்கு வந்தால் ரத்தம், உனக்கு வந்தால் தக்காளிச் சட்னி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending