December 6, 2025, 2:37 AM
26 C
Chennai

தமிழக சமூக ஊடக மனநிலையைப் புரிந்து கொள்ள வேண்டுமா..?! இந்த ‘ஃபோட்டோ’ பதில் சொல்லும்!

nirmalaseetharaman - 2025

செப்.1 ஞாயிறு அன்று, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னைக்கு வந்திருந்தார். அப்போது, சென்னையில் உள்ள முக்கிய வணிகக் கட்டுரைகள் எழுதும் பத்திரிகையாளர்களைச் சந்திக்க விரும்பியுள்ளார்.

இதை அடுத்து, தி ஹிந்து, பிஸினஸ் லைன் பத்திரிகையைச் சேர்ந்தவர்கள், தினமலர், தினத்தந்தி உள்ளிட்ட ஊடகத்தினர் என்று வெகுசிலரைச் சந்தித்து, நாட்டின் பொருளாதார நிலை, எடுக்கப்படும் நடவடிக்கைகள், அதன் தாக்கம், பத்திரிகையாளர்களிடம் இருந்து பெறப்படும் ஆலோசனைகள், கேள்விகள், விளக்கங்கள் என பத்திரிகையாளர் சந்திப்பு போல் அல்லாமல், ஆலோசனைக் கூட்டம் போல் நடத்த ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில், ஊடகத்தினர் சிலர் கலந்து கொண்டுள்ளனர். ஹிந்து பிஸினஸ் லைன் பத்திரிகையாளர் முன்னதாகவே தனியாக நேரம் கேட்டுப் பெற்று, தங்கள் தரப்பு கேள்விகளை முன்வைத்துச் சென்றிருக்கிறார்கள். அதன் பின்னர், ஊடகத்தின் ஒரு குழு சந்தித்துள்ளது. அதில் நிர்மலா சீதாராமனுடன் பாஜக.,வின் கே.டி.ராகவன் கலந்து கொண்டுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் எடுக்கப் பட்ட ஒரு புகைப்படம் சற்றே க்ராப் செய்யப் பட்டு, சாதீயக் கண்ணோட்டத்தில் தமிழக சமூக ஊடகங்களில் பரப்பப் பட்டது. கூடவே, பார்ப்பன வெறுப்பு, பாஜக., வெறுப்பும் பரப்பப் பட்டது. அதில், நிர்மலா சீதாராமன், கே.டி.ராகவன், மற்றும் இடது புறத்தில் பத்திரிகையாளர்கள் மாலன், ஆர்.வெங்கடேஷ், கோலஹல ஸ்ரீனிவாஸ் ஆகியோர் இருக்கும் படம் பகிரப் பட்டுள்ளது. இதில், இவர்கள் மூவரும் பாஜக.,வுக்கு வேலை செய்பவர்களாக சித்திரிக்கப் பட்டு, திராவிட திரிபுவாத இயக்கங்களின் நஞ்சு மூளையில் ஊறியவர்கள் விஷமக் கருத்துகளை அள்ளித் தெளித்து வருகின்றனர். தமிழக மக்கள் இவர்கள் சொல்வதைக் கேட்டு நம்பும் முட்டாள்கள்தான் என்ற நம்பிக்கையைக் கொடுத்திருப்பதாக எண்ணிக் கொண்டு, தங்கள் போக்கில் வசை பாடி வருகின்றனர்!

இந்நிலையில், இது குறித்த பதில் பதிவை தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார் மூத்த பத்திரிகையாளர் மாலன்.

nirmalaseetharaman1 - 2025

அவரது பதிவில்….

abuse
தவறாகப் பயன்படுத்துவது, வசை என்ற இரண்டு பொருள்கள் பொதுவான ஆங்கிலச் சொல் இது

இதற்குச் சிறந்த உதாரணம் நான், வெங்கடேஷ், கோலாகல ஸ்ரீநிவாஸ் ஆகிய மூவரும் அண்மையில் நிர்மலா சீதாராமனிடம் உரையாடிவதைப் போன்ற படம் பயன்படுத்தப்படும் விதமும், அதை வைத்து எங்கள் மீது பொழியப்படும் வசைகளும் எள்ளல்களும்

ஏதோ எங்கள் மூவரை மாத்திரம் அவர் தனியாகச் சந்தித்தது போலச் சித்தரிக்கப்படுகிறது. உண்மையில் அந்த உரையாடலில் நாங்கள் மட்டுமல்ல, தினத்தந்தியின் சுகுமார், டெக்கான் க்ரானிகளின் பகவான் சிங், டைம்ஸ் ஆப் இந்தியாவின் ராஜேஷ், பத்திரிகைகளில் பத்திகள் எழுதும் ஜகந்நாதன், பிசினஸ் லைன் ஆசிரியர், போன்ற பலரும் பங்கேற்றார்கள்.படம் இணைத்திருக்கிறேன்.

அதற்கு முன்னர் ஒருசெய்தியளர் சந்திப்பை நிகழ்த்திவிட்டு எங்களோடு உரையாட வந்திருந்தார

ஹிண்டு குழுமத்தைச் சேர்ந்த வேணு, முகுந்த் பத்மநாபன் ஆகியோர் முன் கூட்டியே அப்பாயிண்ட்மெண்ட் பெற்று அவரைத் தனியே சந்தித்தனர்.

வங்கியில் கணக்கு வைத்திருப்போருக்கு எழக்கூடிய பிரச்சினைகள், டிஜிட்டல் இந்தியாவில் உள்ள முரண்பாடுகள் பற்றி அவரிடம் நான் கேள்விகள் வைத்தேன்

அவற்றை வரும் வாரத்தில் இதழ்களில் வாசிக்கலாம்.

  • என்று குறிப்பிட்டிருந்தார்.

சாதீய ரீதியில் விமர்சனம் செய்யும் ‘போட்டோ’ கட்டர்களின் அடுத்த இலக்காக இருப்பவர் ஆர்.வெங்கடேஷ். அவரும் இந்தக் கருத்துக்கு பதில் எழுதியிருந்தார்.

இந்த விளக்கத்தை நான் எழுதலாம் என்று நினைத்தேன் சார். ஆனால், கடுமையான பா.ஜ.க. வெறுப்பில் திளைக்கும் இணைய நண்பர்கள் யார் காதிலும் இது விழப்போவதில்லை. ஒரு குறிப்பிட்ட வகையில் கட்டம் கட்டி, ஒதுக்கிவைத்து, விமர்சிப்பது என்பதுதான் இவர்களுக்குச் செளகரியமாக இருக்கிறது. ஆச்சரியம் என்னவென்றால், பத்திரிகைத் துறையிலும் எழுத்துத் துறையிலும் இருக்கும் மூத்தவர்களான ஃபிரண்ட்லைன் விஜயசங்கர், கவிஞர் சல்மா போன்றோர் கூட, என்ன நடந்தது என்பதைப் புரிந்துகொள்ளாமல், காழ்ப்பு உணர்வுகளைக் கொட்டியுள்ளனர். தமிழகத்தைப் பற்றி நன்கு புரிந்துகொள்வதற்கு இந்தப் புகைப்படம் உதவியது… என்று குறிப்பிட்டுள்ளார்.

nirmalaseetharaman2 - 2025

அவரிடம் இது குறித்துக் கேட்டபோது, மத்திய நிதி அமைச்சரின் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தினமலர் அலுவலகத்தில் கேட்டுக் கொள்ளப் பட்டது. அந்த அழைப்பின் பேரில் நான் சென்றேன். அங்கே அரசியல் ஏதும் பேசவில்லை. முழுக்க முழுக்க பொருளாதார நிலை, வங்கி சீர்திருத்தம் பற்றியே பேசப் பட்டது. உடன் அங்கே டெக்கான் குரோனிகள் ஆசிரியர் பகவான் சிங், தினத்தந்தியின் சுகுமார் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இந்தப் படம் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் ஒரு வெறுப்பு உணர்வைப் பரப்ப சிலரால் பயன்படுத்தப் பட்டுள்ளது என்றார்.

படத்தில் குறிப்பிடப் படும் மூன்றாவது நபரான, சமூக ஊடகங்கள் பக்கம் அதிகம் உலவாத கோலாஹல ஸ்ரீனிவாஸிடம் கேட்டபோது, அவர் சொன்னவை…

முன்னதாக மத்திய நிதி அமைச்சருடன் கூட்டத்தில் கலந்து கொள்ள அதிகாரிகள் சிலர் அந்த கூட்ட அரங்கில் அமர்ந்திருந்தனர். ஆனால் அவர்கள் கலந்து கொள்ளும் கூட்டம் மாடியில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இதை அறிந்ததும் அவர்கள் அந்த இருக்கைகளில் இருந்து எழுந்து சென்றார்கள். எனவே வரிசையாக அமர்ந்திருந்த நாங்கள் காலியான இருக்கையில் அமர்ந்து பேசுவதற்கு வசதியாக மாறி அமர்ந்து கொண்டோம். இது வெகு சாதாரணமாக நடந்த ஒன்று.

என் அருகில் அடுத்து தந்தியின் சுகுமார், டெக்கான் க்ரானிகள் ஆசிரியர் பகவான் சிங் ஆகியோரும் அமர்ந்திருந்தனர். எதிர்ப்பக்கத்தில் அமர்ந்திருப்பவர்கள் குறித்த படம் எதுவும் இவர்கள் பரப்பவில்லை போலிருக்கிறது.

இந்தக் கூட்டத்தில் மிக முக்கியமாக இரு விஷயங்களைப் பற்றியே பேசினார்கள். ஒன்று, வங்கிகள் சீரமைப்பு, இணைப்பு குறித்த கருத்தோட்டம். இது குறித்து மாலன், நான், குறிப்பாக சுகுமார், மற்றும் பிஸினர் இதழ்களின் ரெசிடென்ஷியல் எடிட்டர்ஸ் ஆகியோர் நிறைய கேள்விகள் கேட்டதுடன், சில ஆலோசனைகளையும் சொன்னோம்.

இரண்டாவதாக, ஆர்.பி.ஐ., ரெப்போ விகிதம் குறைந்தது, அவ்வாறு குறைந்ததன் பயன், அடிமட்டத்தில் சென்று சேர்ந்திருக்கிறதா, இல்லை என்றால் அதை எவ்வாறு செயல்படுத்துவது..?

இந்த இரண்டு விஷயங்கள் பற்றி மட்டுமே ஊடகத்தினர் என்ற வகையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மற்றபடி வேறு எதுவும் பேசப் படவில்லை என்றார்.

ஆக… சமூக ஊடகங்களில் எத்தகைய கண்ணோட்டத்தில் காழ்ப்பு உணர்வுடன் தமிழ்ப் போலிகள் பொங்கல் வைக்கின்றனர்!?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories