சாலை நடுவில்… துருபிடித்த இரும்புக் கம்பியில் திமுக., கொடி கட்டி… திருந்தவே மாட்டார்களா?!

Reporters Diary சென்னை புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்
dmkflags ironrods - 2026

பெரும்பாக்கம் சாலையில் சாலை நடுவில் துரு பிடித்து எப்போது ஒடிந்து விழும் என்று தெரியாது பகீர் கிளப்பும் இரும்புக் கம்பிகளில் திமுக., கொடிகளை கட்டிவிட்டிருக்கிறார்கள்.

அதிமுக., பிரமுகர் இல்லத் திருமணத்துக்கு வரவேற்று பேனர் கட்டியிருந்து, அது காற்றில் சரிந்து சாலையில் சென்ற இளம்பெண் சுபஸ்ரீ மீது விழுந்து உயிரிழந்த சம்பவம் இன்னமும் மக்கள் மனத்தில் இருந்து விலகாத நிலையில், அதே போல் சாலை நடுவில் இரும்புக் கம்பிகளில் கொடிகளைக் கட்டி, காற்றில் ஆடியபடி இருக்க நட்டு வைத்துள்ளனர் திமுக.,வினர்.

பேனர் விவகாரத்தில் நீதிமன்றம் கடுமையான வார்த்தைகளை அரசியல் கட்சியினர் மீது சொல்லியும் அரசியல் கட்சியினர் இன்னமும் திருந்தியதாகத் தெரியவில்லை.

இந்த லட்சணத்தில், பேனர் விழுந்து இளம்பெண் உயிரிழந்த சம்பவத்தில் தனது கண்டனத்தைப் பதிவு செய்த ஸ்டாலின், அந்தப் பெண்ணின் பெயரை மறந்துவிட்டு, வேறொரு பெயரில் உச்சரித்து, இப்போது அந்த சம்பவத்தையும் மறந்துவிடத் தூண்டியிருக்கிறார். பெண்ணின் பெயரை ரூபிஸ்ரீ என்று சொல்லி, பேனர்க்கு எதிரான பொதுமக்களின் மனநிலையை மறக்கடிக்க முயற்சி மேற்கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது.

என்றுதான் இவர்கள் திருந்துவார்களோ?!

  • பாமரத்தீ

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.