December 6, 2025, 8:28 PM
26.8 C
Chennai

நாத்திக அரசிடம் ஆலயங்கள்! உண்டியல் புறக்கணிப்பு ஒன்றே தீர்வு!

siruvachur temple vandalised1
siruvachur temple vandalised1

உண்டியலைப் புறக்கணி ~ அதுதான் தீர்வு !

மூன்று முறை சிறுவாச்சூர் மலைக்கோவில் இடிக்கப்பட்டிருக்கிறது. முதல்முறை அந்தக் கோவில் இடிக்கப்பட்டபோதே காவல்துறையும், அறநிலையத்துறையும் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இது நடந்திருக்காது.

முதல்முறை தொடர்ந்து இரண்டு நாட்கள் சிறுவாச்சூர் மலைக்கோவிலில் உள்ள சுடுமண் சிற்பங்களும் , தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெரியாண்டவர் கோவிலில் உள்ள கற்சிற்பங்களும் இடிக்கப்பட்டன.

அப்போது காவல்துறை, மனநிலை சரியில்லாத ஒருவரை பிடித்து வைத்துக்கொண்டு , அவர்தான் அத்தனை சிலைகளையும் இடித்தார் என கூறியது.

நாம் ஆரம்பித்திலிருந்து சொல்வது இதுதான், தனி மனிதனால் இவ்வளவு பெரிய சிலைகளையும் (17 அடி) , மிகவும் வலிமையான கற்சிலைகளையும் உடைத்திருக்கமுடியாது .

குறைந்தபட்சம் ஐந்துபேர் கொண்ட அதுவும் , SUV போன்ற பெரிய வாகனத்தில் ஆயுதங்களோடு வந்திருந்தால் மட்டுமே இது சாத்தியம். அது காட்டுப்பகுதி !

ஆனால், மனநிலை சரியில்லாத ஒருவரை பிடித்துக்கொண்டு அவர் மட்டும் தான் காரணம் என்று ஆரம்பத்திலிருந்து திசைதிருப்புகிறது மாநில அரசு.

siruvachur
siruvachur

அதுவும் அதற்கு காவல்துறை சொன்ன காரணம் நகைச்சுவையின் உச்சம் ! கற்சிலைகளின் அடியில் வைக்கப்பட்டிருக்கும் செப்பு தகடுகளுக்காகத்தான் அத்தனை சிலைகளையும் உடைத்தாராம். அப்படி என்றால் சுடுமண் சிற்பங்கள் ஏன் உடைக்கப்பட்டது ?!

முதல் தாக்குதலின்போதே பிடிபட்ட அந்த நபர், அப்போதே கைது செய்யப்பட்ட நிலையில் இரண்டாவது மூன்றாவது தாக்குதலை நிகழ்த்தியது யார் ?!

மூன்றாவது தாக்குதல் நடந்த அடுத்தநாள், அந்த இடத்தில் அந்த நபர் பிடிபட்டார் என்றால் அவருக்கு ஜாமீன் வழங்கியது யார் ?!

இரண்டாவது தாக்குதலுக்கு பிறகு மலைக்கோவிலில் CCTV வைக்கப்பட்ட நிலையில் அந்த தாக்குதல் வீடியோவை வெளியிடாதது ஏன் ?!

இரண்டுமுறை பிடிபட்ட போதும் அந்த நபரின் கையில் ஆயுதம் எதுவுமே கைப்பற்றப்படாத நிலையில், அவர்தான் இடித்தார் என எப்படி முடிவு செய்யப்பட்டது ?!

அல்லது ஆயுதங்களே இல்லாமல் அவர் வெறும் கையால் எப்படி அத்தனை சிலைகளையும் உடைத்தார்?!

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் கோடிக்கணக்கான வருமானம் வருகிற பிரபலமான ஒரு கோவில் ! அதன் ஒரு பகுதி தான் அந்த மலைக்கோவிலும் ! ( சக்தி வாரத்தின் ஐந்து நாட்கள் இங்கு இருப்பதாகவே ஐதீகம் )

இந்த கோவில்கள் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. யோசித்து பாருங்கள் !

அந்த கோவிலிலிருந்து கோடிக்கணக்கில் வருமானத்தை வாரி சுருட்டும் அறநிலையத்துறை, அந்த கோவில் இப்படி அநியாயமாக மூன்று முறை இடிக்கப்பட்டும் கண்டுகொள்ளவே இல்லையே ?!

அந்தக் கோவில் , அரசால் ஆக்கிரமிக்கப்படாமல் இருந்து உடையவர்களிடமே இருந்திருந்தால் இப்படி விட்டிருப்பார்களா ?!

அரசின் சொத்துக்களின் மீது சின்ன சேதம் ஏற்படுத்தினால் பொது சொத்துக்களை சேதப்படுத்தினார்கள் என வழக்குபோடும் மாநில அரசு , கோவிலிலிருந்து வருமானத்தை மட்டும் உறிஞ்சிக்கொள்ளும். அதற்கு ஒரு சேதம் என்றால் கண்டுகொள்ளுவதே இல்லையே ?!

வருமானத்தை உறிஞ்சும்போது “அரசு சொத்து” ! சேதப்படுத்தப்படும்போது மட்டும் “கோவில் சொத்து” !

ஒரு மதசார்பற்ற அரசிற்கு இந்து கோவில்களில் என்ன சார் வேலை ?!

siruvachur temple vandalised
siruvachur temple vandalised

இப்படித்தான் இடிக்கப்பட்டது ஆந்திர மாநிலத்தில் 128 கோவில்கள் ! (அதுவும் வெறும் 19 மாதங்களில் )

அதுபோல , 128 கோவில்கள் இங்கும் இடிபடும்வரை வேடிக்கை பார்க்கப்போகிறோமா ?!

இனியேனும் விழித்துக்கொள்வோம் !

சரி . என்ன சார் செய்யணும் நாங்க ?!

ஒன்றும் இல்லை . மிகவும் சுலபமாக ஒன்றை செய்வதன் மூலம் கோவில் சொத்துக்களை இந்த கொள்ளையர்களிடமிருந்து காப்பாற்றலாம் !

உண்டிலில் காசு போடவேண்டாம் . உண்டிலை புறக்கணிப்போம் .

நம் கோவிலை அழிப்பதற்கு இனி அரசிற்கு நாமே கூலி கொடுக்கவேண்டாம் ! கோவிலுக்கு போங்க! உண்டியலில் காசு போடாதீங்க !

முன்னெடுப்போம் இந்த விழிப்புணர்வை வாருங்கள் !

  • அ.அஷ்வத்தாமன் பாஜக

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories