இங்க கலெக்டரா இருந்தாங்க இவங்க..! கர்நாடகத்து பூர்வீகம். தன் குழந்தையை அங்கன்வாடி மையத்துல சேர்த்து அதிரடி காட்டினாங்க. தமிழ் நல்லாவே பேசினாங்க…! சில முறை இங்கே பார்த்துப் பேசியிருக்கிறேன். அடிக்கடி வாட்ஸ்அப்பில் இங்கிருக்கும் பிரச்னைகள் பற்றி மெசேஜ் அனுப்புவேன். சிலதுக்கு பதில் வரும்.
ஒரு முறை, இலஞ்சி குமாரகோவில் பக்கத்துல, சிற்றாறு தூய்மைப் பணியின் போது பார்த்து பேசிக் கொண்டிருந்தேன்.
எங்க ஊர்ல வாஞ்சிநாதனுக்கு மணிமண்டபம் இருக்குங்க. ஆனா அதில் எந்த ஒரு தகவலும் இல்லீங்க. அதனால நான் வாஞ்சி பற்றி விகடன்ல எழுதியிருந்த புத்தகத்துல இருந்து 8 பக்கம் ஏ3 சைஸ்ல பிரிண்ட் எடுத்து, லேமினேட் செய்து… மணிமண்டபத்துல மாட்டி வெச்சேன். எழுத்தாளர் பிரபஞ்சன் எழுதின ஒரு பக்கமும் அதில் இருந்தது…
மறு வாரம் நான் மணிமண்டபம் பக்கமா போனப்போ… அதெல்லாம் எடுத்துட்டு… வழக்கம் போல மண்டபம் வெறுமையா இருந்தது. பராமரிப்பாளர்கிட்ட கேட்டேன்… பி.ஆர்.ஓ., வந்தாரு…. நல்லாருக்குனு தூக்கிட்டுப் போயிட்டாரு என்றார்…
சொல்லிக் கொண்டிருந்த போது… அவரே படுவேகமா சொன்னார்… சார் நீங்க ஏன் சார் அவ்ளோ மெனக்கெடறீங்க… இதெல்லாம் நாம செய்ய வேண்டியது. எனக்கு நீங்க அந்த மேட்டர மட்டும் மெயில் அனுப்புங்க சார். நான் பாத்துக்கறேன்… என்று சொல்லிவிட்டுச் சென்றார்.
அடுத்த சில நாட்களில் மாவட்டம் பிரிந்தது. அதிகாரிகள் மாறினார்கள். அவர்களை எல்லாம் போய் பார்க்க வேண்டும் என்று எனக்கு தோன்றவே இல்லை. மெத்தனக்காரர்கள் என்று பரவலாக பேச்சு..!
அடுத்த சில மாதங்களில்… மக்கள் நல்வாழ்வுத்துறை செயலராக பணி மாற்றப் பட்டார். அடுத்து… அதாவது சரியாக இன்றிலிருந்து ஒரு வருடம் முன்பு… மே 8ம் தேதி.. புதிய விடியல் அமைந்த போது, ஒரு துறைக்கு சிறப்பு அலுவலராக நியமிக்கப் பட்டார்…
உங்கள் தொகுதியில் ஸ்டாலின் – என்று ஊர்ப் பஞ்சாயத்துக் கூட்டம் போட்டு… பொட்டி பொட்டியா மக்கள் ஆசையைக் கொட்டிக் கொட்டி உள்ளே போட்ட துண்டுச்சீட்டுக்களை எல்லாம் சேகரித்து… குறை தீர்க்கும் அலுவலராக… அதுவும் 100 நாட்களுக்குள்ள தீத்துடுவோம்னு மக்கள் முன்னாடி சத்தியம் செஞ்சி பூட்டி… சாவிய பத்திரமா எடுத்துட்டு வந்த அந்த நாடகத்துக்கு… ஜட்ஜாக நியமிக்கப் பட்டார்…
ஆச்சு… 100 நாள்… 200 நாள்… 300 நாள்..! 365 நாள்… அட ஒரு வருட சாதனை..! ஓடியாச்சு…!
பாவம்… திறமைசாலியான இவுஹ இன்னமும் ஏதோ துண்டுச்சீட்டை படிச்சிட்டு பொழுது போக்கிட்டிருக்காங்க போலிருக்கு… ஒரு வருடமா இவங்கள பத்தி… அப்புறம் ஒரு தகவலும் இல்லே..!
தமிழ்நாடு அரசு இணையத்தில் பார்த்தேன்…
Mudalvarin Mugavari Department
Email:utmtamilnadu(at)gmail.com
பதவிபெயர் – அலுவலகம் – இல்லம்
Special Officer – Shilpa Prabhakar Satish I.A.S – PBX NO:5586
சிறப்பு அதிகாரி – ஷில்பா பிரபாகர் சதீஷ் இ.ஆ.ப., – PBX NO:5586
– என்று இருந்தது.
#ஷில்பா_பிரபாகர்_சதீஷ்