கேரளாவில் பணம் கேட்டு தொல்லை- லாட்டரி ரூ.10 கோடி பரிசு பெற்றவரின் விவரங்கள் வெளியிட மறுப்பு..

images 56 2 - 2026

பணம் கேட்டு தொல்லை கொடுப்பார்கள் என்பதால் லாட்டரியில் ரூ.10 கோடி பரிசு பெற்றவரின் விவரங்கள் வெளியிட மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள அரசு சார்பில் லாட்டரி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் அரசுக்கு பலகோடி வருவாய் கிடைத்து வருகிறது. அதில் ஓணம், சித்திரை விசு, கிறிஸ்துமஸ், ஆங்கிலபுத்தாண்டு உள்பட பண்டிகை நாட்களில் சிறப்பு பம்பர் குலுக்கல் நடத்தப்படுவது வழக்கம்.கடந்த ஆண்டு ஓணத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பம்பர் லாட்டரியில் ரூ.25 கோடி முதல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் இந்த லாட்டரியில் முதல் பரிசான ரூ.25 கோடி திருவனந்தபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அனூப் என்பவருக்கு கிடைத்தது. அவரை பற்றிய தகவல்கள் பத்திரிகைகளில் வெளியானது.

images 61 1 - 2026
கடந்த ஆண்டு கேரளா லாட்டரியில் முதல் பரிசான ரூ.25 கோடி திருவனந்தபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அனூப்

இதனைத்தொடர்ந்து உறவினர்கள் ஏராளமானோர் அவரிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்ய தொடங்கினர். இதனால் அவர் தன்னுடைய வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதுதொடர்பாக அவர் கதறி அழுதபடி வீடியோவும் வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் 21-ந் தேதி நடந்த பூஜா பம்பர் குலுக்கலில் திருச்சூரில் விற்பனையான சீட்டுக்கு ரூ.10 கோடி பரிசு விழுந்தது. ஆனால் முதல் பரிசு ரூ.10 கோடி கிடைத்த நபர், யாரிடமும் தெரிவிக்காமல் நேரடியாக லாட்டரி இயக்குனரக அலுவலகத்திற்கு சென்று ரூ.10 கோடி பரிசு கிடைத்த விவரத்தை தெரிவித்தார். மேலும் அவர் தனது பெயரை வெளியிட வேண்டாம் என கூறியதாக லாட்டரி இயக்குனரகம் அறிவித்து உள்ளது.

இதேபோல கடந்த 19-ந் தேதி நடைபெற்ற கிறிஸ்துமஸ் – புத்தாண்டு பம்பர் குலுக்கலில் முதல் பரிசு ரூ.16 கோடி பாலக்காட்டில் விற்பனையான சீட்டுக்கு கிடைத்துள்ளது. இந்த பரிசை பெற்ற அதிர்ஷ்டசாலி யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் 2 அதிர்ஷ்டசாலிகளும் தங்களது பெயர் விவரங்களை வெளியிட வேண்டாம் என்றும், அப்படி வெளியிட்டால் உறவினர்களும், நண்பர்களும் பணம் கேட்டு தொல்லை கொடுப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் பரிசு பெற்ற நபர் கேட்டுக்கொண்டதால் பெயர் விவரங்களை வெளியிட லாட்டரி இயக்குனரகத்திற்கு அதிகாரம் இல்லை எனவும் தெளிவுபடுத்தி உள்ளது. இது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories