காஞ்சிபுரம் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் முதல்வர் தலா ரூ. 2 லட்சம் நிவாரணம்..

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Published:

காஞ்சிபுரம் அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் அறிவித்து பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

காஞ்சிபுரம் அருகே உள்ள குருவி மலையில் உள்ள பட்டாசு ஆலையில் திடிரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மொத்தம் 9 பேர் பலியாகினர். இதையடுத்து பட்டாசு ஆலையின் உரிமையாளரான நரேந்திரனை போலீசார் கைது செய்துள்ளனர்.

பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.

IMG 20230322 WA0060 1 - 2026

இதையடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் வழங்க உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், காஞ்சிபுரம் அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளார்.

அதன்படி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ரூ. 50 ஆயிரமும் நிவாரணத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

Related articles

Recent articles

spot_img