ஸ்ரீவிலி-முதல் வனத்துறை மோப்பநாய் மரணம்..

IMG 20230327 WA0057 - 2026

ஸ்ரீவில்லிபுத்தூர் தமிழகத்திற்காக முதன் முதலாக வனத்துறைக்கு என வாங்கப்பட்ட மோப்பநாய் உடல்நல குறைவால் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறையின் 9 வயது பெண் மோப்ப நாய் சிமி வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்தது.வனத்துறையினர் அஞ்சலியுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறைக்கு கடந்த 2015ல் மத்திய பிரதேசம் போபாலில் இருந்து மோப்பநாய் சிமி கொண்டு வரப்பட்டது.இதற்கு வனப்பகுதி குற்றங்களை தடுக்க டெல்லியில் 6 மாதம் பயிற்சி அளிக்கப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறையிடம் தமிழகத்தில் முதல் முதலாக ஒப்படைக்கப்பட்டது.

மோப்பநாய் சிமியை கடந்த 8 ஆண்டுகளாக வனப்பாதுகாப்பாளர் பெரியசாமி பயிற்சி அளித்து பராமரித்து வந்தார்.ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வனத்துறை குற்றங்களை கண்டறியவும்,சமூக விரோதிகளை கண்டறியவும்,வெடிகுண்டுகளை கண்டுபிடிப்பதும் மோப்பநாய் சிமி பணியாற்றி வந்தது. கடந்த 2018 ஆம் ஆண்டு கம்பம் பள்ளத்தாக்கில் யானை வேட்டையில் ஈடுபட்ட கும்பலை பிடிப்பதற்கு சிமி பெரும் உதவியாக இருந்தது.

IMG 20230327 WA0056 - 2026

இதற்காக கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழக அரசின் விருதினை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மோப்பநாய் சிமி மற்றும் காப்பாளர் பெரியசாமிக்கு தந்து கௌரவித்தார்.கடந்த 2022 ஆம் ஆண்டு இரவு சதுரகிரியில் கன மழை பெய்தபோது நீர் வரத்து ஓடைகளை கடக்க சிரமப்பட்ட பக்தர்கள் இருக்கும் இடத்தை கண்டறிவதில் உதவியது.

தற்போது ஒன்பது வயது ஆகும் இந்த சிமிக்கி வயது முதிர்வு காரணமாக பல்வேறு உடல் உபாதைகளும் வந்துள்ளது தற்போது எந்த நடவடிக்கையிலும் ஈடுபடுத்தப்படாமல் உள்ள சிமிக்கி திருநெல்வேலி கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்திலும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

கடந்த மார்ச் 10 ஆம் தேதி மோப்பநாய் சிமி குறித்து வனத்துறை சேர்ந்த அதிகாரி விரைவில் தமிழகத்தின் முதல் மோப்ப நாயான சிமிக்கி பணியில் இருந்து ஓய்வு அளிக்கப்படலாம் என தெரிவித்தார்.

இந்நிலையில் வழக்கம்போல் சிமியின் பராமரிப்பாளரான வனத்துறை ஊழியர் பெரியசாமி வீட்டில் உணவு வைத்துவிட்டு அதற்கு செய்ய வேண்டிய வழக்கமான பணிகளை செய்துவிட்டு சென்றார். காலை நாயை வந்து பார்க்க கதவு திறந்து போது நாய் பரிதாபமாக இறந்து கிடந்தது. வனத்துறைக்கு என்று முதன் முதலில் வாங்கப்பட்ட இந்த மோப்பநாய் சிமியின் உடல் வனத்துறை வளாகத்திலேயே உரிய வனத்துறையினரின் மரியாதை உடன் அடக்கம் செய்யப்பட்டது. உடல் அடக்கம் செய்வதற்கு முன் கால்நடை மருத்துவர் சுப்பிரமணியன் அதன் உடலை பரிசோதனை செய்தார்.

தமிழகத்திற்க்கு முதன் முதலாக வனத்துறைக்கு என்று வாங்கப்பட்ட மோப்பநாய் சிமி பல்வேறு விருதுகளையும், சாதனைகளையும் படைத்துள்ளது என்பதும் மோப்பநாய் சிமி இறந்தது வனத்துறையினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories