December 6, 2025, 4:15 AM
24.9 C
Chennai

அயோத்தி ராமர் கோயிலில்… கருவறை இப்படித்தான் இருக்குமாம்!

srirama janma boomi temple - 2025
#image_title

அயோத்தி ராமர் கோயில் கருவறை படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. இதனை ஶ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாக மேற்பார்வை செய்து வருகிறது.

தற்போது ராமர் கோயில் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் கும்பாபிஷேகம் விழா ஜனவரி 22, 2024-ல் நடைபெற உள்ளது, விழாவில் பிரதமர் மோடி மற்றும் நாடு முழுவதிலும் இருந்து 10,000க்கும் மேற்பட்ட பிரமுகர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்நிலையில் கோயில் கருவறை புகைபடங்களை ராம் மந்திர் அறக்கட்டளை செயலாளர் தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

அப்புகைபடத்தில் கருவறையின் உள்பகுதி வட்ட வடிவில் பிரம்மாண்ட தூண்களும், நடுவில் ராமர் சிலையை வைக்கப்பட உள்ள பீடமும், அதன் மேல் பொருத்தப்பட்டுள்ள மின் விளக்குகளில் ராமர் சிலை ஒளிரும் வகையில் அழகுற காட்சியளிக்கிறது.

இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.


அயோத்தி வழக்கு கடந்து வந்த பாதை


அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 நிலம் தொடர்பான வழக்கில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம். அதேசமயம், முஸ்லிம்களுக்குத் தனியாக 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஏறக்குறைய 500 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த பிரச்சினைக்கு தீர்வு கண்டுள்ளது உச்ச நீதிமன்றம். அந்த வழக்கு கடந்த பாதை குறித்து சற்று திரும்பிப் பார்க்கலாம்.

1528: முகலாய அரசர் பாபரின் படைத்தளபதி மிர் பாகியால் கோவிலை இடித்து அந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டது.

1857 : முதல் சுதந்திர போராட்ட புரட்சி வீரர்கள் அனைவரும் ஒன்றிணைந்து முகலாய பேரரசர் பகதூர் ஷா தலைமையில் போராடிய போது ஹிந்துகளுக்கும் முஸ்லிம்களுக்கும் ஒற்றுமை ஏற்படுத்தும் வகையில் ராம ஜென்ம பூமியே ஹிந்துக்கள் வசம் ஒப்படைக்கும் தீர்மானம் முடிவானது. ஹிந்துக்கள் சார்பில் ராம சந்திரதாஸ் என்பவரும் முஸ்லிம்கள் தரப்பில் அமீர் அலி என்பவரும் இந்த சமாதான ஒப்பந்தத்திற்கு காரணமாக இருந்தனர். இதனால் பயந்து போன ஆங்கிலேயர்கள் நிரந்தரமாக ஹிந்து முஸ்லிம் பிரிவினையை ஏற்படுத்தும் விதமாக அவர்கள் இருவரையும் கைது செய்து தூக்கிலிட்டு கொன்றது.

1885: பாபர்மசூதி-ராமஜென்ம பூமி இடத்தைச் சுற்றி சுற்றுச்சுவர் எழுப்ப வேண்டும் எனக் கோரி பைசாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் மகந்த் ரகுபிர்தாஸ் மனுத் தாக்கல் செய்தார். அதை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

1949: சர்ச்சைக்குரிய இடத்தின் மைய மண்டபத்தில் ராமர், சீதா, லட்சுமணன் சிலைகள் வைக்கப்பட்டன.

1950: ராமர் சிலைகளை வழிபட அனுமதிக்கக் கோரி பைசாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் கோபால் சிம்லா விஷாரத் மனுத்தாக்கல் செய்தார். மேலும் பரமஹன்ஸா ராமச்சந்திர தாஸ் தொடர்ந்து அங்கு வழிபாடு நடத்தவும் மனுத்தாக்கல் செய்தார்.

1959: சர்ச்சைக்குரிய இடத்துக்கு உரிமை கோரி நிர்மோகி அகாரா சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 நிலம் தொடர்பான வழக்கில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம். அதேசமயம், முஸ்லிம்களுக்குத் தனியாக 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

ஏறக்குறைய 500 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த பிரச்சினைக்கு இன்று தீர்வு கண்டுள்ளது உச்ச நீதிமன்றம். அந்த வழக்கு கடந்த பாதை குறித்து சற்று திரும்பிப் பார்க்கலாம்.

உத்தரப் பிரதேச சன்னி மத்திய வக்பு வாரியம், சர்ச்சைக்குரிய இடத்துக்கு உரிமை கோரி வழக்குத் தொடர்ந்தது.

1961 டிச 18 : பனிரெண்டு ஆண்டுகளில் நீர்த்து போக வேண்டிய வழக்கை ஒரு தினத்திற்கு முன்பாக வழக்கில் சன்னி வக்ப் போர்டு தன்னை ஒரு வாதியாக இணைந்து கொண்டது. தேவகி நந்த அகர்வால் ராம் லாலா சார்பாக இடத்திற்கு உரிமை கூறி வழக்கு தொடுக்கிறார்.

1980 : பிரயாகையில் கூடிய விஷ்வ ஹிந்து பரிஷத்-ன் அகில பாரத பொது குழு கலந்து பேசி அயோத்தி பிரச்சனையை கையில் எடுக்கிறது.

1984 : நாடு முழுமைக்கும் அரசின் கவனத்தை ஈர்க்க பல்வேறு போரட்டங்களை நடத்துகிறது. அயோத்தி பிரச்னையை மக்களிடம் கொண்டு செல்ல ராமர் ரத யாத்திரை, ராம ஜோதி யாத்திரை, பாதுக யாத்திரை என பல்வேறு போராட்டங்களை முன்னேடுகிறது.

1986, பிப்.1: இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் சர்ச்சைக்குரிய இடத்தில் வழிபாடு நடத்த உள்ளூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

1989, ஆக.14: சர்ச்சைக்குரிய இடத்தில் இருக்கும் நிலையே தொடர வேண்டும் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நாடாளு மன்ற தேர்தல் முடிவில் பாரதிய ஜனதா கட்சி 89 உறுப்பினர்களுடன் வி பி சிங் தலைமையிலான மத்திய அரசை வெளியில் இருந்து ஆதரித்தது. உத்தரப்ரதேசத்தில் முலயாம்சிங் தலைமையிலான ஜனதா தள அரசும் பீகாரில் லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான அரசும் பதவி ஏற்கிறது.

குஜராத்தின் சோமநாத புறத்திலிருந்து அயோத்தி நோக்கி பனிரெண்டு மாநிலங்கள் வழியாக ராம பிரான்-க்கு ஆலயம் அமைக்க கோரி ரத யாத்திரையை எல் கே அத்வானி துவங்குகிறார். நாடு முழுவதும் ராமனுக்காக எழுந்த மக்கள் ஆதரவை தொடர்ந்து பீகார் மாநிலம் சமஸ்தி பூரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்.

இறுதியில் அயோத்தி நோக்கி சென்ற லட்சகணக்கான கரசேவகர்கள் நடுவழியில் தடுத்து நிறுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டு கரசேவகர்கள் திருப்பி அனுப்பட்டனர். கரசேவைக்கு குறிக்கப்பட்ட நாளன்று அயோத்தியில் காக்கா குருவி கூட பறக்காது என இறுமாப்பில் இருந்த முலயாம் சிங்-ன் கனவில் மண்ணை அள்ளி போட்டு லட்சகணக்கான கரசேவகர்கள் அயோத்தியில் குவிந்தனர். குறிப்பிட்ட நேரத்தில் சர்ச்சைக்குரிய கட்டடத்தின் மீது ஏறி காவி கொடியை நட்டனர். மசூதி போன்ற கட்டடத்தின் மூன்று கும்பங்களையும் உடைத்து சிதைத்தனர். தொடர்ந்து நடைபெற்ற போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பல்லாயிரக்கணக்கான கரசேவகர்கள் ராம பக்தர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1992, டிச.6: சர்ச்சைக்குரிய இடத்தில்  திரும்பவும் கரசேவைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து டிச 2ம் தேதி அயோத்தி சம்மந்தமான வழக்கில் தீர்ப்பு வழங்க வேண்டிய நீதிமன்றம் வேண்டுமென்றே தீர்ப்பை தள்ளி வைத்தது. இதனால் வெகுண்டு எழுந்த கரசேவகர்கள் அயோத்தியில் உள்ள பாபர் மசூதியை, கரசேவகர்கள் இடித்து தள்ளினர். காலை 11 மணிக்கு துவங்கிய அவ்ர்களின் ஆவேச போராட்டம் எவ்வித ஆயுதமுமின்றி  கட்டடம் நிர்முலமாக்கபட்டது. கரசேவகர்களால் பூஜித்து கொண்டு செல்லப்பட்ட செங்கற்களால் தற்காலிக கட்டடம் கட்டப்பட்டு அதில் கடவுள் ராம் லாலா ஸ்தாபனம் செய்யப்பட்டார். அப்போது உ.பி.யில் ஆட்சியில் இருந்த கல்யாண் சிங் தலைமையிலான பாஜக அரசு கலைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நடந்த கலவரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியானார்கள்.

1993, ஏப்.3: சர்ச்சைக்குரிய இடத்தைக் கைப்பற்றுவதற்காக அயோத்யா சட்டம் உருவாக்கப்பட்டது.

இந்தச் சட்டத்தை எதிர்த்து இஸ்மாயில் பரூக்கி உள்பட அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஏராளமானோர் மனுத்தாக்கல் செய்தனர்.

1994, அக்.24: இஸ்லாமாயில் பரூக்கி தொடர்ந்த வழக்கில், மசூதி இஸ்லாம் மதத்தின் ஒரு பகுதி அல்ல என்று தீர்ப்பு வழங்கியது.

2002, ஏப்: சர்ச்சைக்குரிய நிலம் யாருக்குச் சொந்தம் என்று வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது.

2003, மே 13: கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் எந்தவிதமான மதரீதியான நடவடிக்கைகளும் நடத்தக் கூடாது என்று அஸ்லாம் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

2010, செப் 30: அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா ஆகியோர் மூவரும் 2:1 என்ற அளவில் பிரிக்க அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது

2011, மே 9: அயோத்தி நில வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

2017, மார்ச் 21: அயோத்தி வழக்கில் அனைத்துத் தரப்பிலும் நீதிமன்றத்துக்கு வெளியே தீர்வு காணலாம் எனப் பரிந்துரைக்கப்பட்டது.

2017, ஆக.7: 1994-ம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீரப்பை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட அமர்வை உச்ச நீதிமன்றம் அமைத்தது.

2018, பிப்.8: அயோத்தி வழக்கில் மேல் முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் தொடங்கியது.

2018, ஜூலை 20: உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்தது.

2018, செப்.27: மசூதி இஸ்லாம் மதத்தின் ஒரு பகுதி அல்ல என ஏற்கெனவே வழங்கப்பட்ட தீர்ப்பை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற மறுப்பு தெரிவித்தது. அக்டோபர் 29-ம் தேதி முதல் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் எனத் தெரிவித்தது.

2018, அக்.29: ஜனவரி மாதத்தின் முதல் வாரத்திலிருந்து வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்கும். அந்த அமர்வு விசாரணையை முடிவு செய்யும் என்று நீதிமன்றம் தெரிவித்தது

2018, டிச 24: 2019, ஜனவரி 4-ம் தேதியில் இருந்து மனுக்கள் மீதான விசாரணை தொடங்கும் என்று உச்ச நீதிமன்றம் முடிவு செய்தது.

2019, ஜன.4: அயோத்தி வழக்கில் எந்த அமர்வு விசாரிக்கும் என்பது குறித்து ஜனவரி 10-ம் தேதி அறிவிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

2019, ஜன.8: அயோத்தி மேல்முறையீட்டு வழக்கை விசாரிக்கத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வில் எஸ்.ஏ.போப்டே, என்.வி.ரமணா, யு.யு.லலித், டி.ஒய் சந்திரசூட் ஆகியோர் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்க அமைத்தது.

2019, ஜன.10: இந்த வழக்கில் இருந்து நீதிபதி யு.யு.லலித் தான் விலகிக்கொள்வதாக அறிவித்ததையடுத்து, ஜனவரி 29-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

2019, ஜன.25: அதன்பின் புதிய அமர்வை உச்ச நீதிமன்றம் அமைத்தது. இதில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், எஸ்.ஏ.போப்டே, டி.ஒய்சந்திரசூட், அசோக் பூஷன், எஸ்ஏ.நசீர் ஆகியோர் கொண்ட அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டது.

2019, ஜன.29: அயோத்தியில் உண்மையான உரிமையாளர்களிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட 67 ஏக்கர் நிலத்தை திரும்ப அளிக்க உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அனுமதி கோரியது.

2019, பிப்.26: அயோத்தி வழக்கில் சமரசப் பேச்சுக்கு பரிந்துரைப்பது குறித்து மார்ச் 5-ம் தேதி முடிவு எடுக்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

2019, மார்ச் 8: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி எப்எம் கலிபுல்லா தலைமையில் வாழும் கலை இயக்குநர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், வழக்கறிஞர் பஞ்சு ஆகியோர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் சமரசக் குழுவாக அமைத்தது.

2019, ஏப்.9: அயோத்தியில் உண்மையான நில உரிமையாளர்களிடம் நிலத்தை ஒப்படைப்பது தொடர்பாக மத்திய அரசின் மனுவுக்கு எதிராக நிர்மோகா அஹாரா உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்.

2019, மே 9 : சமரசக் குழுவினர் தங்களின் இடைக்கால அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

2019,மே 10: ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் சமரசப் பேச்சுவார்த்தையை முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

2019, ஜூலை 11: சமரசப் பேச்சின் நிலவரம் குறித்து உச்ச நீதிமன்றம் அறிக்கை கேட்டது.

2019, ஜூலை 18: சமரசப் பேச்சு தொடரலாம் என்றும், ஆகஸ்ட் 1-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

2019, ஆக.1: உச்ச நீதிமன்றத்தில் சமரசக் குழுவினர் தங்களின் அறிக்கையைத் தாக்கல் செய்தனர்

2019, ஆக.2: ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் நாள்தோறும் அயோத்தி வழக்கில் விசாரணை நடக்கும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

2019, ஆக.6: அயோத்தி வழக்கில் நாள்தோறும் விசாரணையைத் தொடங்கியது.

2019, அக். 4: அக்டோபர் 17-ம் தேதிக்குள் விசாரணை முடிக்கப்படும். நவம்பர் 17-ம் தேதிக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்தது

உ.பி. மாநில வக்பு வாரியத் தலைவருக்கு தேவையான பாதுகாப்பு வழங்க வேண்டும் என உ.பி. அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது

2019, அக்.16: அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது.

2019, நவ. 9: அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம், நிலம் மத்திய அரசின் பொறுப்பில் இருக்கும். முஸ்லிம் தரப்பினருக்கு 5 ஏக்கர் நிலம் தனியாக மசூதி கட்ட உ.பி. அரசு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories