
செங்கோட்டையில் நிலவேம்பு குடிநீர் வழங்கல், திருவாசகம் முற்றோதுதல்!
செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவில் வளாகத்தில் வைத்து நிலவேம்பு குடிநீர் வழங்கல் மற்றும் உலக நன்மை வேண்டி திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு விழா கமிட்டி தலைவா் தங்கையா தலைமைதாங்கினார். தேசிய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் தென்காசி மாவட்ட செயலாளா் ராமநாத் சாய் சித்தா மருத்துவமனை மருத்துவா் சத்தியா ஆகியோர் முன்னிலை வகித்தார்.
அதனை தொடர்ந்து சாய் கிளினிக் சார்பில் வழங்கப்பட்ட நிலவேம்பு குடிநீரை செங்கோட்டை அரசு ஆயுர்வேத மருத்துவமனை மருத்துவா் ஹரிஹரன் மருத்துவர் சிந்து பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. பின்னா் அம்மையப்பர் திருவாசக குழு தலைவா் திருவாசகி சிவபகவதி மற்றும் குழுவினரின் திருவாசகம் முற்றோதுதல் நடந்தது. முன்னதாக நித்யகல்யாணி அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாரதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பணியாளா்கள், ஆறுமுகம், ராம்ராஜ், கல்யாணி, ஜெயந்தி, முப்புடாதி, சாரதா, மல்லிகா, அருணாபாரதி, விழாகமிட்டி நிர்வாகிகள் சிவா, இசக்கி, பிபிஎம்.சாமி, ஆடிட்டர்சங்கர், குருசாமி, மாரியப்பன், அருண், வீரபுத்திரன், கணேசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
மேலும் கீழத்தெரு சேனைத்தலைவா் சமுதாயம் சார்பில் இன்று முதல் நவராத்திரி திருவிழா துவங்கப்பட்டு 10நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், அலங்காரம், தீபாரதனை நடத்தப்படும் விழா ஏற்பாடுகளை விழாகமிட்டியினா் சிறப்பாக செய்து வருகின்றனா்.
செங்கோட்டையில் சித்தர் நெறி மறுமலா்ச்சி பேரவை ஆலோசனைக் கூட்டம்.
செங்கோட்டை ஸ்ரீராமபக்த ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் வைத்து தமிழ்நாடு சித்தர் நெறி மறுமலா்ச்சி பேரவையின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவா் சசிவர்ணகார்த்திக் தலைமைதாங்கினார். மாநிலச்செயலாளா் அஜீத்குமார் கன்னியாகுமரி மாவட்ட துணைத்தலைவா் நிதிஸ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனா்.
தென்காசி மாவட்ட செயலாளா் முத்துமாரி அனைவரையும் வரவேற்று பேசினார். பின்னா் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது. அதில் இந்து சமயம் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்துதல், நமது நாட்டின் பாரம்பரிய கலை இலக்கியம் பண்பாடுகளை பாதுகாத்தல், சமய கல்வி போதித்தல்,ஆலயங்களை பாதுகாத்தல், இந்து சமயத்திற்கான நலவாரியம் அமைக்க அரசுக்கு வலியுறுத்தல். சித்த வைத்தியத்தை இந்து சமய மக்களிடம் கொண்டுபோய் சேர்த்தல் குருகுல கல்வியை மீட்டெடுத்தல் உள்பட பல்வேறு தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்ற பட்டது.
நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் மாநில செயலாளா் மணிமகேஷ்வரன், மற்றும் நிர்வாகிகள் கேப்டன் டிஎஸ் சாமிநாதன், கோபக்குமார், சிவக்குமார், அக்ரிசங்கரலிங்கம், டிவி.திருமால், குருவாயூர்கண்ணன், முருகையா, மாவட்ட நிர்வாகி சிவக்குமார், சக்திவேல், தங்கராஜ், மகாலிங்கம், மாரிமுத்து உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் ஸ்ரீராமபக்த ஆஞ்சநேயர் கோவில் நிர்வாகி மகேஷ்வரன் நன்றி கூறினார்.
செங்கோட்டையில் போதைப் பொருட்கள் ஒழிப்பு மற்றும் தடுப்பு விழிப்புணா்வு பேரணி
செங்கோட்டை பேரூந்து நிலையம் அருகில் அமைந்துள்ள சுதந்திர போராட்ட வீரன்வாஞ்சிநாதன் சிலை முன்பு வைத்து செங்கோட்டை வட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் போதை பொருட்கள் ஒழிப்பு மற்றும் தடுப்பு குறித்த விழிப்புணா்வு பேரணி நடந்தது.
பேரணியை வட்டாட்சியா் முருகுசெல்வி தலைமைதாங்கி துவக்கி வைத்தார். பேரணியில் எஸ்எம்எஸ்எஸ் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 10ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு மாணவர்கள் சுமார் நுாறு பேர் கலந்து கொண்டனா்.
பேரணி வாஞ்சிநாதன் சிலை முன்பு துவங்கி வட்டாட்சியா் அலுவலகம் வளாகம் சென்று நிறைவடைந்தது. பேரணியில் போதை பொருட்கள் ஒழிப்பு மற்றும் தடுப்பு குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திவாறு கோஷங்கள் எழுப்பி சென்றனா்.
நிகழ்ச்சியில் மண்டல துணை தாசில்தார் ராஜமணி, தேர்தல் தனித்துணை தாசில்தார் சிவன்பெருமாள், வருவாய் ஆய்வாளா்கள் மாடசாமி, சரவணன், கிராம நிர்வாக அலுவலா்கள் ஆயிஷாள், காளிச்செல்வி கிராம நிர்வாக உதவியாளா்கள், பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செங்கோட்டை காவல்துறையின் செய்திருந்தனா்.