பொய் சொல்லி அமைச்சர் பதவி விலகட்டும்!

Reporters Diary அடடே... அப்படியா? திருச்சி புகார் பெட்டி
07 Oct31 Vijaya baskar - 2026

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பகுடி(தாலுகா) வாணக்கண்காடு கிராமத்தை சார்ந்தவர்கள் கஜா புயல் தாக்கம் பற்றிக் கூறுவது…

எங்கள் ஊரில் கஜா புயல் தாக்கியதில் லட்சக்கணக்கில் மரங்கள்  சரிந்துவிட்டன. 30,000 பேர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.  உயிர்கள் பலவற்றை இழந்து விட்டோம்.  ஆனால் எங்கள் ஊருக்கு எந்த உதவியும் அரசாங்க தரப்பில்  இருந்து செய்து தரவில்லை.

ஆனால் (சுகாதார துரை அமைச்சர் ) விஐயபாஸ்கர் அதிக சேதம் இல்லை என்று தந்தி செய்தியில் கூறியுள்ளார். நாங்களோ தண்ணீருக்கும் உணவுக்குமே தத்தளிக்கின்றோம்.  எங்களுக்கு உதவி செய்யாமல் உபத்திரவம் செய்வது போல் பொய்யான தகவல்களை அமைச்சர் கூறிக் கொண்டிருக்கிறார்.

இதற்காகவா நாங்கள் உங்களை அமைச்சர் ஆக்கினோம். நேரில் வந்து பார்த்துவிட்டு.. பிறகு இது போல் பேட்டி அளித்திருக்க வேண்டும். மானம் சூடு சுரணை இருந்தால் இப்படி பொய் சொன்னதற்காக, அமைச்சர் பதவி விலக வேண்டும்.  

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.