spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

HomeReporters Diaryசிலை அரசியல்! இரு காட்சிகள்; இரு நீதிகள்! தேவை பகுத்தறிவு!

சிலை அரசியல்! இரு காட்சிகள்; இரு நீதிகள்! தேவை பகுத்தறிவு!

- Advertisement -

தமிழகத்தின் நீதி – ஓர் ஒப்பீடு…!

காட்சி 1: சற்றேறக்குறைய ஒரு வருடத்திற்கு முன்பு
திரிபுரா மாநில தேர்தலில் கம்யூனிஸ்ட் தோற்று பாஜக ஜெயித்தவுடன் அங்கிருந்த லெனின் சிலை அகற்றப்பட்டது.

அது போல இங்கும் தமிழகத்தில் திரு ராமசாமி நாயக்கரின் சிலையும் அகற்றப்படலாம் என திரு H ராஜா முக நூலில் பதிவு போட்டதாக கூறி அவரை கைது செய்ய வேண்டும், பா ஜ க தலைமை அவரை அடக்கி வைக்க வேண்டும், என்று திராவிட கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு திருமாவளவன், திமுக மற்றும் தமிழகத்தில் சமுக ஆர்வலர்கள் என சொல்லி கொள்ளும் போலி போராளிகள் முழங்கினார்கள்.அவர் மேல் வன்முறையையும் ஏவ சில கட்சிகள் முயற்ச்சித்தன.

மேலும் திரு ராமசாமி நாயக்கர் சிலை மேல் செருப்பு மாலையை ஒரு நபர் போட்டதால் அவர் மேல் வழக்கு போட்டு அவரை சிறையிலும் அடைத்தனர்.
அவரை போலிஸ் ஸ்டேசனுக்கு அழைத்து செல்லும் போது திராவிட கழக அபிமானிகள் அவரை அடிக்கவும் செய்தனர்.

அப்போது திரு ராஜா அது அட்மின் செய்த தவறு, இருப்பினும் வருத்தம் தெரிவிக்கிறேன் என்றார்.

இருப்பினும் ஊடகங்களும், திமுக, திராவிட கழகம், விடுதலை சிறுத்தைகள் ராஜாவையும், செருப்பு அணிவித்த அந்த வக்கீலை மட்டுமே கண்டித்தனர்.அவர்கள் மேல் வழக்கும் போட்டனர்.

திரு ராமசாமி நாயக்கரை அவதூறாக பேசுவது தவறு,குற்றம் எனக்கூறி ஆர்பாட்டம் நடத்தினர்.

வன்முறையை கட்டவிழ்த்து விட்டவர்களை இந்த கட்சிகளோ ஊடகங்களோ கண்டிக்கவில்லை.எதிர்வினை இப்படித்தான் ஆற்றப்படும் என்கின்ற ரீதியில் பேசினர்.

காட்சி 2: சில தினங்களுக்கு முன்பு திராவிட கழக திரு வீரமணி, இந்த பிரபஞ்சத்திற்கே முதன் முதலில் ஞான ஆன்மிக வாழ்வியல் தத்துவ நெறிகளை பகவத்கீதை மூலம் உரைத்த சர்வ லோக நாயகன் கிருஷ்ண பகவான் தன்னுடைய குழந்தை பருவத்தில் ஆறு வயதிலே செய்த விளையாடல்களை காம கண்ணுடன் பார்த்து கேவலமாக பேசியுள்ளார்.

அதற்கு எதிர்வினையாக திருச்சியில் வீரமணி,திமுக கூட்டணிக்கு பிரசாரம் செய்யும் போது உணர்வுள்ள சில இந்துக்கள் வீரமணிக்கு எதிராக ஆர்ப்பாட்டமும் கண்டனமும் தெரிவித்துள்ளனர்.சிலர் அடிதடியிலும் ஈடுபட்டுள்ளனர்.

சராசரி மனிதர் திரு ராமசாமி நாயக்கரை விமர்சனம் செய்யும் போது பொங்கிய கட்சிகள,ஊடகங்கள், திரு திருமாவளவன், மற்றும் போலி சமுக போராளிகள் சர்வ லோக நாயகன் Sri கிருஷ்ணரை இழிவாக விமர்சனம் செய்த வீரமணிக்கு எதிராக பொங்கவில்லை.

மாறாக திருமா கூறுகிறார்… வீரமணிக்கு எதிரான சனாதன சக்திகளை அழிக்க வேண்டும். வீரமணிக்கு அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும், வன்முறை கூடாது”

காட்சி ஒன்றில், பேசிய எச் ராஜா தண்டிக்கப்பட வேண்டும், கண்டிக்கப்பட வேண்டும். அடக்கப்பட வேண்டும்.

காட்சி இரண்டில், பேசிய வீரமணி பாதுகாக்கப்பட வேண்டும்,கருத்து சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும்.

ஆனால் வீரமணிக்கு எதிராக பேசியவர்கள், ஆர்ப்பாட்டக்காரர்கள் தண்டிக்கப் பட வேண்டும்.

நாக்கு ஒன்றுதான். ஆனால் நீதி இரண்டு.

தமிழக மக்கள், திராவிட கட்சிகள், தமிழக ஊடகங்கள் மற்றும் திருமாவளவனின் இரட்டை வேடங்களை உணர வேண்டும்.

சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள். திருச்சியிலே எதிர்ப்பை காட்டியதன் மூலம் எச்சரிக்கை செய்துள்ளார்கள். நம்முடைய ஒற்றுமையை உணர்வை ஜனநாயக முறையில் காட்ட அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது.

அந்த வாய்ப்பு 18.4.2019 அன்று வருகிறது. இந்த சந்தர்ப்பத்தை தவற விட்டோமென்றால் இந்த கட்சிகளின் இந்துக்களுக்கு எதிரான இரட்டை நிலை, அவதூறு தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

1 COMMENT

  1. உண்மையான இந்து உணர்வு உள்ள ஒவ்வொருவரும் மொத்த திராவிட கட்சிகளையும் புறக்கணிக்க வேண்டும். தேர்தலுக்கு நிதி இல்லை என்று சொல்கிறார்.சிதம்பரம் கோவிலுக்குள்ளே போய் தீக்ஷதர்களைக் கும்பிட்டு திருநீறு பூசிக்கொள்ள திருமாவிற்கு கொஞ்சமும் வெட்கமில்லை.வீரமணி இந்துக்களை மட்டும் எப்போதும் கேவலப் படுத்துவார். பிராமணர்கள் பூணூலாக கயிறை அணிந்தால் என்ன பாம்பை அணிந்தால் தான் என்ன. இவருக்கு என்ன வந்தது? பெரியார் சிலைக்கு மாலை போட்டு வணங்குவது மூட நம்பிக்கை இல்லையா? அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு. இதில் அடுத்தவன் ஏன் தலையிட வேண்டும்? இவர்கள் எல்லோருமே ஒதுக்கப் படவேண்டியவர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe