f16aircraft - 2026

புது தில்லி: பாகிஸ்தானின் எப்-16 ரக விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை இந்திய விமானப்படை துணை ஏர் மார்ஷல் ஆர்.கே.ஜி.கபூர், ரேடார் படங்களை வெளியிட்டு உறுதி செய்து விளக்கம் அளித்தார்.

தில்லியில் இன்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தது..

எப்-16 ரக விமானங்கள் அனைத்தும் தங்களிடம் பத்திரமாக உள்ளதாக பாகிஸ்தான் கூறி வருகிறது. ஆனால் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் எப்-16 ரக விமானங்களை பயன்படுத்தியது உறுதி.

இந்திய விமானி அபிநந்தன் இயக்கிய மிக்-21 ரக விமானம் மூலம் அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது ரேடாரில் பதிவாகியுள்ளது. அதற்கான படங்களில் இவை தெளிவாகத் தெரிகின்றன… என்று விளக்கம் அளித்தார்.

அபிநந்தன் ஓட்டிச்சென்ற மிக்-21 விமானம் மூலம் பாகிஸ்தானின் எப்-16 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

எப்-16 விமானத்தை பாகிஸ்தான் இழந்ததற்கான உறுதியான ஆதாரங்கள் இந்தியாவிடம் உள்ளன

எப்-16 விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கான ரேடார் பதிவுகளை வெளியிட்டது இந்திய விமானப்படை.

அபிநந்தன் சுட்டு வீழ்த்திய பாகிஸ்தானின் எப்-16விமானம் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் விழுந்தது.

  • எப்-16விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு பாக். மறுத்த நிலையில் இந்திய விமானப்படை விளக்கம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending