Home Blog Page 141

இரண்டாம் சோமவாரம்: மதுரை மாவட்ட கோயில்களில் 108 சங்காபிஷேகம்!

108 sangabhishekam in madurai temles - 2026
#image_title

மதுரை மாவட்டத்தில், உள்ள சிவ ஆலயங்களில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் , சோழவந்தான் பிரளயநாத சிவன் ஆலயத்தில், கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு, 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக, சிவபெருமானும் அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. அதைத்
தொடர்ந்து சிவனுக்கு, 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதை அடுத்து, கோயில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதில், தொழில் அதிபர் எம். வி. எம் .மணி, கவுன்சிலர்கள் எம். வள்ளிமயில், டாக்டர் எம். மருது பாண்டியன், கோவில் நிர்வாக அதிகாரி ச. இளமதி, கணக்கர் சி. பூபதி மற்றும் ஆலய பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

இதே போல மதுரை அண்ணா நகர் யானைக் குழாய் அருள்மிகு முத்துமாரி ஆலயத்திலும், தாசிலார் நகர் வர சித்தி விநாயகர் ஆலயத்திலும், சௌ
பாக்கிய விநாயகர் ஆலயத்திலும், மதுரை பாண்டி கோவில் ஜெ. ஜெ.நகர் அருள்மிகு வர சித்தி விநாயகர் ஆலயத்திலும், மதுரை அண்ணாநகர் வைகை காலனி, வைகை விநாயகர், மதுரை சாத்தமங்கலம் ஆவின் பாலவிநாயகர் ஆலயத்திலும் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு, சங்காபிஷேகம் நடைபெற்றது.

ராஷ்டிரீய ஹிந்து மகா சபா நடத்திய மஹா சண்டி யாகம்!

maha chandi yaham in mettupalayam - 2026
#image_title

உலக நன்மை வேண்டி மேட்டுப்பாளையத்தில் ராஷ்ட்ரிய ஹிந்து மகா சபா சார்பில் 13வகையான மூலிகை பொருட்களை கொண்டு மகா சடியாகம் நடைபெற்றது

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள குமரன் குன்று பகுதியில் உலக நன்மை வேண்டியும் மக்கள் நோய் நொடியின்றி வாழ்வு மேம்பட ராஷ்ட்ரிய இந்து மகா சபா சார்பில் மகா சன்டியாகம் நடைபெற்றது

ராஷ்ட்ரிய இந்து மகா சபை மாநில தலைவர் வேலு ஜி தலைமையில் நடைபெற்ற சன்டியாகத்தில் ஸ்ரீ சோடா ஸ்ரீ பால திரிபுரசுந்தரி பீடத்தின் 23 குருமார்கள் பங்கேற்று இந்த யாகத்தை நடத்தினர்

யாகத்தில் பராசக்தி அன்னையின் அவதாரமான 13 தேவியர்களுக்கு 13கலசங்கள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன

அதனை தொடர்ந்து யாக வேள்வியில் பதிமூன்று வகையான பட்டுப்புடவை, மாங்கல்யம், கண்ணாடி வளையல், குங்குமம், மஞ்சள், எலுமிச்சை, கொப்பரை தேங்காய்,தேங்காய் பழம், மஞ்சள் பாதம் , மாலை, மரிக்கொழுந்து, முல்லை, தாமரை, வில்வ பூ மற்றும் பல்வேறு மூலிகைகளை கொண்டு சன்டியாகம் நடைபெற்றது

யாகத்தில் உலக நன்மை வேண்டி குருமார்கள் வேத மந்திரங்கள் ஓதி யாக பூஜைகள் நடத்தப்பட்டது இந்த மகா சண்டியாகத்தில் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்

பக்தர்கள் நெரிசலில் சபரிமலை; விபத்துகளைத் தடுக்க போலீஸார் எச்சரிக்கை!

sabarimalai crowd - 2026
#image_title

சபரிமலைக்கு விடுமுறை தினத்தில் வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பக்தர்களுக்கு தேவையான வசதிகள் அனைத்தும் செய்து தரப்பட்டு வருவதாக திருவாங்கூர் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் கார்த்திகை 1 முதல் 41 நாள் மண்டல பூஜை வழிபாடு துவங்கி நடைபெற்று வருகிறது. தினமும் அய்யனை தரிசிக்க 70 ஆயிரம் பேர் மெய்நிகர் வரிசை மூலமும் பத்தாயிரம் பேர் உடனடி முன்பதிவு மூலமும் அனுமதிக்கப்படுகின்றனர்.

தற்போது சபரிமலைக்கு தினமும் 80 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து இருந்தாலும், முன்பதிவு செய்ததில் 10 முதல் 15 சதவீதம் பக்தர்கள் வருவதில்லை. இதனால் சராசரியாக பக்தர்களின் வருகை குறைந்து வரும் நிலையில், சனி ஞாயிறு கிழமைகளில் மற்றும் விடுமுறை தினங்களில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நேரடி முன்பதிவு மையம் பம்பையில் செயல்படுகிறது. இங்கும் ஆதார் அட்டையுடன் முன்பதிவு செய்து சபரிமலை ஐயனைக் காண ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சனிக்கிழமை 87,216 பேர் மலை ஏறியுள்ளனர். இதில், 9,822 ஸ்பாட் புக்கிங் இருந்தது.

இன்று ஞாயிற்றுக்கிழமை சுமார் ஒரு லட்சம் பக்தர்களுக்கு மேல் ஐயப்பனை தரிசிக்க வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 80 ஆயிரத்துக்கு உட்பட்ட பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து சென்றுள்ளனர்.

சன்னிதானம், பம்பை, நிலக்கல் போன்ற அனைத்து இடங்களிலும் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் இந்த இடங்களில் மக்கள் கூட்டம் குறைவாக இருந்தது. பம்பையில் வாகனங்களை நிறுத்தும் வசதி உள்ளதாகவும், பக்தர்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

வரும் நாட்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் என போலீசார்
தெரிவித்தனர். அப்பம், அரவணை கவுண்டர்கள் முன்பு பிரசாதம் வாங்க கூட்டம் அலை மோதுகிறது. செங்கநல்லூர் ரயில் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.

மரகூட்டம் பகுதியில் மூன்று இடங்களில் பக்தர்களை கட்டுப்படுத்தி வருகின்றனர். ஒரே நேரத்தில் பலர் சன்னிதானம் வருவதை தடுக்கவே இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்

கண்ணூரில் விபத்து

கண்ணூரில் ஐயப்பன் பக்தர்கள் சென்ற மினி பேருந்து கவிழ்ந்து இருவரின் நிலை கவலைக்கிடமானது. கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்ட ஐயப்பன்கள் பயணித்த மினி பஸ் விபத்துக்குள்ளானது. யாத்ரீகர் குழுவில் இருந்த 6 பேர் காயமடைந்தனர். அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. விபத்து அம்பாலா சாலை சந்திப்பில் நடந்துள்ளது இந்த சம்பவம் காலை 7 மணியளவில் நடந்தது. இன்று சபரிமலைக்கு சென்றுவிட்டு, பழையகண்டியில் இருந்து பிலத்தராவுக்கு பேருந்து சென்று கொண்டிருந்தது.

சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதிய பேருந்து அருகில் உள்ள வயல்வெளியில் கவிழ்ந்தது. உள்ளூர்வாசிகள் முதலில் ஓடினார்கள். தகவல் கிடைத்ததும் போலீசார் வந்தனர். வாகனத்தின் முன் பகுதி முற்றிலும் சேதமடைந்தது.

இந்த நிலையில் சபரிமலைக்கு வேன், கார், பஸ் போன்ற வாகனங்களில் வரும் பக்தர்கள் குறிப்பிட்ட வேகத்தில் வந்து கவனமுடன் வாகனங்களை இயக்கி விபத்து ஏற்படாமல் இருக்க கேரளா காவல்துறை போக்குவரத்து துறை‌ கேட்டுக் கொண்டுள்ளது.

சபரிமலை யாத்திரையின் போது, வாகனத்தை இயக்கும் போது மிக மிக கவனமாக இயக்கவும், களைப்புடன் வாகனத்தை இயக்க வேண்டாம் என்றும் கேரளா போக்குவரத்து துறை அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த ஆண்டு சபரிமலைக்கு மண்டல காலத்தில் ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்கள்ம் ராஜபாளையம்ம் குற்றாலம், தென்காசி, செங்கோட்டை வழி அதிக அளவில் வந்து செல்கின்றனர்.

குற்றால அருவிகளில் தண்ணீர் போதுமான அளவு விழுகின்றது. இந்தப் பக்கத்தில் உள்ள ஐயப்பன் படை வீடு கோவில்களான குளத்துப்புழா, ஆரியங்காவு, அச்சன்கோவில் போன்ற கோவில்களுக்குச் செல்ல விரும்பும் பக்தர்கள் அதிக அளவில் பொதிகை ரயில், கொல்லம் ரயில், சிலம்பு அதிவிரைவு ரயில்களில் செங்கோட்டைக்கு வந்து, இங்கிருந்து முக்கிய சுற்றுலா தலங்களுக்குச் சென்று பின்னர் சபரிமலைக்குச் செல்கின்றனர்.

சபரிமலைக்கு சென்று திரும்பும் பக்தர்கள் குற்றாலத்தில் குளித்து, திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில், திருச்செந்தூர் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்கின்றனர்.

ஆந்திரா பக்தர்கள் அதிக அளவில் தற்போது வருகின்றனர். குற்றாலத்தில் ஐயப்ப பக்தர்கள் வருகையால் சீசன் காவி வேஷ்டி துண்டு விற்பனை அதிகரிக்கவில்லை. ஆனால் நேந்திரங்காய் சூப் விற்பனை சுடச்சுட  நடந்து  வருகிறது.

IND Vs AUS Test: விராட் கோலி சதம்

aus vs india - 2026
#image_title

இந்தியா ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் – மூன்றாம் நாள் – பெர்த்-24.11.2024– விராட் கோலி சதமடித்தார்

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

இந்திய அணி முதல்இன்னிங்க்ஸில் 49.4 ஓவர்களில் 150 ரன் (நிதீஷ் குமார் ரெட்டி 41, ரிஷப் பந்த் 37, கே.எல்.ராகுல் 26, ஹேசல்வுட் 4/29, மிட்சல் ஸ்டார்க் 2/14, பேட் கம்மின்ஸ் 2/67, மிட்சல் மார்ஷ்2/12); இரண்டாவது இன்னிங்க்சில் 134.3 ஓவர்களில் 487/6 டிக்ளேர்ட்; ஆஸ்திரேலிய அணிமுதல் இன்னிங்க்ஸில் 51.2 ஓவர்களில் 104 (அலெக்ஸ் கேரி 21, மிட்சல் ஸ்டார்க் 26, ட்ராவிஸ்ஹெட் 11, நாதன் மெக்ஸ்வீனி 10, பும்ரா 5/30, சிராஜ் 2/20, ஹர்ஷித் ராணா 3/48); இரண்டாவதுஇன்னிங்க்ஸில் 4.2 ஓவர்களில் 12/3 (பும்ரா 2/1, சிராஜ் 1/7). இந்திய அணி 522 ரன்கள்முன்னிலையில் உள்ளது.

          நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியஅணி இரண்டாம் இன்னிங்க்ஸில் 57 ஓவர்களில் விக்கட் இழப்பின்றி 172 ரன் எடுத்திருந்தது.இன்று முதலாவதாக கே.எல். ராகுல் 62.6ஆவது ஓவரில் (176 பந்துகளில் 77 ரன், 5ஃபோர்) ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.  அதன் பின்னர் தேவதத் படிக்கல் 84.1ஆவது ஓவரில்(71 பந்துகளில் 25 ரன்) ஹேசல்வுட் பந்துவீச்சில் அவுட் ஆனார். மிக அருமையாக ஆடிவந்தஜெய்ஸ்வால் (297 பந்துகளில் 161 ரன், 15 ஃபோர், 3 சிக்சர்) 93.5ஆவது ஓவரில்ஆட்டமிழந்தார். அதன் பின்னர் வந்த ரிஷப் பந்த் மற்றும் துருவ் ஜுரல்இருவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். விராட் கோலி (143 பந்துகளில் 100ரன், 8 ஃபோர், 2 சிக்சர்) ஜெய்ஸ்வால். வாஷிங்டன் சுந்தர் (94 பந்துகளில் 29ரன்), நிதீஷ் குமார் ரெட்டி (27 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 38 ரன், 3 ஃபோர்,2 சிக்சர்) ஆகியொருடன் இணைந்து ஆடி தனது சதத்தைப் பூர்த்தி செய்தார்.

          டெஸ்ட் அரங்கில் 491 நாட்களுக்குப்பின், கோலி இன்று 143 பந்துகளில்சதம் அடித்தார். 70 ரன்களில் இருந்து 100 ரன்களை எட்ட கோலி 20 பந்துகளையேஎடுத்துக்கொண்டார் ஒரு சிக்சர், 4 பவுண்டரிகளைஅடித்து கோலி சதத்தை நிறைவுசெய்தார்.

          சர்வதேச அரங்கில் கோலியின்30ஆவது டெஸ்ட் சதம், ஒட்டுமொத்தத்தில் 81ஆவது சதமாகும். சச்சின்,சுனில் கவாஸ்கர், டிராவிட்டுக்கு அடுத்தாற்போல் 30 சதங்களை கோலி எட்டியுள்ளார். அதுமட்டுமல்லாமல்பெர்த் மைதானத்தில் விராட் கோலி தொடர்ந்து இரண்டாவதுசதத்தையும் பதிவு செய்தார். 2018ஆம் ஆண்டு இதேமைதானத்தில் கோலி கடைசியாக சதம்அடித்தநிலையில் தொடர்ந்து இந்த முறையும் சதம்விளாசியுள்ளார்.

          கோலியின் சதத்திற்காகக் காத்திருந்த அணித்தலைவர்பும்ரா இரண்டாவது இன்னிங்க்ஸை டிக்ளேர் செய்தார். இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியாஇரண்டாவது இன்னிங்ஸில் பேட் செய்தபோது, முதல் ஓவரை வீசிய பும்ரா நான்காவது பந்திலேயேநேதன் மெக்ஸ்வீனை கால்காப்பில் வாங்க வைத்து ஆட்டமிழக்கச் செய்தார்.

          அடுத்ததாக லபுஷேன் 10 பந்துகளைக்கூடஎதிர்கொள்ளவில்லை, பும்ராவின் கத்திபோன்ற பந்தைவீச்சை எதிர்கொண்டு கால்காப்பில் வாங்கிவெளியேறினார். லபுஷேன் ஆட்டமிழந்த அந்தப் பந்தை எதிர்த்து நின்று பேட்டில் வாங்க முடியாதஅளவுக்குத் துல்லியமான பிரம்மாஸ்திரமாக பும்ரா பந்துவீச்சு இருந்தது. இந்தப் பந்தைஎவ்வாறு எதிர்கொள்வது எனத் தெரியாமல் லபுஷேன் கால்காப்பில் வாங்கி வெளியேறினார்.

          நைட்வாட்ச் மேனாக களமிறங்கிய கம்மின்ஸின்விக்கெட்டை சிராஜ் வீழ்த்தவே ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியுள்ளது.ஆஸ்திரேலிய வீரர்களின் உற்சாகத்தை, நம்பிக்கையை, ஆவேசத்தை ஒற்றை மனிதராக பும்ரா தனதுபந்துவீச்சில் குறைத்துள்ளார். ஆட்டநேர இறுதியில் ஆஸ்திரேலிய அணி மூன்று விக்கட் இழப்பிற்கு4.2 ஓவரில் மூன்று விக்கட் இழப்பிற்கு 12 ரன் எடுத்திருந்தது.

          இன்னும் 2 நாட்கள் மீதமுள்ள நிலையில் ஆட்டத்தைஎவ்வாறு ஆஸ்திரேலியா கொண்டு செல்லப் போகிறது என்பது விவாதத்துக்குரியது. ஆனால், இந்தியஅணிக்கு அதன் திட்டம் தெளிவாக இருக்கிறது, வெற்றி ஒன்று மட்டும்தான் இலக்கு என்று விளையாடிவருகிறது. இன்றைய நிலையில் நாளை உணவு இடைவேளைக்கு முன்னர் இந்திய அணி வெற்றியைப் பெற்றுவிடும்என்பதே என்னுடைய கணிப்பு.

மக்களுக்கான டிஜிட்டல் பயன்பாட்டை முழுமை பெறச் செய்வோம்: மனதின் குரலில் மோடி!

manadhinkural - 2026
#image_title

மனதின் குரல், 116ஆவது பகுதி
ஒலிபரப்பு நாள்:  24.11.2024
ஒலிபரப்பு: சென்னை வானொலி நிலையம்

தமிழில் / குரல் : ராமஸ்வாமி சுதர்ஸன்

            எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  மனதின் குரல் அதாவது தேசத்தின் சமூக முயற்சிகளின் குரல், தேசத்தின் சாதனைகளின் குரல், மக்கள் அனைவரின் வல்லமையின் குரலான மனதின் குரல் அதாவது தேசத்தின் இளைஞர்களின் கனவுகள், தேசக் குடிமக்களின் எதிர்பார்ப்புக்களின் குரல்.  எப்போது வரும் என்று, மாதம் முழுவதும் மனதின் குரலுக்காக நான் காத்திருக்கிறேன்.  அப்போது தானே நேரடியாக என்னால் உங்களோடு கலந்துரையாட முடியும்!!  எத்தனையோ செய்திகள், எத்தனையோ தகவல்கள்!!  என்னுடைய முயற்சிகள் அனைத்தும் என்ன தெரியுமா – எப்படி முடிந்த அளவு அதிக தகவல்களைப் பகிர்ந்து கொள்வது, எவ்வாறு உங்களுடைய ஆலோசனைகளில் சிந்தை செலுத்திப் பரிசீலிப்பது என்பது தான்.

          நண்பர்களே, இன்று மிகவும் சிறப்பானதொரு தினமாகும்.  இன்று என்.சி.சி – தேசிய மாணவர் படையின் தினமாகும்.  தேசிய மாணவர் படை என்ற பெயர் வந்தவுடனேயே நமக்கு நம்முடைய பள்ளி-கல்லூரி நாட்கள் நினைவுக்கு வந்து விடுகின்றன.  நானும் கூட என்.சி.சி யின் கேடட்டாக இருந்திருக்கிறேன் என்பதால், இதனால் எனக்குக் கிடைத்த அனுபவம் விலைமதிப்பில்லாதது என்பதை என்னால் என் அனுபவம் வாயிலாக அறுதியிட்டுக் கூற இயலும்.  தேசிய மாணவர் படையானது இளைஞர்களிடத்திலே ஒழுங்கு, தலைமைப்பண்பு மற்றும் சேவையுணர்வை ஏற்படுத்துகின்றது.  நீங்களே கூட உங்கள் அக்கம்பக்கத்தில் பார்த்திருக்கலாம், எப்போதெல்லாம் ஏதேனும் பேரிடர் ஏற்படுகிறதோ, அது வெள்ளப்பெருக்காகட்டும், நிலநடுக்கமாகட்டும், வேறு எந்த ஒரு பேரிடராக இருந்தாலும், அங்கே உதவிக்கரம் நீட்ட நமது என்.சி.சி. கேடட்டுகள் விரைந்து செல்கிறார்கள்.  இன்று தேசத்தில் தேசிய மாணவர் படையை வலுப்படுத்த தொடர்ந்து செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  2014ஆம் ஆண்டு வாக்கிலே 14 இலட்சம் இளைஞர்கள் தேசிய மாணவர் படையோடு இணைந்திருந்தார்கள்.  இப்போது 2024இலே 20 இலட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் தேசிய மாணவர் படையோடு இணைந்திருக்கிறார்கள்.  முன்பிருந்ததை விட மேலும் புதிய 5000 பள்ளிகள்-கல்லூரிகளில் இப்போது என்.சி.சி. செயலாற்றுகிறது; மேலும் ஒரு பெரிய விஷயம் என்னவென்றால், முன்பு தேசிய மாணவர் படையில் பெண் கேடட்டுகளின் எண்ணிக்கை சுமார் 25 சதவீதம் இருந்து வந்தது.  இப்போதோ தேசிய மாணவர் படையில் பெண் கேடட்டுகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 40 சதவீதமாக அதிகரித்துவிட்டது.  எல்லையோரப்பகுதிகளில் வசிக்கும் இளைஞர்களை அதிக எண்ணிக்கையில் தேசிய மாணவர் படையோடு இணைக்கும் இயக்கமும் தொடர்ந்து நடந்தேறி வருகிறது.  நான் இளைஞர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன், அதிக எண்ணிக்கயில் தேசிய மாணவர் படையோடு உங்களை இணைத்துக் கொள்ளுங்கள்.  நீங்கள் எந்த ஒரு பணிக்குச் சென்றாலும் கூட, என்.சி.சியில் உங்களுக்குக் கிடைத்த ஆளுமைத்திறன் மேம்பாடு உங்கள் பணிக்காலத்தில் தோள் கொடுக்கும்.

          நண்பர்களே, வளர்ச்சியடைந்த பாரதத்தை நிர்மாணிப்பதில் இளைஞர்களின் பங்குபணி மிகவும் பெரியது.  இளைஞர்களின் மனங்கள் ஒருமுனைப்புடன் செயலாற்றும் போது தேசத்தின் முன்னேற்றப் பயணத்திற்காக ஆய்வு செய்யும் போது, சிந்திக்கும் போது, கண்டிப்பாக அவர்கள் அருமையான பாதையை அமைக்கிறார்கள்.  ஜனவரி மாதம் 12ஆம் தேதியன்று ஸ்வாமி விவேகானந்தரின் பிறந்த நாள் வருகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள், இதை நாம் இளைஞர்கள் தினமாக கொண்டாடுகிறோம்.  அடுத்த ஆண்டு ஸ்வாமி விவேகானந்தரின் 162ஆவது பிறந்த ஆண்டாகும்.  இந்த முறை இதை மிகவும் சிறப்பான வகையிலே கொண்டாட வேண்டும்.  இந்த சந்தர்ப்பத்திலே 11-12 ஜனவரியன்று தில்லியின் பாரத மண்டபத்தில் இளைஞர்களின் கருத்துக்களின் மஹாகும்பமேளா நடைபெற இருக்கிறது, இந்த முன்முயற்சியின் பெயர் “வளர்ச்சியடைந்த பாரத தேசத்து இளைய தலைவர்களின்” உரையாடல்.  பாரத நாடெங்கிலுமிருந்தும் கோடிக்கணக்கான இளைஞர்கள் இதிலே பங்கெடுத்துக் கொள்வார்கள்.  கிராமங்கள், தொகுதிகள், மாவட்டங்கள், மாநிலங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இப்படிப்பட்ட 2,000 இளைஞர்கள் பாரத மண்டபத்தில் வளர்ச்சியடைந்த இளம் தலைவர்கள் உரையாடலில் பங்கெடுக்க ஒன்றிணைவார்கள்.  யாருக்கு எந்தவிதமான அரசியல் பின்புலமும் இல்லையோ, யாருடைய குடும்பத்தின் எந்த ஒரு நபரோ, குடும்பமோ அரசியல் பின்புலம் இல்லாததோ, இப்படிப்பட்ட ஒரு இலட்சம் இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று நான் செங்கோட்டையிலிருந்து உரையாற்றிய வேளையில் கூறியது உங்களுக்கு நினைவிருக்கலாம்.   இப்படிப்பட்ட இளைஞர்கள், புதிய இளைஞர்களை அரசியலோடு இணைக்க தேசத்தில் பலவகையான சிறப்பு இயக்கங்கள் நடத்தப்படும்.  வளர்ச்சியடைந்த பாரத தேசத்து இளம் தலைவர்கள் உரையாடலும் கூட இப்படிப்பட்ட ஒரு முயற்சி தான்.  இதிலே தேசம் மற்றும் அயல்நாடுகளைச் சேர்ந்த வல்லுநர்கள் கலந்து கொள்வார்கள்.  பல தேசிய மற்றும் சர்வதேச ஆளுமைகளும் இதில் இடம் பெறுவார்கள்.  நானும் கூட இதிலே அதிக நேரம் கலந்து கொள்வேன்.  நேரடியாக தங்களுடைய கருத்துக்களை முன்வைக்க இளைஞர்களுக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் வாய்க்கும்.  தேசம் இந்தக் கருத்துக்களை எவ்வாறு முன்னெடுத்துச் செல்ல முடியும்?   எப்படி ஒரு உறுதியான திட்டமிட்ட பாதையை ஏற்படுத்த இயலும்?  இதன் வரைபடம் தயார் செய்யப்படும்.  ஆகையால் நீங்களும் தயாராகுங்கள், பாரதத்தை நிர்மாணிக்க இருக்கும், தேசத்தின் வருங்கால சந்ததியினருக்கு மிகப்பெரிய வாய்ப்பு மலர இருக்கிறது.  வாருங்கள், இணைந்து நாம் தேசத்தை உருவாக்குவோம், தேசத்தை வளர்ந்த தேசமாக ஆக்குவோம். 

          எனதருமை நாட்டுமக்களே, மனதின் குரலில் நாம் அடிக்கடி இப்படிப்பட்ட இளைஞர்களைப் பற்றிப் பேசி வருகிறோம்.  சுயநலமற்ற தன்மையோடு சமூகத்திற்காகச் செயலாற்றி வரும் இப்படி எத்தனையோ இளைஞர்கள் இருக்கிறார்கள், இவர்கள் மக்களின் சின்னச்சின்ன பிரச்சனைகளுக்கும் தீர்வுகளைக் கண்டுபிடித்தளிப்பதில் ஈடுபட்டு வருகின்றார்கள்.   நாம் நம்முடைய அக்கம்பக்கத்தில் பார்த்தோமேயானால், எத்தனையோ மனிதர்கள் ஏதோ ஒருவகையில் உதவி தேவைப்படுவோராக, தகவல் தேவையிருப்போராக இருக்கிறார்கள்.   சில இளைஞர்கள் ஒரு குழுவாக இணைந்து இது போன்ற தேவைகளை இட்டுநிரப்புவதில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.  இப்போது லக்னௌவில் வசிக்கும் வீரேந்திராவை எடுத்துக் கொள்வோமே, இவர் முதியோருக்கும் டிஜிட்டல் ஆயுள் சான்று பெற்றுத் தருவதில் உதவி புரிகிறார். 

விதிமுறைகளின்படி அனைத்து ஓய்வூதியதாரர்களும் ஆண்டுதோறும் ஒரு முறை ஆயுள் சான்று அளிக்க வேண்டியிருக்கிறது.  2014ஆம் ஆண்டு வரை, முதிய ஓய்வூதியதாரர்கள் இதைத் தாங்களே வங்கிகளில் சென்று செலுத்த வேண்டும் என்ற விதிமுறை நிலவி வந்தது.  இதனால் நமது முதியவர்களுக்கு எத்தனை சிரமங்கள் இருந்தன என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா?  இப்போதோ, இந்த அமைப்புமுறை மாறிவிட்டது, சுலபமாகிவிட்டது.  இப்போது டிஜிட்டல் ஆயுள் சான்று அளிப்பதால் நிலைமை மிகவும் சுலபமாகி விட்டது, முதியவர்கள் வங்கிகளுக்குச் செல்ல வேண்டியிருப்பதில்லை.  தொழில்நுட்பம் காரணமாக மூத்தோருக்கு எந்த சிரமமும் ஏற்பட்டுவிடாமல் இருப்பதில் வீரேந்திரா போன்ற இளைஞர்களின் பங்களிப்பு மிகப் பெரியது.  இவர் தனது பகுதியில் இருக்கும் முதியவர்களுக்கு இதைப் பற்றிய விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறார்.  இது மட்டுமல்ல, இவர் முதியவர்களைத் தொழில்நுட்பத்திறம் படைத்தவர்களாகவும் ஆக்கி வருகிறார்.   இவரைப் போன்றோருடைய இப்படிப்பட்ட முயற்சிகள் காரணமாக டிஜிட்டல் ஆயுள் சான்று பெறுவோரின் எண்ணிக்கை 80 இலட்சம் என்ற எண்ணிக்கையைத் தாண்டிவிட்டது.  இவர்களிலே இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட முதியவர்களின் வயது 80ஐயும் தாண்டி விட்டது. 

          நண்பர்களே, பல நகரங்களில் முதியவர்களை இந்த டிஜிட்டல் புரட்சியில் பங்குதாரர்களாக ஆக்கும் பணியில் இளைஞர்கள் முன்வந்து ஈடுபட்டுவருகிறார்கள்.  போபாலின் மகேஷ், மொபைல் வாயிலாக பணம் செலுத்தும் வழிவகையை, தனது பகுதியில் பல முதியவர்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார்.  இந்த முதியவர்களிடம் ஸ்மார்ட் ஃபோன் இருந்தாலும் கூட, அதனைப் பயன்படுத்த கற்றுக் கொடுப்போர் யாரும் இல்லை.  முதியவர்களை டிஜிட்டல் கைது என்ற அபாயத்திலிருந்து காப்பாற்றவும் கூட இளைஞர்கள் முன்வருகிறார்கள்.  அஹமதாபாதின் ராஜீவ், டிஜிட்டல் கைதின் அபாயம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.   மனதின் குரலின் கடந்த பகுதியில் நாம் இந்த டிஜிட்டல் கைது பற்றி உரையாடி இருந்தோம்.  இது போன்ற குற்றங்களுக்கு அதிக அளவில் இரையாவது மூத்த குடிமக்கள் தாம்.  இந்த நிலையில், நாம் அவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, இணையவழி மோசடியிலிருந்து அவர்களைக் காப்பாற்ற உதவி செய்ய வேண்டியது நமது கடமையாகும்.   டிஜிட்டல் கைது என்ற பெயரில் அரசாங்கத்தில் எந்தவிதமான வழிவகையும் இல்லை என்று நாம் மீண்டும் மீண்டும் மக்களுக்குப் புரிய வைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.  இந்த டிஜிட்டல் கைது என்பது முழுப்பொய், மக்களைச் சிக்க வைக்க ஒரு சூழ்ச்சி, நமது இளைய நண்பர்கள் இந்தப் பணியில் முழுமையான புரிந்துணர்வோடு தங்கள் பங்களிப்பை அளித்து வருவதோடு, மற்றவர்களுக்கும் உத்வேகமாக இருந்து வருகிறார்கள் என்பது எனக்கு பெருமகிழ்ச்சியை அளிக்கிறது.

          என் மனம்நிறை நாட்டுமக்களே, இப்போதெல்லாம் குழந்தைகளின் படிப்பு தொடர்பாக பலவகையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  நமது குழந்தைகளின் படைப்பாற்றல் மேலும் வளர வேண்டும், புத்தகங்களிடம் அவர்களின் நேசம் மேலும் அதிகரிக்க வேண்டும் என்பதே முயற்சியாக இருக்கிறது.  புத்தகங்கள் மனிதனின் மிகச் சிறந்த நண்பன் என்று கூறப்படுகிறதல்லவா?  இப்போது இந்த நட்பினை மேலும் வலுப்படுத்துவதில் நூலகத்தை விடச் சிறப்பான இடம் வேறு என்னவாக இருக்க முடியும்?   நான் சென்னையின் ஒரு எடுத்துக்காட்டை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.  இங்கே குழந்தைகளுக்கு எப்படிப்பட்ட ஒரு நூலகம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றால், இது படைப்பாற்றல் மற்றும் கற்றலின் மையக்களமாக ஆகியிருக்கிறது.  இதன் பெயர் பிரக்ருத் அறிவகம்.  இந்த நூலகம் பற்றிய எண்ணம், தொழில்நுட்ப உலகோடு தொடர்புடைய ஸ்ரீராம் கோபாலன் அவர்களின் கொடை.  அயல்நாட்டில் தனது பணியின் போது இவர் நவீன தொழில்நுட்ப உலகோடு இணைந்து வந்திருக்கிறார்.  ஆனால் அதே வேளையில் குழந்தைகளின் படிப்பு மற்றும் கற்றல் பழக்கத்தை மேம்படுத்துவது குறித்தும் சிந்தித்திருக்கிறார்.  பாரதம் திரும்பிய பிறகு இவர் பிரக்ருத் அறிவகத்தை உருவாக்கியிருக்கிறார்.   இதிலே 3000த்திற்கும் அதிகமாக புத்தகங்கள் இருக்கின்றன, இவற்றைப் படிக்க குழந்தைகள் சாரிசாரியாக வருகிறார்கள்.  புத்தகங்களைத் தவிர இந்த நூலகத்தில் பலவகையான செயல்பாடுகளும் கூட குழந்தைகளை ஈர்க்கின்றன.  கதைசொல்லும் அமர்வாகட்டும், கலைப்பட்டறைகளாகட்டும், நினைவாற்றல் பயிற்சி வகுப்புகளாகட்டும், ரோபோட்டிக்ஸ் பாடமாகட்டும், மேடைப் பேச்சாகட்டும், இங்கே அனைவருக்கும் ஏதாவது ஒன்று கண்டிப்பாக இருக்கிறது, அது அவர்களுக்குப் பிடித்தமானதாக இருக்கிறது.

          நண்பர்களே, ஹைதராபாதில் Food for Thought நிறுவனமும் கூட பல அருமையான நூலகங்களை உருவாக்கியிருக்கிறது.  இவர்களின் முயற்சியும் கூட, குழந்தைகளுக்கு அதிக அளவிலான விஷயங்கள் குறித்த சிறப்பான தகவல்களோடு கூடவே, படிப்பதற்குத் தேவையான புத்தகங்கள் கிடைக்க வேண்டும் என்பது தான்.   பிஹாரின் கோபால்கஞ்ஜில் பிரயோக் நூலகம் குறித்த உரையாடல் அக்கம்பக்கத்தில் பல நகரங்களில் நடைபெற்று வருகிறது.  இந்த நூலகத்தில் சுமார் 12 கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்குப் புத்தகங்களைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்து வருவதோடு, படிக்க உதவிகரமாக இருக்கக்கூடிய பல வசதிகளையும் இந்த நூலகம் செய்து கொடுக்கிறது.  சில நூலகங்கள் எப்படிப்பட்டவை என்றால், போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்யும் மாணவர்களுக்கு மிகவும் பயனுடையவையாக இருக்கின்றன.  சமூகத்தை அதிகாரமுள்ளதாக ஆக்க நூலகங்கள் மிகச்சிறப்பான வகையிலே பயனளித்து வருகின்றன என்பது மிகவும் சுகமான செய்தியாக இருக்கிறது.  நீங்கள் புத்தகங்களோடு தோழமையை வளர்த்துக் கொண்டு தான் பாருங்களேன், உங்கள் வாழ்க்கை எப்படி மாறிப் போகிறது என்பதை உணர்ந்து உங்களுக்கே வியப்பேற்படும்.

          என் கனிவான நாட்டுமக்களே, நேற்றுமுன்தினம் இரவு தான் நான் தென்னமெரிக்க நாடான கயானாவிலிருந்து நாடு திரும்பினேன்.  பாரதத்திலிருந்து பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் கயானாவிலும் கூட, ஒரு மினி பாரதம் வாழ்ந்து வருகிறது.  இன்றிலிருந்து சுமார் 180 ஆண்டுகளுக்கு முன்னால், கயானாவில் பாரத நாட்டவர், விவசாயக் கூலிகளாகவும், இன்னபிற வேலைகளுக்காகவும் கொண்டு வரப்பட்டார்கள்.  இன்று பாரத வம்சாவழியினர், அரசியல், வியாபாரம், கல்வி மற்றும் கலாச்சாரம் என அனைத்துத் துறைகளிலும் கயானாவில் முன்னணி வகிக்கிறார்கள்.  கயானாவின் குடியரசுத் தலைவர் டாக்டர். இர்ஃபான் அலியும் கூட பாரத வம்சாவழி வந்தவர் தான், தான் பாரத நாட்டு மரபுவழியைச் சேர்ந்தவர் என்பதில் இவர் பெருமிதம் கொள்கிறார்.  நான் கயானாவில் இருந்த வேளையில், என் மனதில் ஒரு எண்ணம் உதித்தது.  இதை நான் மனதின் குரலில் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.  கயானாவைப் போலவே உலகில் பல டஜன் நாடுகளில், இலட்சக்கணக்கான எண்ணிக்கையில் பாரதநாட்டவர் வசிக்கிறார்கள்.  பல பத்தாண்டுகள் முன்பாக 200-300 ஆண்டுகள் முன்பாக, அவர்களின் முன்னோர் பற்றிய கதைகள் உண்டு.  எவ்வாறு அயல்நாடுவாழ் பாரதநாட்டவர், பல்வேறு தேசங்களில் தங்களுக்கென தனி அடையாளத்தை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  எப்படி அவர்கள் அந்த நாடுகளின் சுதந்திர வேள்வியில் பங்கெடுத்துக் கொண்டார்கள், எப்படி தங்களுடைய பாரதிய மரபினை உயிர்ப்போடு வைத்திருந்தார்கள் என்பது போன்ற உண்மையான கதைகளைத் தேடிக் கண்டுபிடித்து என்னோடு உங்களால் பகிர்ந்து கொள்ள முடியுமா?   நீங்கள் இந்தக் கதைகளை நமோ செயலியிலோ, மைகவ் இலோ, #IndianDiasporaStories என்ற ஹேஷ்டேகில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

          நண்பர்களே, ஓமான் நாட்டில் நடைபெற்றுவரும் ஒரு அசாதாரணமான செயல்திட்டம் குறித்த சுவாரசியமான தகவல்களை உங்களோடு நான் பகிர விரும்புகிறேன்.  பல பாரதநாட்டவரின் குடும்பங்கள், பல நூற்றாண்டுகளாகவே ஓமான் நாட்டில் வசித்து வருகின்றார்கள்.  இவர்களில் பெரும்பாலானோர் குஜராத்தின் கட்ச் பகுதிலிருந்து புறப்பட்டு அங்கே வசித்து வருகிறார்கள்.  இவர்கள் மகத்துவம் வாய்ந்த ஒரு வியாபாரத் தொடர்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.  இன்றும் கூட இவர்களிடம் ஓமானி குடிமை இருக்கிறது என்றாலும் கூட, பாரத நாட்டுணர்வு இவர்களின் நாடிநரம்புகளில் எல்லாம் ஊறியிருக்கிறது.  ஓமானின் பாரதநாட்டுத் தூதரகம் மற்றும் இந்திய தேசிய ஆவணக் காப்பகத்தின் துணையோடு ஒரு குழு, இந்தக் குடும்பங்களின் வரலாற்றினைப் பாதுகாக்கும் பணியை ஆரம்பித்திருக்கிறது.  இந்த இயக்கத்தின்படி, இப்போதுவரை, ஆயிரக்கணக்கான ஆவணங்கள் சேகரிக்கப்பட்டு விட்டன.  இவற்றிலே நாட்குறிப்புகள், கணக்குப் புத்தகங்கள், பேரேடுகள், கடிதங்கள் மற்றும் தந்திகள் அடங்கும்.  இவற்றில் சில ஆவணங்கள் 1838ஆம் ஆண்டைச் சேர்ந்தவையாகவும் இருக்கின்றன.  இந்த ஆவணங்களில் உணர்வுகள் நிரம்பியிருக்கின்றன.  பல ஆண்டுகள் முன்பாக இவர்கள் ஓமானுக்குச் சென்ற போது, இவர்கள் எந்தவிதமான வாழ்க்கையை வாழ்ந்தார்கள், எப்படி சுகதுக்கங்களை எதிர்கொண்டார்கள், ஓமான் நாட்டுமக்களோடு இவர்களுடைய தொடர்புகள் எவ்வாறு பெருகியது போன்றவை எல்லாம் இந்த ஆவணங்களில் அடங்கியிருக்கின்றன.  Oral History Project – வாய்மொழி வரலாறுத் திட்டமும் கூட இந்தக் குறிக்கோளின் ஒரு மகத்துவம் வாய்ந்த ஆதாரமாக விளங்குகிறது.  இந்தப் பேரிலக்கில், அங்கே இருக்கும் மூத்தோரும் தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.  அங்கே தங்களுடைய வாழ்க்கைமுறை குறித்த தகவல்களை விரிவாக அவர்கள் எடுத்துப் பேசியிருக்கிறார்கள். 

          நண்பர்களே, இப்படிப்பட்ட ஒரு வாய்மொழி வரலாற்றுத் திட்டம், பாரத நாட்டிலும் நடந்தேறி வருகிறது.  இந்தத் திட்டப்படி, வரலாறு விரும்பிகள் தேசப்பிரிவினை காலகட்டத்தில் பாதிப்புக்கு உள்ளானவர்களின் அனுபவங்களைத் தொகுத்துக் கொண்டிருக்கிறார்கள்.  இப்போது தேசத்தில், தேசப்பிரிவினை பயங்கரத்தைக் கண்டவர்கள்-பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கிறது.  அந்த வகையில் இந்த முயற்சி மேலும் மகத்துவம் வாய்ந்ததாக ஆகியிருக்கிறது.

          நண்பர்களே, எந்த தேசம் எந்தப் பகுதி தனது வரலாற்றைப் பாதுகாத்து வைக்கிறதோ, அதன் எதிர்காலம் பாதுகாப்பானது.  இந்த எண்ணத்தோடு தான் ஒரு முயற்சி நடந்திருக்கிறது.  இதிலே கிராமங்களின் வரலாற்றை ஒன்று திரட்டும் வகையில் ஒரு தகவல்திரட்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.  கடல்பயணம் மேற்கொண்ட பாரதத்தின் பழமையான திறமைகளோடு தொடர்புடைய சான்றுகளைத் திரட்டும் இயக்கம் கூட தேசத்தில் இயங்கி வருகிறது.  இது தொடர்பாக லோதலில், ஒரு மிகப்பெரிய அருங்காட்சியகம் கூட உருவாக்கப்பட்டு வருகிறது.  இதைத் தவிர, உங்களுக்குத் தெரிந்து ஏதேனும் ஓலைச்சுவடியோ, வரலாற்று முக்கியத்துவமான ஆவணமோ, கையெழுத்துப்படியோ இருந்தால், நீங்கள் இந்திய தேசிய ஆவணக் காப்பகத்தின் உதவியோடு அதைப் பராமரிக்கலாம். 

          நண்பர்களே, ஸ்லோவாகியாவில் நடைபெற்றுவரும் இதேபோன்ற மேலும் ஒரு முயற்சி குறித்துத் தெரிய வந்தது.  நமது கலாச்சாரத்தைப் பாதுகாத்து அதை முன்னெடுத்துச் செல்வதோடு இது தொடர்புடையது.  இங்கே முதன்முறையாக ஸ்லோவாக் மொழியில் நமது உபநிஷதங்கள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன.  இந்த முயற்சிகளால் பாரதநாட்டுக் கலாச்சாரத்தின் உலகம்தழுவிய தாக்கம் குறித்துப் புரிந்து கொள்ள முடிகிறது.  உலகமெங்கும் இப்படிப்பட்ட கோடிக்கணக்கானோரின் இதயங்களில் பாரதம் வாழ்ந்து வருகிறது என்பது பெருமிதமளிக்கும் விஷயம்.

          எனதருமை நாட்டுமக்களே, தேசத்தின் இப்படிப்பட்ட சாதனையை இப்போது நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள இருக்கிறேன், இது உங்களுக்கு பேருவகையையும் அளிக்கலாம், பெருமிதமும் ஏற்படலாம், நீங்கள் இதைச் செய்யவில்லை என்றால் உங்களுக்கு ஒருவேளை கழிவிரக்கமும் ஏற்படலாம்.  சில மாதங்கள் முன்பாக நாம் “தாயின் பெயரில் ஒரு மரம் நடுவோம்” என்ற இயக்கத்தைத் தொடக்கினோம் இல்லையா?  இந்த இயக்கத்தின் வாயிலாக தேசமெங்கிலும் மக்கள் மிகுந்த உற்சாகத்தோடு கலந்து கொண்டார்கள்.  இந்த இயக்கம் வாயிலாக 100 கோடி மரங்கள் நடப்பட்டிருக்கின்றன என்ற முக்கியமான கட்டத்தை நாம் தாண்டியிருக்கிறோம் என்பதை நான் மிகுந்த உவகையோடு தெரிவித்துக் கொள்கிறேன்.  

100 கோடி மரங்கள், அதுவும் வெறும் ஐந்தே மாதங்களில் என்பது நமது நாட்டுமக்களின் இடையறாத முயற்சிகளால் மட்டுமே சாத்தியமாகியிருக்கிறது.  இதோடு தொடர்புடைய மேலும் ஒரு விஷயத்தைக் கேட்டால் நீங்கள் பெருமிதப்படுவீர்கள்.  தாயின் பெயரில் ஒரு மரம் நடுவோம் இயக்கமானது இப்போது உலகின் பிற நாடுகளிலும் பரவிக் கொண்டிருக்கிறது.  நான் கயானாவில் இருந்த வேளையில், அங்கேயும் கூட இந்த இயக்கத்தை என்னால் கண்ணாரக் காண முடிந்தது.  அங்கே என்னோடு கூட கயானாவின் குடியரசுத் தலைவர் டாக்டர். இர்ஃபான் அலி, அவருடைய மனைவியின் தாய், மற்றும் குடும்பத்தின் பிற உறுப்பினர்கள் எல்லோரும், தாயின் பெயரில் ஒரு மரம் நடுவோம் இயக்கத்தில் பங்கெடுத்துக் கொண்டார்கள். 

          நண்பர்களே, தேசத்தின் பல்வேறு பாகங்களிலும் இந்த இயக்கம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  மத்திய பிரதேசத்தின் இந்தோரில், தாயின் பெயரில் ஒரு மரம் இயக்கத்தில், மரம் நடுவதில் சாதனை படைக்கப்பட்டிருக்கிறது.  இங்கே 24 மணிநேரத்தில் 12 இலட்சத்திற்கும் மேற்பட்ட மரங்கள் நடப்பட்டிருக்கின்றன.  இந்த இயக்கம் காரணமாக இந்தோரின் ரேவதி குன்றுகளின் வறண்ட பகுதி இப்போது பசுமைப்பகுதியாக உருமாறிவிடும்.  ராஜஸ்தானத்தின் ஜைசால்மேரில் இந்த இயக்கம் வாயிலாக ஒரு வித்தியாசமான சாதனை படைக்கப்பட்டிருக்கிறது.  இங்கே பெண்களின் ஒரு குழு, ஒரு மணிநேரத்தில், 25,000 மரங்களை நட்டிருக்கிறது.  தாய்மார்கள், தாயின் பெயரில் ஒரு மரம் நட்டார்கள், மற்றவர்களுக்கும் இப்படிச் செய்ய உத்வேகம் அளித்தார்கள்.  இங்கே இருக்கும் ஓரிடத்தில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஒன்றிணைந்து மரங்களை நட்டார்கள் என்பது கூட ஒரு சாதனை தான்.  தாயின் பெயரில் ஒரு மரம்நடு இயக்கத்தின்படி பல சமூக அமைப்புகள், வட்டாரத் தேவைகளைக் கருத்தில் கொண்டு மரங்களை நட்டு வருகின்றார்கள். 

எங்கெல்லாம் மரங்களை நட வேண்டியிருக்கிறதோ, அங்கேயெல்லாம் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையிலே ஒட்டுமொத்த சூழலமைப்பையும் மேம்பாடு அடையச் செய்ய வேண்டும் என்பதே அவர்களின் முயற்சியாக இருக்கிறது.  ஆகையால் இந்த அமைப்புகள் சில இடங்களில் மருத்துவத் தாவரங்களை நடுகிறார்கள், சில இடங்களில் புள்ளினங்கள் தங்கியிருக்க மரங்களை நடுகிறார்கள்.  பிஹாரின் ஜீவிகா சுயவுதவிக் குழுவின் பெண்கள், 75 இலட்சம் மரங்களை நடும் இயக்கத்தைத் தொடங்கியிருக்கின்றார்கள்.  இந்தப் பெண்களின் ஒட்டுமொத்த கவனமும், பழமரங்களை நடுவதன் மீது இருக்கிறது, இதனால் வருங்காலத்தில் வருவாயும் பெற முடியும்.

mann ki baat manadhin kural - 2026
#image_title

          நண்பர்களே, இந்த இயக்கத்தோடு இணைந்து, எந்த ஒரு நபரும் தனது தாயின் பெயரில் மரம் நட முடியும்.  தாய் உடனிருந்தால், அவர்களையும் அழைத்துக் கொண்டு மரம் நடலாம்.  இல்லையென்றால் அவருடைய படத்தின் முன்னிலையில் கூட நீங்கள் இந்த இயக்கத்தின் பங்குதாரராக ஆகலாம்.  மரத்தோடு கூட நீங்கள் உங்கள் சுயபுகைப்படம், செல்ஃபியை எடுத்து, அதை மைகவ்.இன் தளத்தில் தரவேற்றம் செய்யலாம்.  தாயானவள் நமக்கெல்லாம் அளிப்பவற்றுக்கான நன்றிக்கடனை நம்மால் என்றுமே இட்டுநிரப்ப முடியாது என்றாலும், தாயின் பெயரில் ஒரு மரத்தை நட்டு, நாம் அவருடைய இருப்பை என்றைக்கும் உயிர்ப்போடு வைத்திருக்க முடியும். 

          என் கனிவான நாட்டுமக்களே, நீங்களனைவரும் உங்கள் சிறுவயதில் சிட்டுக்குருவியை உங்கள் வீட்டுக் கூரைகளிலோ, மரங்களிலோ கண்டிப்பாகப் பார்த்திருப்பீர்கள், அதன் கீச்சொலியைக் கேட்டிருப்பீர்கள்.  தமிழிலும் மலையாளத்திலும் இதை குருவி என்றும், தெலுகுவில் இதை பிச்சுகா என்றும், கன்னடத்தில் இதை குப்பி என்றும் பெயரிட்டு அழைக்கிறார்கள்.  அனைத்து மொழிகளிலும், கலாச்சாரத்திலும் சிட்டுக்குருவி தொடர்பான சம்பவங்கள்-கதைகள் இருக்கின்றன.  நம்மருகிலே உயிரிபன்முகத்தன்மையைப் பராமரிப்பதில் சிட்டுக்குருவிக்கு மிக மகத்துவமான பங்களிப்பு உண்டு; ஆனால் இன்று நகர்ப்புறங்களில் மிக அரிதாகவே சிட்டுக்குருவி காணப்படுகிறது.  பெருகிவரும் நகர்ப்புறங்கள் காரணமாக சிட்டுக்குருவி நம்மை விட்டுத் தொலைவாகச் சென்றுவிட்டது.  இன்றைய தலைமுறையைச் சேர்ந்த குழந்தைகளில் பலர், சிட்டுக்குருவியை படங்களிலோ, காணொளிகளிலோ மட்டுமே பார்த்திருக்கிறார்கள்.  

இப்படிப்பட்ட குழந்தைகளின் வாழ்விலே, இந்த இனிமையான பறவையை மீண்டும் மீட்டெடுக்க, சில வித்தியாசமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  சென்னையைச் சேர்ந்த கூடுகள் அறக்கட்டளையானது, சிட்டுக்குருவியின் எண்ணிக்கையைப் பெருக்க, பள்ளிக் குழந்தைகளைத் தங்கள் இயக்கத்தில் கலந்து கொள்ளச் செய்திருக்கிறார்கள்.  இந்த அமைப்பைச் சேர்ந்த சிலர், சிட்டுக்குருவிகள் நமது அன்றாட வாழ்விலே எத்தனை மகத்துவம் வாய்ந்தவை என்பதைப் பள்ளிகளுக்குச் சென்று புரியவைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  சிட்டுக்குருவியின் கூட்டை எவ்வாறு அமைத்துக் கொடுப்பது என்பது தொடர்பாக பயிற்சிகளை அளிக்கிறார்கள். 

இதற்காக இந்த அமைப்பைச் சேர்ந்த இவர்கள், சிறிய அளவிலான மரவீட்டை உருவாக்க குழந்தைகளுக்குப் பயிற்றுவித்திருக்கிறார்கள்.  இதிலே சிட்டுக்குருவி வசிக்கவும், உண்ணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.  இந்த அமைப்பை எளிதாக வெளிப்புறச் சுவரிலோ, மரத்திலோ பொருத்திவிட முடியும்.  குழந்தைகள் இந்த இயக்கத்தில் மிகுந்த உற்சாகத்தோடு பங்கெடுத்துக் கொண்டார்கள், சிட்டுக்குருவிகளுக்கான கூடுகளை அமைக்கத் தொடங்கினார்கள்.  கடந்த நான்கு ஆண்டுகளிலே இந்த அமைப்பு, சிட்டுக்குருவிகளுக்கென இப்படி 10,000 கூடுகளை உருவாக்கியிருக்கிறது.  கூடுகள் அறக்கட்டளையின் இந்த முன்னெடுப்பு காரணமாக அக்கம்பக்கப் பகுதிகளில் சிட்டுக்குருவியின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது.  நீங்களும் உங்கள் அருகிலே நடைபெறும் இப்படிப்பட்ட முயற்சிகளில் ஈடுபட்டால், சிட்டுக்குருவி கண்டிப்பாக மீண்டும் நமது வாழ்க்கையின் அங்கமாக ஆகி விடும்.

          நண்பர்களே, கர்நாடகத்தின் மைசூரூவில் இருக்கும் ஒரு அமைப்பு, குழந்தைகளுக்காக Early Bird என்ற பெயரிலான இயக்கத்தைத் தொடங்கி இருக்கிறது.  இந்த அமைப்பானது பறவைகளைகளைப் பற்றி குழந்தைகளுக்குப் புரியவைக்க, சிறப்பானதொரு நூலகத்தை நடத்துகிறது.  இதுமட்டுமல்ல, குழந்தைகளிடம் இயற்கையின்பால் பொறுப்புணர்வை ஏற்படுத்தவும் இயற்கைக்கல்வி கிட் ஒன்றைத் தயார் செய்திருக்கிறது.  இந்த கிட்டிலே, குழந்தைகளுக்கென கதைப்புத்தகம், விளையாட்டுக்கள், செயல்பாட்டுத் தாள்-activity sheet மற்றும் திருகுவெட்டுப் புதிர்கள் ஆகியன அடங்கும். 

இந்த அமைப்பு, நகரக்குழந்தைகளை கிராமங்களுக்கு இட்டுச் செல்கிறது, அங்கே பறவைகளைப் பற்றி அவர்களுக்கு எடுத்துச் சொல்கிறது.  இது போன்ற முயற்சிகள் மூலம் குழந்தைகளிடம் தங்கள் அக்கம்பக்கத்தில் இருப்பவற்றைக் கண்டு, புரிந்து கொண்டு பல கண்ணோட்டங்களை ஏற்படுத்த முடியும்.  மனதின் குரலின் நேயர்களும் கூட இத்தகைய முயற்சிகளைச் செய்து குழந்தைகளின் புரிதலை மேம்படுத்த இயலும்.

          எனதருமை நாட்டுமக்களே, அரசாங்க அலுவலகம் என்று சொன்னவுடனே மனதிலே கோப்புகளின் குவியல் என்ற காட்சி மனதிலே நிழலாடும்.  திரைப்படங்களிலும் கூட இப்படித் தான் காட்சிப்படுத்தியிருப்பார்கள்.  அரசு அலுவலகங்களில் இந்தக் கோப்புகள் தொடர்பாக ஏராளமாக கேலி பேசப்பட்டு வருகின்றது, ஏகப்பட்ட கதைகளும் எழுதப்பட்டு விட்டன.  பல்லாண்டுகளாக கோப்புகள், அலுவலகங்களில் தூசிபடிந்த நிலையில் இருந்தன, அங்கே தூய்மையின்மை நிலவி வந்தது.  இப்படிப்பட்ட பல பத்தாண்டுகள் பழமையான கோப்புகளையும், குப்பைகளையும் அகற்ற சிறப்புத் தூய்மை இயக்கம் நடத்தப்பட்டது. 

அரசுத் துறைகளில் இந்த இயக்கம் காரணமாக, அற்புதமான விளைவுகள் ஏற்பட்டன என்பது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம்.  தூய்மைப்படுத்தல் காரணமாக கணிசமான இடம் அலுவலகங்களில் ஏற்பட்டிருக்கிறது.  இதனால் அலுவலகத்தில் பணி செய்வோருக்கு ’இது தங்கள் உடைமை’ என்ற உணர்வும் ஏற்பட்டிருக்கிறது.  தங்களுடைய பணியிடங்களைத் தூய்மையாக வைத்திருப்பதன் முக்கியத்துவமும் அவர்களிடம் ஏற்பட்டிருக்கிறது.

          நண்பர்களே, எங்கே தூய்மை இருக்கிறதோ, அங்கே திருமகள் வாசம் செய்கிறாள் என்று மூத்தோர் அடிக்கடி கூற நீங்கள் கேட்டிருக்கலாம்.   நமது தேசத்திலே குப்பையிலிருந்து கோமேதகம் ஏற்படுத்தும் கருத்து மிகவும் பழமையானது.  தேசத்தின் பல பாகங்களில் பயனற்றவை என்று கருதப்படும் பொருட்கள் தொடங்கி, இளைஞர்கள் குப்பையிலிருந்து கோமேதகத்தை உருவாக்கி வருகின்றார்கள்.  பலவகையான நூதனக் கண்டுபிடிப்புக்களைப் புரிந்து வருகிறார்கள். 

இவற்றின் மூலம் அவர்கள் வருவாய் ஈட்டி வருகிறார்கள், வேலைவாய்ப்புக்கான சாத்தியங்களை மேம்படுத்தி வருகிறார்கள்.  இந்த இளைஞர்கள் தங்கள் முயற்சிகளின் மூலம் நீடித்த வாழ்க்கைமுறைக்கும் உந்துதல் அளித்து வருகிறார்கள்.  மும்பையின் இரு பெண்களின் இந்த முயற்சி மிகவும் கருத்தூக்கம் அளிக்கவல்லது.  அக்ஷராவும், பிரக்ருதியும், துணித்துண்டுகளிலிருந்து ஃபேஷனுக்கான பொருட்களை உருவாக்கி வருகின்றார்கள்.   துணிகளை வெட்டித் தைக்கும் போது, மிஞ்சும் துண்டுத்துணிகள் இருக்கிறதல்லவா, இவற்றைக் குப்பை என்று தூர எறிந்து விடுவார்கள்.  அக்ஷரா-பிரக்ருதியின் குழு, இந்தத் துண்டுத் துணிகளின் குப்பையை ஃபேஷன் பொருளாக மாற்றி விடுகிறது.  துண்டுத் துணிகளாலான தொப்பிகள், பைகள் உடனுக்குடன் விற்றுத் தீர்ந்து விடுகின்றன.

          நண்பர்களே, தூய்மை தொடர்பாக உபி மாநிலத்தின் கான்பூரிலும் கூட நல்லதொரு முன்னெடுப்பு நடந்து வருகிறது.  இங்கே சிலர் தினமும் காலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள், கங்கையின் கரைகளில் பரவியிருக்கும் நெகிழிக் குப்பைகள், இன்னபிற குப்பைகளை எடுக்கிறார்கள்.  இந்தக் குழுவின் பெயர் Kanpur Ploggers Group, அதாவது கான்பூர் குப்பை சேகரிப்போர் குழு.  இதை சில நண்பர்கள் இணைந்து தொடங்கினார்கள்.  மெல்லமெல்ல இது மக்கள் பங்களிப்பின் பேரியக்கமாக மாறிவிட்டது.  நகரின் பலர் இதோடு இணைந்திருக்கிறார்கள்.  இதன் உறுப்பினர்கள் இப்போது கடைகள் மற்றும் வீடுகளில் இருக்கும் குப்பைகளையும் கூட சேகரிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.   இந்தக் குப்பை வாயிலாக மறுசுழற்சி ஆலையில் மரங்களுக்கான பாதுகாப்பு வேலி தயாரிக்கப்படுகிறது, அதாவது இந்தக் குழுவானது, குப்பையிலிருந்து தயாரிக்கப்பட்ட மரக்காப்பானைக் கொண்டு தாவரங்களுக்குப் பாதுகாப்பையும் அளிக்கிறது. 

          நண்பர்களே, சின்னச்சின்ன முயற்சிகளால் பெரிய வெற்றிகள் எப்படி சாத்தியமாகின்றன என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டு, அஸாம் மாநிலத்தின் இதிஷா.  இதிஷா படித்தது எல்லாம் தில்லியிலும், புணேயிலும்.  இதிஷா பெருநிறுவன உலகின் பகட்டான வாழ்க்கையைத் துறந்து, அருணாச்சலத்தின் சாங்கதி நதித்துறையைத் தூய்மைப்படுத்துவதில் ஈடுபட்டு வருகிறார்.  சுற்றுலாப் பயணிகள் காரணமாக அங்கே கணிசமான நெகிழிக் கழிவுகள் திரளத் தொடங்கின.  அங்கே ஒருகாலத்தில் தூய்மையாக இருந்த நதி, நெகிழிக் கழிவுகள் காரணமாக மாசடைந்து விட்டது.  இதை சுத்தப்படுத்த வட்டார மக்களோடு இணைந்து இதிஷா செயல்பட்டு வருகிறார்.  இவருடைய குழுவைச் சேர்ந்தவர்கள், வருகைதரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, நெகிழிக் கழிவுகளைத் திரட்டி, ஒட்டுமொத்த படித்துறையிலும் மூங்கிலால் செய்யப்பட்ட குப்பைக்கூடைகளை வைத்திருக்கிறார்கள்.

          நண்பர்களே, இப்படிப்பட்ட முயற்சிகளால் பாரதத்தில் தூய்மை இயக்கத்திற்கு வேகம் கிடைத்து வருகிறது.  இது தொடர்ந்து நடைபெற்றுவரும் இயக்கம்.  உங்கள் அருகிலே கூட இப்படிப்பட்டவை நடந்து கொண்டிருக்கலாம்.  நீங்கள் இப்படிப்பட்ட முயற்சிகள் தொடர்பாக கண்டிப்பாக எனக்கு எழுதி வாருங்கள்.

          நண்பர்களே, மனதின் குரலின் இந்தப் பகுதியில் இம்மட்டே.  உங்களுடைய எதிர்வினைகள், கடிதங்கள், ஆலோசனைகளுக்காக மாதம் முழுவதும் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறேன்.  மாதம்தோறும் வருகின்ற உங்களுடைய தகவல்கள் என்னை மேலும் சிறப்பாக இயங்க வைக்க உத்வேகம் அளிக்கின்றன.  அடுத்த மாதம் நாம் மீண்டும் சந்திப்போம், மனதின் குரலின் மேலும் ஒரு பகுதியில், தேசம் மற்றும் தேசத்தின் மக்களின் புதிய சாதனைகளோடு சந்திப்போம்.  அதுவரை, நாட்டுமக்கள் அனைவருக்கும் என்னுடைய ஏராளமான நல்வாழ்த்துக்கள்.  பலப்பல நன்றிகள்.

சிலம்பு எக்ஸ்பிரஸ் பயணிகளுக்கு ஒரு நல்ல செய்தி!

railway news - 2026
#image_title

பயணிகள் நலன் கருதி சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதலாக 6 பெட்டிகள் இணைக் ப்பட்டுள்ளதாக தென்னக‌ரயில்வே செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வண்டி எண் 20681/20682 தாம்பரம் – செங்கோட்டை – தாம்பரம் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதலாக ஒரு இரண்டடுக்கு ஏசி பெட்டியும், 2 மூன்றடுக்கு ஏசி பெட்டியும், 2 தூங்கும் வசதி பெட்டியும், ஒரு முன்பதிவு இல்லாத பொது பெட்டியும் வரும் 27.11.24 முதல் 30.01.25 வரை இணைக்கப்பட உள்ளது.

ஏற்கனவே 17 பெட்டிகளுடன் இயங்கி வந்த நிலையில் தற்போது கூடுதலாக 6 பெட்டிகள் இணைக்கப்பட்டு 23 பெட்டிகளுடன் இயங்க இருக்கிறது.

இதனால் கூடுதலாக 500 பேர் வரை பயணம் செய்ய முடியும்.

இந்த ரயிலை நிரந்தரமாக தினசரி சென்னை எழும்பூர் செங்கோட்டை இடையே இயக்க பயணிகள் வலியுறுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

IND Vs AUS Test: ஸ்கோரை தூக்கி நிறுத்திய இந்திய தொடக்க வீரர்கள்!

aus vs india - 2026
#image_title

இந்தியா ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் – இரண்டாம் நாள் – பெர்த்-23.11.2024– இந்திய அணியின் தொடக்க வீரர்கள் அதிரடி ஆட்டம்

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

இந்திய அணி முதல்இன்னிங்க்ஸில் 49.4 ஓவர்களில் 150 ரன் (நிதீஷ் குமார் ரெட்டி 41, ரிஷப் பந்த் 37, கே.எல்.ராகுல் 26, ஹேசல்வுட் 4/29, மிட்சல் ஸ்டார்க் 2/14, பேட் கம்மின்ஸ் 2/67, மிட்சல் மார்ஷ்2/12); இரண்டாவது இன்னிங்க்சில் விக்கட் இழப்பின்றி 57 ஓவர்களில் 172 ரன்; ஆஸ்திரேலியஅணி முதல் இன்னிங்க்ஸில் 51.2 ஓவர்களில் 104 (அலெக்ஸ் கேரி 21, மிட்சல் ஸ்டார்க்26, ட்ராவிஸ் ஹெட் 11, நாதன் மெக்ஸ்வீனி 10, பும்ரா 5/30, சிராஜ் 2/20, ஹர்ஷித் ராணா3/48). இந்திய அணி 218 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

          நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் 27 ஓவர்களில்67/7 என்ற நிலையில் ஆஸ்திரேலிய அணி ஆட்டத்தை முடித்திருந்தது. இன்று பும்ராவின் முதல்ஓவர் முதல் பந்தில் அலக்ஸ் கேரி ஆட்டமிழந்தார். இன்றைய ஏழாவது ஓவரில் அதாவது33.2 ஆவது ஓவரில் நாதன் லியன் (5 ரன்) ஹர்ஷித் ராணா பந்தில் ஆட்டமிழந்தார்.அதன் பின்னர் ஸ்டார்க் மற்றும் ஹேசல்வுட் இருவரும் 17ஓவர்கள் ஆடினர்;25 ரன்கள் சேர்த்தனர். இந்திய வேகப் பந்துவீச்சாளர்களின் பந்துகளில் அவர்களால் ரன்அதிகம் அடிக்க முடியவில்லை. 46 ரன்கள் லீடோடு இந்திய அணி இரண்டாவது இன்னிங்க்ஸ் ஆடவந்தது.

          இரண்டாவது இன்னிங்க்ஸில் பிளேயிங் கண்டிசனுக்குஅப்ளை பண்ணி டெக்னிக்கலி சவுண்டா இந்திய டெஸ்ட் பேட்டிங், ரொம்ப நாள் கழிச்சு இன்றுபாக்க கிடைத்தது. ஆரம்பம்முதல் கடைசி வரை ஒரே மனநிலையில்பயணிப்பது கேஎல்.ராகுலின் சிறப்பு என்றால், திடீரென கியரை மாற்றுவதும் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புவதும்என பந்துவீச்சாளர்களை குழப்பத்தில் வைத்திருப்பது ஜெய்ஸ்வாலின் சிறப்பு.

          பும்ரா இழுத்து வந்ததேரை ஏறக்குறைய இந்தியத் தொடக்க வீரர்கள் நிலைக்குப்பக்கத்தில் கொண்டு வந்து விட்டார்கள். யஸஷ்வி ஜெய்ஸ்வால் (193 பந்துகள், 7 ஃபோர், 2 சிக்சர்,90 ரன்) மற்றும் கே.எல். ராகுல் (153 பந்துகள், 4 ஃபோர், 62 ரன்) இருவரும் ஒருடெஸ்ட் மேட்சை எப்படி ஆடவேண்டுமோ அப்படி ஆடினார்கள். நாளை இரு சதம் அடித்து, அடுத்துகோலி, படிக்கல், பந்த் மூவரும் அரை சதம் அடித்தார்கள் என்றால் இந்திய அணியின் வெற்றியையாராலும் தடுக்க முடியாது.

IND Vs AUS Test: முதல் நாளிலேயே படபடவென சரிந்த விக்கெட்டுகள்!

aus vs india - 2026
#image_title

இந்தியா ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் – முதல் நாள் – பெர்த்-22.11.2024– பும்ராவின் பந்துவீச்சால் சமாளித்த இந்திய அணி

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

இந்திய அணி முதல்இன்னிங்க்ஸில் 49.4 ஓவர்களில் 150 ரன் (நிதீஷ் குமார் ரெட்டி 41, ரிஷப் பந்த் 37, கே.எல்.ராகுல் 26, ஹேசல்வுட் 4/29, மிட்சல் ஸ்டார்க் 2/14, பேட் கம்மின்ஸ் 2/67, மிட்சல் மார்ஷ்2/12); ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்க்ஸில் 27 ஓவர்களில் 67/7 (அலெக்ஸ் கேரி ஆட்டமிழக்காமல்19, ட்ராவிஸ் ஹெட் 11, நதன் மெக்ஸ்வீனி 10, பும்ரா 4/17, சிராஜ் 2/17, ஹர்ஷித் ராணா1/33). இந்திய அணி 83 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

          ஐந்து டெஸ்டுகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியாவில்பயணம் செய்து கொண்டிருக்கும் இந்திய ஆடவர் கிரிக்கட் அணி இன்று பெர்த் நகரில் தனதுமுதல் டெஸ்ட் ஆட்டத்தை விளையாடியது. இந்திய அணியின் அணித்தலைவர் ரோஹித் ஷர்மாவிற்குஆண் குழந்தை பிறந்திருப்பதால் அவர் இந்திய அணியுடன் ஆஸ்திரேலியா செல்ல வில்லை. எனவேஇன்றைய ஆட்டத்திற்கு ஜஸ்பிரித் பும்ரா அணித்தலைவராக செயல்பட்டார். அணியில் ஒருசுழல்பந்துவீச்சாளருக்கு மட்டுமே இடமிருந்தது; அதனால் அந்த இடத்தில் வாஷிங்க்டன்சுந்தர் விளையாடினார். ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ரவீந்தர் ஜதேஜாஇருவரும் விளையாடவில்லை. சர்ஃப்ராஸ் கானுக்குப் பதிலாக தேவதத் படிக்கல்விளையாடினார். அவர் ஆஸ்திரேலியாவில் ஏற்கனவே பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய ஏ அணியில்சிறப்பாக விளையாடியவர்.  இதுவரை ஐந்து முறைஆஸ்திரேலியாவிற்கு கிரிக்கெட் விளையாடச் சென்றிருக்கும் அஷ்வின் ஒரு முறை கூட பெர்த்மைதானத்தில் விளையாடியதில்லை. ஆஸ்திரேலிய அணியில் நான்கு இடதுகை மட்டையாளர்கள் இருந்தபோதிலும்அஷ்வினை இன்று அணியில் சேர்க்கவில்லை.

          பூவாதலையா வென்று இந்திய அணி முத்லில் மட்டையாடத்தீர்மானித்தது.இந்த பெர்த் மைதானத்தில் முதலில் மட்டையாடுபவர்கள் வெல்வது இதுவரை வரலாறு. இம்முறைஎன்னவாகும் எனப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இந்திய அணியின் மட்டையாளர்கள் இந்தடெஸ்டிலும் ரன் எடுக்கத் தவறினார்கள். ஜெய்ஸ்வால் (8 பந்துகள் பூஜ்யம் ரன்),தேவதத் படிக்கல் (23 பந்துகள் பூஜ்யம் ரன்), விராட் கோலி (12 பந்துகள்5 ரன்) என முதல் மூன்று விக்கட்டுகள் முதல் 17 ஓவருக்குள் விழுந்துவிட்டது. அதன் பின்னர்கே.எல். ராகுலும் (74 பந்துகளில் 26 ரன்) ரிஷப் பந்தும் (78 பந்துகளில்37 ரன்) கொஞ்சம் நிதானமாக ஆடினர். ஆனால் ராகுல் மூன்றாவது அம்பயரின் ஒரு தவறான முடிவால்கேட்ச் அவுட் ஆனார்.

          ராகுலுக்குப் பின்னர் துருவ் ஜுரல்(20 பந்துகளில் 11 ரன்) வாஷிங்க்டன் சுந்தர் (15 பந்துகளில் 4 ரன்) சொற்ப ரன்களுக்குஆட்டமிழந்தனர்.  அதன் பின்னர் நிதீஷ் குமார்ரெட்டி (59 பந்துகளில் 41 ரன்) பந்துடன் இணைந்தார். ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள்ரிஷபிற்கு பந்து வீசுவது எப்படி என்பதற்கு பல திட்டங்கள் போட்டு வைத்திருப்பதாக ஆஸ்திரேலியபத்திரிகைகள் சொல்லின. இந்திய இன்னிங்க்ஸில் மூன்று சிக்சர்கள் அடிக்கப்பட்டன; பந்த்ஒரு சிக்சர், நிதீஷ் இரண்டாவது, பும்ரா மூன்றாவது. பந்த் அடித்த அந்த சிக்சர் ஒரு கண்கொள்ளாக்காட்சியாகும். உருண்டு பிரண்டு அவர் தனது பேட்டால் பந்தை எல்லைக் கோட்டிற்கு வெளியேதூக்கிப் போட்டார். இறுதியாக 49.4 ஓவரில் 150 ரன்னிற்கு இந்திய அணி அனைத்து விக்கட்டுகளையும்இழந்தது.

          ஆஸ்திரேலிய அணி தனது முதலாவது இன்னிங்க்சைவிளையாட வந்தபோது அவர்கள் பும்ராவிடமிருந்து அப்படியொரு வெறித்தனமான பந்துவீச்சை எதிர்பார்க்கவில்லை.அதிலும் ஸ்மித் ஆட்டமிழந்த அந்தப் பந்து; ஸ்மித்திற்கு என்ன நடந்தது எனத் தெரியும்முன்னர் ஆட்டமிழந்துவிட்டார். இன்றைய ஆட்டநேர முடிவிற்குள் ஆஸ்திரேலிய அணி 27 ஓவரில்ஏழு விக்கட் இழப்பிற்கு 67 ரன் எடுத்தது. அலக்ஸ் கேரி (19 ரன்) மற்றும் மிட்சல்ஸ்டார்க் (6 ரன்னுடன்) ஆடிக்கொண்டு இருக்கிறார்கள். நாதன் லியன் மற்றும்ஹேசல்வுட் இருவரும் ஆடவேண்டும்.

          இந்திய மண்ணில் மட்டுமல்லாது வெளிநாடுகளில்இரண்டு அல்லது மூன்று நாள்களில் டெஸ்ட் மேட்ச் முடிந்தால் அதனைப் பார்க்க மக்கள் எப்படிஆர்வம் காட்டுவார்கள்?

கார்த்திகை முதல் நாள்; சபரிமலை பக்தர்கள் மாலை அணிந்து விரதம் ஏற்பு!

aiyappa maalai in karur temple - 2026
#image_title

கரூர் ஸ்ரீ பசுபதீஸ்வரர் ஐயப்பா சுவாமி ஆலயத்தில் கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் இன்று மாலை அணிவித்து தங்களது நேர்த்திக்கடனை செய்தனர்.

கார்த்திகை 1 தேதியான இன்று பல்வேறு ஐயப்பன் ஆலயங்களில் பக்தர்கள் 48 நாள் விரதம் இருக்க இன்று முதல் மாலை அணிவித்து தங்களது முதல் நாள் விரதத்தை தொடங்கியுள்ள நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பசுபதித்ரா ஐயப்பன் ஆலயத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் இன்று ஐயப்ப சன்னிதியில் மாலை அணிவித்து வருகின்றனர்.

குருசாமி மாலை அணிவிக்க அதை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் மாலை அணிவித்து தொடர்ச்சியாக சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

மேலும் இன்று முதல் ஐயப்பன் ஆலயத்தில் நாள்தோறும் அதிகாலை சிறப்ப அபிஷேகமும் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது 48 நாள் விரதம் இருக்கும் கன்னி சாமிகள் குறிப்பாக இன்று முதல் தங்களது விரதத்தை தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதே போல் காந்திகிராமம் உள்ளிட்ட பல்வேறு ஐயப்பன் ஆலயங்களில் காலை முதலே பக்தர்கள் மாலை அணிவித்து வருகின்றனர்.

சிறப்புத் தகவல்: ஐயப்பனின் ஐந்து படை வீடுகள்; மண்டல பூஜைகள் தொடக்கம்!

achankoil1 - 2026

கேரளாவில் பிரசித்தி பெற்ற ஐயப்பனின் படை வீடு கோவில்களான அச்சன்கோவில், ஆரியங்காவு, குளத்துப்புழா, எரிமேலியில் மண்டல பூஜை மகோத்சவம் இன்று கோலாகலமாகத் துவங்கியது. திரளான பக்தர்கள் இக் கோவில்களுக்கு சென்று சபரிமலை செல்வதற்கு மாலை அணிந்து விரதத்தை துவக்கியும் வழிபாடு நடத்தியும் வருகின்றனர்.

கேரளாவில் பிரசித்தி பெற்ற சுவாமியாக ஐயப்பன் அருள்பாலிக்கிறார். இவருக்கு தமிழகத்தில் முருகனுக்கு படைவீடு கோவில்கள் உள்ளது போல் கேரளாவில் படைவீடு கோவில்கள் உள்ளன. ஒவ்வொரு கோவில்களும் ஒவ்வொரு வரலாற்றையும் ஒவ்வொரு தத்துவத்தையும் உணர்த்தி வருகிறது.

செங்கோட்டை அருகில் உள்ள குளத்துப்புழா, ஆரியங்காவு, அச்சன்கோவில் ஆகிய கோயில்கள் மிக முக்கிய ஐயப்பனின் படை வீடு கோவில்களாக உள்ளன.

kulathupuzha sastha temple - 2026
#image_title

முதல் படைவீடு:குளத்துப்புழா: செங்கோட்டையிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் சாலையில் சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது குளத்துப்புழா. இங்கு தர்ம சாஸ்தா மிகப்பெரிய குளத்துப்புழா நதிக்கரையோரம் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் சாஸ்தா குழந்தை ரூபமாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது தனிச்சிறப்பாகும்.

முன்பு கொட்டாரக்கரை மகாராஜா இந்த வழியாக குதிரையில் சென்றபோது ஆற்றங்கரையில் ஐயப்பன் குழந்தை வடிவிலான 8 விக்கிரகங்கள் இருந்தது. இது அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்தால் பாலகன் ஐயப்பன் உருவம் வரும். இதை நதிக்கரையில் கோயில் கட்டி இங்கு பிரதிஷ்டை செய்தார். இன்னும் இந்த உருவம் அப்படியே உள்ளது. மேலும் திருவாசி அணிந்த ஐயப்பனும் அபிஷேகத்திற்காக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.

இக்கோவில் ஐயப்பனின் படை வீடு கோவில்களில் முதல் கோவிலாக பாலாசாஸ்தா கோயிலாக அழைக்கப்படுகிறது. இக்கோவிலில் இன்று மண்டல பூஜை துவங்கியது. நேற்று மண்டல பூஜை துவங்குவதற்கான அனைத்து பூஜை வழிபாடுகளும் நடத்தப்பட்டு இன்று அதிகாலை ஐந்து மணிக்கு நடை திறந்து 41 நாள் மண்டல பூஜை வழிபாடுகள் துவங்கி பூஜைகள் நடந்து வருகிறது.

இக்கோவில் அதிகாலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் நடை திறந்திருக்கும் .

சபரிமலை செல்லும் பக்தர்கள் இக்கோவிலுக்கு அதிக அளவில் சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர். இக்கோவிலில் 41 நாள் மண்டல பூஜை நாட்களிலும் இரவு விளக்கு வழிபாடு நடத்துவது சிறப்பு அம்சமாகும்.

ariyankavu31 1641031011 1 - 2026

இரண்டாம் படை வீடு:ஆரியங்காவு: குளத்துப்புழாவில் இருந்து செங்கோட்டை செல்லும் வழியில், 24 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஆரியங்காவு. செங்கோட்டையில் இருந்து புனலூர் – கொல்லம் சாலையில் சுமார் 16 கி.மீ., சென்றால் முதலில் வருவது இந்தத் தலம். இது, ஐயப்பனின் இரண்டாவது படை வீடு கோவிலாக உள்ளது. இங்கே தர்ம சாஸ்தா இளைஞனாக மதகஜ வாகன ரூபனாக மதம் பிடித்த யானையை அடக்கிய வீரனாகக் காட்சி தருகிறார்.

இக்கோவிலில் தர்மசாஸ்தாவுக்கு திருமணம் நடந்ததாக ஒரு ஐதிகம் நிலவி வருகிறது. தமிழ்ப் பெண், சௌராஷ்ட்ரா குலத்தைச் சேர்ந்த புஷ்களா தேவி என்பவருடன் ஐயப்பன் ஆரியங்காவு தர்மசாஸ்தா திருமணம் செய்து கொண்டதாக வரலாறு கூறுகிறது. ஆனால் ஐதீகப்படி திருமணம் நடக்கும் போது நின்று விட்டதாம்!

தற்போது கோவிலில் திருமணம் மார்கழி மாதத்தில் மண்டல பூஜைக்கு முதல் நாள் இரவு நடத்தப்படுகிறது. மிகப் பிரமாண்ட விழாவாக மார்கழி ஒன்று முதல் இந்தக் கோவிலில் பத்து நாள் விழா மிகச் சிறப்பாக நடைபெறும்.

கார்த்திகை – 1 இன்று முதல் மண்டல பூஜை வழிபாடு துவங்கி 41 நாட்கள் இவ்விழா விமர்சையாக நடைபெறும். இக்கோவிலில் 30-வது நாள் ஆரியங்காவு தர்ம சாஸ்தாவுக்கு திருபாவரணங்கள் அணிவித்து பூஜைகளும் மார்கழி 1 முதல் உத்ஸவ வழிபாடுகள் துவங்கி மண்டல பூஜைக்கு முதல் நாள் திருக்கல்யாண வைபோகம் மிக விமர்சையாக நடைபெறும்.

41 வது நாள் நடைபெறும் மண்டல பூஜை விழா மிகச் சிறப்பானது. மண்டல பூஜை சபரிமலையில் தற்போது நடைபெற்று வருகிறது. ஆனால் இங்குதான் மண்டல பூஜையை மதுரை பாண்டிய மகாராஜா 41 நாட்கள் கடும் பூஜை செய்து நடத்தியதாகக் கூறப்படுகிறது. பாண்டிய மகாராஜா இக்கோவிலைக் கட்டி பூஜைகள் நடத்தி, கார்த்திகை 1 முதல் 41 நாட்கள் மண்டல பூஜை வழிபாடு நடத்தி, இதில் 30 வது நாள் முதல் 41வது நாள் வரை தினசரி உத்ஸவம் நடத்தி 40வது நாளில் ஆரியங்காவு தர்ம சாஸ்தாவுக்கும் பூர்ண புஷ்களா தேவிக்கும் திருக்கல்யாண வடிவம் நடத்தி வைத்தாராம்! 41 நாள் மண்டல பூஜை கும்பாபிஷேகம் நடந்ததாகக் கருதப்படுகிறது! இதுவே தற்போது சபரிமலையில் மிகப்பெரிய விழாவாக நடந்து வருவதாக புராண வரலாறு கூறுகிறது.

ஆரியங்காவிலிருந்து மலை வழியில் செல்லும் பாதையில் அடர்ந்த வனத்தில் புஷ்கலாதேவி கோவில் உள்ளது. திருவிழாவிற்காக இங்கிருந்து புஷ்கலாதேவியை கார்த்திகை மாதம் கடைசி நாள் அழைத்து வரும் சம்பிரதாய நிகழ்வும் மார்கழி 1 முதல் பூஜை வழிபாடு திருவிழா பூஜை வழிபாடுகளும் நடைபெறும். இக்கோவில் ஐயப்பனின் இரண்டாவது படை வீடு கோவிலாக அழைக்கப்படுகிறது.

தினமும் அதிகாலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும்.

achankoil therottam rathothsavam - 2026

மூன்றாம் படைவீடு: அச்சங்கோவில் : கடந்த சில ஆண்டுகளாக சபரிமலை செல்லும் பக்தர்கள் மிக அதிக அளவில் இக்கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.

செங்கோட்டையிலிருந்து பண்பொழி வழியாக சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில், அடர்ந்த வனத்தில் அச்சன்கோவில் உள்ளது. இது ஐயப்பனின் மூன்றாவது படை வீடு கோவிலாக உள்ளது. இங்கு தர்மசாஸ்தா அரசனாக பூரண புஷ்கலாதேவியுடன் அருள்பாலித்து வருவது சிறப்பம்சமாகும்.

அச்சங்கோவில் தர்மசாஸ்தாவிடம் எது கேட்டாலும் உடனே தருவார் என சாஸ்திரத்தில் கூறப்படுகிறது. சபரிமலையில் உள்ளது போல் இங்கும் 18 படி நடை, சபரிமலையில் உள்ளது போல் இங்கும் தங்கக் கொடிமரம், ஆராட்டு உற்சவம் 10 நாள் வெகு விமர்சையாக நடைபெறும். வனப்பகுதியில் இருந்தாலும் தினமும் மிக அதிக அளவில் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

தற்போது மண்டல பூஜை விழா இன்று காலையில் தொடங்கியது. கோவில் முழுவதும் பனை ஓலை தோரணங்கள், வாழை மரங்கள் கட்டி, தீபம் ஏற்றி சிறப்பு பூஜை நடத்தி, கார்த்திகை ஒன்றாம் தேதி இன்று மிகப்பெரிய பாக்கு மரம் வெட்டி மண்டல பூஜை துவங்கியது. இதற்காக சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்றப்பட்டு, 41 நாள் மண்டல பூஜை விழா துவங்கியுள்ளது!

கோவிலில் மார்கழி 1 முதல் 10 நாட்கள் நடைபெறும் ஆராட்டு உத்ஸவம் மிகப் பிரபலமானது. இதற்காக கார்த்திகை மாதம் கடைசி நாள் மண்டல பூஜை 30 ஆவது நாள் அச்சன்கோவில் தர்மசாஸ்தாவுக்கு தங்கத் திருவாபரணங்கள் கொண்டுவரப்பட்டு அணிவிக்கப்படுகிறது.

இந்த திருவாபரணங்கள் மார்கழி ஒன்று முதல் 10 நாட்கள் தர்மசாஸ்தாவுக்கு அணிவிக்கப்படுவது மிக சிறப்பம்சமாகும். திருவிழாவின் கடைசி நாளில் பம்பா அச்சன்கோவில் நதியில் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா நடத்துவது தனிச்சிறப்பாகும். மிகப் பிரபலமான இக்கோவிலில் தினமும் அதிகாலை 5 மணிக்கு நடை திறந்து பகல் 12 மணி வரையிலும் மாலை 5 மணிக்கு நடை திறந்து இரவு 9 மணி வரையிலும் பல்வேறு பூஜை வழிபாடுகள் நடைபெறுவது சிறப்பம்சமாகும்

தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்கள் வாகனங்களில் வரும்போது தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டையில் இருந்து அச்சன்கோவில் சென்று, அச்சன்கோவிலில் இருந்து பத்தணாபுரம் பத்தனம்திட்டா வழியாக சபரிமலை செல்வதற்கு மிக நல்ல சாலை வசதி உள்ளது. மகரஜோதி காலத்தில் ஏராளமான பக்தர்கள் இந்த வழியில் நடந்து செல்வது சிறப்பம்சமாகும்.

பிரசித்தி பெற்ற இந்த மூன்று ஐயப்பனின் படை வீடு கோவில்களுக்கும் செல்ல, செங்கோட்டை மிக முக்கியமான நுழைவு வாயிலாக உள்ளது!

erumeli darmasastha temple - 2026
#image_title

நான்காம் படைவீடு: எரிமேலி: ஐயப்பனின் அடுத்த படை வீடு கோவிலான எரிமேலி தர்மசாஸ்தா கோவிலிலும் இன்று முதல் 41 நாட்கள் மண்டல பூஜை விழா கோலாகலமாகத் துவங்கியுள்ளது. இக்கோவிலில் சபரிமலை செல்லும் கன்னி ஐயப்ப பக்தர்கள் பேட்டை துள்ளி எரிமேலி சாஸ்தாவுக்கு பேட்டை நேர்ச்சை செலுத்தி சபரிமலைக்குச் செல்வதை முக்கிய வழிபாடாகக் கொண்டுள்ளது சிறப்பம்சமாகும்!

எரிமேலியில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பம்பை. எரிமேலியிலிருந்து சபரிமலைக்கு மிக சிறப்பான ரோடு வசதியும் உள்ளது. பெருவழிப்பாதையில் செல்லும் பக்தர்கள் எரிமேலி சென்று இங்கிருந்து 41 கிலோமீட்டர் தொலைவு நடந்து சபரிமலைக்கு செல்வதும் சிறப்பம்சம். எரிமேலி கோவிலும் தினமும் காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

இந்த நான்கு கோவில்களுக்கும் செல்ல போதிய பஸ் வசதி இருந்தாலும் பக்தர்கள் அதிக அளவில் தனி வாகனங்களிலேயே சென்று வருகின்றனர்.

sabarimala nada opened - 2026
#image_title

ஐந்தாம் படைவீடு சபரிமலை : ஐயப்பனின் ஐந்தாவது படை வீடு கோவிலாக சபரிமலை ஐயப்பன் கோவிலும், ஆறாவது படை வீடாக காந்தமலையும் உள்ளதாகக் கூறுகின்றனர். ஐயப்பனின் ஐந்து படை வீடுகளுக்குச் சென்றாலும் காந்த மலைக்கு செல்ல முடியாது என ஒரு ஐதீகம் நிலவி வருகிறது.

ஆனால், தொடக்க காலத்தில் ஐயப்பன் வழிபாடு சாஸ்தா வழிபாடாகவே தமிழகத்தில் பரிமளித்ததாகக் கூறுவர். எனவே சாஸ்தா ஆலயங்களில் முதல் ஆலயமாக, தமிழகத்தின் பாபநாசம் மலைக்கு மேல் உள்ள சொரிமுத்து ஐயனார் கோவிலின் தர்மசாஸ்தாவையே வணங்கி, அதன் பின்பே இந்த ஐந்து ஐயப்ப தலங்களுக்கும் செல்வது பழங்கால மரபாக இருந்துள்ளது. ஆனால் காலப்போக்கில் மற்ற ஐந்து தலங்களும் கேரளத்தில் அமைந்துவிட்டதால், இந்த ஐந்து தலங்களுக்கு மட்டுமே சென்று வருவதை வழக்கமாகக் கொண்டனர்.