இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.
ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.
மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்
தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.
பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.
ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.
மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்
தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.
பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
இந்து சமய அறநிலையத்துறைக்கு எதிரான வழக்கில் மனுதாரர் 3 .5 லட்சம் ரூபாயை டெபாசிட் செய்ய வேண்டும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டுகோள் விடுத்து, இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்கு எதிராக மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கு ஒன்றில் நேற்று மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் மிக வினோதமான தீர்ப்பு ஒன்றை வழங்கி உள்ளது.
அறநிலையைத் துறைக்கு எதிராக வழக்கு தொடுத்த மனுதாரரின் நேர்மை தன்மையை நிரூபிக்கும் வகையில் வழக்கு ஒன்று ரூபாய் 50,000 வீதம் ஏழு வழக்குகளுக்கு மொத்தம் மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் டெபாசிட் தொகை செலுத்த வேண்டும் எனவும் வழக்கு நல்ல நோக்கத்துடன் தொடுக்கப்பட்டது நிரூபிக்கப்பட்டால் அந்த பணம் திருப்பித் தரப்படும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு வேடிக்கையாக உள்ளது. ஆன்மீக சிந்தனையோடு தெய்வ பக்தியோடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஆலயங்கள் முறையாக செயல்பட வேண்டும் என்கின்ற நல்லெண்ணத்தோடு வழக்கு தொடுப்பவர்களுக்கு இது பேரிடியாய் அமைந்துள்ளது. அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையை பாதிப்பதாகவும் அமைந்துள்ளது.
சுற்றுச்சூழல், விலங்குகள் என எத்தனையோ பேர் விளம்பரத்திற்காக பல வழக்குகளை தொடுத்து வருகின்றனர் அதில் சிலர் ஆதாயமும் அடைந்து வருகின்றனர். ஆனால் அறநிலையத்துறை சீராக செயல்பட வேண்டும் என்கிற நோக்கில் தெய்வபக்தியோடு வழக்கு தொடுப்பவர்களுக்கு எந்த ஆதாயமும் கிடைக்கப் போவதில்லை அவர்களுக்கு விளம்பரமும் அவசியமில்லை அப்படிப்பட்ட சூழ்நிலையில் மாண்புமிகு உயர்நீதிமன்றம் இத்தகைய உத்தரவு பிறப்பித்துள்ளது பொதுநல வழக்கு தொடுக்கும் உரிமையை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது.
அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு ஆலயங்களில் நித்தம் நித்தம் பல்வேறு முறைகேடுகளும் விதிமீறல்களும் அக்கிரமங்களும் நடைபெற்று வருகிறது சமீபகாலமாக மாண்புமிகு உயர் நீதிமன்றத்தின் பல்வேறு நியாயமான தீர்ப்புகளுக்கு பின்பு தான் இந்து சமய அறநிலையத்துறை ஓரளவு சீர்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தச் சூழ்நிலையில் அறநிலையத்துறையில் நடக்கும் அவலங்களை எல்லாம் முடிவுக்கு கொண்டு வர நீதிமன்றமே இறுதி வாய்ப்பு என நம்பி இருக்கும் இந்துக்களின் கடைசி கட்ட நம்பிக்கையையும் சீர்குலைக்கும் வகையில் இந்த உத்தரவு அமைந்துள்ளது .
பொதுவாக ஏதேனும் விளம்பரத்திற்காக யாரேனும் வழக்கு தொடர்ந்தால் வழக்கின் முடிவில் அவருக்கு அபராதம் விதிக்கப்படுவது நீதிமன்றங்களின் மரபு. ஆனால் வழக்கை விசாரிக்க துவங்கும் முன்பே டெபாசிட் தொகை செலுத்த வேண்டும் என கூறுவது வேதனையாக உள்ளது.
ஆகவே மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய அத்தகைய தீர்ப்பை நியாயமுடன் மறுபரிசீலனை திரும்ப பெற வேண்டும் என இந்து முன்னணி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறது
உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் பகுதி 3 – 1983 போட்டி
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
1983ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கட் போட்டிகளும் இங்கிலாந்தில்தான் நடந்தன. இதன் பெயரும் “ப்ருடென்ஷியல் கோப்பை 83” என்பதாகும்.
1983ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9ஆம் தேதியிலிருந்து 25ஆம் தேதி வரை இந்தப் போட்டிகள் நடந்தன. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய இரு நாடுகளும் இந்தப் போட்டியை இணைந்து நடத்தின.
எட்டு அணிகள் போட்டியில் கலந்துகொண்டன. ஏழு அங்கீகாரம் பெற்ற டெஸ்ட் அணிகள் – இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மேற்கு இந்தியத் தீவுகள், நியூசிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் – ஆகிய அணிகளோடு அச்சமயத்தில் புதிதாக டெஸ்ட் அணியாகச் சேர்ந்த இலங்கை அணி, இவற்றோடு ஜிம்பாபே அணியோடு எட்டு அணிகள் போட்டியில் கலந்து கொண்டன.
எட்டு அணிகளும் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு இருந்தன. குரூப் A பிரிவில் இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகள் விளையாடின. குரூப் B பிரிவில் ஆஸ்திரேலியா, மேற்கு இந்தியத் தீவுகள், இந்தியா, ஜிம்பாபே அணிகள் விளையாடின. இந்த ஆண்டு ஒரு புதிய மாற்றமாக ஒவ்வொரு குரூப்பிலும் உள்ள அணிகள் மற்ற அணிகளோடு இரு முறை விளையாடின.
குரூப் A பிரிவில் இங்கிலாந்தும் பாகிஸ்தானும் முதல் இரண்டு இடங்களைப் பெற்றன. குரூப் B பிரிவில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியும் இந்திய அணியும் முதல் இரு இடங்களைப் பெற்று அரையிறுதிக்குத் தகுதிபெற்றன. அரையிறுதியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை வென்றது. மேற்கு இந்தியத் தீவுகள் அணி பாகிஸ்தானை வென்றது.
இறுதிப் போட்டியில், மேற்கிந்தியத் தீவுகள் பூவாதலையா வென்று இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்யுமாறு பணித்தது. கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் (57 பந்துகளில் 38) மற்றும் மொஹிந்தர் அமர்நாத் (80 பந்துகளில் 26) ஆகியோர் மட்டுமே குறிப்பிடத்தக்க வகையில் விளையாடினர். ஏனெனில் ராபர்ட்ஸ், மார்ஷல், ஜோயல் கார்னர் மற்றும் மைக்கேல் ஹோல்டிங் ஆகியோர் இந்திய பேட்ஸ்மேன்களை தங்களது பந்து வீச்சால் திணறடித்தனர்.
இந்திய அணியின் இறுதி ஆட்டக்காரர்கள் நன்றாக விளையாடியதால் இந்தியா 183 ரன் (ஆல் அவுட், 54.4 ஓவர்கள்) எடுத்தது. இந்திய பந்துவீச்சு வானிலை மற்றும் பிட்ச் சூழலை சரியாக பயன்படுத்தி, மேற்கிந்திய தீவுகளை 52 ஓவர்களில் 140 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தது. இதனால் 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இது கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் அதிர்ச்சியூட்டும் முடிவாகும். உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இதுவரை வெற்றி பெற்ற மிகக் குறைந்த ஸ்கோராக இது உள்ளது.
அமர்நாத், மதன் லால் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். மேற்கிந்திய தீவுகள் அணியில் அதிகபட்சமாக விவ் ரிச்சர்ட்ஸ் 28 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். அமர்நாத் மிகவும் சிக்கனமான பந்துவீச்சாளராக இருந்தார், தனது ஏழு ஓவர்களில் 12 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து, 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார், மேலும் அவரது ஆல்ரவுண்ட் செயல்பாட்டிற்காக மீண்டும் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
இங்கிலாந்தின் டேவிட் கோவர் 384 ரன் கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்த வீரரானார். இந்திய அணியின் கபில்தேவ் 303 ரன்கள் எடுத்து அதிக ரன் எடுத்த வீரர்கள் பட்டியலில் ஐந்தாம் இடம் பிடித்தார். இந்தியாவின் ரோஜர் பின்னி 18 விக்கட்டுகள் எடுத்து பந்துவீச்சாளர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார். மதன்லால் 17 விக்கட்டுகள் எடுத்தார்.
குரூப் ஆட்டங்களில் இந்திய அணியின் திறமை வெளிப்பட்டது. முதல் போட்டியிலேயே மேற்கு இந்தியத் தீவுகள் அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ஆனால் அதே அணியை இரண்டாவது முறை சந்தித்தபோது 66 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றுப் போனது.
ஆஸ்திரேலிய அணியிடமும் ஒரு ஆட்டத்தில் தோற்று, ஒரு ஆட்டத்தில் இந்திய அணி வென்றது. ஜிம்பாபே அணியோடு விளையாடிய இரண்டு ஆட்டங்களிலும் இந்திய அணி வென்றது. அதில் ஒரு ஆட்டம் சரித்திரச் சிறப்பு வாய்ந்தது.
மதுரை: மதுரை மேற்கு மாவட்ட ம், திருமங்கலம் நகர் பா.ஜ.க. சார்பாக மத்திய அரசு 9-ம் ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம், திருமங்கலத்தை அடுத்த சந்தைப்பேட்டையில் நடைபெற்றது .
நகரத் தலைவர் விஜயேந்திரன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மதுரை மேற்கு மாவட்டத் தலைவர் சசிகுமார், மாநில பொருளாதாரம் பிரிவு தலைவர் எம். எஸ் .ஷ பொருளாதார பிரிவு நிரஞ்சன், மாவட்டச் செயலாளர்கள் சின்னசாமி, தமிழ்மணி, ஆன்மீகப் பிரிவு மாரிமுத்து, கூட்டுறவு பிரிவு முனியாண்டி ஆகியோர் அழைப்பாளர்களாக வந்திருந்தனர்.
சசிகுமார், மத்திய அரசு 9 ஆண்டுக்கான திட்டங்களை எடுத்துரைத்தார்.
திமுக அரசாங்கம் தொடர்ந்து ஊழலில் ஈடுபட்டு கொண்டு இருக்கிறது. குறிப்பாக, மதுரை மாவட்ட எல்லைகளில் சட்ட விரோத மணல் குவாரிகளை செயல்பட்டு கொண்டு இருக்கிறது. இதைக் கண்டு கொள்ளாமல் திமுக அரசாங்கம் வேடிக்கை பார்க்கிறது என்று, விமர்சித்தார்.
மண்டல் நிர்வாகிகள் சக்திவேல் ,தங்கம், நீலமேகம், சுந்தர்ராஜ், புஷ்பராஜ், மருதுபாண்டி, துரைமுருகன் ,செல்வ லட்சுமி, ரோஸ் லதா, இன்பராணி மாலா மற்றும் திருமங்கலம் நகர் பாஜகவினர் கலந்து கொண்டனர்.
டிஐஜி தற்கொலை விவகாரம் குறித்து உண்மை நிலவரம் காவல் துறை ஆணையம் வெளியிட வேண்டும் -மதுரை விமான நிலையத்தில் எம்.எல்.ஏ வி.வி. ராஜன் செல்லப்பா செய்தியாளர்களிடம் கூறினார்.
சென்னையில் இருந்து விமான மூலம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். இதனைத் தொடர்ந்து, செய்தியாளருக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறுகையில்
டிஐஜி விஜயகுமார் தற்கொலை குறித்த கேள்விக்கு_ கொலை கொள்ளை மற்றும் நடக்கும் பல்வேறு அவர்களுக்கு ஆட்பட்டிருக்கும் இந்த இரண்டு ஆண்டு காலம், தலைமையில் இருக்கும் நிர்வாகம் சரியில்லாத காரணத்தால் எல்லா வகையிலும் தமிழக அரசு சீர்கெட்டு போய் கிடக்கிறது.
குற்றம் சாட்டுவதை விட தேனி மாவட்டத்தை சேர்ந்த மதுரையில் திருமணத்தை முடித்த காவல் அலுவலர் தன்னைத்தானே சுட்டுக் கொள்கிற அளவுக்கு பணி சுமை காரணமா அல்லது வேறு காரணமா என்று இன்னும் தெரியவில்லை கண்டனத்தை தெரிவிப்பதை விட முதலில் வருத்தத்தை பதிவு செய்கிறோம்.
ஆனால் இது போன்ற நிகழ்வுகள் காவல்துறையில் வரலாற்றில் நிகழ் பெற்றது இல்லை. காவல்துறை ஆணையம் இது குறித்து விசாரணை செய்து உடனடியாக சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இன்று நடைபெற்ற நிகழ்வு யாரும் எதிர்பார்த்திராத, காவல்துறையில் இதுவரை நடந்திராத ஒரு உயர் அதிகாரி தன்னை பலி கொடுத்திருக்கிறார்.
மொத்தத்தில் இந்த அரசு மிகவும் பலவீனப்பட்டு போயிருக்கிறது, மக்களை மட்டும் காப்பாற்ற முடியாத அரசாக இல்லாமல் காவலர்களையும் காப்பாற்ற முடியாத அரசாக உள்ளது.
ஓ.பி.ரவிந்திர நாத் எம்பி பதவியை உயர்நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்தது குறித்த கேள்விக்கு…
அதில் நீதித்துறை தெளிவான கருத்துகளை சொல்லி இருக்கிறார்கள். அவர் தன் விண்ணப்பத்திலேயே தவறு செய்திருக்கிறார் என்று சுட்டிக் காட்டுகிறார்கள். நீதித்துறையில் அவருக்கு காலக்கெடு கொடுத்திருக் கிறார்கள். உண்மையான காரணம் தெரிந்த பிறகு அதை பற்றி பேசுவோம்.
மதுரை விமான நிலையம் முத்துராமலிங்க தேவர் பெயர் வைப்பது குறித்த கேள்விக்கு…
மதுரை விமானத்தை பொறுத்த வரை பெயர் வைப்பது சர்ச்சைக்குரிய விஷயமாக நீண்ட நெடிய நாளாக இருக்கிறது. குறிப்பிட்ட எல்லாரும் குறிப்பிட்ட பெயர்களை வைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆகவே, இது குறித்த கருத்துக்கள் தெளிவான முடிவுகள் இன்னும் எடுக்கப்படவில்லை, இந்த அரசாங்கமும் மத்திய அரசாங்கமும் இது குறித்த முடிவுகளை விரைவில் இருக்கும் என்று நம்புகிறேன்.
ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெறும் அதிமுகவின் பொன்விழா மாநாடு குறித்த கேள்விக்கு…
எடப்பாடி பழனிசாமி தலைமையில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அடிப்படையில் அரங்கம் அமைக்கும் பணிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் மட்டுமல்ல இந்திய துணைக்கண்டத்திலும் சிறப்பான மாநாடா நடத்த வேண்டும் என்பதற்காக பல்வேறு பணிகளை அந்த அடிப்படையில் வர ஞாயிற்றுக்கிழமை ஒன்பதாம் நாள் காலை 7 மணி அளவில் அரங்கத்தை எடுத்து மாநாட்டுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் கால் கோல் விழா நடைபெற இருக்கிறது. நிர்வாகிகள் கூட்டமும் இந்த மாநாடு எப்படி சிறப்பாக நடத்துவது குறித்தும் நடைபெற இருக்கிறது என்றார்.
விருதுநகர் : விருதுநகர் வழியாக இயக்கப்படும் வாராந்திர சிறப்பு விரைவு ரயிலுக்கு, ரயில் பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
மும்பை – தூத்துக்குடி – மும்பை வாராந்திர சிறப்பு விரைவு ரயில் சேவையை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. வண்டி எண் 00143 சிறப்பு விரைவு ரயில் ஜுலை மாதம் 7ம் தேதி முதல், ஜுலை மாதம் 23ம் தேதி வரை இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
ஜூலை 7ம் தேதி மும்பையிலிருந்து புறப்பட்டுள்ள இந்த வாராந்திர சிறப்பு விரைவு ரயில், நேற்று இரவு விருதுநகர் வந்து சேர்ந்தது. பின்னர் விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக தூத்துக்குடிக்கு சென்றடைந்தது.
தூத்துக்குடியில் இருந்து வண்டி எண் 00144, 9ம் தேதி (ஞாயிறு கிழமை) அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு, திங்கள் கிழமை பிற்பகல் 3.40 மணிக்கு மும்பைக்கு சென்றடையும் வகையில் இந்த ரயில் விடப்பட்டுள்ளது.
இந்த வாராந்திர சிறப்பு விரைவு ரயில் தமிழகத்தில் திருத்தணி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, பாபநாசம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி வழியாக தூத்துக்குடிக்கு செல்லும்.
இதே மார்க்கத்தில் தூத்துக்குடியிலிருந்து, மும்பைக்கு செல்லும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இந்த வாராந்திர சிறப்பு விரைவு ரயில் அறிவிப்பிற்கு, விருதுநகர் பகுதி ரயில் பயணிகள் மிகுந்த வரவேற்பு கொடுத்தனர்.
மேலும் இந்த வாராந்திர சிறப்பு விரைவு ரயிலை, தொடர்ச்சியாக எல்லா வாரங்களிலும் இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
மதுரை: திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், அகத்தர உறுதி மையமும் நிறுவன கண்டுபிடிப்பு மையமும் இணைந்து இந்திய பால் வணிக மாதிரி மற்றும் கிராமப்புற தொழில்முனைவோர் என்ற தலைப்பில் மாணவர் மேம்பாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில், விவேகானந்த கல்லூரி அனைத்து மாணவர்களும் பேராசிரியர்களும் கலந்து கொண்டனர். தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. அகத்தர உறுதி மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஷ்பாபு வரவேற்புரை ஆற்றினார்.
கல்லூரி முதல்வர் முனைவர் வெங்கடேசன் தலைமையுரை ஆற்றினார். செயலர் சுவாமி வேதானந்த மற்றும் குலபதி சுவாமி அத்யாத்மனந்த ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர் செ.பாலமுருகன், தலைமை நிர்வாக அலுவலர் மற்றும் இயக்குனர் குமுலோ நிம்பஸ் அக்ரோ டெய்ரி புராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், பொள்ளாச்சி அவர்கள் இந்திய பால் வணிக மாதிரி மற்றும் கிராமப்புற தொழில்முனைவோர் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
நிறைவாக, முதன்மையர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டாளர் முனைவர் ஜெய்சங்கர் நன்றி உரை ஆற்றினார். இந்த நிகழ்வை நிறுவன கண்டுபிடிப்பு மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் பவுன்ராஜ் தொகுத்து வழங்கினார்
ஸ்ரீரங்கம் கோவில் கோபுரம், நெல்லையப்பர் கோவில் சிற்பம்
கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் ஆசிரியர் கலைமகள்…
ஆகமம் என்றால் கோயிலமைப்பு, கோயில் வழிபாடு, மந்திரமொழிகள், திருவிழாக்கள் நடத்த வேண்டிய முறை ஆகியவை அடங்கிய நூல் வகை
சைவ ஆகம நூல்களை ஆகமம் என்றும், வைணவ ஆகம நூல்களை ஸம்ஹிதை என்றும், சாக்த ஆகம நூல்களை தந்திரம் என்றும் பொதுவாக அழைப்பார்கள்.
ஆகமம் என்ற வார்த்தை இன்று பலராலும் உச்சரிக்கப்பட்டு வருகிறது. இதற்கு என்ன அர்த்தம்? என்று எனக்குத் தெரிந்த இரண்டு சிவாச்சாரியார்களிடமும் ,சில வைணவ பெரியவர்களிடமும் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.
என்னுடைய இனிய நண்பர் பூசை ஆட்சி லிங்கம் அவ்வப்போது என்னிடம் சொல்லும் கருத்துக்களைக் குறித்து வைத்துக் கொண்டும், வைணவ பத்ததிகளில் விவரம் தெரிந்த செங்கோட்டை ஸ்ரீராம் போன்றவர்களின் குறிப்புகளில் இருந்தும் இந்தக் கட்டுரையைத் தொகுத்துள்ளேன். சில சிவாச்சாரியார்கள் என்னிடம் சில குறிப்புகளையும் கொடுத்தார்கள். இது ஒரு நீண்ட கட்டுரை தான். ஆனால் தேவையானது என்று நினைக்கிறேன்.
இதில் ஏதாவது தவறு இருந்தால் பின்னர் அதனைத் திருத்திக் கொள்ளலாம். உவேசா நூலகத்தில் உள்ள சில நூல்களோடும் ஒப்பீடு செய்தும் பார்த்தேன். மிகப்பெரிய புத்தகமாக எழுத வேண்டியதை அகத்தியர் காவிரியை கமண்டலத்தில் அடக்கியது போல் சுருக்கித் தந்திருக்கிறேன். மீண்டும் சொல்கிறேன் தவறுகள் இருந்தால் அதனைத் திருத்திக் கொள்ளலாம்.
ஆகமம் என்றால் கோயிலமைப்பு, கோயில் வழிபாடு, மந்திரமொழிகள், திருவிழாக்கள் நடத்த வேண்டிய முறை ஆகியவை அடங்கிய நூல் வகை ஆகும். ஆகம நூல்கள் சமஸ்கிருத மொழியில் (கிரந்தம்) உள்ளன. ஆகமங்கள் நான்கு வேதங்களை அடிப்படையாகக் கொள்ளாதவை என்றாலும் இவை வேதங்களுக்கு மாறான கருத்துக்களைச் சொல்லாதவை. ஆகமங்கள் சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் நான்கு வகையான வழிபாட்டு முறைகள் பற்றி விரிவாகக் கூறுகின்றன.
ஆகமம் என்னும் சொல், ஆ-பாசம், க- பசு , ம-பதி எனப் பொருள் கொள்ளத் தக்கதால் முப்பொருளுண்மையை உணர்த்தல் என்றும் ,ஆ – ஞானம் , க-மோட்சம்,ம- மலநாசம் என இன்னோர் விதத்தில் பொருள் கொடுப்பதாலும் ஆன்மாக்களுக்கு மலத்தை நாசம் பண்ணி சிவஞானத்தை உபதேசித்து மோட்சத்தைக் கொடுத்தல் என்னும் பொருள் படும்படி விரிந்து நிற்கின்றது.
ஆகமங்கள் இறைவனால் அருளப்பட்டவையாகும். மாணிக்கவாசகர் “ஆகமம் ஆகி நின்று அன்னிபான்” எனவும் “மண்ணுமாமலை மகேந்திரமதனிற் கொள்ள ஆகமம் தோற்றுவித்தருளியும்” என்றும் பாடுகின்றார்.
திருமூலர் ஆகமம் பற்றிக் கூறியதை “சுந்தர ஆகமம் சொல் மொழிந்தானே” என்ற குறிப்புத் தெளிவுபடுத்துகின்றது. திருமூலர் இறைவனால் ஆகமம் அருளப்பட்டதை “தானாய் அடியார்கள் அர்ச்சிக்கும் நந்தி உருவாகி ஆகமம் ஓங்கி நின்றாளே” என்றும் கூறுகின்றார்.
ஆகமங்கள் சிவபெருமானின் ஐந்து முகத்திலிருந்தும் தோற்றம் பெற்றதாகவும் கூறப்படுகின்றது.
சைவ ஆகமங்கள் என்பவை சிவ வழிபாட்டின் முக்கியத்துவத்தினையும், சிவாலயம் அமைக்கும் விதம், பூஜை முறைகள், அபிஷேகம், அலங்கார செய்முறை போன்றவற்றை விளக்குகின்ற நூல் வகையாகும்.
பூஜைக்கு உரிய சிவாச்சாரியார்களை அவர்களின் மரபை ஒட்டியும் அவர்கள் பயின்ற முறைகளை ஒட்டியும் தேர்ந்தெடுத்தல் முதற்கொண்டு அனைத்தும் சிவாகமத்தில் அடங்கும் என்கிறார் என்னுடைய நண்பர் ஒருவர்.
அகோரசிவாச்சாரியாரின் “க்ரியாக்ரம த்யோதி அபர க்ரியாவிதி” என்னும் நூல் தமிழகத்தில் சிவபூஜைக்கான முக்கியமான ஆகமவிளக்க நூலாக கருதப்படுகிறது.
சிவாகமங்கள் 28- உள்ளன. காரண, காமிக, ரௌரவ, பௌஷ்கர ஆகமங்கள் பரவலாக உள்ளன. தென்னாட்டு கோவில்களில் இந்த ஆகம முறை தான் கடைப்பிடிக்கப்படுகிறது!
இவையனைத்தையும் பயில்வதற்காக எழுதப்படும் நெறிநூல்கள் அல்லது வழிகாட்டு நூல்கள் பத்ததிகள் எனப்படுகின்றன. ஒரு கோவிலில் பின்பற்றப்படும் ஆகமும் இன்னொரு கோவிலில் பின்பற்றப்பட வேண்டும் என்கிற நியதி இல்லை. ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு முறை இருக்கிறது. அந்த முறை வழுவாமல் இருக்க வேண்டும் என்பதுதான் சிவாச்சாரியார்களின் எண்ணமாக இருந்து வருகிறது. இதற்காக அந்த ஆதி குடிகள் பெரிதும் பாடுபட்டு வருகிறார்கள். உண்மையில் பாராட்டப்பட வேண்டியவர்கள் இவர்கள்தான்!!
பதஞ்சலி யின் “மகாபாஷ்யம்” என்ற நூலில் ஆகம விவரங்கள் சரியாகப் புரியும் வண்ணம் எடுத்துக் கூறப்பட்டுள்ளன! சைவ ஆகமங்கள் இருபத்தெட்டும், சிவபெருமானின் ‘சதாசிவ’ முகங்களிலிருந்து அவராலேயே வெளியிடப்பட்டவை.
சிவனின் ‘சத்யோஜாத’ முகத்திலிருந்து காமிகம், யோகஜம், சிந்தியம், காரணம், அஜிதம் என்று ஐந்து ஆகமங்களும், ‘வாமதேவ’ முகத்திலிருந்து தீப்தம், சூட்சுமம், ஸகஸ்ரம், அம்சுமான், சுப்ரபேதம் என்று ஐந்து ஆகமங்களும், ‘அகோரம்’ என்ற முகத்திலிருந்து விஜயம், நிசுவாசம், சுவாயம்புவம், அனலம், வீரம் என்று ஐந்து ஆகமங்களும், ‘தத்புருஷ’ முகத்திலிருந்து ரௌரவம், மகுடம், விமலம், சந்திரஞானம், பிம்பம் என்று ஐந்து ஆகமங்களும், ‘ஈசான’ முகத்திலிருந்து புரோக்கீதம், லலிதம், சித்தம், சந்தானம், சர்வோக்தம், பரமேசுவரம், கிரணம், வாதுளம் ஆகிய எட்டு ஆகமங்களும் வெளிப்பட்டன. இவை ‘சிவபேத ஆகமங்கள்’ என்றும் ‘ருத்ரபேத ஆகமங்கள்’ என்றும் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
சிவாக்கிரயோகியும் தமது சிவஞானபோதம் என்ற தமிழ் நூலிலும் விவரித்துள்ளனர். ஆகமங்கள் இருபத்தெட்டும், நாடு முழுவதும் பரவி எல்லாராலும் பின்பற்றப்படுகின்றன. ஆகமங்கள் தமிழ் மொழிக்கு உரியவை என்று சொல்வோரும் உண்டு!!
பாஞ்சராத்திரம், வைகானசம் ஆகிய இரண்டும் வைணவ ஆகமங்கள் ஆகும்.
எம்பெருமானை உபாசிப்பது மானசம், ஓமம், விக்கிரக ஆராதனம் என்று மூன்று விதமாக நடைபெறும். மூன்றாவது வகை ஆத்மார்த்தம் என்றும் பரார்த்தம் என்றும் இருபிரிவினையுடையது. ஒருவர் தம் குடும்ப நலன்களைக் கருதித் தம் இல்லத்தில் எம்பெருமானின் திருமேனியை எழுந்தருளப் பண்ணித் தம் சக்திக்கு ஏற்றவாறு ஆராதிப்பது ஆத்மார்த்தம் ஆகும்.
ஆத்மார்த்த பூஜை. வீட்டில் ஏற்றப்பெற்ற விளக்கு எங்ஙனம் வீடு முழுதும் ஒளியை உண்டாக்குகின்றதோ அம்மாதிரியே இவ்வாராதனம் அவர்தம் குலம் முழுவதும் மேம்பாடு அடைவதற்குக் காரணமாக இருக்கும். பரார்த்தம் என்பது உலக நலன்களைக் கருத்தில் கொண்டு திருக்கோயிலில் எழுந்தருளப் பண்ணியிருக்கும் திருமேனிகளை விதிப்படி வழிபடுவது. திவ்ய பிரபந்தங்கள் சொல்வது உட்பட எல்லாம் இதில் அடங்கும்.
சந்திர சூரியர்களின் ஒளி உலகினருக்குப் பயன்படுவது போலே இந்த வழிபாட்டால் உண்டாகும் பலன் உலகம் முழுவதையும் வாழ்விக்கும். இங்கனம் குறிப்பிட்டவாறு பிரதிட்டை செய்யப்பெற்ற திருமேனியின் சக்தி தாரதம்மியத்தால் அந்தந்த தலங்கள் (1) திவ்வியம் (2) ஆர்ஷம் (3) பெளராணம் (4) மாதுசம், (5) ஸ்வயம், வியக்தம் என்று ஐந்து வகையாகப் பாகுபடுத்தப் பெற்றுள்ளன. இந்தத் திருத்தலங்களின் சொரூப சக்தி விசேடங்கள் ஆகமங்களில் விரிவாக எடுத்துரைக்கப் பெற்றுள்ளன.
இந்த ஆகமங்கள் பாஞ்சராத்திரம், வைகாநச கல்பசூத்திரம் என்பவையாகும். இவற்றுள் பாஞ்சராத்திர சம்ஹிதை ஆதி கேசவப்பெருமாள் திருவுள்ளப்படி திரேதாயுகத்தில் உண்டானது. அனந்தன், கருடன், விஷவக்சேனர், நான்முகன், சிவன் இவர்கள் அனைவர்க்கும் ஏற்பட்ட ஐயங்களை பகவான் ஐந்து இரவுகளில் போக்கியருளினான் என்று சொல்வார்கள்.
வைகானச கல்ப சூத்திரம் ஸ்ரீமன் நாராயணனே விகனசர் என்னும் மாமுனிவருக்கு அருளிச் செய்தது.
இந்த இரண்டு ஆகம சாத்திரங்களும் ஞானம், யோகம், கிரியை, சரிதம் இவற்றை நுவலும். இவற்றுள் கிரியையும் சரிதமும் நம் சந்ததிகளுடன் சம்பந்தப்பட்டவை. கிரியை என்பது திருக்கோயில்கள் கட்டப் பெறுவது பற்றியும், திருமேனிகள் செய்வது பற்றியும் இத்திருமேனிகளைப் பிரதிஷ்டை செய்வது பற்றியும் சொல்லும்.
சரியை என்பது திருக்கோயிலில் நடைபெறும் தினசரிச் சடங்குகள், உற்சவங்கள் நடைபெறும் முறை இவை பற்றிச் சொல்லும், இந்த இரண்டு சாத்திரங்களும் வைணவ சந்நிதிகளைப் பற்றியே ஏற்பட்டிருந்தாலும், சில சந்நிதிகள் பாஞ்சராத்திர ஆகம நெறிகளையும் மற்றவை வைகானச ஆகம நெறிகளையும் மேற்கொண்டு நடைபெற்று வருகின்றன. கேரளாவில் உள்ள கோவில்களில் தந்திர முறை பின்பற்றப்படுகிறது. சில முருகன் கோவில்களிலும் இந்த முறையைப் பின்பற்றுவார்கள்.
உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கட் போட்டிகள் பகுதி 2 – 1979 போட்டி
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
1979 கிரிக்கெட் உலகக் கோப்பையும் புருடென்ஷியல் கோப்பை என்று அழைக்கப்பட்டது. இது கிரிக்கெட் உலகக் கோப்பையின் இரண்டாவது பதிப்பாகும். இது 1979 ஜூன் 9 முதல் 23 வரை இங்கிலாந்தில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் எட்டு அணிகள் பங்குபெற்றன. 1975ஆம் ஆண்டு இடம் பெற்றிருந்த கிழக்கு ஆப்பிரிக்க அணிக்குப் பதிலாக போட்டிக்கான தகுதிச் சுற்றில் இலங்கையுடன் கனடா அணி தகுதி பெற்றது. இது மட்டுமே ஒரு மாற்றமாக இருந்தது. ஒவ்வொரு குழுவிலிருந்தும் இரண்டு அணிகள் தகுதிபெற்று, இறுதிப் போட்டி மீண்டும் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றதால், வடிவம் அப்படியே இருந்தது.
குரூப் A பிரிவில் இங்கிலாந்து பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகள் இடம்பெற்றிருந்தன. குரூப் B பிரிவில் மேற்கு இந்தியத் தீவுகள், நியூசிலாந்து, இலங்கை, இந்தியா ஆகிய அணிகள் இடம்பெற்றிருந்தன. முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறிய பாகிஸ்தானுடன் குரூப் ஏ பிரிவிலிருந்து தகுதிச் சுற்றில் இங்கிலாந்து இணைந்தது, அதே நேரத்தில் வெஸ்ட் இண்டீஸ் நியூசிலாந்தை விட குரூப் பி பிரிவில் முதலிடம் பிடித்தது.
மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து இரண்டும் முறையே பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்தை எதிர்த்து அரையிறுதியில் வெற்றி பெற்ற பிறகு, லார்ட்ஸில் நடந்த இறுதிப் போட்டியில் சந்தித்தன. 23, ஜூன், 1979இல் நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் 92 ரன்கள் வெற்றியுடன் தங்கள் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது.
மேற்கிந்திய வீரர் கோர்டன் க்ரீனிட்ஜ் நான்கு போட்டிகளில் 253 ரன்களை குவித்து அதிக ரன் எடுத்தவர் ஆனார். இங்கிலாந்து வீரர் மைக் ஹென்ட்ரிக் 10 விக்கெட்டுகளுடன் முன்னணி விக்கட் எடுத்தவராக போட்டியை முடித்தார்.
இந்திய அணி குரூப் அளவிலேயே வெளியேறியது. மேற்கு இந்தியத் தீவுகள் அணி, நியூசிலாந்து அணிகளுடன் தோற்றது மட்டுமல்லாமல் மூன்றாவது அணியான இலங்கையிடமும் இந்திய அணி தோற்றது. 1975ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எஸ். வெங்கடராகவன் அணித்தலைவராக இருந்தார்.
1979இலும் அவரே அணித்தலைவராக இருந்தார். கபில்தேவ் இந்த உலகக் கோப்பையில் விளையாடினார்.
மேற்கு இந்தியத்தீவுகள் அனிக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி முதலில் ஆடி 53.1 ஓவரில் 190 ரன் எடுத்தது. குண்டப்பா விஸ்வநாத் 75 ரன்கள் எடுத்தார். பதிலுக்கு மே.இ. தீவுகள் அணி 51.3 ஓவரில் ஒரு விக்கட் இழப்பிற்கு 194 ரன் எடுத்து வெற்றிபெற்றது. கிரினீட்ஜ் 106 ரன் எடுத்தார்.
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 55.5 ஓவரில் 182 ரன் எடுத்தது. கவாஸ்கர் 55, பிரிஜேஷ் படேல் 38, கபில்தேவ் 25, கர்சன் கௌரி 20 ரன்கள் எடுத்தனர். பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி 57 ஓவர்களில் இரண்டு விக்கட் இழப்பிற்கு 183 ரன் எடுத்து வென்றது.
இலங்கையுடனான மூன்றாவது போட்டியில் இலங்கை முதலில் விளையாடியது. அந்த அணியின் விட்டுமணி (67 ரன்), ராய் டயஸ் (50 ரன்), துலிப் மெண்டிஸ் (64 ரன்) நன்றாக விளையாடினர். அந்த அணி 60 ஓவர்களில் 5 விக்கட் இழப்பிற்கு 238 ரன் எடுத்தது. அடுத்து விளையாடிய இந்திய அணி 54.1 ஓவரில் 191 ரன் எடுத்து ஆட்டமிழந்தது.
1975, 1979 ஆகிய இரண்டு போட்டிகளிலும் கோப்பையை வென்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணி 1983இல் கோப்பையை வெல்ல முடியவில்லை. ஏன் தெரியுமா? நாளை பார்க்கலாம்.
Caller: Hullo, Mridula Tai. Kashe Aahat ( How are you?).
Me: ( I just said Hullo and murmured something)
Caller: Just now, I finished reading your judgments and I found them very good. Justice Radhakridhnan and I are on the Committee and I rated your judgments very high. So don’t worry. I know it is all bogus. Wish you all the best and give regards to Ramesh.
He then disconnected.
The writer is Justice Mridula Bhatkar, retired judge of the Bombay High Court. And she says that this one phone call pivoted the decision made by Mridula and her husband Ramesh. “ Suddenly at 3 PM Ramesh came to me and held my hands and told me – “ Mridula, I want to end my life”. I looked at him and said, I too did not want to live. He said, he wanted to commit suicide. I agreed and said I would join him”.
It was at this terrible hour and minute that the alluded to call came. Mridula Bhatkar went on to become a Judge of the Bombay High Court in May 2009. And retired in May,2019, after a distinguished decade in service.
It is a shocker. A stunner. And they are muted allusions, by a huge degree. The reference to the landline call is made from an unputdownable ( this expression is too easily bandied about, but this one deserves it by a mile and more) book penned with blood,sweat and tears by retired Mrs. Justice Mridula Bhatkar, aptly named ‘ I Must Say This”.
“I am not a professional writer but the facts are absolutely correct. There was a need to place them on record; and therefore, I must say this”.
It is very rare for retired justices to write a memoir or on their experiences. One of them told me, “You see, we may have a lot of interesting things to say. But we cannot say them without getting on the wrong side of many. And what we may choose to say selectively, may be pedestrian and self-indulgent”.
Mridula’s is singularly different. It is in simple, yet in brilliant and evocative language. She has poured her heart out. It is moving, tragic and revealing of the muck in our midst.
If someone, daughter of Judge Pratap Narayan Behere and niece of Justice V D Tulzapurkar, had to face such ignominy as judge wife of an alleged rapist Ramesh Bhatkar, a famous theatre personality in Maharashtra, for her honesty, integrity and uprightness in sticking to the rule of law as Judge in District Judiciary, one dreads to imagine the plight of the commoner judge with no such pedigree or reputation of the proverbial common man in R K Laxman’s cartoons, who never spoke.
A reading of the book left me not in tears (yes, it is a tear-jerker, if you are truthful) but in tatters, about the health of our so called independent judiciary. The book, for those unaware of the facts, would be a suspense thriller of the seamy kind that good people may need to face as the colluders,conspirators as marauders with no morals have a lot of clout.
So, I refrain from revealing the entire story. Read it. First hand it would sound the shocker it is meant to be.
Mridula was anguished by the false, fabricated and downright defamatory stories, the print and electronic media ran away with as unfair and unjust Trial by Media. There were ‘eyewitness’ accounts with sleazy details, manufactured to sizzle. But the damage was done even before prosecution, charges and trial.
And ultimate discharge of her husband meant little or meaningless except vindication of their own consciences.
Mridula is candid about the way she was ‘treated’ by her peers and colleagues. How she was shunned despite the conviction that Mridula was spotless. Even among family and friends except the immediacy there were not many willing to be even seen in her company.
And as a judge fighting a legal battle with her innocent husband, a popular actor, in a field rampant with ‘casting couch’ phenomenon, it was not easy to get over perception with truth. Media trial had pronounced her husband guilty and she as supportive wife of a rapist.
Mridula did fight back with tenacity. Including, getting the publisher and editor of Lok Satta from the Indian Express Empire, punished for suo motu contempt initiated by Bombay High Court.
But, what of the unseemly slur and unbearable trauma,the family underwent, including for their son Harshavardhan, who was doing MS in USA. Would there be any compensation at all? What of the pressures and influences the ordinary judges face while dealing with terrorism linked high profile cases or sex scandals involving politicos? Is Judiciary immune?
All questions, Mridula’s heroic fight raises, but can’t answer.
A must read this. By anyone and everyone who may care and be concerned with the health and independence of our judiciary. Hard lessons to be learnt from the hard knocks in the life of Mridula as woman and judge. It does not seem anecdotal for the knowing. Mridula has daringly gone public. For she had nothing to lose.
“ My dear husband, died twice in his lifetime! First, on the 25th of December 2007 when he was charged with the offense of rape , and second, on the 4th of February, 2019 when he succumbed to cancer”.
Back to the opening lines.
I bow my head, shoulders and all to the Caller.
He was none other than Justice D Y Chandrachud, presently Chief Justice of India. Hats off to him, not just for saving a couple of worthy lives. But far more, it turns out.
That must lend us all more than a sliver of hope!
(Writer of multiple books – is a practicing advocate in the Madras High Court)
சிவகாசி : விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள தனியார் பள்ளியில், குரு பூர்ணிமா தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. எழுத்தறிவித்தவன் இறைவன் என்ற முதுமொழிக்கேற்ப, முன்னதாக பள்ளி ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பூங்கொத்துகள் வழங்கி வாழ்த்து பெற்றனர்.
இதனையடுத்து தாங்கள் கல்வி கற்பதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுத்த பெற்றோர் மற்றும் முதியோர்களுக்கு மரியாதை செய்யும் வகையில், பள்ளி மாணவர்கள் தங்களது பெற்றோர்களின் கால்களில் நீர் ஊற்றி கழுவி, சந்தனம் குங்குமம் பூசி, பூக்களை தூவி பாதபூஜைகள் செய்தனர். பாதபூஜை செய்த மாணவர்களுக்கு, அவர்களது பெற்றோர்கள் பூக்கள் தூவி வாழ்த்து தெரிவித்தனர்.
இது குறித்து பள்ளி முதல்வர் கூறும்போது, பள்ளிக்கு படிக்க வரும் மாணவர்கள் தங்களது நிலை உயர்வதற்கு காரணமாக இருக்கும் பெற்றார்களுக்கும், முதியவர்களுக்கும் மற்றும் ஆசிரியர்களுக்கும் மரியாதை செய்ய வேண்டும்.
தங்களது வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பாடுபடுபவர்களை எப்போதும் மறக்கக்கூடாது. முன்னோர்கள், மூத்தோர்கள், உடன் இருக்கும் சக மனிதர்களுக்கு மரியாதை வழங்க வேண்டும்.
கல்வியில் சிறந்ததும், முதன்மையானதாகவும் இருப்பது ஒழுக்கம் என்பதை எங்களது பள்ளி மாணவர்களுக்கு கற்றுத் தருகிறோம் என்று கூறினார்.