இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.
ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.
மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்
தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.
பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.
ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.
மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்
தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.
பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
பெயர், தயாரிப்பு தேதி காலாவதி ஆகும் தேதி உள்ளிட்ட எந்தவித தகவலும் இல்லாமல் குப்பையைப் போன்று தனியார் பேக்கரி நிறுவனம் விற்பனை செய்வதாகவும், இதனால் உடல் உபாதை ஏற்படுவதாகவும், குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க பொதுமக்களும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை மாவட்டம், திருநகரை அடுத்துள்ள முல்லை நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் ஸ்னாக்ஸ் என்னும் பேக்கரி செயல்பட்டு வருகிறது. இதில், இருக்கக்கூடிய பொருட்கள் தரமற்றதாகவும், பெயர்கள் இல்லாமல் தயாரிப்பு தேதி காலாவதி தேதி ஏதும் இல்லாமல் குப்பைகள் கொட்டக்கூடிய பொருட்களை மொத்தமாக அனைத்தும் ஒரு கலவையாக கலந்து வாடிக்கையாளர்களுக்கு பத்து ரூபாய் என விற்பனை செய்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், இதை வாங்கி சாப்பிடும் குழந்தைகள் முதல் பெரியவர் வரை உடல் உபாதைகளும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவர்கள் தயாரிக்கும் பொருட்கள் தரமற்ற முறையில் இருப்பதாகவும், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் பலமுறை சொல்லி நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இதனால், சம்பந்தப்பட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கடை மீது ஆய்வு மேற்கொண்டு தயாரிக்க கூடிய பொருட்கள் மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை சோதனை செய்து தவறு இருக்கும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அனைவருடைய எதிர்பார்ப்பாக உள்ளது நடவடிக்கை எடுப்பார்களா உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எதிர்பார்ப்புடன் சமூக ஆர்வலர்கள்.
மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் காரியாபட்டி மாணவன் சாதனை படைத்துள்ளார்.
மலேசியாவில் நடைபெற்ற, சர்வதேச சிலம்பம் ஷாம்பியன் போட்டியில், காரியாபட்டி பள்ளி மாணவன் பங்கேற்று சாதனை படைத்துள்ளார். மலேசியா பெஸ்ட் எம்பயர் சிலம்பம் அகாடமி சார்பாக, மலேசியா – இந்தியா சர்வதேச சிலம்பம் ஷாம்பியன்ஷிப் போட்டி கடந்த 1ந் தேதி முதல் 3 ந் தேதி வரை மலேசியாவில் நடைபெற்றது.
போட்டியில், இந்தியாவிலிருந்து பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களும் பங்கேற்றனர். விருதுநகர் மாவட்டம், அருப்புக் கோட்டை ஜ.எஸ்.எப் சிலம்பம் அகாடமியில் பயிற்சி பெற்ற, காரியாபட்டியை சேர்ந்த பள்ளி மாணவன் முகுந்தன் சிலம்பாட்ட போட்டியில் பங்கேந்த தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சுருள் வாள் வீச்சில் -முதல் பரிசாக தங்க பதக்கமும், .இரட்டை கம்பு விளையாட்டில், இரண்டாம் பரிசு தங்க பதக்கமும், கம்பு சண்டையில் – மூன்றாம் பரிசையும் மாணவன் முகுந்தன் பெற்று சாதனை படைத்துள்ளார். மாணவர் முகுந்தனின் தந்தை வெங்கடேசன் காரியாபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் எலெக்ட்ரிசனாக பணிபுரிந்து வருகிறார்.
முகுந்தன், அருப்புக்கோட்டை செளடாம்பிகா பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். சாதனை படைத்த மாணவர் முகுந்தனுக்கு, காரியாட்டி பேரூராட்சித் தலைவர் மற்றும் அலுவலர்கள் , சர்வகட்சி பிரமுகர்கள் பள்ளி ஆசிரியர்கள், பொதுநல அமைப்பு பிரதிநிதிகள் பாராட்டு தெரிவித்தனர்.
திண்டுக்கல்: சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொடைக்கானல் பெருமாள் மலை, பழனி செல்லும் முக்கிய சாலையில் இருபுறங்களிலும் லாரிகள் மற்றும் சிறிய வாகனங்களை நிறுத்தி வைத்து பாதைகளை முற்றிலுமாக மறைத்து விடுகின்றனர்.
அதேபோல், காலையிலும் மாலையிலும் பள்ளிக்கு செல்லும் வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் சுற்றுலா வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. சாலையில் மரித்து இருக்கும் வாகன ஓட்டிகளிடம், கூறினால் பொதுமக்களை ஆபாச வார்த்தைகளால், பேசுவதாகவும் சண்டையிடுவதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.
சாலையில் இருபுறம் நிறுத்தப்படும் வாகனங்களை காவல் துறையினர் வேறு இடத்தில் நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் . அதேபோல், பொதுமக்களிடமும் சுற்றுலா பயணிகளிலும் சண்டையிடும் வாகன ஓட்டிகளை எச்சரித்து, பெருமாள் மலை, பழனி சாலையை போக்குவரத்து இடையூறு இல்லாமல் சென்று வருவதற்கு காவல்துறையினர் ஏற்பாடு செய்ய வேண்டும் என, இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
ருத்ராவின் ரூபிக் க்யூபிக் விளையாட்டு – சாதனை நிகழ்வாக, 4 ½ வயது சிறுமி ரூபிக் க்யூபிக்கில் 40 வினாடிகளில் கலர் சேர்த்து உலக சாதனை பிடித்தார்
திருப்பூர் மாவட்டம், அவிநாசி பகுதியினை சார்ந்தவர் பிரேம், இவர் தனியார் வங்கி கிளை மேலாளராக பணியாற்றி வருகின்றார். இவரது மனைவி ஹரித்யா இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். இவர்களது மூத்த மகள் ருத்ரா பிரேம் (வயது 4 ½), இவர் அதே பகுதியில் தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வருகின்றார். ’
இந்தச் சிறுமி கடந்த இரு மாதங்களுக்கு முன்பு ரூப்ரிக் க்யூபிக் என்கின்ற மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டினை கற்றுக் கொண்டுள்ளார். மேலும், இச்சிறுமியின் தாயார் விடுமுறை தினத்தன்றும் உடல்நிலை சரியில்லா போது விளையாடியதை பார்த்த இச்சிறுமி அதே போல் விளையாட கற்றுக் கொண்டார்.
இரு மாதங்களில் இந்த ரூப்ரிக் க்யூபிக் கேமில் ஒரே பகுதியில் உள்ள கலரினை இணைக்கும் முயற்சியினை செய்து, ஒரே கலரினை ஒரே பக்கம் கொண்டு வரும் திறனை கற்றுக் கொண்டுள்ளார். மேலும், யாரும் 40 வினாடிகளில் செய்யாத நிலையில், இச்சிறுமி செய்து காண்பித்து உலக சாதனை பிடித்துள்ளார்.
கரூர் பசுபதீஸ்வரர் ஆலயத்தின் பின்புறம் உள்ள அவர்களது உறவினர் வீட்டில் நடைபெற்ற இந்த உலக சாதனை நிகழ்ச்சியில், ஜெட்லி நடுவராக இருந்து இந்த உலக சாதனையினை பதிவு செய்தார். மேலும், ஜெட்லி புக் ஆப் ரெக்கார்டு என்கின்ற உலக சாதனையில் இந்த நிகழ்வு இடம்பெறுவதாகவும், இச்சிறுமியின் ஞாபக ஆற்றல் மற்றும் மூளையின் திறன் போற்றப்பட வேண்டுமென்றும் தெரிவித்தார்.
இன்று காலை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் கோவை சரக டி ஐ ஜி விஜயகுமார் குறித்த பழைய பதிவு ஒன்று சமூக தளங்களில் வைரலாகி பெரும்பாலானோரின் கண்ணீரை காணிக்கையாகப் பெற்றிருக்கிறது.
அதில், ஆயிரம் ரூபாய் வேலை… ஐபிஎஸ் கனவும் ‘ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., என்று நம் இலக்கை எட்டும் முன், ஏதோ ஒரு வேலையில் ஒட்டிக்கொண்டு வாழ்க்கையை ஓட்டுவோம். திடீர் என்று நம் இலக்கை மறந்துவிட்டு, இருக்கும் வேலையே போதும் என செட்டில் ஆகிவிடும் மன நிலைக்குத் தள்ளப்படுவோம். அந்தப் புள்ளியிலேயே சுதாரிக்க வேண்டும். அதில் இருந்து உடனடியாக மீளாவிட்டால், வாழ்க்கைப் பயணம் நாம் ஆசைப்பட்ட திசையில் இருக்காது!” என்று அனுபவம் பகிர்கிறார் விஜயகுமார் ஐ.பி.எஸ். பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் விடாப்பிடி உறுதி முயற்சியுடன் ‘ஐ.பி.எஸ்.’ பட்டம் தொட்டவர்.
அவருடைய பழைய பதிவு:
”தேனி மாவட்டம் அணைக்கரைப்பட்டி தான் என் சொந்த ஊர். அப்பா செல்லையா வி.ஏ.ஓ. என் அம்மா ராஜாத்தி, பள்ளி ஆசிரியை. ப்ளஸ் டூ வரை தமிழ் வழிக் கல்வியில்தான் படித்தேன். ஒரே மகனான என்னை டாக்டர் இல்லேன்னா, இன்ஜினீயர் ஆக்கிப் பார்க்க அவங்களுக்கு ஆசை. மெக்கானிக்கல் இன்ஜினீயர் ஆயிட்டேன். சாதாரண கடைநிலை ஊழியரான அப்பாவைப் பார்த்துப் பார்த்தே வளர்ந்ததால், மாவட்ட அளவு அதிகாரம் படைத்த ஓர் அரசு அதிகாரி ஆகணும்னு அடிக்கடி மனசுல தோணிட்டே இருக்கும். அது போக, போடி கலவரம், தேவாரம் கலவரம், கஞ்சா விவ சாயம்னு எங்க பகுதியில் எல்லாப் பக்கமும் க்ரைம்தான்.
போலீஸ் அதிகாரியானால் நம்மால் முடிஞ்ச உதவியை மக்களுக்குச் செய்யலாம்னு தோணும். ‘மாவட்ட அளவிலான போலீஸ் அதிகாரி’ என்ற என் இரண்டு ஆசைகளையும் பூர்த்திசெய்வது ஐ.பி.எஸ்., பதவி மட்டும்தான்னு தெரிஞ்சுக் கிட்டேன். அந்தத் திசையில் பயணிக்கத் தொடங்கினேன். கல்லூரிப் படிப்பு முடிஞ்சதும் சரியான வேலை எதுவும் அமையலை. சென்னையில் தங்கி சிவில் சர்வீஸ் பரீட்சைகளுக்குப் படிக்கிற அளவுக்கு வசதியும் இல்லை.
ஏதாவது வேலையில் சேர்ந்து சின்னதா சம்பாதிச்சுட்டே படிக்கலாம்னு முடிவு பண்ணி, ஆயிரம் ரூபா சம்பளத்துக்கு ஜெராக்ஸ் எடுக்கிற வேலையில் சேர்ந்தேன். 12 மணி நேர வேலைப் பளுவுக்குப் பிறகு படிக்க முடியலை. நாலு மாசத்திலேயே வேலையை விட்டுட்டேன். ஏதாவது ஓர் அரசு வேலையில் சேர்ந்துட்டு, படிக்கலாம்னு முடிவு பண்ணேன். 1999-ல் குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிச்சேன். ஏனோதானோன்னுதான் படிச்சேன். தேர்வில் தோல்வி. அதே சமயத்தில் குரூப்-2 தேர்வுக்கும் விண்ணப்பித்து இருந் தேன். அந்தத் தேர்வுக்கு ஆறு மாசம் தீவிரமாப் படிச்சேன். 2000-ல் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையில் ஆடிட் இன்ஸ்பெக்டர் பணியில் சேர்ந்தேன்.
அதே வருஷம், குரூப்-1 தேர்வும் எழுதினேன். முதற்கட்டம், மெயின், நேர்முகத் தேர்வுன்னு இரண்டு வருட நடை முறை முடிந்து 2002-ல் ரிசல்ட் வந்தது. தேர்ச்சி பெற்று டி.எஸ்.பி., ஆனேன். தொடர்ந்து சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான முயற்சிகள். அடுத்தடுத்து ஆறு தடவை முயற்சிகள். நான்கு முறை மெயின் தேர்வு வரையிலும், மூன்று முறை நேர்முகத் தேர்வு வரையும் சென்றேன். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் ஏழு முறை தேர்வு எழுத முடியும். அது எனது கடைசி ஏழாவது முயற்சி. வெற்றி!
ஆனால், தேர்வுக்கான ஆயத்தங்களைக் காட்டிலும் அந்த காலகட்டங்களில் நான் கடந்து வந்த மன உளைச்சலின் வீரியம் வார்த்தையில் அடங்காது. டி.எஸ்.பி-யாக நான் பணிபுரிந்த ஆறு ஆண்டுகளில் ஈரோடு, திருவள்ளூர், சி.பி.சி.ஐ.டி., சென்னை கமிஷனர் அலுவலகம், ஆவடி உட்பட ஆறு இடங்களுக்கு என்னை டிரான்ஸ்ஃபர் செய்தார்கள். காரணம், சிவில் சர்வீசஸ் தேர்வு. ‘இன்டர்வியூ போகணும்… மெயின் எக்ஸாமுக்குப் படிக்கணும்… ஒரு மாசம் லீவு வேணும்’னு கேட்டால், உடனே ஒரு டிரான்ஸ்ஃபர் பரிசாகக் கிடைக்கும். வேறு எந்த வேலைக்கும் செல்லாமல் முழு நேரமும் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு மட்டுமே படித்துக்கொண்டு இருந்தால், நிச்சயம் முதல் இரண்டு முயற்சிகளிலேயே யாருக்கும் வெற்றி நிச்சயம்!
சிவில் சர்வீசஸ் விண்ணப்பத்தில் விருப்பப் பணியில் ‘ஐ.பி.எஸ்’ என்று மட்டுமே எழுதினேன். ஐ.ஏ.எஸ், ஐ.எஃப்.எஸ். பிரிவின் கீழ் 0 என்றே குறிப்பிட்டு இருந்தேன். நேர்முகத் தேர்விலும் காவல் துறை பற்றிய கேள்விகள் தான் சுற்றிச் சுழன்றன. ‘எப்படிங்க உங்க ளுக்கு நேரம் கிடைச்சது? எப்படிப் படிச் சீங்க’ன்னு நட்பாகத்தான் என்னை எதிர் கொண்டார்கள். சிவில் சர்வீஸில் தேறி ஐ.பி.எஸ்., பணி உறுதியானாலும் டி.எஸ்.பி., பணியில் இருந்து நான் உடனடியாக விலகவில்லை. தமிழக முதல்வரிடம் சிறப்பு அனுமதி பெற்று, ஓர் ஆண்டு விடுமுறையில்தான் பயிற்சிக்குச் சென்றேன். ஒரு வேளை பயிற்சி முடிந்த பிறகு, வேறு மாநிலத்தில் பணி அமர்த்தப்பட்டால், ‘ஐ.பி.எஸ். வேண்டாம்’னு சொல்லிட்டு, தொடர்ந்து தமிழகத்திலேயே டி.எஸ்.பி. ஆகப் பணிபுரியத்தான் ஆசை.
நீங்கள் சிவில் சர்வீசஸ் தேர்வுக்குத் தயாராகும்போது தங்குவதற்குச் சிரமமாக இருக்கலாம். புத்தகங்களைப் பெறுவதில் சிரமம் இருக்கலாம். வீட்டிலும், ‘என்னப்பா படிச்சுட்டே இருக்கேன்னு சொல்ற. எப்பதான் பாஸ் பண்ணப்போற?’னு கேட்பார்கள். சில உறவினர்கள் கிண்டல் அடிக்கக்கூடச் செய்வார்கள். எந்தச் சூழலிலும் சோர்ந்துபோகவே கூடாது. நேர்மறை எண்ணம் கொண்டவர்களை மட்டுமே பக்கத்தில் சேருங்கள். வீட்டில் எவ்வளவு சிரமம் இருந்தாலும், அதைத் தாங்கிக்கொண்டு வேறு வேலைக்குச் செல்லாமல் ஒரே லட்சியத்தோடு படித்தால் நலம். குரூப்-2, குரூப்-1 என கொஞ்சம் தடம் மாறியதால்தான் என் வெற்றி தள்ளிப்போனது. ‘இதுவே போதும்’ என்று எங்கேயும் தேங்கிவிடாதீர்கள். ஓடிக்கொண்டே இருங்கள். வெற்றி உங்களைப் பின் தொடரும்!” – என்று எழுதி இருக்கிறார்.
அவருடைய கனவுகள், உத்வேகமூட்டும் பேச்சு, உறுதியான உள்ளம் எல்லாம் வெளித்தெரிந்தும், அவர் தன் வாழ்க்கையை இப்படி முடித்துக் கொண்டிருக்க வேண்டாம் என்று சமூக வலைதளவாசிகள் பெரும் அனுதாபத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் இன்று தமிழக காவல் துறைக்கு கருப்பு தினம் – என்றும் குறிப்பிட்டு விஜயகுமாருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் பகுதி 1 – 1975 போட்டி
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
கிரிக்கட் விளையாட்டில் இப்போது (1) ஆண்கள் டெஸ்ட் கிரிக்கட்டுக்கான உலகக் கோப்பை (2) ஆண்கள் ஒருநாள் உலகக் கோப்பை, (3) டி20 உலகக் கோப்பை நடக்கின்றன. இவை தவிர பெண்கள் உலகக் கோப்பைப் போட்டிகளும் நடக்கின்றன. அடுத்த ஒருநாள் ஆண்கம் கிரிக்கட் உலகக் கோப்பை ஆட்டங்கள் இந்தியாவில் வருகின்ற அக்டோபர் 5ஆம் தேதியிலிருந்து நவம்பர் 19ஆம் தேதி வரை நடக்க உள்ளது. இது 13ஆவது ஒருநாள் உலகக் கோப்பையாகும்.
முதல் ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டி 1975ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்தது. அன்றைய நாளில் இத்தகையதொரு போட்டியை இங்கிலாந்து தவிர வேறு எந்த நாட்டிலும் நடத்த முடியாத சூழ்நிலை இருந்தது. 1975 போட்டி ஜூன் 7 அன்று தொடங்கியது. முதல் மூன்று உலகக் கோப்பைப் போட்டிகள் இங்கிலாந்தில் நடத்தப்பட்டன.
இவை “ப்ருடென்ஷியல் பிஎல்சி” நிறுவனத்தால் ஸ்பான்சர் செய்யப்பட்டதால் ‘ப்ருடென்ஷியல் கோப்பை’ என்று அதிகாரப்பூர்வமாக அழைக்கப்பட்டது. போட்டிகள் ஒரு அணிக்கு 60 ஆறு-பந்து ஓவர்கள் கொண்டதாக இருந்தது, பகலில், பாரம்பரிய வடிவத்தில் விளையாடப்பட்டது, வீரர்கள் கிரிக்கெட் வெள்ளை சீருடை அணிந்து சிவப்பு கிரிக்கெட் பந்துகளைப் பயன்படுத்தி விளையாடினர்.
முதல் போட்டியில் எட்டு அணிகள் பங்கேற்றன: ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் (அப்போது இவை மட்டுமே டெஸ்ட் போட்டிகள் விளையாடும் நாடுகளாக இருந்தன), இலங்கை மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவின் அணிகளும் விளையாடின. நிறவெறிப் பிரச்சனை காரணமாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அச்சமயத்தில் தென் ஆப்பிரிக்கா தடை செய்யப்பட்டிருந்தது.
எட்டு அணிகளும் நான்கு நான்கு அணிகளாக குரூப் A குரூப் B எனப் பிரிக்கப்படிருந்தன. குரூப் A பிரிவில் இங்கிலாந்து, நியுசிலாந்து, இந்தியா, கிழக்கு ஆப்பிரிக்கா அணிகள் இடம் பெற்றிருந்தன. குரூப் B பிரிவில் மேற்கு இந்தியத் தீவுகள், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை அணிகள் இடம்பெற்றிருந்தன. குரூப் A பிரிவில் இருந்து இங்கிலாந்தும் நியுசிலாந்து அணியும் தேர்வாயின:
குரூப் B பிரிவில் இருந்து மேற்கு இந்தியத் தீவுகள், ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் தேர்வாயின. அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணியையும் மேற்கு இந்தியத்தீவுகள் நியுசிலாந்து அணியையும் வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தன.
லார்ட்ஸில் நடந்த இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை 17 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த மேற்கிந்தியத் தீவுகள் இந்தப் போட்டியை வென்றது. முதலில் ஆடிய மேற்கு இந்தியத்தீவுகள் அணி 60 ஓவரில் எட்டு விக்கட் இழப்பிற்கு 291 ரன்கள் எடுத்தது. கிளைவ் லாய்ட் 102 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியாவின் கேரி கில்மோர் 48 ரன்களுக்கு 5 விக்கட் எடுத்தார். பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி 58.4 ஓவரில் 274 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இதில் ஐந்து இங்கிலாந்து பேட்ஸ்மென்கள் ரன் அவுட்.
இந்த போட்டிகளில் ரிகார்டுகளுக்குப் பஞ்சம் இருக்கவில்லை. நியூசிலாந்தின் கிளன் டர்னர் இரண்டு நூறு அடித்தார்; அதிக பட்ச ஸ்கோராக அவர் ஆட்டமிழக்காமல் 171 ரன் எடுத்தார். இந்தியாவோடு விளையாடிய முதல் ஆட்டத்திலேயே இங்கிலாந்து அணி 334 ரன் எடுத்தது. இங்கிலாந்தின் டென்னிஸ் அமிஸ் 137 ரன் எடுத்தார். 1975 உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் போது ODIயில் ஹிட்-விக்கெட் எடுத்த முதல் பேட்ஸ்மேன் வெஸ்ட் இண்டீஸின் ராய் ஃப்ரெட்ரிக்ஸ் ஆவார்.
இந்திய அணி இந்தப் போட்டியில் ஒரு மோசமான சாதனை படைத்தது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி 60 ஓவரில் 3 விக்கட் இழப்பிற்கு 132 ரன் கள் எடுத்தது. இதில் கவாஸ்கர் 60 ஓவர்கள் (174 பந்துகள்) விளையாடி, 36 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கிழக்கு ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி கிழக்கு ஆப்பிரிக்க அணியை 55.3 ஓவரில் 120 ரன்னுக்கு ஆட்டமிழக்கச் செய்தது.
அதன் பின்னர் ஆடிய இந்திய அணி 29.5 ஓவரில் 123 ரன் எடுத்து வெற்றி பெற்றது; கவாஸ்கர் (65 ரன்), ஃபாரூக் இஞ்சினியர் (54 ரன்) இருவரும் ஆட்டமிழக்காமல் ஆடி இந்திய அணியை வெற்றிபெற வைத்தனர். நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் அபித் அலி 70 ரன்கள் அடித்தார்.
கோவில்களில் திருமணத் திட்டம் அரசியல் லாபமா? திருக்கோவில் நிதியை அழிக்கும் திட்டமா? இன்று இந்து மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார் .அவரது அறிக்கை…
திருக்கோவில்களில் திருமண திட்டம் என்பது உண்மையில் ஏழை எளிய குடும்பத்திற்கு நன்மை
ஆரம்பித்த போதே இது அரசியல் நோக்கம் கொண்டது என பேசப்பட்டது. இது குறித்து தற்போது செய்தி குறிப்பு வெளிப்பட்டுள்ளது. திருமண திட்டத்திற்கு நன்கொடையாளர் கிடைக்கவில்லை என்றால் கோவில் நிதியில் இருந்து செலவு செய்யலாம்.
கோவில் கும்பாபிஷேகத்திற்குகூட கோவில் நிதி பயன்படுத்தாத நிலை போய் கோவில் வழிபாட்டிற்கு சம்பந்தமில்லாத பணிக்கு கோவில் நிதியை பயன்படுத்துவது என்பது எந்த வகையில் ஏற்புடையது?
உயர்நீதிமன்றம் எத்தனை முறை கோவில் நிதி கோவில் வழிபாட்டிற்கு மட்டுமே செலவு செய்ய வேண்டும் என்று கூறினாலும் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை அதனை மதிப்பதில்லை.
நன்கொடையாளர்கள் கிடைக்கவில்லை என்றால் எம்.எல்.ஏ. தொகுதி நல நிதியில் இருந்து செலவு செய்யட்டும். மேலும் தங்கம் மார்கெட் நிலவரத்திற்கு ஏற்ப வாங்கலாம் என்பது மோசடிக்கு துணைபோகும்.
பதிவு திருமணம் செய்வதற்கு 15நாட்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும் என்பது விதி. அரசியல்வாதிகள் நடத்துகின்ற இலவச திருமணங்கள் எப்படி நடக்கின்றன என்பதை பார்க்கிறோம். எத்தனை முறைகேடுகளை பார்க்கிறோம்.
எனவே திருக்கோவிலில் நிகழ்த்தப்படும் திருமணங்களுக்கு அதேபோல கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டியது அவசியம். முன் அறிவிப்பு செய்து தகுதியானவர்கள் பயனடைய வேண்டும் என்ற தெளிவோடு செயல்படுத்த வேண்டும்.
அரசியலுக்காக கோவில் நிதியை அழிக்கும் சிந்தனையை இந்து சமய அறநிலையத்துறை கைவிட வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
ராகுல் காந்தியின் மேல்முறையீடு மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.கிரிமினல் அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் தண்டனைக்கு தடை கோரி காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி தொடுத்த மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து குஜராத் உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்துள்ளது.
2019-இல் கா்நாடக பிரசாரத்தில் பேசிய ராகுல், ‘எப்படி அனைத்து கொள்ளையா்களும் மோடி என்ற பொதுவான துணைப்பெயரைக் கொண்டுள்ளனா்?’ என்றாா். மோடி சமூகத்தினரை ராகுல் இழிவுபடுத்தியதாக குஜராத்தின் பாஜக எம்எல்ஏ பூா்ணேஷ் மோடி தொடுத்த வழக்கில், சூரத் விசாரணை நீதிமன்றம் கடந்த மாா்ச் 23-ஆம் தேதி ராகுலுக்கு அதிகபட்சமாக 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
இதை எதிா்த்து தொடுக்கப்பட்ட மேல் முறையீட்டு மனுவை விசாரித்த சூரத் செஷன்ஸ் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி ராகுலுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. ஆனால் அவரது தண்டனைக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. தண்டனைக்கு தடைக் கோரி குஜராத் உயா்நீதிமன்றத்தில் ராகுல் தாக்கல் செய்ய மனுவை கடந்த மே மாதம் விசாரித்த நீதிபதி ஹேமந்த் பிரச்சக், தண்டனைக்கு உடனடியாக இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டு, கோடை விடுமுறைக்குப் பிறகு உத்தரவு பிறப்பித்ததாக தெரிவித்திருந்தாா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு ராகுல் மனு மீது தீா்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி ஹேமந்த் பிரச்சக்கின் வழக்கு விசாரணைப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், கிரிமினல் அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் தண்டனைக்கு தடை கோரி காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி தொடுத்த மேல்முறையீடு மனுவை வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்து தீா்ப்பளித்துள்ள நீதிபதி ஹேமந்த் பிரச்சக், 2 ஆண்டுகள் தண்டனையை நிறுத்தி வைக்க மறுத்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
1939 ஆம் ஆண்டு ஜூலை 8–ஆம் நாள் சில ஹரிஜன சகோதரர்கள் மற்றும் அந்நாளில் கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வந்த நாடார் சகோதரர்களுடன் பக்தி உணர்வோடு மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் பிரவேசித்து சொக்கநாதப் பெருமானின் அருளையும், மீனாட்சி அம்மையின் அருளையும் பெற்றார்கள் மதுரை வைத்தியநாத ஐயர் தலைமையில் சென்ற குழுவினர்.
தமிழக ஆலய வழிபாட்டு வரலாற்றில் இச்சம்பவம் புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்தது. சுதந்திரப் போராட்ட வீரர் ஸ்ரீ வைத்தியநாத ஐயரை உலகம் போற்றி மகிழ்ந்தது! கடும் எதிர்ப்பை மீறி ஸ்ரீ வைத்தியநாத ஐயர் நடத்திய இப்போராட்டத்திற்கு பசும்பொன் ஸ்ரீ முத்துராமலிங்கத் தேவர் ஐயா அவர்கள் ஆதரவு தெரிவித்தார்கள்.
ஆலயப்பிரவேச நடவடிக்கைக் குழு மதுரை எட்வர்ட் ஹாலில் கூடியது. ஸ்ரீ ராஜாஜி, ஸ்ரீ வைத்தியநாதஐயர், ஸ்ரீ என்.எம்.ஆர். சுப்புராமன் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்களோடு பசும்பொன் ஸ்ரீ முத்துராமலிங்கத் தேவரும் கலந்து கொண்டார். ஆலயப் பிரவேசம் அமைதியாக நடைபெற தேவரின் ஒத்துழைப்பும் உறுதிமொழியும் வேண்டும் என அவர்கள் கேட்டார்கள்.
அதற்கு தேவர் அவர்கள் “என் சகோதரர்களான ஹரிஜன மக்கள், அன்னை மீனாட்சி கோயிலில் ஆலயப் பிரவேசம் செய்கையில் அவர்களுக்குத் தேவையான அனைத்துப் பாதுகாப்பையும் என் மக்கள் தருவார்கள். அன்னை மீனாட்சியை வணங்கி, அவர்கள் வீடு திரும்பும் வரை அவர்களது பாதுகாப்புக்கு நான் உத்தரவாதம் தருகிறேன் என்றார். ஆலயப் பிரவேசம் அமைதியாக நடந்தது. 8.7.1939 காலை 10 மணிக்கு!
ஆங்கில அரசு இருந்த காலங்களில் பட்டியலின மக்கள் கோயிலுக்குள் போக மறுப்பு இருந்தது சட்டத்தின் படி! ஹரிஜன மக்களுக்குக் கோவிலைத் திறந்துவிட்டால், இந்து சமய அறநிலையச் சட்டங்களின்படி கோவில் அலுவலர்களும், அர்ச்சகர்களும், அறங்காவலர்களும், பிறரும் தண்டிக்கப்படுவார்கள் என்ற அவலநிலையும் இருந்தது.
இதனை அறிந்த இராஜாஜி அவர்கள் அன்றைய ஆளுநராக இருந்த எர்ஸ்கின் பிரபுவிடம் எடுத்துக் கூறி 1935-ஆம் ஆண்டின் அரசியல் சட்டத்தின் 88-ஆவது பிரிவின்படி ‘அவசரப் பிரகடனம்’ ஒன்றை வெளியிடச் செய்தார். அதன்படி ஹரிஜன மக்கள் கோவிலுக்குள் நுழைந்து வழிபட்டால் அதற்காக கோவில் அதிகாரிகள், அறங்காவலர்கள், அர்ச்சகர்கள் முதலியவர்கள் தண்டனைக்குள்ளாக மாட்டார்கள் என்ற நிலை உருவானது.
அதற்குப் பிறகு தமிழகமெங்கும் ஹரிஜன மக்கள் கோவிலில் நுழைந்து வழிபடும் உரிமை நிலைநாட்டப்பட்டது.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் 1939-ஆம் ஆண்டு ஜூலை 8-ஆம் நாள் திரு வைத்தியநாத ஐயர் தலைமையில். ஸ்ரீ கக்கன்ஜி. ஸ்ரீ எல்.என். கோபாலசாமி, ஸ்ரீ முருகானந்தம், ஸ்ரீமுத்து, ஸ்ரீவி.எஸ்.சின்னையா, ஸ்ரீ வி.ஆர். பூவலிங்கம் முதலிய தலைவர்களும், விருதுநகர் ஸ்ரீ எஸ்.எஸ். சண்முக நாடார் என்ற நாடார் பிரமுகரும் மற்றும் சிலரும் கோவிலுக்குள் நுழைந்து வழிபட்டனர்..
இச்சம்பவத்தைக் குறித்து 22-7-1939 ஹரிஜன் இதழில் மகாத்மா காந்தி கீழ்க்கண்டவாறு எழுதினார்…
இவ்வளவு விரைவில் ஆலயப் பிரவேசம் நடைபெறும் என நான் எதிர்பார்க்கவில்லை. தீண்டாமையை எதிர்த்து நடைபெற்று வரும் பிரசாரத்தில் இது ஒரு முக்கியமான நிகழ்ச்சியாகும். திருவாங்கூர் சமஸ்தானத்தில் ஆலயப் பிரவேசம் நிகழ்ந்ததும் ஒரு பெரிய முயற்சியே. ஆனால் அங்கு அது மகாராஜாவின் விருப்பத்தைப் பொருத்து நடந்துள்ளது. மதுரையில் நடைபெற்ற ஆலயப் பிரவேசமோ பொதுமக்கள் கருத்தின் விளைவாக நிகழ்ந்த ஒன்றாகும். இவ்விஷயத்தில் பொதுமக்கள் கருத்தை உருவாக்க அயராது பாடுபட்ட வைத்தியநாத அய்யர் மற்றும் அவரது சக ஊழியர்கள் பாராட்டுக்குரியவர்கள்.
8-7-1939 நம் சுதந்திரப் போராட்டத்தில் மறக்க முடியாத நாள்.
கோவை: கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு செல்லப்பட்டது.
இந்நிலையில், அவரது மரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக., மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை:
கோவை சரக டிஐஜி திரு விஜயகுமார் ஐபிஎஸ் அவர்கள், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
காவல்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களுக்காக ஓய்வு பெற்ற நீதியரசர் திரு சி.டி. செல்வம் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்தின் அறிக்கை என்ன ஆனது?
காவல்துறையினரின் பணிச்சுமையை குறைக்க, தமிழக காவல்துறையில் உள்ள 10,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப தமிழக முதல்வர் எடுத்த நடவடிக்கைகள் என்ன?
காவல்துறையின் உயர் அதிகாரி ஒருவரின் தற்கொலை என்பது அத்தனை எளிதாகக் கடந்து செல்ல முடியாது. இந்த தற்கொலைக்கு பின்னணி என்ன என்று, தமிழக அரசு, தீவிர விசாரணை செய்து, நடவடிக்கை எடுக்க தமிழக பாஜக சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன்.