இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.
ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.
மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்
தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.
ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.
மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்
தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
கோவை: கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு செல்லப்பட்டது.
இந்நிலையில், அவரது மரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக., மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை:
கோவை சரக டிஐஜி திரு விஜயகுமார் ஐபிஎஸ் அவர்கள், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
காவல்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களுக்காக ஓய்வு பெற்ற நீதியரசர் திரு சி.டி. செல்வம் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்தின் அறிக்கை என்ன ஆனது?
காவல்துறையினரின் பணிச்சுமையை குறைக்க, தமிழக காவல்துறையில் உள்ள 10,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப தமிழக முதல்வர் எடுத்த நடவடிக்கைகள் என்ன?
காவல்துறையின் உயர் அதிகாரி ஒருவரின் தற்கொலை என்பது அத்தனை எளிதாகக் கடந்து செல்ல முடியாது. இந்த தற்கொலைக்கு பின்னணி என்ன என்று, தமிழக அரசு, தீவிர விசாரணை செய்து, நடவடிக்கை எடுக்க தமிழக பாஜக சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன்.
கோவை: கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு செல்லப்பட்டது. இது குறித்துபோலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விஜயகுமார், 2009ல் ஐபிஎஸ் பேட்ஜில் பணியில் சேர்ந்தவர். நீட் தேர்வு மற்றும் சிவசங்கர் பாபா வழக்குகளில் சிறப்பு விசாரணை நடத்தியவர். காஞ்சிபுரம், கடலூர், நாகை, திருவாரூரில் எஸ்பி.,யாக பணியாற்றியவர். கடந்த ஜனவரி மாதம்தான் கோவை டிஐஜி.,யாகப் பொறுப்பேற்றார். கோவை சரகம் என்பது கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய நான்கு மாவட்டங்களைக் கொண்டது.
விஜயகுமார் இன்று அதிகாலை தனது வீட்டில் இருந்தபோது மெய்க்காப்பாளரின் துப்பாக்கியை வாங்கி, சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டது. தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்த உயரதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விஜயகுமாரின் தற்கொலைக்கு என்ன காரணம் என்று விசாரணை தீவிரமாகியுள்ளது. டிஐஜி விஜயகுமாரின் தற்கொலை போலீஸாரிடம் மட்டுமின்றி, தமிழகத்தில் மக்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சமூகத் தளங்களில் பலரும் வருத்தங்களைப் பகிர்ந்து கொண்டதுடன், தற்கொலை குறித்து கருத்துகளையும் பகிர்ந்து வருகின்றனர்.
விஜயகுமார் தற்கொலை குறித்து கருத்து வெளியிட்ட பாஜக., மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, கோவை சரக டி ஐ ஜி விஜயகுமார் அவர்கள் இன்று காலை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. மன அழுத்தத்தின் காரணமாக இவர் தற்கொலை செய்து கொண்டதாக கருதப்படுகிற நிலையில், உயர் காவல் துறை அதிகாரி, ஐ பி எஸ் பயின்றவர், மன உறுதி படைத்தவர் திடீரென விபரீத முடிவுக்கு சென்றுள்ளது வியப்பளிக்கிறது. தற்கொலை எந்த பிரச்சினைக்கும் தீர்வல்ல என்றாலும், அலுவல் ரீதியாக அவர் மன அழுத்தத்திற்கு ஆளானாரா என்பது அறிந்து கொள்ளப்பட வேண்டும். தமிழக காவல் துறை அல்லாத சி பி ஐ போன்ற வேறு ஒரு அமைப்பின் மூலம் விசாரணை நடத்த தமிழக அரசு முன் வரவேண்டும். அப்படி செய்வதனால் மட்டுமே தவறுகள் நடந்திருந்தால் களையப்பட வாய்ப்புள்ளது என்பதோடு அலுவல் ரிதியாக அழுத்தங்கள் இல்லையென்பது தெளிவாகும் பட்சத்தில் காவல்துறை மீதான சிறு களங்கம் கூட துடைத்தெறியப்படும். இந்த கோரிக்கையை அரசியலாக பார்க்காமல் அரசின் நிர்வாகத்திற்கான ஆலோசனையாக கருதி செயல்படுத்துவது முதல்வருக்கு சிறப்பை தரும் – என்று குறிப்பிட்டுள்ளார்.
लघुता में प्रभुता बसै, प्रभुता से प्रभु दूर l कीड़ी सो मिसरी चुगै, हाथी के सिर धूर ll
வைணவ மரபில் ‘நைச்சியம் பாவித்தல்’ ‘நைச்சிய அனுசந்தானம்’ என்பது மிக மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. நைச்சியம் என்றால் தாழ்ச்சி. நம்முடைய தாழ்ச்சியை/ குறைகளை எண்ணுதல் மற்றும் அவற்றை உளமாறச் சொல்லுதல் வேண்டும். அடுத்தவர்களை ஒருபோதும் பழித்திடல் கூடாது. நமக்கு அதற்கான உரிமை வழங்கப்படவில்லை.
உண்மையில் இங்கு அனைவரும் நம்மைக் காட்டிலும் நல்லவர்களே! அதிலொன்றும் சந்தேகம் வேண்டாம். இங்கு நான் மட்டுமே தீயவன்.. தீமைகளின் பிறப்பிடம் / இருப்பிடம் நான் மட்டுமே என்று உறுதியாக நம்மை நாமே சொல்லிக் கொள்ள வேண்டும்.
நான் அல்பன் ( சிறியவன் ), துச்சமானவன், தொண்டர்களுக்கெல்லாம் தொண்டன் என்றெல்லாம் எவன் பணிவுடன் சொல்லுகின்றானோ அவன் சர்வ நிச்சயமாக உலகத்தவர்களால் உயர்ந்தவனாகக் கொண்டாடப்படுவான். அவன் எடுத்த காரியங்கள் எல்லாவற்றிலும் வெற்றியும் பெறுகிறான். ஆம்! பணிவினால் உலகை வசப்படுத்தி வெற்றி கொள்கிறான் அவன்.
கவனமாகக் கேளுங்கள். பணிவு இருந்தால் மட்டுமே இறைவன் உங்களுக்கு வசப்படுவான். எளிவருமியல்வினன் எளியவர்களுக்கே தன்னை எழுதிக் கொடுக்கிறான். நம்மை நாமே உயர்ந்தவர்களாக, பெரியவர்களாக, சிறந்தவர்களாக அறிவித்துக் கொள்வதால் பயனேதுமில்லை.
வெற்றுப் பேச்சுகள், போலிப் பூச்சு போன்றதான அறிவு, ஆடம்பரத்தில் விருப்பம் போன்றவைகள் இவ்வுலகத்தில் எந்தவொரு விஷயத்திலும் நம்மை ஒருபோதும் வெற்றி பெறச் செய்யாது. அகங்காரமுடையவன் நிரந்தரமாகத் தோற்றவன். அன்னவர்கள் எங்ஙனம் பெருமானைக் கிட்டிப் பேரானந்தம் பெறலாகும்? இம்மியளவும் அதற்கு வாய்ப்பில்லை.
ஒரு உதாரணத்தின் மூலமாக அடக்கத்துடன் இருப்பதால் வரும் நன்மையயும் பெரியவன் என்கிற இறுமாப்பினால் வரும் கேட்டையும் உங்களுக்குச் சொல்கிறேன். ஒரு சிறிய எறும்பு சர்க்கரைத்தூளினை சுமந்து செல்வதை எப்போதேனும் நீங்கள் பார்த்திருக்கக் கூடும். எறும்பு அளவில் மிகச் சிறியது தான். வருவது போவது தெரியாமல் எளிமையாக நம்மைக் கடந்து செல்லும் ஒரு உயிரினம் தான் அது. ஆனால் அது சர்க்கரையை; இனிப்பினைச் சுமந்து செல்கிறது பாரீர்.
இப்போது ஒரு பெருத்த யானையை நினைவில் கொள்க. அளவில் மிகப் பெரிய உயிரினம் தான். கம்பீரமானதும் கூட. மறுப்பாரில்லை. செருக்கித் திரியும் இயல்புடையது யானை.
அந்த யானையைக் கூர்ந்து கவனியுங்கள். பெரிய துதிக்கையை அதற்குப் பரிசளித்திருக்கிறான் ஆண்டவன். ஆனால் அந்த யானையோ தன்னுடைய நீண்டவப் பெரிய கையினால் தரையில் கிடக்கும் மண்ணை அள்ளித் தன் தலையில் அதாவது மத்தகத்தில் போட்டுக் கொள்வதை வாடிக்கையாகக் கொண்டதாதலால் எப்போதும் அவ்வாறே செய்கிறது.
சிறிய பிராணியான எறும்போ சுவை மிக்க சர்க்கரையைத் தூக்கிச் செல்கிறது. மிகப்பெரிய யானையோ தன் தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொள்கிறது.
எறும்பிடம் அகங்காரமில்லை! எளிமை இருக்கிறது. அதற்கான பரிசாகத் தான் அது சர்க்கரையைப் பெற்றிருக்கிறது. மாறாக யானையோ அகங்காரத்தினால் அறிவிழந்து தன்னையே அழுக்காக்கிக் கொள்கிறது.
இங்கு எறும்பு எளிமையின் குறியீடு. சர்க்கரை ‘மிக்கார் வேதவிமலர் விரும்பும் அக்காரக்கனியான எம்பெருமான்’. பணிவானவர்களுக்கே பரமன் வசப்படுவான் என்பதைத் தெரிந்து கொண்டீர்களா?!
அகங்கார மமகாரங்களைக் கைக் கொண்டவன் யானையைப் போல் தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டவனாகிறான் என்பதனை உணர்க.
பணிவு என்பது பலவீனம் அன்று.. அது தான் பலம்! உணர்க! உயர்க !
சிதம்பரத்தில் நடைபெறும் ஆனித் திருமஞ்சனம் மிகவும் சிறப்புவாய்ந்தது. இதனைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சிதம்பரத்தில் கூடுவார்கள். இந்த உற்சவத்தை பதஞ்சலி முனிவர் தொடங்கிவைத்தார் என்கின்றன ஹிந்து புராணங்கள். சிதம்பரத்தில் சிவபெருமானின் நடனக் காட்சியைக் காண விரும்பினார் பதஞ்சலி முனிவர். அந்தக் கதையைப் பார்ப்போம்…
ஓரு சமயம் ஆதிசேஷன் சிவனின் ஆனந்த தாண்டவத்தைக் காணவேண்டுமென கயிலை சென்று சிவ பெருமானிடம் தன் ஆசையை வெளிப்படுத்தினார். அதற்கு சிவன் பூலோகத்தில், தில்லை ஸ்தானத்தில் தான் காட்சியளிக்க உள்ளதாகவும், அதைக் காண ஏதுவாக அத்திரி மகரிஷியின் மகனாக அவதரித்து பூலோகம் செல்ல வரம் கொடுத்து ஆதிசேஷனைப் பணிக்கிறார்.
அத்திரி மகரிஷி நதிக் கரையில் சூரியனை எண்ணி அர்க்கியம் கொடுக்கும் பொழுது ஐந்து முகங்களுள்ள ஒரு குழந்தையாக அவர் கைகளில் வந்து தவழுகிறார் ஆதிசேஷன். மகரிஷியும் அந்தக் குழந்தையை எடுத்து “பதஞ்சலி” என்ற பெயரிட்டு வளர்க்கிறார்.
அத்திரி மகரிஷி சிவனின் ஆனந்த தாண்டவத்தைக் காண விருப்பம் கொண்டு தவம் செய்ய ஆயத்தம் ஆகிறார். அப்போது பதஞ்சலியும் அவருடன் சேர்ந்து தவம் மேற் கொள்கிறார்.
இவர்களின் தவத்தை மெச்சிய ஈசன் ஒரு தைப்பூச நாளில் இவர்களுக்கு ஆனந்த தாண்டவத்தைக் காட்டி அருள்கிறார்.
இந்த பதஞ்சலி முனிவர் ஒரே நேரத்தில் ஆயிரம் சீடர்களுக்கு ஆயிரம் தலைகளுடன் திரை மறைவில் இருந்து வியாகரண மகாபாஷ்யத்தைக் கூறினார் என்றும் புராணங்கள் குறிப்பிடுகின்றன.
பதஞ்சலி யோக சூத்திரங்கள் 1. சமாதி, 2. சாதனை, 3. விபூதி, 4. கைவல்யம் என்று நான்கு பிரிவுகளைக் கொண்டு196 சூத்திரங்கள் கொண்டது. யோக சூத்திரங்களின் முக்கியத்துவம் என்னவென்றால் பலகாலமாகவே ஒரு வழிமுறையாக கடைப்பிடிக்கப்பட்ட யோக முறைகளை வகுத்து தொகுத்து அளித்ததுதான்…
பதஞ்சலி முனிவர் யோகக் கலைக்கு ஒரு சூத்திரத்தை உருவாக்கியவர். அதாவது யோகக் கலை மூலம் எப்படி ஒருவன் சமாதி நிலையை – ஞானத்தை- அடைய முடியும் என்பதை ஒரு மொழி இலக்கணத்தைத் தந்தவர். அவர் அதை அஷ்டாங்க யோகக் கலை அதாவது மனதில் பரிபூரண ஆனந்த நிலையை அடைய ஒருவர் எட்டு படிகளைக் கடக்க வேண்டும் என்று கூறி அந்த எட்டு வழிகளை கீழ்க்கண்டவாறு விளக்குகிறார்.
யம தன்னை அன்புள்ளவனாக, உண்மையானவனாக மாற்றிக் கொள்ள வேண்டும் . ( முன்னர் எப்படி இருந்தாலும் சமாதி நிலை அடைய முடிவு செய்தவுடன் இதை கடைபிடிக்க வேண்டும்)
நியம தன்னை தூய்மை உள்ளவனாக, பொறுமை உள்ளவனாக மாற்றிக் கொள்ள வேண்டும்
ஆசனா மனதை கட்டுப்படுத்திக் கொண்டு ஒரே இடத்தில் நிலையாக பல மணி நேரம் அமர்ந்து இருக்க பழக்கிக் கொள்ள வேண்டும்
பிரணாயா மூச்சை அடக்கி வைத்துக் கொண்டு மனத்தையும் கட்டுப்படுத்தும் இந்த முறையை முறையாக பயின்று கடை பிடிக்க வேண்டும்.
பிரத்யாஹரா நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதை மன ஓட்டத்தின் எண்ணத்தில் இருந்து அகற்றும் முறை.
தாரணா ஒரே குறிகோளுடன் அமர்வது. மனதில் ஒரு வடிவத்தை நினைத்துக் கொண்டு அதுவே மனதில் நிலையாகத் தோன்றுமாறு செய்து கொள்ளும் நிலை.
த்யானம் மேலே உள்ளவைகளின் அடுத்தக் கட்டம். நம்மை சுற்றி என்ன நடந்தாலும் அது காதில் விழக் கூடாது. மனது அந்த ஒரே வடிவத்தையேப் பார்த்தவாறு இருக்க வேண்டும். அதைத் தவிர வேறு எதுவுமே மனதில் தோன்றக் கூடாது.
சமாதி மனதையும் எண்ணங்களையும் அடக்கத் தெரிந்தவுடனேயே உங்கள் உள்ளத்தில் அனைத்தைப் பற்றிய உண்மைகளும் புரிய ஆரம்பிக்கும். மனதில் விருப்பு வெறுப்பு தோன்றாது. மனித எல்லைகளுக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளைக் காண இயலும். மனதில் அசாத்தியமான அமைதியும் ஆனந்தமும் ஏற்படும். இறைவனுடன் கலந்து விட்ட நிலை தோன்றும்.
பதஞ்சலி யோகத்துக்கு பல உரைகள் பண்டைக்காலம் முதல் உள்ளன. வியாச பாஷ்யமே முதல் உரை. அதுவே அடிப்படையானதுமாகும். இவ்வுரை சாங்கிய பிரவசன பாஷ்யம் எனப்படுகிறது. சாங்கிய பாஷ்யத்தின் நீட்சியாகவே வியாசர் யோகத்தைக் காண்கிறார் . வாஸஸ்பதி மிஸ்ரர்ரின் ‘விசாராதி ‘ என்ற உரையும் புகழ் பெற்றது .
முதலாம் நூற்றாண்டில் யோக சூத்திரத்திற்கு எழுதிய உரையின் அடிப்படையிலும் மற்ற இலக்கியங்களை ஆய்வு செய்ததன் அடிப்படையிலும் கிமு 400 ஆண்டு வாக்கில் பதஞ்சலி சூத்திரம் எழுதப் பட்டிருக்கலாம் என்று தெரிய வருகிறது!! பதஞ்சலி முனிவர் வேறு பதஞ்சலி சித்தர் வேறு என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
சிதம்பரம் என்பதற்கு என்ன பொருள்? சிதம்பரம் என்ற சொல் சித் என்ற சமஸ்கிருத வார்த்தையிலிருந்து உருவானது, அதாவது “உணர்வு” மற்றும் அம்பரம், அதாவது “ஆகாயம்” (ஆகாசம் அல்லது ஆகாயத்திலிருந்து). இது அனைத்து வேதங்கள் மற்றும் வேதங்களின் இறுதி இலக்கான சிடாகாசம் அல்லது நனவின் வானத்தைக் குறிக்கிறது.
சிதம்பரம் கோவிலின் சிறப்பு: தெய்வம் திருமூலா நாதர் ஒரு சுயம்பூமூர்த்தி. ஆனாலும், நடராஜர் ஆளும் தெய்வம். பஞ்சபூத ஸ்தலங்களில் (இடங்கள்) சிதம்பரம் ஆகாயத்துக்கு சொந்தமானது. ஞானசம்பந்தர், திருநாவுகாரசர், சுந்தரர் ஆகியோரல் பாடப்பெற்ற ஸ்தலம்.
மதுரை: மதுரை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், இப்போது நாட்டில் ஒரு கலாசார மறுமலர்ச்சி வந்திருக்கிறது. அதனால் மீண்டும் நாம் (பாஜக.,) ஆட்சிக்கு வரவேண்டும் என்றார். அவர் மேலும் கூறியதாவது…
மணிப்பூரில் நடைபெறும் கலவரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த சுப்பிரமணியன் சுவாமி, அங்கே மேய்தி என்ற ஹிந்து சமுதாயத்தினர் 55 சதவீதத்துக்கும் மேல் இருக்கின்றார்கள். அவர்களை மற்ற சமுதாயத்தினர் குறி வைத்து தாக்குகின்றார்கள். குறிப்பாக, பர்மா, அதாவது தற்போதைய மியான்மர் நாட்டில் இருந்து வந்தவர்கள் சீனாவின் ஆதரவுடன் இவ்வாறு செய்கிறார்கள். இதனால் கலவரம் பெரிதாக உள்ளது.
பிரதமர் மோடி அமெரிக்கா சென்றார். ஆனால் அவர் இம்பால், அதாவது மணிப்பூருக்கு சென்றிருக்க வேண்டும். அதில் எனக்கு வருத்தம் தான். பிரதமர் அமெரிக்கா சென்றதால் அவருக்கு நேரம் கிடைக்கவில்லை. அதனால் இன்னும் இம்பால் போய் பார்க்கவில்லை. அவர் மணிப்பூருக்கு சென்று நிலைமையை சரியாக்க உடனே முயற்சி செய்ய வேண்டும்… என்றார்.
வரும் 2024 தேர்தலைக் குறிவைத்து, பாட்னாவில் நடைபெற்ற எதிர்க் கட்சிகள் கூட்டம் குறித்த கேள்விக்கு சிரித்துக் கொண்டே பதிலளித்த சுப்பிரமணியம் சுவாமி, எதிர்க்கட்சிகள் எல்லாம் சேர்ந்து வந்தால் ஒரு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் என்னுடனைய கருத்து என்னவென்றால், பிரதமர் மோடி என்ன நல்லது செய்தார், செய்யவில்லை என்பதெல்லாம் ஒரு பேச்சு அல்ல.. பாஜக.,வுக்காக ஓட்டு போடுபவர்கள் என்று ஒரு தரப்பினர் உள்ளார்கள். அதாவது, ஹிந்துத்வாவுக்காக, ஹிந்து மறுமலர்ச்சி கொண்டு வரவேண்டும் என்பதற்காக, கோயில்களை எல்லாம் அரசின் பிடியில் இருந்து விடுவித்துக் கொடுத்தோம் என்பதற்காக, சாதி வேறுபாடுகளை எல்லாம் கடந்து ஹிந்து ஒற்றுமைக்காக என்று இப்படியெல்லாம் இருந்தால், இதில் பாஜக.,வுக்கு ஓட்டு அதிகம் கிடைக்கும். அவற்றில் மோடி பெரிதாக எதுவும் செய்யவில்லை.
மோடி அப்படிச் செய்தார், நல்லது செய்தார் என்றெல்லாம் இங்கே சிலர் ஜால்ரா போட்டுக் கொண்டிருக்கிறார்கள் இல்லையா, அதெல்லாம் ஓட்டாக வராது. ஹிந்துத்வாவுக்காக மோடி பெரிதாக செய்வார் என்று எதிர்பார்த்தார்கள் தொண்டர்கள். அதில் மோடி ஒன்றும் செய்யவில்லை என்பது ஏமாற்றம். ஆனால் நாம்தான் அடுத்து வரவேண்டும், நம் நாட்டில் வெள்ளைக்காரர்கள் முஸ்லிம்கள் வந்து கெடுத்து வைத்த நமது கலாசாரத்துக்கு இப்போதுதான் ஒரு மறுமலர்ச்சி வந்திருக்கிறது. அந்த ஒற்றுமைக்காக மக்கள் மத்தியில் அந்த வந்திருக்கிறது. அதற்காக வாக்குகள் கிடைக்கும். நாம் மீண்டும் வரவேண்டும் என்றார்..
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயர் வைப்பது குறித்து எழுப்பப் பட்ட கேள்விக்கு பதிலளித்த சுப்பிரமணியன் சுவாமி, எல்லாம் நாடாளுமன்றத்தில் பேசி முடிவாகிவிட்டது. பிரபுல் படேல் என்னிடம் உறுதியாகக் கூறினார். இதை நான் அறிவிக்கப் போகிறேன் என்றும் கூட சொன்னார். மதுரை விமான நிலைய திறப்பு விழா நேரத்தில் பிரபு படேல் அறிவிக்க இருந்த நேரத்தில் அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் இதற்கு எஸ்டி., மக்கள் அதிருப்தி அடைவார்கள் என்று சொல்லி, அவ்வாறு அறிவிக்க விடாமல் தடுத்து விட்டார்.
முத்துராமலிங்க தேவர், தேவர் என்பது மட்டுமல்ல, அவர் நாட்டு விடுதலைக்காகப் போராடியவர். ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர். எனக்கு அவரது பெயரை இங்கே விமான நிலையத்துக்கு வைக்கதது பெரிய வருத்தம்தான்.
இன்றைக்கு ஆட்சியில் இருந்தாலும் எவரும் ஆதரவு அளிக்கவில்லை. திமுக., அதிமுக., எவருமே இதற்கு ஆதரவளிக்கவில்லை. இவர்கள் கடிதம் கொடுத்தால், நாடாளுமன்றத்தில் பேசி மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் வைக்க ஏற்பாடு செய்வேன். ஆனால் ஒருவருக்கு ஒருவர் பொறாமையில் பேசி செயல் படுகின்றனர். ப. சிதம்பரத்துக்கும் பொறாமை. நீங்கள் தான் அவர்களிடம் கேட்கவேண்டும், ஏன் இப்படிச் செய்தீர்கள் என்று கேட்கவேண்டும்” என வருத்தத்துடன் கூறினார் சுப்பிரமணியன் சுவாமி.
அம்பாசமுத்திரம் டிப்பர் லாரி கட்டுப்பாட்டை இழந்து எதிரில் வந்த மோட்டார் பைக்கில் மோதியதில் இரண்டு வயது சிறுவன் உட்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கல்லிடைக்குறிச்சி, அக்க சாலை பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த மாடசாமி மகன் இசக்கிராஜ் (30) தனது தாயார் அலங்காரி (எ) சரஸ்வதி (50) சகோதரி இசக்கியம்மாள் (எ) கார்த்திகா (25) சகோதரி மகன் சந்துரு (2) ஆகியோருடன் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக பாபநாசத்திற்கு இன்று பைக்கில் சென்றனர்.
பாபநாசம் சாலையில் கோடாரங்குளம் விலக்கு அருகே சென்ற போது எதிரில் வந்த டிப்பர் லாரி திடீரென கட்டுப்பாட்டை எதிரில் இசக்கிராஜ் வந்த பைக் மீது மோதியதாம். இதில் அலங்காரி, இசக்கியம்மாள் மற்றும் சந்துரு மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இசக்கிராஜ் மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார்.
தகவலறிந்த அம்பாசமுத்திரம் போலீஸார் உயிரிழந்தவர்களின் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
லாரியை ஓட்டிவந்த விக்கிரமசிங்கபுரம், பசுக்கிடை விளை, அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த மயில் மகன் அசோக் (33) காவல்நிலையத்தில் சரணடைந்தார்.
குற்றாலம் மணிமுத்தாறு அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக குற்றால அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு அவ்வப்போது தடை விதித்திருந்தாலும் தண்ணீர் குறையும்பொழுது குளிக்க அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக குற்றாலத்தின் மெயின் அருவி ஐந்தருவி, பழைய குற்றாலம், புலி அருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு நலன் கருதி குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது. இன்று காலையும் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு நீடித்துள்ளதால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி உள்ள நீர் தேக்கங்களுக்கும் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. குண்டாறு நீர் தேக்கம் தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளது. தென்காசி மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்து வரும் மழையின் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மணிமுத்தாறு அருவியில் குளிக்கத்தடை..
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகப் பகுதியில் உள்ள மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்ததையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.
தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தென்மேற்குப் பருவ மழைத் தீவிரமடைந்துள்ளதையடுத்து நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் மூன்று நாட்களாக தொடர் சாரல் மழை பெய்து வருகிறது. இதையடுத்து அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் மாஞ்சோலை தேயிலைத் தோட்டப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் சாரல் மழையால் மணிமுத்தாறு அறிவிப்பு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். காலை 9 மணி முதல் சுற்றுலா பயணிகள் அருவியை பார்வையிட மட்டும் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் நீர்வரத்து குறைவதை பொறுத்து அருவியில் குளிக்க அனுமதிக்கப்படுவர் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.
மதுரை: மதுரை மாவட்டம், செம்மொழித் தமிழுக்கு முதற்குரல் கொடுத்த தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் அவர்களின் 154-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு , அன்னாரின் திருவுருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா , தமிழ்நாடு அரசு சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தனித்தமிழ் இயக்கத்திற்கு பாடுபட்ட தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் அவர்களின் 154-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் வட்டம், விளாச்சேரியில் உள்ள தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் நினைவில்லத்தில் அன்னாரின் திருவுருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, தமிழ்நாடு அரசு சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
வி.கோ.சூரியநாராயண சாஸ்திரி என்ற இயற்பெயற் கொண்ட தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் அவர்கள் 06.07.1870-அன்று பிறந்தார். இளமை முதலே இலக்கண இலக்கியங்களையும், ஆங்கிலம் மற்றும் தத்துவ நூல்களையும் கற்றுத் தேர்ந்தார். செம்மொழித் தமிழுக்கு முதற்குரல் கொடுத்தவர். மேலும், சென்னைப் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்திலிருந்து தமிழ் நீக்கப்பட்டபோது அதை மீண்டும் சேர்க்கப் போராட்டத்தில் ஈடுபட்டார். தமிழுக்குப் பெருமை சேர்த்த பரிதிமாற் கலைஞர் தமது 33-ஆம் வயதில் 1903-ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 2-ஆம் நாள் இயற்கை எய்தினார்.
அருந்தமிழ் மொழியைச் செம்மொழி என, நிலைநாட்ட பாடுபட்ட தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் அவர்களின் மாண்பை உலகறியச் செய்யும் நோக்கில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக , மதுரை மாவட்டம், விளாச்சேரியில் அவர் வாழ்ந்த இல்லம் நினைவில்லமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும், அன்னாரது பிறந்த நாளான ஜ_லை 6-ஆம் நாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர், பிறந்த தினமான இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, விளாச்சேரியில் உள்ள தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் நினைவில்லத்தில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச்சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்வின்போது, மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி, மதுரை வருவாய் கோட்டாட்சியர் சாலினி , செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இ.சாலி தளபதி , சேடப்பட்டி மு.மணிமாறன் உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
எம்பி ஓபி ரவீந்திரநாத் தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு. வழங்கி உள்ளது.
தேர்தல் வேட்புமனுத் தாக்கலில் தவறான தகவல்கள் கொடுத்ததாக மிலானி என்பவர் தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. வழக்கில் மேல்முறையீடு செய்ய 30நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால் ஓபிஆர் எம்பியாக தொடர்வார்.
சேலம் எடப்பாடி தொகுதியில் வேட்புமனுவில் தவறான தகவல்கள் கொடுத்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி மீது மிலானி தொடுத்த வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
2001ல் அதிமுக., ஆட்சிக்கு வந்த போது, முந்தைய திமுக. ஆட்சியில் அமைச்சராக இருந்த பொன்முடி மீது வழக்கு பதிவு செய்தது.
பின் 2006ல் திமுக., ஆட்சிக்கு வந்த போது, அந்த வழக்கில் இருந்து பொன்முடி விடுவிக்கப் பட்டார்.
மீண்டும் 2016ல் அதிமுக., ஆட்சியில் இருந்த போது, பொன்முடி விடுவிக்கப் பட்டதை நீதிமன்றம் ரத்து செய்தது.
இப்போது மீண்டும் திமுக., ஆட்சியில் தற்போதைய அமைச்சர் பொன்முடி மீது உள்ள வழக்கை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
தற்போதைய தமிழக உயர் கல்வித் துறை அமைச்சரான பொன்முடி கடந்த 1996 முதல் 2001 வரை போக்குவரத்துத் துறை அமைச்சராக அப்போதைய திமுக., அரசில் பதவி வகித்தார். அப்போது சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் வடக்கு காலனி பகுதியில் உள்ள அரசுக்குச் சொந்தமான 3,630 சதுர அடி இடத்தை அபகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அந்த இடத்தில் சட்ட விரோதமாகக் குடியிருந்து வந்த கண்ணன் என்ற கண்ணப்பனை வெளியேற்றி விட்டு போலி ஆவணங்களைத் தயாரித்து பொன்முடியின் மாமியார் சரஸ்வதி பெயரில் அந்த இடம் பதிவு செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
அந்த நேரம் திமுக.,வினர் கடுமையான வகையில் நில அபகரிப்பு புகார்களில் சிக்கியிருந்தனர். பல்வேறு தரப்பில் இருந்து நிலப்பறிப்பு புகார்கள் வந்ததால், அதிமுக., ஆட்சிக்கு வந்ததும் இந்தப் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜெயலலிதா வாக்குறுதி கொடுத்து அடுத்து வந்த தேர்தலை சந்தித்தார்.
இந்நிலையில், பொன்முறி அபகரித்ததாகக் கூறப்பட்ட அந்த இடத்தில் ரூ.35 லட்சம் மதிப்பில் கட்டடம் கட்டப்பட்டுள்ளதாகக் கூறி, பொன்முடிக்கு எதிராக 2003-ல் புகார் எழுந்தது. இது தொடர்பாக சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தி, பொன்முடி, அவரது மாமியார் சரஸ்வதி, அப்போதைய அடையாறு சார்-பதிவாளர் புருபாபு, கிட்டு என்ற சைதை கிட்டு உள்ளிட்ட 10 பேர் மீது 27.8.2003 அன்று வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து, 2.9.2004 அன்று பொன்முடி உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு போலீசார் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் 2006ல் திமுக., அரசு அமைந்ததும், தன்னை அந்த வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி பொன்முடி அதே நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், பொன்முடியை வழக்கில் இருந்து விடுவித்து 26.4.2007 அன்று உத்தரவிட்டது.
இதன் பின்னர் 2011ல் அதிமுக., ஆட்சி அமைந்தது. 2016ல் இரண்டாவது முறையாக அதிமுக., ஆட்சி அமைந்த போது, பொன்முடியை விடுவித்ததற்கு எதிராக, லஞ்ச ஒழிப்புத்துறை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. விசாரணையின் முடிவில் பொன்முடியை வழக்கில் இருந்து விடுவித்து சிறப்புநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை 6.9.2017 அன்று உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதனால், பொன்முடி உள்ளிட்ட 10 பேர் மீதான வழக்கு விசாரணை, சென்னை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவந்தது.
இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தபோது, பொன்முடியின் மாமியார் சரஸ்வதி, சார்-பதிவாளர் புருபாபு, கிட்டு என்ற சைதை கிட்டு ஆகியோர் மரணமடைந்தனர். இதனால், பொன்முடி உள்ளிட்ட மற்ற 7 பேர் மீது வழக்கு விசாரணை நடந்து வந்தது. விசாரணையில் அரசு தரப்பில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜரத்தினம் உள்பட 90க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 180க்கும் மேற்பட்ட சான்று ஆவணங்கள் லஞ்ச ஒழிப்புத்துறையால் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், 2021ல் மீண்டும் திமுக., ஆட்சி அமைந்தது. இதன் பின்னர், இந்த வழக்கில் அனைத்து தரப்பு விசாரணையும் முடிவடைந்த நிலையில் வியாழக்கிழமை இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி ஜெயவேல் கூறியிருந்தார். அதன்படி இந்த வழக்கில் இன்று காலை தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில், “நிலத்தை அபகரித்ததாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போதிய ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் இல்லை. எனவே அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. எனவே பொன்முடி உள்பட 7 பேரையும் விடுதலை செய்வதாகக் குறிப்பிடப்பட்டது.