Home Blog Page 353

‘பாயசம்’ – ஒரு தேசிய இனிப்பு!

paayasam - 2026
  • தேவ்ராஜ்

இதிஹாஸப் புகழ் பெற்ற சிறந்த இனிப்பு; சக்கரவர்த்தியார் செய்த பெருவேள்வியின் பயனாகக் கிடைத்த பாயசம் பருகிய தேவியர் மூவரும் இதிஹாஸ நாயகர்களைப் பெற்றது உலகறிந்த நிகழ்ச்சி. உலகில் மாந்தர்தாம் தெய்வங்களுக்குப் படையல் தயாரிப்பர். தயரதன் தேவியர்க்கோ வானவர் பாயசம் தயாரித்து அனுப்பினர், வெள்ளி மூடியுடன்கூடிய தங்கப் பாத்திரத்தில் –

ததோ த₃ஶரத₂: ப்ராப்ய பாயஸம் *தே₃வநிர்மிதம்*,

ப₃பூ₄வ பரமப்ரீத:……

யாகங்களின் ‘சரு’ பிற்காலத்தில் பாயஸமாகப் பரிணாமம் பெற்றிருக்கலாம்.

இது இல்லாமல் பண்டிகை, விசேடங்கள் இல்லை;

நேபாளம் தொடங்கி பாரதம் நெடுகிலும் பல்வேறு பாயச வகைகள். வடபுலத்தில் இதற்கு ‘கீர்’ (க்ஷீர) என்று பெயர். கிழக்கு பாரதத்தின் சில பகுதிகளில் ‘காஜுர் கீர்’, பேரீச்சைப் பாயசம். தானியம் என வந்தால் கோதுமையை முக்கியமாகச் சாப்பிடும் வடபுலத்தவர்கூட பாசுமதி அரிசியில்தான் ‘கீர்’ தயாரிப்பர். பாதாம் பருப்புச் சேர்த்துத் தயாரிப்பது ‘பாதாம் கீர்’

பழந்தமிழ் இலக்கியம் புறநானூறும் பாயசப் பெருமை பகர்கிறது –

”பாலிற் பெய்தவும், பாகிற் கொண்டவும்

அளவுபு கலந்து, மெல்லிது பருகி,

விருந்து உறுத்து, ஆற்ற இருந்தென மாக…. ”(புறம்)

என்று புலவர் நன்னாகனார் தாம் உண்ட விருந்திற் சுவைத்த பாயசச் சுவையை இலக்கியத்தில் அழியா இடம் பெறச் செய்துவிட்டார்.

வைணவர் ’திருக்கன்னல் அமுது’ (திருக்கண்ணமுது) எனும் தீந்தமிழ்ப் பெயரோடு பெருமாளைப் பாயசம் கண்டருளச் செய்வர். நாச்சியார் போற்றிய ப்ரஸாத வகை “அக்கார அடிசில்” பாலிலேயே அரிசியை வேக வைத்துத் தயாரிக்கும் சுவை மிக்க இனிப்பு!

கேரளச் சமையலில் பாயசம் ‘ப்ரதமன்’ எனும் பெயரோடு ப்ரதம ஸ்தானத்தில் நிற்கிறது; பழவகைகளாலும் பாயசம் தயாரிப்பர் கேரளத்தில், ‘பழ ப்ரதமன்’ என்று பெயர். அவர்கள் பலாப்பழத்தில் தயாரிக்கும் ‘சக்க ப்ரதமன்’ அலாதியான நறுமணமும், சுவையும் பொருந்தியது. பாலக்காட்டு பிராமணர்களின் புகழ்பெற்ற ’குறுக்குப் பால் பாயசம்’ தனி. வாசனைகள் சேர்க்க மாட்டார். பாலில் உள்ள இயற்கையான சுவையும், நறுமணமும் போதுமானவை. இதுதான் குஜராத்தின் ‘தூத்பாக்’ எனும் வாசனைகள் சேர்ந்த வடிவம். உடியாவில் கீர் ஸாகர்; வங்கத்தில் பாயேஷ். ரவா அப்பளம் சேர்த்த ‘அப்பி பாயஸ’ மாத்வ ஸ்பெஷல்.

‘பயஸ்’ (பால்) அடிப்படைகொண்டு உருவானது ‘பாயஸம்’. வடமொழி, பாயஸத்துக்கு ஆண்பால், பெண்பால், அலிப்பால் மூன்று வடிவங்களையும் அளித்துள்ளது. ‘பாயஸீ’ பெண்பால் வடிவம்., பாயஸம் ‘பயஸோ விகாரம்’ என்கிறது வாசஸ்பத்யம்.

காச்மீர வரலாற்றுக் கலாசாரக் குறிப்புகள் தருவது 7ம் நூற்0 முற்பட்ட ‘நீலமத புராணம்’. இதிலும் பாயஸம் பற்றிய செய்தி உள்ளது. சங்கதச் சமையற் குறிப்பு நூல் பாகராஜேச்வரமும் பாயஸம், செய்முறை, குணம், குறைகளைக் கூறுகிறது –

”அதப்ததண்டு₃லோ தௌ₄த: பரிப்₄ருʼஷ்டோ க்₄ருʼதேந ச।

க₂ண்ட₃யுக்தேந து₃க்₃தே₄ந பாசித: பாயஸோ ப₄வேத்। பாயஸ: கப₂க்ருʼத்₃ப₃ல்யோ விஷ்டம்பீ₄ மது₄ரீ கு₃ரு|”

(அரிசி, நெய், பால், சருக்கரை சேர்த்துத் தயாரிக்கப்படுவது; இனிமை- வலிமை தருவது, கபத்தையும் அதிகரிக்கச் செய்வது)

ஸ்ரீ குருவாயூர் அப்பனுக்கு நாள்தோறும் பாயஸ நைவேத்யம்; சேலத்திலிருந்துதான் சர்க்கரை போகிறது. முதலில் நாத்திகராகக் கம்யூனிச மேடைகளில் முழங்கிக் கொண்டிருந்த ‘மாதவன்’ என்ற இளைஞர் உறவினர் கட்டாயத்தால் கண்ணபிரானின் பாயசத்தை அருந்தியதால் தீராத வயிற்று வலி நீங்கப் பெற்றார்; இவரே பின்னர் பாகவத முழக்கம் செய்ய ஆரம்பித்து ‘ஆஞ்சம் மாதவன் நம்பூதிரி’ எனப் புகழ் பெற்றார். அடியேன் மும்பையில் வாழ்ந்த காலத்தில் இவரை தர்சித்துள்ளேன். குருவாயூரிலும் இவர் அடியேனுக்கு அவல் ப்ரஸாதம் வழங்கியுள்ளார்.

உடியாவின் ரேமுனாவில் கோவில்கொண்டிருக்கும் க்ஷீரசோர கோபீநாதன் பரமபக்தரான மாதவேந்த்ர புரீ ஸ்வாமிகள் ருசி பார்க்க வேண்டும் என்பதற்காகப் பாயஸ பாத்திரத்தை ஒளித்து வைத்து வழங்கியது மனத்தை நெகிழ்விக்கும் அரிய ஸம்பவம். கௌடிய வைணவர் இவ்வரலாற்றை வெகுவாகப் போற்றுவர்.

சிறார்களுக்குப் பாயசம் கொடுத்து ‘அந்நப்ராசநம்’ தொடங்குவர். ‘பாயஸாந்ந ப்ரியா’ அம்பிகைக்கான ஆயிர நாமங்களுள் ஒன்று. ஆய்க்குடி முருகன் ஆலயத்தில் ‘படிப் பாயசம்’ நிகழ்த்தி முருகனை வழிபடுவர்.

பித்ருக்களும், தேவர்களும், மனிதரும் பாயஸத்தால் பிரீதியடைகின்றனர்; அருமை பெருமைகள் நிறைந்த பாயசத்தை ‘பரமாந்நம்’ என்கிறது அமரம்.

பன்முகத்தன்மை கொண்ட பாரதம் முழுவதையும் இணைப்பதோடு, நெடியதொரு வரலாற்றுப் பின்னணியும் கொண்ட ‘பாயசம்’ ஒரு தேசிய இனிப்பு என்பதில் ஐயமில்லை!

ஆளுநர் தமிழிசைக்கு மறைமுகமாக அண்ணாமலை அளித்த ‘அட்வைஸ்’தானா அது?!

Annamalai
K.Annamalai

ஆளுநர் ஆகிவிட்ட நிலையிலும், இன்னமும் அரசியல் ஆசை விடாதவர் போல் அடிக்கடி செய்தியாளர்களைச் சந்திப்பது, ஊடகங்களில் தலைகாட்டுவது என்று இருக்கும் முன்னாள் பாஜக., தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் குறித்த கேள்விக்கு அவர் பெயரைச் சொல்லாமல், ஓர் அறிவுரை பதிலை அளித்தார் அண்ணாமலை.

தமிழக பாஜக., தலைவர் கே.அண்ணாமலை விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்திப்பது குறித்த கேள்விக்கு அழகாக ஒரு அறிவுரை சொல்லும் விதத்தில் பளிச்சென்று பதிலளித்தார். இது இப்போது சமூகத் தளங்களில் பலராலும் பகிரப்பட்டு பாராட்டப்பட்டு வருகிறது.

தமிழக ஆளுநர் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தி தினமும் பதிலடி கொடுக்க ஆரம்பித்தால் திமுக.,வால் தாங்க முடியாது. தமிழக ஆளுநர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தால் என்னைவிட மகிழ்ச்சியான ஆள் தமிழ்நாட்டில் இருக்க முடியாது. திமுக.,வின் வண்டவாளம், தண்டவாளம் எல்லாம் வெளியே வரும். ஆனால் சந்திக்கக் கூடாது என்பது எங்களுடைய நிலைப்பாடு. காரணம் என்னவென்றால் ஆளுநர் அரசியல் பேசக்கூடாது. இதில் நான் தெளிவாக இருக்கிறேன். ஆளும் கட்சியாக இருந்தாலும், ஆளும் கட்சியின் மாநிலத் தலைவராகவே இருந்திருந்தாலும் ஆளுநர் அரசியல் பேசக்கூடாது. கடமையைச் செய்ய வேண்டும்.

ஆளுநர் நேர்மையான முறையில் விமர்சிக்க வேண்டியது சட்டசபையில்தான். சட்டசபையில் விமர்சித்துக் கொள்ளலாம். ஆளுநர் என்பவர் ஆறு மாதத்திற்கு ஒருமுறை பத்திரிக்கைக்கு பேட்டி கொடுக்கலாம். தமிழகத்தின் ஒவ்வொரு பிரச்னைக்கும் பதில் சொல்ல ஆளுநர் ஒன்றும் அரசியல்வாதி இல்லை. ஆளுநர் அடிக்கடி செய்தியாளரைச் சந்திப்பது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும். ஆளுநர் தினம் தினம் என்னைப் போல சந்தித்து பேட்டி கொடுத்தால், அந்த பதவிக்கு மாண்பில்லாமல் போய்விடும்… என்று, கோடிட்டுக் காட்டினார்.

மேலும் அந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியவை: பொது சிவில் சட்டம் என்பது அனைவரையும் இணைப்பதற்காக வரக்கூடிய சட்டம். யாரையும் பிரிப்பதற்காக வரக்கூடிய சட்டம் அல்ல. ஒற்றுமைக்காகத்தான் பொது சிவில் சட்டம். அம்பேத்கர் நாடாளுமன்றத்தில் அரசியல் அமைப்பு சட்டத்தை குறித்து பேசும் போது ஒரு நாட்டில் இரண்டு அல்லது மூன்று வேறு வேறு சட்டங்களை வைத்து கொண்டு ஒற்றுமையான நாட்டை உருவாக்க முடியாது என விளக்கம் அளித்திருந்தார்.

தண்ணீர் தர முடியாது என்று கூற கர்நாடக அரசுக்கு அதிகாரம் இல்லை. அரசியல் லாபத்திற்காக தமிழக மக்களை அடமானம் வைப்பதை பாஜக., ஒரு போதும் அனுமதிக்காது. மேகதாது அணை கட்டக் கூடாது என்பதில் தமிழக பாஜக., உறுதியாக உள்ளது. மாநில அரசுகளின் அனுமதி இல்லாமல் மேகதாது அணையைக் கட்ட முடியாது. காவிரி நீர் விவகாரத்தில் மத்திய அமைச்சரிடம் தமிழக அரசு வலியுறுத்தினால் தமிழக பாஜ., துணை நிற்கும் என்றார்.

கருணாநிதி போட்ட ‘பிச்சை’! பேச்சு சர்ச்சை ஆனதும் அமைச்சர் வேலு வருத்தம்!

avvelu minister speech - 2026

உயர் நீதிமன்ற கிளையை மதுரையில் அமைத்து கொடுத்தது கருணாநிதி போட்ட பிச்சை என அமைச்சர் எ.வ.வேலு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அவர் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார்.

மதுரையில் நகர் திமுக., சார்பில் கருணாநிதி நுாற்றாண்டு விழா பொதுக் கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நகர் செயலாளர் தளபதி தலைமை வகித்தார். அமைச்சர் தியாகராஜன், மேயர் இந்திராணி பொன்வசந்த் உள்ளிட்டோர் பங்கேற்றார்கள்.

இதில் அமைச்சர் வேலு பேசியபோது, கருணாநிதி 80 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில், 60 ஆண்டுகால சட்டசபை உறுப்பினர். வாழ்க்கையில் எந்த தேர்தலிலும் தோல்வியடையாத ஒரு தலைவர். ஒவ்வொரு மாவட்டத்திலும் கோயில் உள்ளதோ இல்லையோ குடிநீர் தொட்டிகளை ஏற்படுத்தினார். சென்னையை அடுத்து மதுரை மாநகராட்சி உருவாக கருணாநிதியே காரணம்.

கருணாநிதியே தனது எண்ணங்களை எடுத்துச் சொல்லி, போராடி, நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பேச வைத்து, தென் மாவட்ட மக்கள் உயர் நீதிமன்றம் செல்ல சென்னைக்கு வருவதை தவிர்க்க உயர் நீதிமன்ற கிளையை மதுரையில் அமைத்துக் கொடுத்தார். இது அவர் போட்ட பிச்சை. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைக்கவும் அவரே காரணம். அவர்போல் ஸ்டாலின் செயல்படுகிறார்… என்று பேசினார்.

அவரது பேச்சு அரசியல் மட்டத்தில் பெரும் சர்ச்சை ஆனது. ஏற்கெனவே, பட்டியலினத்தவர்களுக்கு நீதிபதி பதவி என்பது திராவிட இயக்கம் போட்ட பிச்சை என்று சொல்லி சர்ச்சையை ஏற்படுத்தினார் திமுக.,வின் ஆர்.எஸ்.பாரதி. இப்போது, நீதிமன்றமே கருணாநிதி போட்ட பிச்சை தான் என்று சொல்லி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார் திமுக., அரசின் அமைச்சர். அவரது பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.

இது குறித்து தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், எ.வ.வேலுவை கண்டித்தார். “பட்டியல் சமூக மக்களுக்கு நீதிபதி பதவி கிடைத்தது திராவிட இயக்கம் போட்ட பிச்சை” என்றார் திமுகவின் அமைப்புச்செயலாளர் திரு ஆர்எஸ் பாரதி அவர்கள். “சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை அமைந்தது, கலைஞர் கருணாநிதி போட்ட பிச்சை” என்கிறார் அமைச்சர் திரு எவ வேலு அவர்கள்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகளை, பிச்சை போடுகிறோம் என்று கூறி, வாக்களித்த பொதுமக்களைக் கொச்சைப்படுத்துவது, திமுகவினருக்கு வாடிக்கையாகிவிட்டது. தொடர்ந்து பொதுமக்களை அவமானப்படுத்தி வரும் திமுகவினரின் இது போன்ற அகங்காரமான பேச்சுக்களை, தமிழக பாஜக சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்… என்று குறிப்பிட்டிருந்தார்.

உயர்நீதிமன்ற மதுரை கிளை தென்னக மக்களுக்கு கலைஞர் போட்ட பிச்சை என்று சொல்லியிருக்கிறார் எ.வ. வேலு. நீங்கள் நடந்தும் தொழில், வகிக்கும் அமைச்சர் பதவி, வாழும் வாழ்க்கை அனைத்தும் தமிழக மக்கள் போட்ட பிச்சை. மக்களிடம் ஊழல் செய்து அடித்து பிடுங்கி. பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகள் மக்களை பிச்சைக்காரர்கள் என்று சொல்வது அதிகாரத் திமிர், நாக்கொழுப்பு. எ.வ. வேலு மக்களிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று, பாஜக., துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கருத்து வெளியிட்டார்.

இப்படி அமைச்சரின் பேச்சு சர்ச்சையான நிலையில், எ.வ.வேலு செய்தியாளர்களிடம் கூறிய போது, நீதிமன்றங்கள் மீதும், நீதித்துறை மீதும் மதிப்பு வைத்துள்ளேன். உணர்ச்சிப்பூர்வமாக பேசிக்கொண்டிருக்கும்போது அவ்வாறு பேசிவிட்டேன். உயர் நீதிமன்ற மதுரை கிளை மாவட்டத்திற்கு கிடைத்த கொடை என்பதற்கு பதிலாக வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது. எனவே, நான் கூறிய வார்த்தையை திரும்பப் பெறுகிறேன்; அதற்காக வருந்துகிறேன் என்று கூறினார்.

கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே

– அதிவீரராம பாண்டியர் (வெற்றி வேற்கை)

சென்னை, திருச்சி சார் பதிவாளர் அலுவலகங்களில் ஐடி சோதனை: ரூ.3,000 கோடிக்கு கணக்கு இல்லை!

income tax raid - 2026

தமிழகத்தில் சார் பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடு நடப்பதாகவும், விதிகளுக்குப் புறம்பாக பத்திரப்பதிவு செய்யப் படுவதாகவும் புகார்கள் தொடர்ச்சியாகக் கூறப்பட்டு வந்தன. இதை அடுத்து வருமான வரித் துறை அதிகாரிகள், சார் பதிவாளர் அலுவலக வருவாய் தொடர்பான கணக்குகளை கண்காணிக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று, தமிழகத்தில் 36 மாவட்டப் பதிவாளர்கள் கூண்டோடு மாற்றப்பட்டனர். பதிவுத் துறையில் நிர்வாகக் காரணங்களின் அடிப்படையில் பதிவாளர்கள் நிலையில் பணியிட மாறுதல்கள் செய்வதாக, தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இது நிர்வாக காரணங்களுக்காக என்று சொல்லப்பட்ட போதிலும் பத்திரப் பதிவுத்துறையில் நிகழ்ந்து வரும் ஊழல் முறைகேடுகளை மத்திய வருமான வரித்துறை மோப்பம் பிடிக்கிறது என்ற காரணத்தினால் தான் என்பது இன்றைய வருமான வரித்துறை சோதனைகளில் இருந்து தெரிய வந்திருக்கிறது.

இன்று வருமான வரி குறையினர் சென்னை அருகே உள்ள செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகம், திருச்சி உறையூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில், சுமார் 3,000 கோடி ரூபாய்க்கு மேல் கணக்கு காட்டாதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சென்னை செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.2000 கோடிக்கு மேல் கணக்கு காட்டவில்லை எனவும் உறையூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கணக்கு காட்டவில்லை என்றும் வருமானவரி நுண்ணறிவு பிரிவு தகவல் தெரிவித்துள்ளது. முறைகேடு தொடர்பாக பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

வட சென்னை பகுதியிலேயே செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் அதிக அளவில் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. செங்குன்றம் பகுதியில் காலி இடங்கள் எல்லாம் வீட்டுமனைகளாக மாறி அப்பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் கொடி கட்டிப் பறக்கிறது. பத்திரப் பதிவு நடைபெறும் நேரங்களில் விதிகளுக்கு முரணாக பத்திரப்பதிவு செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்தே வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி உள்ளனர்.

பத்திரப்பதிவு அலுவலகங்களில் கண்காணிப்பு கேமராக்கள் எதுவும் வேலை செய்வதில்லை. கேமராக்கள் இருந்தாலும் அவற்றின் லென்ஸ்களில் மண்ணை தூவி படு ஜோராக லஞ்சம் முறைகேடுகளை நிகழ்த்தி வருகின்றனர் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர். மாலை அலுவலக நேரம் முடிந்தும் இரவு நேரத்திலும் பத்திரப்பதிவு படுவேகமாக நடந்து வருகின்றன என்றும், அவற்றுக்கு தனி கட்டணமும் லஞ்சமும் வசூலிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் வெறும் இரண்டு பத்திரப்பதிவு அலுவலகங்களிலேயே 3000 கோடிக்கு கணக்கு காட்டப்படவில்லை என்றால் தமிழகம் முழுவதும் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் எவ்வளவு முறைகேடுகளும் லஞ்ச பணமும் பெருகி இருக்கும் என்று மக்கள் வாய் பிளக்கின்றனர்!

‘ஷோ’வுக்கு சிசிடிவி கேமராக்கள்… ஷோக்கா தப்பித்துவிடும் திருடர்கள்!

dindukkal street cameras - 2026

திண்டுக்கல்லில் செயல்படாத கண்காணிப்பு கேமராக்களால் திருடர்கள் சிக்குவதில்லை.

திண்டுக்கல் நகரில் சில கண்காணிப்பு கேமராக்கள் தலைகீழாக தொங்கி கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. தி்ண்டுக்கல் ரெயில் நிலையம் அருகே, நாகல்நகர் மேம்பாலம், பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் கேமராக்கள் கழன்று தொங்கி கொண்டிருக்கின்றன.
திண்டுக்கல் பஸ் நிலையத்தில் 40-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன.

ஒவ்வொரு கேமராவும் இருந்த இடத்தில் வரிசை எண் குறிப்பிடப் பட்டு இருக்கிறது. ஆனால், ஒருசில இடங்களில் வரிசை எண் மட்டுமே இருக்கிறது. கேமராக்களை காணவில்லை. இதுதவிர சில இடங்களில் கேமராக்கள் இருந்தும் செயல்படவில்லை.

இதனால், திருடர்கள் மிகவும் உற்சாகமாக பஸ் நிலையம் உள்பட பல இடங்களில் வலம் வருகின்றனர். திண்டுக்கல் பஸ் நிலைய பகுதியில் செல்போன் பறிப்பு, நகை பறிப்பு சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன. ஆனால், கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாததால், வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை பிடிக்க முடியாமல் போலீசார் தவிக்கின்றனர்.

ஆகவே, திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், காமிராக்கள் இல்லாத இடத்தில் காமிராக்களை பொருத்த உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது

ஸ்ரீ சிங்கம்பிடாரி சேவுக பெருமாள் கோவில் வீடு கும்பாபிஷேக விழா!

singampidari sevuka perumal kumbabishekam - 2026

அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே குட்டிமேய்க்கிபட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சிங்கம்பிடாரி சேவுகபெருமாள் கோவில் வீடு மகா குடமுழுக்கு பெருவிழா நடைபெற்றது.

மங்கல இசை முழங்க இரண்டு நாட்கள் நடந்த இந்த யாகசாலை பூஜையில் இரண்டு கால யாக பூஜையுடன் மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, மகா பூர்ணாவூதி தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி கோவிலை சுற்றி வலம் வந்து பின் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை, குட்டிமேய்க்கிபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பாண்டியம்மாள் செல்வம் மற்றும் சேவுகபெருமாள் கோவில் பங்காளிகள் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை அலங்காநல்லூர் காவல் நிலையத்தினரும், சுகாதார பணிகளை, ஊராட்சி நிர்வாகமும் செய்திருந்தது.

sholavanthan amman kumbabishekam - 2026

சோழவந்தான் பச்சைவள்ளி காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்!

சோழவந்தான்: மதுரை அருகே, சோழவந்தான் வெள்ளை பிள்ளையார், பச்சைவள்ளி காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது .

பேட்டை கிராமத்தில், உள்ள வெள்ள பிள்ளையார் கோவில், பச்சைவள்ளி காளியம்மன் கோவில் ஆகிய கோவில்களின் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு, மேலூர் தெற்குதெரு மலை காசிராஜன் தலைமையில் மூன்று நாட்கள் யாக வேள்வி நடந்தது. தொடர்ந்து, நான்காம் காலை யாக கேள்விகள் நடைபெற்று, கோபூஜை,நாடி சாந்தினம்,வேத பாராயணம், பூர்ணாஹீதி நடந்தது.

இதைத்தொடர்ந்து சிவாச்சாரியார் மற்றும் கோயில் நிர்வாகிகள் மேளதாளத்துடன் புனித நீர் குடங்களை எடுத்து கோவிலை வலம் வந்தனர். கருட ஜெபம் நடைபெற்று மகாகும்பாபிஷேகம் நடந்தது.
சிறப்புஅர்ச்சனை, பூஜைகள் நடைபெற்றது. பச்சைவள்ளி காளியம்மன் கோவில் பூசாரி கிருஷ்ணசாமி பிரசாதம் வழங்கினார்.

பேட்டை கிராம பொதுமக்கள் மற்றும் திருப்பணி குழுவினர் விழா ஏற்பாடுகளை செய்து இருந்தனர். சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்தனர்

திருத்தங்கல் பெருமாள் கோவில் தேரோட்டம் கோலாகலம்..

IMG 20230705 WA0157 - 2026

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல், ஸ்ரீநின்றநாரராயணப் பெருமாள் கோவில் ஆனி பிரமோற்சவம் திருவிழா தேரோட்டம் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.

பல்லாயிரமாண்டு பழமையானதும், 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும், வைணவ – சைவ சமயங்களின் ஒற்றுமையை பறைசாற்றுவதும், குடவறை கோவிலாகவும், பாண்டிய மன்னர்களினால் திருப்பணி செய்யப்பட்ட கோவிலாகவும், ஆழ்வார்கள் மங்களாசாசனம் அருளப்பட்டதாகவும் பல்வேறு சிறப்புகளை கொண்டதும், ஸ்ரீநின்றநாராயணப் பெருமாள் – ஸ்ரீசெங்கமலத்தாயார் எழுந்தருளி நல்லாசி புரியும் ஸ்தலமாகவும் இருப்பது திருத்தங்கல், ஸ்ரீநின்றநாராயணப் பெருமாள் கோவில்.
திருத்தங்கல் ஸ்ரீநின்றநாராயணப் பெருமாள் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் ஆனி பிரமோற்சவம் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான ஆனி பிரமோற்சவம் திருவிழா கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவை முன்னிட்டு தினமும் இரவு ஸ்ரீநின்றநாராயணப் பெருமாள், ஸ்ரீசெங்கமலத்தாயார் சிறப்பு அலங்காரத்தில் வாகனங்களில் எழுந்தருளி ரதவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்.

IMG 20230705 WA0154 - 2026

ஆனி பிரமோற்சவம் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆனி திருத்தேரோட்டம் இன்று காலை சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீநின்றநாராயணப் பெருமாளுக்கும், ஸ்ரீசெங்கமலத்தாயாருக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து சுவாமியும், அம்பாளும் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினர். இதனை தொடர்ந்து ஆனி தேரோட்டத்தை சிவகாசி சட்டமன்ற அசோகன் வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்து கோலாகலமாக நடைபெற்றது. சிவகாசி, திருத்தங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து கோவிந்தா, கோபாலா என்று பக்தி பரவசத்துடன் கோஷமிட்டு தேரிழுத்தனர். தேரின் முன்பு, ஏராளமான பெண் பக்தர்கள் பக்தி பாடல்கள் பாடியபடியும், கோலாட்டம் ஆடியும் உற்சாகமாக வலம் வந்தனர்.

IMG 20230705 WA0158 - 2026


ஸ்ரீநின்றநாராயணப் பெருமாள், ஸ்ரீசெங்கமலத்தாயார் எழுந்தருளிய தேர் நான்கு ரதவீதிகளில் வலம் வந்து நிலைக்கு வந்து சேர்ந்தது. தேர் நிலைக்கு வந்து சேர்ந்தவுடன் சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஆனி தேரோட்டம் திருவிழா ஏற்பாடுகளை கோவி்ல் நிர்வாகிகளும், நிகழ்ச்சி உபயதாரர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.

திருத்தங்கல், ஸ்ரீநின்றநாராயணப் பெருமாள் கோவில் ஆனி பிரமோற்சவம் தேரோட்டத்தை முன்னிட்டு சிவகாசி – விருதுநகர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. சிவகாசியில் இருந்து விருதுநகர், மதுரை செல்லும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் அனைத்தும் சிவகாசி, எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரியிலிருந்து, செங்கமலநாச்சியார்புரம் வழியாக, வடமலாபுரம் ஆற்றுப்பாலம் வழியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு சென்று வந்தன. தேரோட்டத்தை முன்னிட்டு திருத்தங்கல் பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

நீண்ட நாளுக்குப் பின் வந்தும் பொதுமேடையில் பேச அனுமதிக்கலே! பிடிஆர்.,க்கு திமுக., ‘நோஸ்கட்’!

ptr palanivel thyagararan - 2026

தமிழக பாஜக தலைவர் கே அண்ணாமலை அண்மையில் வெளியிட்ட திமுக பைல்ஸ் நிகழ்வுக்குப் பிறகு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. அதை தொடர்ந்து தமிழக நிதி அமைச்சராக இருந்த பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் ரூபாய் 30 ஆயிரம் கோடிக்கு கணக்கு வழக்கு தெரியாமல் என்ன செய்வது என்று புரியாமல் முதல்வர் மு க ஸ்டாலினின் மகனும் மருமகனும் திண்டாடுகிறார்கள் என்று பேசியதும் ஆடியோ பதிவு வெளிவந்து மேலும் பரபரப்பை கூட்டின.

இந்த நிகழ்வுக்கு பின்னர் மதுரையில் திமுகவின் இன்னுமொரு அணியாக இருந்து செயல்பட்டு வந்த பழனிவேல் தியாகராஜனின் செல்வாக்கு திமுகவில் சரியத் தொடங்கியது. அவரை கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அழைக்காமல் திமுகவினர் தவிர்த்து வந்தனர். இதனால் நிகழ்ச்சிகளிலும் தலை காட்டாமல் ஒதுங்கிய இருந்தார் பழனிவேல் தியாகராஜன்.

மேலும் அவர் மிக முக்கியமான நிதி அமைச்சர் பதவியில் இருந்து முக்கியத்துவம் இல்லாத ஐடி துறைக்கு மாற்றப்பட்டார். இதனால் மதுரை திமுக., வில் அவரது செல்வாக்கு மேலும் சரிந்தது. இந்நிலையில் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து அமைதியாக இருந்து வந்தார் தியாகராஜன்.

இத்தகைய சூழலில், நேற்று இரவு, மதுரையில் நகர் திமுக., சார்பில் கருணாநிதி நுாற்றாண்டு விழா பொதுக் கூட்டம் நடந்தது. நகர் செயலாளர் தளபதி தலைமை வகித்தார். அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மேயர் இந்திராணி பொன்வசந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் தியாகராஜனுக்கு பேச வாய்ப்பு அளிக்கப்படவேயில்லை. இருப்பினும் முன்னதாக இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்த அமைச்சர் எ.வ.வேலு, கூட்டத்தில் தியாகராஜனையும் பேச அழைக்குமாறு கூறினார். எனினும் தியாகராஜனை கடைசி வரை பேச மதுரை திமுக.,வினர் அழைக்கவேயில்லை.

நாம் சொல்லியும் தியாகராஜனே மேடையில் பேசுவதற்கு ஏன் இவர்கள் அழைக்கவில்லை என்று மண்டையை பிய்த்துக் கொண்ட எ.வ.வேலு, மதுரை அரசியல் நிலவரத்தை ஒருவாறு புரிந்துகொண்டார். மேடையில் தாம் பேச வந்த போது, “தியாகராஜன் பேச வேண்டிய நேரத்தையும் நான் எடுத்துக் கொள்கிறேன்” என்று ஒருவாறு சமாளித்து, மதுரை உள்கட்சிப் பிரச்னையைப் பூசி மெழுகிச் சென்றார்.

இருந்தபோதும், அமைச்சர் தியாகராஜனுக்கு பேச வாய்ப்பு அளிக்கப்படாத விஷயம், மதுரையில் அவரது ஆதரவாளர்களை பெரும் அதிருப்தியில் தள்ளியுள்ளது. அது எந்த நேரமும் வெடிக்கக் கூடும் என்று மதுரை கட்சிக்காரர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு மைதானம்: அமைச்சர் ஏ.வ. வேலு ஆய்வு!

av velu in madurai inspection - 2026

மதுரை: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கீழக்கரை பகுதியில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானம் அமைக்கப்பதற்கான கட்டுமானப் பணிகள் குறித்து,
பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும்
சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு
நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கீழக்கரை பகுதியில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகளை இன்று (04.07.2023) பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்:-

தமிழ்நாடு முதலமைச்சர், தென்னகப்பகுதியிலே தமிழர்களின் அடையாளமாக விளங்குகின்ற ஜல்லிக்கட்டிப் போட்டிகளுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய ஒரு பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்படும் என்று கடந்த 21.01.2022-அன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்தார்கள். அதனடிப்படையில், அலங்காநல்லூர் அருகே கீழக்கரை ஊராட்சியில் 66 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு ரூபாய்.44.6 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன. 77,683 சதுரஅடி பரப்பளவில் இந்த அரங்கம் அமைக்கப்படுகிறது.

இந்த அரங்கில் பிரம்மாண்ட நுழைவுவாயில் தோரணம், 50 ஆயிரம் கொள்ளலவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி, காளைகள், மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்களுக்கான ஓய்வு கூடங்கள், செயற்கை நீருற்று, காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை மையங்கள் என பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது. பொதுப் பணித்துறையின் தரக்கட்டுப்பாட்டு அலுவலர்கள் கட்டுமானப் பணிகளின் தரம் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து தரமான முறையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கட்டுமானப் பணிகள் 35 சதவிகிதம் நிறைவுபெற்றுள்ளன. டிசம்பர் 2023-க்குள் இக்கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவேற்றிட திட்டமிடப்பட்டுள்ளது. பணிகள் முழுமையாக நிறைவு பெற்ற பின்பு தமிழ்நாடு முதலமைச்சர், இந்த பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படும்.

அலங்காநல்லூர் பகுதியிலிருந்து, இந்த ஜல்லிக்கட்டு அரங்கிற்கு வருவதற்கான சாலை மிகவும் குறுகலாக உள்ள காரணத்தால் புதிதாக சாலை அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ரூபாய் 22 கோடி மதிப்பீட்டில் திட்ட வரைவு தயார் செய்யப்பட்டு விரைவில் ஒப்பந்தப்புள்ளி கோரும் பணிகளை மேற்கொள்ளப் படவுள்ளன. இந்த சாலைக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளை துரிதமாக மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு அரங்கம் பணிகள் நிறைவேற்றப்படும் அதே நேரத்தில் சாலை அமைக்கும் பணிகளும் நிறைவேற்றப்படும் என, பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

முன்னதாக, பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு , முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வருகின்ற 15.07.2023-அன்று தமிழ்நாடு முதலமைச்சர் பங்கேற்க உள்ள ”முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நூலகம்” திறப்பு விழா நடைபெற உள்ள மதுரை காவல் ஆய்தப்படை மைதானத்தில் விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது, மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, மாவட்ட வருவாய் அலுவலர் ர.சக்திவேல் , பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் எஸ்.ரகுநாதன் , கண்காணிப்பு பொறியாளர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட பொதுப்பணித்துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்

நீண்ட இடைவெளிக்குப் பின் பொது நிகழ்ச்சியில் தலை காட்டிய பிடிஆர்., தியாகராஜன்!

ptr thyagarajan madurai prog1 - 2026

மதுரை: மதுரையில், நீண்ட நாளைக்கு பிறகு பொது நிகழ்ச்சியில் அமைச்சர் பழனிவேல் தியாகராசன் பங்கேற்றார்.

மதுரை மத்திய சட்டமன்ற தொகுதியில் தொகுதி மேம்பாட்டு நிதியில் 30.50லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலைகளை திறந்து வைத்தார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

மதுரை மத்திய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வார்டு 75, வசந்தநகர் 3வது மேற்கு 1வது குறுக்கு தெருவில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டிலும், வார்டு 54, காஜிமார் முதல் தெரு மற்றும் ஹீரா நகர் ஆகிய 2 பகுதிகளில் ரூ.23.50 லட்சம் மதிப்பீட்டிலும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலைகளை மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர்.பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில், மேயர் இந்திராணி பொன்வசந்த்,மண்டலத் தலைவர் பாண்டிச் செல்வி, உதவி ஆணையாளர், மாநகராட்சி மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன்,சுகாதார
அலுவலர், உதவி பொறியாளர்கள், கண்காணிப் பாளர்கள்,மாநகராட்சி அலுவலர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.