Home Blog Page 5589

செங்கோட்டை பேருந்து நிலையத்தில் சாலைகள் சேதம்: வாகன ஓட்டிகள் கடும் அவதி!

senkottai bus stand - 2026

திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழக. கேரள எல்லையில் உள்ளது செங்கோட்டை நகராட்சி
பேரூந்து நிலையம். இங்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து
செல்கின்றன.

குறிப்பாக சென்னை, மதுரை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் அண்டை மாநிலங்களான
கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு இங்கிருந்து பேருந்துகள்
வந்து செல்கின்றது.

மேலும் இந்த பேருந்து நிலையத்தில் உள்ள சாலைகள் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக
சீரமைக்கப்படாததால் சாலை முழுவதும் சேதமடைந்து குண்டும், குழியுமாகக்
காட்சியளிக்கிறது.

பயணிகளை பேருந்துகளில் ஏற்றி விடவும், அழைத்துச் செல்லவும் இருசக்கர
வாகனங்களில் பேருந்து நிலையத்துக்குள் வருவோர் இந்த குண்டும்-குழியுமான
சாலைகளால் விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது.

ஆகவே, பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள சாலைகள் முழுமையாகச் சீரமைக்க
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பொதுமக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.

“நேக்கு மாம்பழம் வேணும்”

17191009 10207817962959127 8598521855278255076 n - 2026

“நேக்கு மாம்பழம் வேணும்” (ஸீசன் இல்லாத காலத்தில் ஒரு குழந்தை பெரியவாளிடம்)

“ஏண்டா! மாம்பழம் எப்படி வந்தது?”-பெரியவா

“பெரியவா நினைச்சேள்! பழம் வந்தது!”-வேதபுரி

சொன்னவர்-.ராதா ராமமூர்த்தி,புதுக்கோட்டை
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

ஸ்ரீ மடத்தில் பெரியவா பலருடன் பேசிக்கொண்டு
மந்தஹாஸமாக தரிசனம் தந்து கொண்டு இருந்தார்.
அவருக்கு முன்பு பலவிதமான பழங்கள் தட்டு தட்டாக
வைத்திருந்தது.புரட்டாசி,ஐப்பசி மாதம் என்று நினைவு

அப்போது கூட்டத்தில் ஒரு பெண் குழந்தை சுற்றி
சுற்றி வந்தது.பெரியவா அந்த குழந்தையை அழைத்து
“இதில் உனக்கு என்ன பழம் வேணுமோ, அதை
எடுத்துக்கோ” என்றார்கள்.அங்கு அன்னாசி,ஆப்பிள்
திராக்ஷை,கொய்யா,ஆரஞ்சு முதலிய எல்லாவிதப்
பழங்களும் இருந்தன.

ஆனால்,அக்குழந்தை “நேக்கு மாம்பழம் வேணும்”
என்றது.அது மாம்பழ காலம் இல்லை. மாவடு கூட
ஆரம்பிக்கவில்லை.பெரியவா யோசிக்கலானார்!.

“வேதபுரி! உள்ளே மேட்டூர் ஸ்வாமிகிட்ட ஏதாவது
மாம்பழ வத்தல் மாதிரி இருக்கா, பாரு” என்று
சொல்லிவிட்டு கண்ணை மூடிக்கொண்டு
தியானத்தில் அமர்ந்துவிட்டார்.

அச்சமயம் கூட்டத்தை விலக்கிகொண்டு
ஆந்திராவிலிருந்து இருவர், பழத்தட்டுடன் வந்தார்கள்.
அதில் பெரியதாக இரண்டு மாம்பழங்கள். பெரியவா
கண்ணைத் திறந்தார். அக்குழந்தையை அழைத்து,
“எடுத்துக்கோ” என்றார். அது ஒரு பழத்தை
சந்தோஷத்துடன் எடுத்துக் கொண்டது.

“வேதபுரி திரும்பி வந்து,” அங்கு ஒன்றுமில்லை”
என்று சொல்லிவிட்டு குழந்தை கையில் பழத்தைப்
பார்த்து திகைத்தார்.

“ஏண்டா! மாம்பழம் எப்படி வந்தது?”
என்று பெரியவா.

“பெரியவா நினைச்சேள்! பழம் வந்தது!” என்று
கண்களில் நீர் வழிய வேதபுரி உணர்ச்சிவசப்பட்டு
கூறினார்.

எதிரில் நின்றிருந்த நாங்களும் பெரியவாளின்
சக்தியை கண்ணால் பார்த்து ஆனந்தமடைந்தோம்.

மாம்பழத்தைக் கொண்டுவந்த ஆந்திரக்காரர்கள்
அப்புறம், எங்கே தான் போனார்களோ?

நம் கண்ணில் படாத ஊருக்கோ?

பாஜக.,வில் இருப்பதால் என் பெண்ணை குறிவைத்து தாக்குகிறார்கள்!

Gayathri Raguram - 2026

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தவறாக பேசிய காயத்ரி ரகுராமின் பேச்சிற்கு, அவரின் தாய் கிரிஜா மன்னிப்பு கேட்டுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ள நடிகை காயத்ரி ரகுராம், நடிகை ஓவியாவை ‘சேரி பிஹேவியர்’ என கமெண்ட் அடித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதன் மூலம் அவரது ஜாதிய வன்மம் வெளிப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்கள் கருத்துக்கள் எழுந்துள்ளது. மேலும், அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். விடுதலை சிறுத்தை திருமாவளவனும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கே தடை விதிக்க வேண்டும் என தமிழ் இளைஞர்கள் மற்றும் மாணவர் கூட்டமைப்பினர் போலீசாரிடம் மனு அளித்துள்ளனர்.

இந்நிலையில் இதுபற்றி ஒரு தொலைக்காட்சியில் பேசிய காயத்ரி ரகுராமின் தாய் கிரிஜா “என் மகள் மீது பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. பெண் என்றும் பாராமல் அவரை இழிவு படுத்துகிறார்கள். அவர் பாஜக-வில் இருப்பதால்தான் இப்படி பேசுகிறார்களா என தெரியவில்லை. இது எனக்கு மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. என் மகள் காயத்ரி அப்படி பேசியதற்கு நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என அவர் தெரிவித்தார்.

சிறையில் இருந்து ரகசியமாய் வெளியில் சென்று வந்தார் சசிகலா?

sasikala - 2026

பெங்களூர் சிறையில் இருந்து சசிகலா, ரகசியமாக காரில் வெளியில் சென்று வந்தாரா? என்பது குறித்து சிறைத்துறை அதிகாரி ஒருவர் எழுதிய கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் செய்து கொடுத்ததற்கு ரூ. 2 கோடி வரை லஞ்சம் பெற்றதாக கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி.சத்திய நாராயணா மீது எழுந்த குற்றச்சாட்டு குறித்த தகவல் டி.ஐ.ஜி. ரூபாவுக்கு எப்படி கிடைத்தது என்ற பரபரப்பு தகவல் கிடைத்து உள்ளது.

சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக ரூபா பொறுப்பேற்ற பிறகு அவருக்கு ஒரு மொட்டை கடிதம் வந்தது. அந்த கடிதத்தை ஜெயிலர் ஒருவர் எழுதி இருந்தார். அந்த ஜெயிலர் தனது பெயரை கடிதத்தில் குறிப்பிடவில்லை என்றாலும் கூட பெங்களூரு பரப்பனஅக்ர ஹார சிறையில் நடக்கும் விதிமுறை மீறல்கள் குறித்து அவர் விளக்கி இருந்தார்.

*அந்த மொட்டை கடிதத்தில் கூறப்பட்டு இருந்ததாவது:-*

சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேருக்கும் சிறையில் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக சிறைத்துறை டி.ஜி.பி., ஐ.ஜி., சிறைச்சாலையில் இருக்கும் ஜெயிலர், சிறைக் கண்காணிப்பாளர், சிறை மருத்துவர், சிறை காவலாளிகள், பாரா போலீசார் ஆகியோருக்கு கடந்த 5 மாதங்களாக கை நிறைய பணம் கொடுக்கப்பட்டது.

சிறையில் சசிகலாவுக்கு மாடுலர் கிச்சன் என்ற நவீன சமையல் அறை வசதி செய்து கொடுக்க சிறைத்துறை டி.ஜி.பி.க்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டு உள்ளது. சிறையில் கொடுக்கும் வெள்ளை நிற துண்டு சீட்டினை வெளியில் உள்ள சசிகலாவின் உறவினரிடம் கொடுத்தால் அவர் வேலைக்கு தகுந்தாற்போல் பணம் கொடுப்பார்.

மேலும் சிறையில் உள்ள வி.வி.ஐ.பி. சிறைத்துறை உயர் அதிகாரி காரில் சிறையில் இருந்து முக்கால் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பிரிட்டானியா அடுக்குமாடி குடியிருப்புக்கு 3 முறை சென்று வந்துள்ளார். மேலும் சிறைக்குள் அனைத்து கைதிகளுக்கும் எல்லா வசதிகளும் கிடைக்கிறது. சிறை என்பது கைதிகளை திருத்தும் இடமாக இல்லாமல் உல்லாச விடுதிபோல் செயல்பட்டு வருகிறது. கைதிகளுக்கு வெளியில் இருந்து உணவு, மருந்து பொருட்கள், பேக்கரி உணவு வகைகள், சிகரெட், பீடி, குட்கா, கஞ்சா ஆகிய போதை பொருட்கள் சுலபமாக கிடைக்கின்றன. இதற்காக பலருக்கு லஞ்சம் கொடுக்கப்படுகிறது. இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருந்தது.

ஜூனியர் ட்ரம்ப்பும் ஜூனியர் நேருவும்

rahul gandhi - 2026

அமெரிக்காவில் இன்று ட்ரம்ப் எதிர்ப்பு மீடியாக்களினால் பெரிதாகப் பேசப் படும் விஷயம் ட்ரம்ப்பின் பையன் ரஷ்ய நாட்டுத் தூதரையும் ரஷ்ய நாட்டு வக்கீல் ஒருவரையும் ரகசியமாக சந்தித்த ஒரு விஷயம் பற்றியதுதான். ஜூனியர் நேரு செய்திருக்கும் விஷயத்தை விட அது நிறையவே வில்லங்கமில்லாத ஒரு விஷயம் தான். அதைப் பார்த்து விட்டு நேருவின் வாரிசுக்கு வரலாம்.

ட்ரம்ப் பையன் என்ன செய்தான்? அமெரிக்க தேர்தலின் பொழுது ரஷ்ய வக்கீல் ஒருவரையும் ரஷ்ய தூதரையும் தன் மச்சானையும் கூட்டிக் கொண்டு போய் தனியாக சந்தித்திருக்கிறான். ட்ரம்ப்பின் மருமகன் இப்பொழுது வெள்ளை மாளிகையின் அரசாங்க அதிகாரியும் கூட. அந்த வக்கீல் ஹிலரி பற்றி ஏதோ பலான மேட்டர் இருப்பதாகவும் அதைத் தருவதாகவும் சொன்னதினால் ட்ரம்ப் புள்ளையாண்டான் அங்கு போய் அவர்களை சந்தித்ததாக இப்பொழுது ஒத்துக் கொண்டுள்ளான். கூடவே அவன் மச்சானும் ஆமாம் நானும் பார்த்தேன் ஆனால் பதவியேற்பு அஃபிடவிட்டில் சொல்ல மறந்து போனேன் ஹி ஹி இப்ப சொல்றேன் என்கிறான்

அமெரிக்காவில் தேர்தல் நடக்கும் பொழுது அதற்கு எதிரான ஒரு தேசத்தின் ஆட்களை சந்தித்ததும் அவர்கள் மூலமாக பிரசாரம் செய்ய முனைந்ததும் தவறு என்று இன்று அமெரிக்காவில் டெமாக்ரட்டுகளும் ட்ரம்ப் எதிர்ப்பு மீடியாக்களூம் சில ரிபப்ளிக்கன் செனட்டர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். அதாவது ஒரு எதிரி தேசத்தின் தூதரை எந்தக் காரணம் கொண்டும் ஜனாதிபதி வேட்ப்பாளரின் மகனும் மருமகனும் சந்தித்ததே தவறு என்கிறார்கள். இந்த விஷயம் எப்படியும் வெளியே வந்து விடப் போகும் தருணத்தில் முந்திக் கொண்டு ட்ரம்ப் ஜூனியர் இதை ஒத்துக் கொண்டிருக்கிறான். அதற்காக தன் மகனை உச்சி மோந்து பாராட்டியிருக்கிறார் ட்ரம்ப்.

நிற்க தேர்தல் நேரத்தில் எதிரி நாட்டு தூதரை ஜனாதிபதி வேட்ப்பாளரின் அதிகாரபூர்வ பிரதிநிதி சந்தித்ததே குற்றம் என்பது அமெரிக்க நிலைப்பாடு. ஆனால் இந்தியாவில் நடப்பது என்ன?

இந்தியா மீது சீனா போர் தொடுக்கும் சூழல் உள்ளது. இந்தியாவை காஷ்மீருக்குள் புகுந்து தாக்குவோம் என்றும் 1962 நினைவில் கொள்ளுங்கள் என்றும் சீனா எல்லையில் மிரட்டிக் கொண்டிருக்கிறது. அந்த மாதிரி மிகவும் அச்சுறுத்தல் உள்ள போர் மேகங்கள் சூழ்ந்த சூழலில் இந்தியாவின் ஒரு சாதாரண குடிமகன் கூட சீன நாட்டு தூதரகத்துக்குச் சென்று கொஞ்சிக் குலாவுவது ஒரு தேசத் துரோக குற்றமாகவே கருதப் பட்டிருக்க வேண்டும். இந்தியாவின் எதிர்க்கட்சியின் துணைத் தலைவராக இருப்பவர் இப்படி சீனா இந்தியாவை அழிப்பேன் என்று மிரட்டிக் கொண்டிருக்கும் ஒரு அபாயகரமான சூழலில் சீனத் தூதரகத்திற்கு சென்று அவர்களுடன் ரகசியமாக பேசி விட்டு வந்திருக்கிறார். பேசி விட்டு வந்தவர் சாதாரணமான ஆள் அல்ல இந்தியாவை அவர் அப்பா, பாட்டி, கொள்ளுத் தாத்தா, அம்மா என்று பரம்பரை பரம்பரையாக 65 வருடங்கள் பேண்ட பரம்பரை.

அவருக்கு இந்தியாவின் அத்தனை ரகசியங்களும் நிச்சயமாகத் தெரிந்திருக்கும். மன்மோகன் என்ற ஒரு டம்மியை வைத்துக் கொண்டு கடந்த பத்தாண்டுகள் இந்த இத்தாலி மாஃபியாதான் ஆண்டு வந்துள்ளது. இவர்களிடம் இன்னும் இத்தாலிய பாஸ்போர்ட்டும் குடியுரிமையும் உள்ளது. ஆக அப்படியாகப் பட்ட ஒருவர் இந்தியா போரை சந்திக்கும் ஒரு இக்கட்டான தருணத்தில் எதிரி நாட்டு தூதரை சந்தித்த விபரங்களை நாட்டு மக்கள் முன் வைத்திருக்க வேண்டும். அப்படி சென்றதே தவறு அப்படியே சென்றிருந்தாலும் என்ன பேசினார்கள் என்பது வெளிப்படையாக வைத்திருக்கப் பட வேண்டும்

ஆனால் நடந்தது என்ன? முதலில் ராக்கூழ் சீன தூதரத்துக்குச் செல்லவே இல்லை என்று காங்கிரஸ் கட்சி மறுத்து அப்படிச் சொல்பவர்களை இந்த்துவ பயங்கரவாதிகள் என்று திட்டியது. ஆனால் சீன தூதரகம் ராக்கூழ் வந்து போன ஃபோட்டோவைப் போட்டு விஷயம் வெளியே வந்தவுடன் அந்த அறிக்கையை நீக்கச் சொல்லி நீக்க வைத்திருக்கிறார்கள். விஷயம் வெளியே தெரிந்தவுடன் வேறு வழியில்லாமல் ஆமாம் சந்தித்தேன் இப்ப என்ன என்கிறார் தெனாவெட்டாக.

கேட்டால் அவருக்கு விஷயம் தெரிய வேண்டுமாம் அதனால் போனேன் என்கிறார். உனக்கு விஷயம் தெரிய வேண்டும் என்றால் நீ முதலில் வெளியுறவுத் துறைக்கு அல்லவா சென்றிருக்க வேண்டும்? சுஷ்மாவிடமோ அல்லது வெளியுறவு செயலரிடமோ அல்லவா கேட்டிருக்க வேண்டும். அவர்கள் சொன்ன பதில் திருப்தியாக இருந்திருக்காவிட்டால் நீ சீன தூதரகத்துக்கு வெளிப்படையாக அல்லவா போயிருந்திருக்க வேண்டும்? அதை விட்டு ஏன் இந்த ரகசிய விஜயம்? ஏன் இந்த மூடி மறைப்பு? எதை மறைக்கிறான் இந்த மூளை வளர்ச்சியில்லாத நேருவின் வாரிசு?

சீனா இந்தியாவை மிரட்டிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் ஒரு எதிரி நாட்டுத் தூதுவரை ரகசியங்கள் அறிந்த ஒரு காங்கிரஸ் கட்சித் தலைவர் ரகசியமாக யாருக்கும் தெரியாமல் சென்று சந்தித்தது தேசத் துரோகக் குற்றமாகக் கருதப் பட்டு விசாரணை செய்யப் பட வேண்டும்

நேருவின் ஜால்ராக்களும் கூஜாக்களும் சீன ஏஜெண்டுகளும் கம்னியுஸ்டு கைக்கூலிகளும் ராக்கூழ் சென்றதில் என்ன தப்பு என்று கூசாமல் கேட்க்கிறார்கள். சென்றது தப்புத்தான். இதையே இந்திய பாக்கிஸ்தான் யுத்தம் நடந்த பொழுது ஒரு வாஜ்பாய் பாக்கிஸ்தான் தூதரகத்திற்கு ரகசியமாக சென்று சந்தித்திருந்தால் இதே கைக்கூலிகள் என்ன சொல்லியிருப்பார்கள்? மாறாக வாஜ்பாய் அன்று இந்திராவுக்கு உறுதுணையாக அல்லவா இருந்தார்? இன்று அமெரிக்காவில் இந்த விஷயத்துக்காக ட்ரம்ப்பின் பையனை விசாரிக்கப் போகிறார்கள். தேர்தல் சமயத்தில் கூட எதிரி நாட்டு ஆட்களை ரகசியமாக சந்தித்தது ராஜ துரோகக் குற்றம் என்றும் விசாரணை முடிவில் சிறைக்குச் செல்ல நேரிடலாம் என்றும் ட்ரம்ப்பின் பதவியைப் பறிக்க வேண்டும் என்றும் சொல்கிறார்கள். ஒரு சாதாரண தேர்தல் நேரத்தில் பகை நாட்டின் ஆட்களை சந்தித்ததே குற்றம் என்று விசாரணை செய்கிறார்கள் அமெரிக்காவில். ஆனால் இந்தியாவிலோ சீனா போர் தொடுப்பேன் என்று சொன்ன பின்னாலும் கூட சீனாவின் படைகள் எல்லையில் குவிக்கப் பட்டிருக்கும் நிலையிலும் கூட எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் எதிர் கால பிரதமரும் ஆன ஒருவர் போய் அந்த தூதரக அதிகாரியை ரகசியமாகச் சந்தித்து விட்டு அந்த சந்திப்பே நடக்கவில்லை என்று பொய்யும் சொல்லுகிறார் இருந்தும் அவர் போனதில் என்ன தப்பு என்று கூசாமல் ஜால்ரா போடுகிறார்கள் நேருவீய கம்னியுசக் கைக்கூலிகள்.

சென்றது தவறாக இல்லாமல் இருந்தாலும் கூட எதற்காக ரகசியமாக அதைச் செய்தான் எதற்காக மறைத்தார்கள் என்பதை நேருவின் பக்தர்களாவது கேட்டுச் சொல்ல வேண்டும். மாறாக அப்படியே சென்றிருந்தாலும் ஏன் அப்படியே சீனாவுடன் கூட்டணி வைத்து இந்தியா மீது போர் தொடுத்திருந்தாலும் என்ன தப்பு? ஏற்கனவே கம்னியுஸ்டுகள் 1962 போரில் செய்யவில்லையா? இவனது தாத்தா நேரு நாட்டை விற்கவில்லையா ஆகவே பேரன் செய்வதில் என்ன தப்பு என்று கூசாமல் கேட்டாலும் கேட்ப்பார்கள். இவர்களைப் போன்ற தேச விரோத சக்திகளுக்காகத்தான் இவர்கள் இப்படி எல்லாம் எழுத சுதந்திரம் அளிப்பதற்காகத்தான் எல்லையில் வீரர்கள் உயிரை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் பாவம் இவர்களைத் துரத்தும்

கட்டுரை: ச. திருமலை

அரியலூர் அருகே சாலை விபத்தில் வட்டாட்சியர் உயிரிழப்பு

IMG 20170714 WA0010 - 2026

அரியலூர் மாவட்டம் தத்தனூர் அருகே புளியமரத்தில் கார் மோதி விபத்து.

காரை ஓட்டி வந்த ஆண்டிமடம்
சமூக பாதுகாப்பு திட்டம் வட்டாச்சியர் செந்தில் குமார் உயிரிழப்பு

குற்றாலத்தில் நீர் வரத்து குறைவு; பயணிகள் ஏமாற்றம்

IMG 20170714 WA0011 - 2026

குற்றால அருவிகளில் நீர் வரத்து குறைந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
அடைந்துள்ளனர்.
நாளை சனி ஞாயிறுகளில் கூட்டம் அத்கரிக்கும் என்றும் நீண்ட வரிசையில் நின்று
குளிக்க வேண்டியிருக்கும் என்றும் கூறுகின்றனர்

ஓவியர் வீர.சந்தானம் மறைந்தார், ராமதாஸ் இரங்கல்

IMG 20170713 WA0009 - 2026

ஓவியர் வீர.சந்தானம் மறைந்தார் .. தமிழ் உணர்வாளர் சிந்தனையாளர், தூரிகை
நெருப்பு ஓவியர் வீர .சந்தானம் மூச்சுதிணறல் காரணமாக தனியார் மருத்துவமனையில்
மறைந்தார்.

ஓவியர் வீர. சந்தனத்தின் மறைவுக்கு மருத்துவர் ராமதாஸ் இரங்கல்!

தமிழின உணர்வாளரும், புகழ்பெற்ற ஓவியருமான வீர.சந்தனம் உடல்நலக் குறைவால்
காலமானார் என்ற செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும்
அடைந்தேன்.

ஓவியர் சந்தனத்தின் தியாகங்களை எழுத்துக்களில் சாதாரணமாக வடித்துவிட முடியாது.
எளியக் குடும்பத்தில் பிறந்த வீர.சந்தனம் சுயம்புவாக வளர்ந்து ஓவியராக
உருவெடுத்தார். கலைஞன் என்பதன் உண்மையான அடையாளமாக திகழ்ந்தார். தனது வாழ்க்கை
முழுவதையும் தமிழுக்காகவும், ஈழத்தமிழர் நலனுக்காகவும் அர்ப்பணித்துக்
கொண்டவர். விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனின் அன்புக்கும்
மரியாதைக்கும் பாத்திரமானவர். தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தை வடித்ததன்
மூலம் ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை உலகம் அறிந்து கொள்வதற்கு வழி
வகுத்தவர்.

எனது அன்புக்குரிய நண்பர்களில் ஒருவராக திகழ்ந்தார். தமிழ் மற்றும் தமிழ்
சார்ந்த பணிகளில் என்னோடு தோள்நின்றவர். தமிழ் தேசியத் தலைவர்கள் அனைவரின்
நம்பிக்கையையும், மரியாதையையும் வீர சந்தனம் பெற்றிருந்தார். அறம் மீது
மட்டுமே பற்று கொண்டிருந்த அவர், பொருள் மீது பற்றற்று இருந்தார். அவருக்கு
இருந்த தொடர்புகளை பொருளாதாரரீதியில் பயன்படுத்தியிருந்தால் அவரது நிலை
மிகப்பெரிய உயரத்தை எட்டியிருக்கும். ஆனால், தமது வாழ்நாள் முழுவதும்
தமிழுக்கும், தமிழருக்காகவும் உழைத்து எண்ணற்ற நண்பர்களையும், அவர்களின்
நம்பிக்கை மற்றும் மரியாதையையும் மட்டுமே சேர்த்து வைத்திருக்கிறார். அவர்
மறைந்தாலும் தமிழர்களின் மனங்களில் இறப்பின்றி வாழ்வார்.

ஓவியர் வீர சந்தனத்தின் மறைவு தமிழ் சமுதாயத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு
ஆகும். தமிழுக்காகவும், கலைக்காகவும் வாழ்ந்து மறைந்த வீர சந்தனத்திற்கு வீர
வணக்கங்களை செலுத்துகிறேன்

பொறியியல் கலந்தாய்வு விவரம்

IMG 20170702 WA0013 - 2026

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய மருத்துவ படிப்புகளுக்கான மாணவர்
சேர்க்கையில் மாநில திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீதமும்,
சி.பி.எஸ்.சி. உள்ளிட்ட பிறவகை பாடதிட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 15
சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்து
பலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தொடர்பான இறுதி
தீர்ப்பு வரும் வரை மருத்துவ மாணவர் சேர்க்கை நடவடிக்கைக்கு தடை ஏற்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் பொறியியல் கலந்தாய்வுக்கு தடை விதிக்க முடியாது.
கலந்தாய்வு அடிப்படையிலேயே பொறியியல் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என
நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதனை தொடர்ந்து தலைமை செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன்
செய்தியார்களிடம் கூறியதாவது:

அண்ணா பல்கலை. பொறியியல் கலந்தாய்வு ஜூலை 17-ம் தேதி தொடங்கப்படும்.
பொதுபிரிவினர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 11ஆம் தேதி நடைபெறும்.
விளையாட்டு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 21 ஆம் தேதிகளில் நடைபெறும்.
விளையாட்டு பிரிவினருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 19,20ஆம் தேதிகளில்
நடைபெறும். மாற்று திறனாளிகளுக்கான கலந்தாய்வும்.21ம் தேதி நடைபெறும்,
தொழிற்கல்வி பிரிவினர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 17,18 ஆம் தேதிகளில்
நடைபெறும். வரும் கல்வி ஆண்டு 2018-ம் ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு
நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மிரட்டும் இந்தியா மிரளும் சீனா

IMG 20170707 WA0017 - 2026

சிக்கிம் மாநிலத்தில் உள்ள டோகா லாம் பகுதியில் பூடான் எல்லையில் நுழைய
முடியாத படி காவல் காத்து வரும் இந்திய ராணுவத்துக்கு உதவியாக 4000 க்கும்
மேற்பட்ட ராணுவ வீரர்களை குவித்து ள்ளது இந்திய ராணுவம்

வழக்கமாக இந்திய சீன எல்லையில் தகராறு வந்தால் இந்தியா தான் சீனாகிட்ட போய்
அண்ணே
கொஞ்சம் பொறுங்கண்ணே..எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்துகொள்வோம் என்று கெஞ்சி
நிற்கும்.

ஆனால் வழக்கத்திற்கு மாறாக இப்பொழுது வாங்க
தம்பி எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்து கொள்வோ ம் என்று சீனா இந்தியாவிடம்
மன்றாடுவதைப் பார்த் துஉலக நாடுகள் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டு நிற்கிறது.

.இந்திய ராணுவத்திற்கு என்னாச்சு? 2013 ம் ஆண்டு
ஏப்ரலில் லடாக்கில் 640 கிலோ மீட்டர் பகுதியை கைப்பற்றிய சீனாவிடம் பளீஸ்
எங்கள் இடத்தை விட்டு போய் விடுங்கள் என்று இந்தியா கெஞ்சிய தை வேடிக்கை
பார்த்த உலக நாடுகள் இன்று சிக்கிம்
பார்டரில் சீனாவை மிரட்டிக்கொண்டு இருக்கும்
இந்தியாவை பார்த்து ஆச்சரியப்படத்தானே செய்யும்.

இதோடு இன்னொரு விசயம் என்னவென்றால் எந்த
லடாக்கில் காங்கிரஸ் ஆட்சியில் சீன ராணுவம் ஊடுறுவி நின்றதோ அதே லடாக்கில்
சீனா ஆளு மைக்குட் பட்ட திபெத் எல்லையில் கிட்டத்தட்ட சீன
எல்லை என்றே சொல்லக்கூடிய பகுதியில் நேற்று
இந்திய ராணுவத்தின் உதவியால் திபெத் தேசிய கொடி ஏற்றப்பட்டுள்ளது.

ஏற்கனவே டோகோலாம் பகுதியில் பூடானை ஆட் ்டை ய போட போய் முடியாமல் இந்திய
ராணுவத்தி டம் தினறி நிற்கும் சீனா இப்பொழுது லடாக் பகுதி யிலும்ஊடுருவி
நிற்கும் இந்திய ராணுவத்தை பார்த்துதிகைத்து போய் நிற்கிறது
.
பூடானை பிடிக்கப் போய் இப்பொழுது திபெத்தை
தொலைத்து விடுவோமோ என்று சீனா மிரண்டு
நிற்பதை பார்த்தால் மூன்று ஆண்டுகளில் மோடி
என்ன செய்தார் என்று கேள்வி கேட்கும் முட்டாள்களு க்குக்கு விடை கிடைத்து
விடும்.

இந்தியாவுக்கு மேற்கே உள்ள பாகிஸ்தான் பார்டரு க்கு முக்கியத்துவம் கொடுத்த
இந்தியா கிழக்கே
உள்ள சீன பார்டருக்கு அதிகளவில் முக்கியத்துவம்
கொடுக்க வில்லை.

காரணம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து இந்திய பாகிஸ் தான பார்டர்
மாநிலங்க ளான குஜராத், ராஜஸ்தான் பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய நான்கு
மாநிலங்களும் சுமார் 500-கிலோ மீட்டர்தொலைவில் தான் உள்ளது.அதுவும்
சமவெளியாகவே உள்ளது.

இதனால் தான் பாகிஸ்தான் பார்டருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த இந்தியா
சீனாவை கண்டு
கொள்ளா மல் இருந்தது. இந்தியாவுக்கும் சீனாவுக கும் உள்ள பார்டர் மாநிலங்கள்
ஐந்து.ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சல பிரதேசம்,உத்தர்காண்ட், சிக்கிம் மற்றும்
அருணாச்சல பிரதேசம் ஆகும்.

பாகிஸ்தான் பார்டர் மாதிரி சீனா பார்டர் சமவெளி
பிரதேசமாக இல்லாமல் மலை பிரதேசமாக இருப்ப தால் இதுவே நமக்கு பாதுகாப்பு
அரனாக இருந்து
வருகிறது மலைப்பகுதி என்றால் 1000 அடி 2000 அடி
உயரம் கிடையாது .எல்லாமே 10,000 அடி உயரத்தி ற்கு மேல் இருக்கிறது.

இன்னொரு முக்கிய மான விசயம் என்னவென்றால்
சீனத்தலைநகர் பீஜிங்கில் இருந்து நம்முடைய எல்லை மாநிலங்கள் 5ம் சுமார்
3,500-4,000 கிலோ
மீட்டர்.தொலைவில் இருக்கிறது. இப்பொழுது
போருக்கு தயாராக இந்திய ராணுவம் நிற்கும் டோகாலாம் பகுதி கூட பீஜிங்கில்
இருந்து 4000
கிலோ மீட்டர். தொலைவு உள்ளது.

இதனால் திபெத் தில் இருக்கும் சிறு அளவிலான
படைகளை வைத்து இந்தி யாவை சீனா மிரட்டுமே
தவிர முழு அளவிலான படைகளை திரட்டி வந்து
நிச்சயம் போர் புரியாது.இதை உணர்ந்து தான் இந் தியா இப்பொழுது படைகளை குவித்து
வருகிறது.

சீனா இந்தியாவை தரைப் படையை வைத்து தாக்குவது கஷ்டமான காரியம். அடுத்து கடற்படை
யை வைத்து சண்டை க்கு வரலாம் என்றால் அதற்க்கும் வழியில்லை ஏனெனில் இந்தியா சீன
வுக்கு இடையே கடல் எல்லையே கிடையாது.

அதனால் தென் சீனக் கடலில் இருந்து இந்தியபெ ருங்கட லுக்கோ இல்லை வங்க கடலுக்கோ
சீனக் கப்பல்கள்வந்து இந்தியாவை தாக்க நினைத்தால் சீனாவிற்குஅருகே உள்ள தென்
சீன கடல் நாடான வியட்நாமில் ஓய்வெடுத்து கொண்டிருக்கும் இந்திய கப்பல் களால்
தாக்கப்படும்

ஆக இந்தியாவை சீனா தாக்க உள்ள ஒரே வழி
விமானப்படை தான் .சீனாவுக்கும் இந்தியாவிற்கு ம்
தரைப் படை விமானப்படைகளில் பெரிய வித்தியா சம் கிடையாது. ஆனால் கடற்படை யில்
இந்தியா வை விட சீனா பெரியது.இருந்தாலும் அதனால்
நமக்கு பெரிய பாதிப்பு வராது.

இந்த விமானப்படையை வைத்து தான் 1962 ல் சீனா
இந்தியாவை தோற்கடித்தது.மோடி ஆட்சி வந்த பிறகு
அருணாச்சல பிரதேசத் தில் மட்டும் ராணுவ விமான ங்கள் வர வேண்டும் என்பதற்காக 6
விமான நிலைய ங்கள் புதிதாக உருவாக்கப்பட்டு அங்கே போர் விமா னங்கள் 100
பிரமோஸ் ஏவுகணைகளுடன் புதிதாக உருவாக்கப்பட்ட படை சீனர்களுக்காக காத்திருக்
கிறது.

அடுத்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சீன எல்லைப் பகுதி யான லடாக்கில்
17,500 அடி உயர த்தில் இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மையமா ன டிஆர்டிஓ வை
அமைத்து அங்கேயே 42 டன் எடை யுள்ள T-72 என்கிற ரஷ்ய மாடல் டாங்கிகளை -மைனஸ்
ஐம்பது டிகிரி குளிரிலும் வேலை செய்யு மாறு உருவாக்கி 100க்கும் மேற்பட்ட
டாங்கிகள்
சீனர்கள் வரவேற்க இந்தியா வைத்துள்ளது.

இந்த சிக்கிம் பார்டரில் தான் இந்தியா வீக்காக இருந்தது ஏனென்றால் இங்குள்ள
நாதுலா கண வாய் வழியாகத் தான் இந்துக்களின் புனித யாத் திரை யான கைலாஷ்
மானசரோவர் யாத்திரை
நடந்து வந்தது். இப்பொழுது அது நிறுத்தப்பட்டதால்
இந்திய ராணுவம் குவிக்கப.பட்டுள்ளது..

அடுத்து உத்தரகாண்ட் மாநிலத்தின் சீன எல்லை யான மானா பகுதியும் கைலாஷ்
யாத்திரை க்காக
ப்ரீயாக இருந்தது. இப்பொழுது அங்கே யும் படைகள்
குவிக்க பட்டுள்ளது.

தரைப் படையில் இந்திய படையை விட சீனா வலி மையாக இருந்தாலும் 4000 கிலோ
மீட்டர். தூரத்தி ற்கு முழு படையையும் திரட்டி வர சான்சே இல்லை. அடுத்து
கடற்படைக்கு நோ சான்ஸ்.எஞ்சி யிருப்பது
விமானப்படை தான்.

அதிலும் இந்தியாவுக்கு உள்ள அதிர்ஸ்டம் என்ன வென்றால் சீன விமான நிலையங்கள்
எல்லாம்
இந்திய விமான நிலையங்களை விட உயரத்தில் இருப்பதால்.சிறிய ரக ஏவுகணைகள்
ராக்கெட் லாஞ்சர்கள் மூலம் ஈசியாக இந்திய ராணுவம் அழித்து விடும் ்

இப்படி பல ஓட்டைகள் சீனா சைடில் இருப்பதால் தான் சும்மா மிரட்டிக்கொண்டு
இருந்த சீனா இந்தி யா போருக்கு தயாராக இருப்பதை அறிந்தவுடன்
ரிவர்ஸ் கியர் போட்டு பாகிஸ்தானை துணைக்கு
அழைத்துக் கொண்டு காஷ்மீர் வழியாக இந்தியா
வை தாக்குவோம் என்று பரிதாபமாக சொல்.லிக்
கொண்டு இருக்கிறது.