Home Blog Page 5588

ரூ. 2 கோடி புகார் 2 பேரையும் 2 கோடிக்கு தொரத்தி விட்ருச்சி!

DIG Rupa SASIKALA - 2026

சசிகலாவுக்கு சலுகை காட்ட ரூ.2 கோடி புகார்: சிறைத்துறை அதிகாரிகள் இருவரும் பணியிட மாற்றம்…

பெங்களூர்:

கர்நாடகத்தில் சிறைக் கைதியாக உள்ள சசிகலா சிறையில் சலுகை பெற ரூ.2 கோடி லஞ்சம் அளித்துள்ளதாக குற்றம் சாட்டிய டி.ஐ.ஜி., ரூபாவையும், டிஜிபி சத்யநாராயணாவையும் பணியிட மாற்றம் செய்தது கர்நாடக அரசு.

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள, சசிகலா சிறைவாசத்தை சுகபோகத்துடன் அனுபவிக்க ரூ.2 கோடி லஞ்சம் அளித்துள்ளதாக குற்றம் சாட்டிய கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி., ரூபா பணியிட மாற்றம் செய்து கர்நாடக அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு தனியாக சமையலறை அமைக்கப்பட்டு இரண்டு தனி உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்காக, இரண்டு கோடி ரூபாய் லஞ்சமாக தரப்பட்டுள்ளது என கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி., ரூபா குற்றம் சாட்டி இருந்தார். சிறைத்துறை டி.ஜி.பி., சத்யநாராயண ராவ் தான் இந்த பணத்தை வாங்கி உள்ளார் என்றும் குற்றம் சாட்டினார்.

இந்தப் புகார் குறித்து விசாரிக்க, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டுள்ள நிலையில், இன்னும் விசாரணையே துவங்கப்படாத நிலையில், சிறைத்துறை டி.ஐ.ஜி.,யாக இருந்த ரூபா, பெங்களூரு நகர போக்குவரத்து பிரிவு ஆணையராக பணியிட மாற்றம் செய்யப் பட்டுள்ளார்.

முன்னதாக, பரப்பன அக்ரஹார சிறையில் நடக்கும் முறைகேடுகளை ரூபாவிடம் சொன்ன கைதிகள், பெல்ஹாம் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு, சீருடை அணியாத காவலர்களால் முரட்டுத் தனமாகத் தாக்கப்பட்டுள்ளனர் என்று ஊடகங்களில் செய்தி வெளியானது. கைதிகள் போலீஸ் வாகனத்தில் வேறு சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டதும், அவர்கள் வெகு நேரம் கழித்து, வாகனத்தில் இருந்து இறங்கி செல்லும்போதும் நடக்கமுடியாமல் நடந்து சென்றதும், கடுமையாக தாக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. கைதிகள் வெளியேறிய அரை மணி நேரத்தில், சிறை அறையில் இருந்து சீருடை அணியாமல் மஃப்டியில் உள்ள போலீஸார் கைகளில் லத்திகளுடன் சிரித்துப் பேசிக் கொண்டு வெளியே வருவதும் கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது.

இந்தத் தகவல்கள் ஊடகங்களில் வெளியான உடன், ரூபாவுக்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கைகளுக்காக, சிறைக் கைதிகளை பலமாகத் தாக்கியுள்ளது தெரியவந்ததால், கர்நாடகத்தில் பெரும் பரபரப்பு எழுந்தது. இதனிடையே ஏடிஜிபி சத்யநாராயணாவும் இடமாற்றம் செய்யப் பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சிறைத்துறைக்கு ஏஎஸ் என் மூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு தமிழகத்தில் முடிந்தது

அஇஅதிமுக (புரட்சித் தலைவி அம்மா) நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்தனர்.
அஇஅதிமுக (புரட்சித் தலைவி அம்மா) நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்தனர்.

சென்னை:
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் விறு விறுவென முடிந்தது. இன்று காலை முதலே 10 மணிக்குத் துவங்கி வாக்குப் பதிவு நடைபெற்றது. முதலில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வக்குப் பதிவு செய்தார். தொடர்ந்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சிறப்பு அனுமதியின் பேரில் சென்னை சட்டப்பேரவை வளாகத்திலேயே வாக்களித்தார். கேரள மாநில முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவரும் பின் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரும் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வாக்களிக்க, வாக்குப் பதிவு முற்பகலிலேயே நிறைவடைந்தது.

அஇஅதிமுக (புரட்சித் தலைவி அம்மா) நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்தனர்.

கமல் மார்க்கெட் இல்லாதவரு… என்னமோ ஒளறிக்கிட்டிருக்காரு!

kamalhasan - 2026

சென்னை:

மார்க்கெட் இல்லாதவர் கமல்ஹாசன், ஏதோ பேசிக் கொண்டிருக்கிறார் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய போது கருத்து தெரிவித்தார்.

நடிகர் கமலஹாசன் தனியார் தொலைக்காட்சியில் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தன. அந்த நிகழ்ச்சிக்கு தடை விதிப்பதுடன் கமலஹாசனை கைது செய்ய வேண்டும் என்றும் கூறி இருந்தனர்.

இதனால் ஆவேசம் அடைந்த கமலஹாசன் என்னை கைது செய்வது என்றால் நடக்கட்டும். சட்டம் என்னை பாதுகாக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக கூறினார்.

அத்துடன் தமிழகத்தில் அனைத்து நிலைகளிலும் ஊழல் மலிந்திருப்பதாகவும், பீகாரை விட தமிழகம் லஞ்சம், ஊழலில் மோசமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

தமிழக அரசை பற்றி விமர்சனம் செய்த கமல் ஹாசனுக்கு அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், எஸ்.பி. வேலுமணி, கே.பி.அன்பழகன் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து பேட்டி அளித்தனர்.

ஜெயக்குமார் தனது பேட்டியில், “தான் நடத்தும் நிகழ்ச்சியை பிரபலப் படுத்துவதற்காக தமிழக அரசின் மீது சேற்றை வாரி வீசுவதா?” என்று கூறினார்.

சி.வி.சண்முகம் தனது பேட்டியில், கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களை பற்றி இழிவாக பேசி வருகிறார்கள். சினிமாவில் வாய்ப்பு பறி போனதால் தற்போது 3-ம் தர நடிகராக கமல்ஹாசன் பேசி வருகிறார். பெண்களை இழிவாக பேசிய கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

கமல்ஹாசனை மிரட்டும் வகையில் பேட்டி கொடுத்த அமைச்சர்களுக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், திருமாவளவன், வைகோ ஆகியோர்
கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் கமல்ஹாசனுக்கு எதிராக அமைச்சர்கள் சி.வி.சண்முகம், டி.ஜெயக்குமார் ஆகியோர் இன்று மீண்டும் பேட்டி அளித்து உள்ளனர்.

ஓ.பிஎஸ் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி கமலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து உள்ளார்.

கமல்ஹாசன் கூறிய குற்றச்சாட்டுக்கு அமைச்சர்கள் பதில் கூற வேண்டுமே தவிர அவரை குறை கூறக்கூடாது. கமலை குறை சொன்னால் அவர்களது மதிப்பு தான் குறையும் இவ்வாறு அவர் கூறினார்.

“காஞ்சி யாத்திரை போன மாப்பிள்ளை”

10406745 859208287442471 99817598003990377 n 3 - 2026

“காஞ்சி யாத்திரை போன மாப்பிள்ளை”

“விவாஹ மந்திரம் ரொம்ப முக்கியம். சகல
சௌபாக்கியமும் கிடைக்கணும்னு பிரார்த்தனை
பண்றது” ‘வேத மந்திரம்…”-பெரியவா உபதேசம்.

சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

காலை எட்டு மணிக்குள் திருமாங்கல்ய தாரணம்
நடந்துவிட்டது. ஒன்பதரை மணிக்கு சேஷ ஹோமம்
பத்து மணிக்கு சாப்பாடு.

மாப்பிள்ளைக்கு திடீரென்று பெரியவாளிடம் பக்தி
அலைமோதியது. பஞ்சக்கச்சமும் கூறைப்-
-புடைவையுமாக, நண்பகலில் பெரியவாள் முன் ஆஜர்!

மணமகனுக்கு எல்லையில்லாத மகிழ்ச்சி. வேறு எந்த
தம்பதிகள், காலையில் கையைப் பிடித்து, மூன்று மணி
நேரத்திற்குள் பெரியவாள் தரிசனத்துக்கு
வந்திருக்கிறார்கள்?.

பெரியவாள், எல்லோரிடமும் சொல்லப் போகிறார்கள்
பாருங்கோ….”இந்தப் பையனுக்கு என்ன பக்தி…
கல்யாணம் ஆன மறு லக்னத்திலேயே தரிசனத்துக்கு
வந்து விட்டானே! காசி யாத்திரையை நிறுத்திவிட்டு
காஞ்சி யாத்திரை வந்திருக்கான்” என்று
பாராட்டப் போகிறார்கள்.

அரை மணி நேரம் நின்றான், கால் கடுத்தது.

பெரியவாள் வேறு யார் யாருக்கோ பிரசாதம்
கொடுத்தார்கள்-இவரைத் தவிர.

மனம் தவிக்க ஆரம்பித்தது.

மூன்று மணிக்கு சென்னையில் இருக்க வேண்டும்.
இரவு ஏழு மணி முதல் வரவேற்பு. அதற்குள்
மணப்பெண்ணுக்கு ஒரு முக்கியமான விஸிட்
இருந்தது.

ஒரு சிஷ்யனைக் கண் அசைவினால்
அழைத்தார்கள் பெரியவாள்.

“இவாளை கொல்லா சத்திரத்துக்கு அழைச்சிண்டு
போய் தம்பதிகளா உட்கார வச்சு,விவாஹ
மந்திரம் முழுக்கச் சொல்லச் சொல்லு.
மடத்து சாஸ்திரிகளை அழைச்சிண்டு போ…”

இளந்தம்பதிகள் கொல்லா சத்திரம் போய்விட்டு
இரண்டு மணி நேரம் கழித்து தரிசனத்துக்கு
வந்தார்கள்.பெரியவாள் பிரசாதம் கொடுத்துக்
கொண்டே கூறினார்கள்.

“விவாஹ மந்திரம் ரொம்ப முக்கியம். சகல
சௌபாக்கியமும் கிடைக்கணும்னு
பிரார்த்தனை பண்றது” ‘வேத மந்திரம்…”
பிரசாதம் பெற்றுக்கொண்டு மணமக்கள்
சென்னை வந்து சேர்ந்தபோது, மணி ஏழு.

நேரே வரவேற்பு மேடையில் கவர்னர்
நாற்காலியில் அமர்ந்து கொண்டார்கள்.
உடை மாற்றிக்கொள்ளக்கூட நேரமில்லை.

பத்து நிமிடத்தில் அவன் அலுவலக
மேலாளர்,மற்ற்ப் பணியாளர்கள் புடைசூழ
வந்தார். கை குலுக்கினார்.ஓர் உரையாடலைக்
கொடுத்தார்.

“சத்தியமூர்த்தி அதைத் திறந்து பாருடா”
என்றார் ஒரு மூத்த எழுத்தர்.’மொத்த
மொய்த் தொகையின் காசோலையாக இருக்கும்’
என்று அலட்சியமாகப் பிரித்தான்.

கண்கள் விரிந்தன புரமோஷன் ஆர்டர்!

யக்ஞ வடிவானவன் ஸ்ரீராமன்

யக்ஞ வடிவானவன் ஸ்ரீராமன்:-
தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்
(‘இது நம் சனாதன தர்மம்’ என்ற நூலிலிருந்து)

நம் நாட்டின் மிகப் பெரிய இதிகாச நூல் ஸ்ரீமத் ராமாயணம். இந்த தெய்வீக நூலில்
எத்தனையோ உட்கருத்துகள் பொதிந்துள்ளன. உலகியல் கண்ணோட்டத்துடன், தர்மத்தின்
பார்வையில், யக்ஞ பாவனையில், யோகத்தோடு இணைந்த பார்வையில், மந்திரக்
குறிப்புகளில், வேதாந்த சிந்தனையில் ……இவ்விதம் பல வித கோணங்களில்
ராமாயணத்தை தரிசித்து உபாசனை செய்தவர்கள் எத்தனையோ பேர் உள்ளார்கள்.

எனவே தான் இதனை ‘கல்ப விருட்சமாக’ (தெலுங்கில்) தரிசித்து மகிழ்ந்தார்
கவிசாம்ராட் விஸ்நாத சத்திய நாராயணா.

ஒரு மனிதனுக்கு தர்மத்தோடு கூடிய கடமைகள் எத்தனையோ இருக்கலாம்.
ஒன்றுக்கொன்று முரண்பட்டும் இருக்கலாம். அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில்
தகுந்த முன்னுரிமை அளித்து அனைத்து கடமைகளையும் இணைத்துச் செய்யத் தெரிய
வேண்டும். அப்படிச் செய்து காட்டிய பரிபூரண மனிதன் ஸ்ரீராமன்.

‘தனி மனித சுகத்தை விட தர்மம் சாஸ்வதமானது. தர்மத்திற்காக தன் சுகங்களைக் கூட
தியாகம் செய்து தர்மத்தோடு கூடிய வாழ்க்கை வாழ வேண்டும்’ என்பது ஸ்ரீராமனின்
வரலாறு கூறும் வாழ்வியல் போதனை.

அடுத்து, யக்ஞத்தின் பார்வையில் நோக்கினால், ஸ்ரீராமன் யக்ஞ வடிவானவன்.
‘யக்னோ வை விஷ்ணு;’, ‘யக்னோ யக்ஞ பதிர் யஞ்வா’, ‘யஞ்யேச அச்யுத கோவிந்த’ –
முதலிய சுருதி, ஸ்ம்ருதி வாக்கியங்கள் யக்ஞமே நாராயணின் உருவம் என்று
பளிச்சிட்டு காட்டுகின்றன.

‘யங்ஞம்’ என்ற சொல்லுக்கு ‘தியாக மயமான செயல்’ என்பது முக்கிய அர்த்தம்.
உலகின் நன்மைக்காக செய்யும் நற்செயல் யங்ஞம். உலகின் ஒவ்வொரு சக்தியையும்
கட்டுப்படுத்தும் ஈஸ்வர சக்திகளே தேவதைகள். யக்யத்தின் வழியாக தேவதைகள்
திருப்தி அடைகிறார்கள். அதன் மூலம் உலகிற்கு மழையும் பயிர்களும், உலகியலான
பலன்களும், பல நன்மைகளும் கிட்டுகின்றன.

இந்த யக்ய வட்டத்தை அனுசரித்து நடப்பதே தர்ம வாழ்க்கை வாழ்வதாகும்.

உலகின் இயக்கத்திற்கு யக்ஞமே ஆதாரம். இயற்கை யக்ஞ மயமாக விளங்குகிறது. தன்
சுய நலத்திற்காக நிரந்தரமாக இருக்கும் தர்மத்தின் நியமங்களை மீறுபவர்கள் ‘யக்ஞ
துரோகிகள்’. இவர்களையே அரக்கர்கள் என்பார்கள்.

‘யக்ஞ த்ரோஹா:’ என்று வேதம் இவர்களுக்குப் பெயரிட்டுள்ளது. ராவணன்,
கும்பகர்ணன் போன்றோர் யக்ஞ துரோகிகள். தனதல்லாத செல்வத்தை தன்னுடையதாக்கிக்
கொள்ளும் துர்புத்தி கொண்ட அரக்கன் – தனக்கிருக்கும் பலத்தினால் திமிர்
பிடித்து உலக மக்களை துன்புறுத்துகிறான். உலகை காக்கும் சத்துவ குணமுள்ள
தேவதைகளை அவரவர் வேலையைச் செய்ய விட மாட்டான்.

ராவணன் போன்றோர் தேவதைகளைத் துன்புறுத்தியதன் உட்பொருள் இதுவே. மேலும்
தேவதைகளைத் தன் சுய நலத்திற்கேற்ப பயன்படுத்திக் கொண்டான். அனைத்து
தேவதைகளுக்கும் உலகின் நன்மை கருதி சக்தியை அளித்த பரமேஸ்வரனான ஸ்ரீமகா
விஷ்ணு, தேவதைகளைக் காப்பாற்றுவதற்காகவும் யக்ஞ தர்மத்தை ரட்சிப்பதற்காகவும்
அவதரித்தார்.

யக்ஞத்தில் ‘பிரஜாபத்ய புருஷன்’ தசரதருக்கு அளித்த பாயசத்தில் பிரவேசித்த
விஷ்ணுவின் தேஜஸ் ஸ்ரீராமனாகவும், அவனுடைய சகோதரர்களாகவும் அவதரித்தது.
பரிபூரண கலைகளுடன் ராமனும், அம்ஸங்களுடன் லட்சுமணன், பரதன், சத்ருக்னன்
அவதரித்தனர். யக்ஞத்தின் மூலம் பிறந்த ஸ்ரீராமசந்திரன், யக்ஞத்தைக்
காப்பதற்காக விசுவாமித்திரரின் பின் சென்றான். யக்ஞ துரோகிகளை அழிப்பது என்ற
‘அவதார காரியம்’, தாடகை, சுபாஹு வதையுடனும், மாரீசனை தண்டித்துடனும்
ஆரம்பமானது.

யக்ஞத்திற்காக பூமியை உழுத போது கிடைத்த ‘அயோநிஜை’ (கர்பத்திலிருந்து
பிறக்காதவள்) சீதா தேவி, ஜனகர் செய்த புண்ணியத்திற்கு கிடைத்த பலன். சாட்சாத்
வேத ஸ்வரூபிணி சீதை.

‘தர்மம்’ என்பது வேத மயமானது. வேதம், யக்னேஸ்வரனுக்காக தோன்றிய யக்ஞ சக்தி.
எனவேதான் யக்னேஸ்வரனான ஸ்ரீராமனைக் கை பிடித்தது. காயத்ரி மந்திர ரிஷியான
விசுவாமித்திரர், வேத மாதாவுடன் யக்ஞத்திற்கு தொடர்பு ஏற்படுத்துவதற்காக
மிதிலையைச் சென்றடைந்து ஸ்ரீசீதாராம கல்யாண வைபவத்திற்குக் காரணமானார். யக்ஞமே
ஸ்ரீராமர். வேதமே சீதா.

வேதத்தையும் யக்ஞத்தையும் தம் வாழ்க்கையாகவே வாழ்ந்து வந்த ரிஷிகளனைவரும்
காடுகளில் யக்ஞ துரோகிகளால் துன்புறுத்தப்படுகையில் ‘வனவாசம்’ என்ற சாக்கில்
வேத சக்தியான ஜானகி தேவியுடன் வனத்தை வந்தடைந்த ராமபத்ரன் ரிஷிகளுக்கு
அபயமளித்தான். காப்பதாக உறுதி கூறினான். காத்தருளினான். தாடகையின்
வதத்துடன் ஆரம்பமான உலகை இம்சிப்பவர்களுக்கான தண்டனை ராவண வதத்துடன்
பூர்த்தியானது.

இந்த மகா காரியத்தில் – யக்ஜத்தில் பூஜையை ஏற்கும் தேவதைகளே, நாராயணன் ராமனாக
அவதரித்த போது அவனுடன் வந்தனர். சூரியனின் அம்சத்துடன் சுக்ரீவனும்,
பிரம்மாவின் அம்சத்துடன் ஜாம்பவானும், அஸ்வினி தேவதைகளின் அம்சத்துடன்
மைந்தனும், த்விவிதனும், விஸ்வ கர்மாவின் அம்சத்துடன் நீலனும், ருத்ரனின்
அம்சத்துடன் ஹநுமானும் …. இவ்விதம் தேவதைகள் அனைவருடனும் ஒன்று சேர்ந்து,
சகல தேவதைகளின் ஒரே வடிவான யக்ஜ பதியான ஸ்ரீராமன் தர்மத்தைக் காத்தருளினான்.

உண்மையில் தேவதைகளின் உதவி ராமனுக்குத் தேவையில்லை தான். ஆனால் தமக்காக மனித
வடிவமெடுத்து வந்த மகா விஷ்ணுவான ராமனுடன் தாங்களும் சஞ்சரிக்க வேண்டுமென்ற
கடமை உணர்வால், பிரம்மாவின் உத்தரவுப்படி, தேவதைகள் அம்ச ரூபத்துடன் வானரர்
முதலான வீரர்களாக இறங்கி வந்தனர்.

ரிஷிகள், தேவதைகள், யக்ஞம் என்னும் தர்மம், யக்ஜ துரோகிகள் … இவர்களின்
கதையே ராம கதை.

யக்ஞத்தை விலக்கி விட்டு வாழ்பவர்களை ‘அகாயு:’ (பாவ வாழ்க்கை வாழ்பவன்),
‘இந்த்ரியாராம:’ ( வெறும் புலனின்பத்திற்காக வாழ்பவன்), ‘வாழ்ந்தும் வீணன்’
என்று ஸ்ரீகிருஷ்ணர் நிந்திக்கிறார் பகவத் கீதையில்.

உலக நன்மைக்காக நடைபெறும் தர்மச் செயல்கள் என்னும் ஏற்பாட்டைக் காப்பாற்றும்
தர்ம வடிவமே ஸ்ரீ ராமன். தன் சுய நலத்திற்காக பல பேரிடம் திருடி இம்சிக்கும்
அரக்க குலத்தை நிர்மூலமாக்கி யக்ஞ தத்துவத்தை நிலைநாட்ட வேண்டுமென்று ராம
பத்ரனிடம் பிரார்த்தனை செய்வோம்!

சந்திரனைப் போல் நிறைந்த கலைகளுடன் ஒளிர்வதோடல்லாமல் பார்ப்பவர்களையும்
நினைப்பவர்களையும் அமைதியுறச் செய்யும் அமுத குணம் கொண்டவனாதலால் அவன்
‘ராமசந்திரன்’. பத்ரத்தையம், க்ஷேமத்தையும் அளிப்பதற்காக அவதரித்து, அபத்ரம்
என்ற பயத்தைப் போக்கி ரட்சிக்கும் அவதாரம் ஆதலால் ‘ராம பத்ரன்’. வீரம்,
பிரசன்னம் இரண்டும் ஒன்று கலந்த சகல நற்குண ‘குணாபிராமன்’ ஸ்ரீராமன்.

‘ராமா’ என்ற சொல்லுக்கு ஆனந்த வடிவானவன் என்று பொருள்.

“தலைப்பாகை சாமியார்!”

10482143 599228513527816 46027082804070919 n 2 - 2026

“தலைப்பாகை சாமியார்!”(ஏழைக்காக லீலா நாடகம் நடத்திய பெரியவா)

(
“ஒரு பைசாவைக் கூட கையால் தொட்டதில்லை” உண்மைதான். ஆனால் கல்யாணத்துக்கு
வேண்டிய பணம் கிடைத்துவிட்டது – தலைப்பாகை சாமியாருக்கு!)​

சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு.தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
* புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

*”பெண்ணுக்குக் கல்யாணம். மடத்திலேர்ந்துஏதாவது உதவி செய்யணும்….”ஏழைத்
தம்பதிகள், அம்மாள் கழுத்தில் மஞ்சள் சரடு,

மெல்லியதாக ஒரு வடம் செயின்.இவர்களுக்கு உதவி செய்யவேன்டியதுதான்.”நான் ஒரு
சந்நியாசி, ஒரு பைசாவைக்கூட கையால்

தொட்டதில்லை.என்னிடம் போய் பண உதவிகேட்கிறாயே!” என்று வெளிப்படையாகப்
பேசிக்கொண்டிருக்கும்போதே அந்தரங்கத்தில் திட்டம்.அதேசமயம், காமாட்சி கோயில்
தலைமைஸ்தானீகர் பிரசாதம் கொண்டு வந்தார். முதலில்,

பெரியவாளுக்குப் பரிவட்டம் கட்டினார். பின்னர்,

குங்குமப் பிரசாதம் சமர்ப்பித்தார்.பெரியவாள் பரிவட்டத்தைக் கழற்றி, பெண்

கல்யாணத்துக்கு உதவி கேட்டு வந்தவரைசுட்டிக்காட்டி “அவருக்குக் கட்டு”
என்றுஉத்தரவிட்டார்கள்.

யாசகம் கேட்டு வந்தவருக்கு அடித்தது யோகம்!

பெரியவாள் குங்குமப் பிரசாதத்தையும் அவரிடமேகொடுத்து,”எல்லோருக்கும் நீயே
கொடு”என்றார்கள்.

திமுதிமுவென்று மார்வாடிக் கூட்டம் உள்ளேநுழைந்தது. திருத்தலப் பயணம்.வாடகை *
*வாகனத்தில் வந்திருந்தார்கள்.

பரிவட்டத்துடன், எதிரே குங்குமப் பிரசாதத்துடன்,உட்கார்ந்திருந்தவர்தான்,
ஸ்ரீ காமகோடி பீடாதிபதிஎன்று நினைத்து, காலில் விழுந்து, இருநூறும்,

முன்னூறுமாகக் காணிக்கை செலுத்தினார்கள்.யாசகர் (பெரியவா முன்னரே
சொல்லியிருந்தபடி)எல்லோருக்கும் குங்குமம் இட்டுவிட்டார்.இந்த லீலா நாடகம்
நடந்து முடிந்ததும்,பெரியவாள்எழுந்து வந்து, மார்வாடிகளிடம்
பேசி,ஆசீர்வதித்து,பிரசாதமாகப் பழங்களைக் கொடுத்தார்கள்.”ஒரு பைசாவைக் கூட
கையால் தொட்டதில்லை”உண்மைதான். ஆனால் கல்யாணத்துக்கு வேண்டியபணம்
கிடைத்துவிட்டது – தலைப்பாகை சாமியாருக்கு!

சர்க்கரை நோயாளிகள் விரலை வெட்ட வேண்டாம்

IMG 20170715 WA0001 - 2026

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் ஏற்பட்ட புண் ஆறவில்லை எனஆங்கில மருத்துவத்தின் ஆலோசனை படி விரலை எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை.!

நாட்டு மருத்துவத்தில் விரைவாக ஆறிவிடும்.மேலும் விபரங்கள் கீழே.!

சா்க்கரை வியாதிக்காரா்களுக்கு காலில் ஏற்படும் குழிப்புண்களுக்குமருத்துவாிடம் சென்றால்,.சிலநாட்கள் அதற்க்கு மருத்துவம் செய்துப்பாா்த்து விட்டு அந்த புண்கள்ஆறவில்லை என்றால்,விரலில் புண் இருந்தால் விரலை துண்டித்து விடுவதும்,காலில் இருந்தால்காலை துண்டித்து விடுவதும்,தற்போதைய சூப்பா் ஸ்பெசாலிட்டி ஆஸப்பிடல்களின் தனித்திறமை. காலையும்,விரலையும்,அதோடு காசையும் இழந்தவனுக்குத்தான் தொியும்அதனுடைய வலி இதற்க்கு ஒப்பில்லா மருத்துவம் ஒன்று உள்ளது,எனது தாயாருக்கு காலில் ஏற்ப்பட்ட குழிப்புண்னுக்கு டாக்டா்கள்,புண் ஏற்ப்பட்ட இடத்தில் விரல் கருப்பாபாகிவிட்ட காரணத்தினால் விரலை வெட்டிவிடவேண்டுமென்று கூறிவிட்டனா். எனக்கு ஒன்று தோன்றியது மிளகு அளவு உள்ள குழிப்புண்ணையே ஆற்றமுடியாதவா்கள்விரலையோ காலையோ வெட்டியபின் அதனால் ஏற்படும் இரணத்தை இவா்கள் ஆற்றிவிடவாபோகிறாா்கள். முடிவில் மரணத்தைதான் தழுவ வேண்டும். இதுதான் நிலைஇதற்க்கு கண்கண்ட மருந்து .

]ஆவாரம்_இலை,

இந்த இலையை அம்மியில்,மிக்ஸியில்,அரைத்து அதன் விழுதை ஒரு கரண்டியில் இட்டு
அதனுடன் சிறிது நல்லெண்ணை விட்டு சிறுதனலில் ஆவாரம் விழுதை வதக்கி அதை
சுத்தமான காட்டனில் வைத்து கட்டிவிடவேண்டும்.

இதுபோல் ஒருநாள்விட்டு ஓருநாள் கட்டிவர குழிப்புண்கள் மாயமாக மறைந்துவிடும்.

இது எனது தாயாருக்கு
என்கையாலே செய்து,
அந்த புண்கள் ஆறியபிறகு நான்பெற்ற மனநிறைவை நீங்களும் செய்து பயனடையுங்கள்
இதை அதிகம் பகிா்ந்து பலாின்
கால்களை விரல்களை காப்பாற்றுவோம்.!

Article : Parimala Devi
Dr Kala GH, Sengottai

முதல்வர் பழனிசாமி பதவி விலக வலியுறுத்தி டிராபிக் ராமசாமி போராட்டம்

20170715 175818 - 2026

முதல்வர் பழனிசாமி பதவி விலக வலியுறுத்தி டிராபிக் ராமசாமி போராட்டம்

சென்னை பாரிமுனையில் உள்ள வங்கிக் கட்டடத்தின் மீது ஏறி டிராபிக் ராமசாமி
போராட்டம் நடத்தி வருகிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் காமராஜ்,
விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பதவி விலக வலியுறுத்தி குறளகம் அருகே உள்ள வங்கி
கட்டடத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

கும்பாவுருட்டி அருவி மூடல்

IMG 20170715 WA0003 - 2026

சுற்றுலா பயணிகளுக்கு…
ஒரு முக்கிய அறிவிப்பு

கேரளா மாநிலம் அச்சன்கோவில் அருகே உள்ள கும்பாவுருட்டி அருவி தற்போது
காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. இதனால் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு
தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அருவி மீண்டும் திறக்க ஒரு மாதம் ஆகும்
என தகவல் கிடைத்துள்ளது. ஆகவே இந்த வாரம் சனி, ஞாயிறுகளில் குற்றாலம் வரும்
சுற்றுலா பயணிகள் கும்பாவுருட்டி அருவிக்கு சென்று ஏமாற வேண்டாம்.