Home Blog Page 5587

கலகலக்கும் வீடியோ ஆதாரங்கள்: ரூபா பணியிட மாற்றம்; சசிகலா சிறை மாற்றம்?

 

பெங்களூர்:

கர்நாடக ஊடகங்களில் வெளியாகி வரும் சசிகலா சிறைவாசம் குறித்த வீடியோக்களால் மாநில அரசியல் கலகலத்துப் போய்க் கிடக்கிறது. இந்த உண்மைகள் வெளிச்சத்துக்கு வரக் காரணமான ரூபா, சிறைத்துறையில் இருந்து போக்குவரத்துத் துறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பதிலடியாக, சசிகலாவும் பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து தும்கூர் சிறைக்கு மாற்றப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபாவிடம் அக்ராஹார சிறையில் நடந்த விதிமீறல்கள் குறித்த சில முக்கிய வீடியோ ஆதாரங்கள் இருப்பதாகவும், விரைவில் அவற்றை அவர் வெளியிடுவார் என்றும் ஊடக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

முன்னதாக, பெங்களூர் சிறையில் அடைபட்டிருக்கும் சசிகலாவுக்கு தனி சமையலைறை உட்பட பல வசதிகளை சிறையில் செய்து கொடுத்திருப்பதாகவும், இதற்காக சிறை அதிகாரிகள் சிலருக்கு ரூ.2 கோடி பணம் கைமாறப்பட்டதாகவும் சிறைத்துறை டிஐஜி ரூபா பரபரப்பு புகார் அளித்தார்.

இதுகுறித்து விசாரிக்க ஒரு விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு விசாரணையே தொடங்காத நிலையில், சிறையில் நடந்த விதிமிறல்கள் குறித்த ஆதாரங்கள் அழிக்கப்பட்டுவிட்டதாக ரூபா மீண்டும் புகார் கூறினார். இதனிடையே அவர் போக்குவரத்துப் பிரிவுக்கு பணி மாற்றம் செய்யப்பட்ட நிலையில், சிறையில் நிகழ்ந்த முறைகேடுகள் வீடியோக்களாக கர்நாடக ஊடகங்களில் வலம் வருகின்றன. வீடியோ ஆதாரங்கள் அழிக்கப் பட்டு விட்டதாக ரூபா கூறிய நிலையில், இத்தகைய வீடியோக்கள் வலம் வருவது கவனிக்கத் தக்கது. இருப்பினும், அவர் தன்னிடம் உள்ள சில முக்கிய வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களை பத்திரிக்கையாளர்கள் மூலம் வெளியிடக் கூடும் என்று கூறப் படுகிறது. எனவே, டிஐஜி ரூபாவிடம் இருந்து எந்த நேரத்திலும் பரபரப்பான தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலா, சிறை விதிமுறையை மீறியதாக எழுந்துள்ள புகாரை தொடர்ந்து தும்கூர் பெண்கள் சிறைக்கு மாற்ற கர்நாடக உள்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா சகல வசதிகளுடன் இருக்கும் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் சசிகலாவை வேறு சிறைக்கு மாற்ற கர்நாடக உள்துறை முடிவு செய்துள்ளதாம். கர்நாடக மாவட்டம் தும்கூர் சிறைக்கு சசிகலாவை மாற்ற திட்டமிட்டுள்ளனர். இதற்காக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உத்தரவு பெற கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் உடனடியாக அவ்வாறு மாற்ற முடியாது என்றும், 15 நாள் முதல் 1 மாதம் வரை ஆகும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், சசிகலாவுக்கு அளிக்கப்பட்ட சலுகைகள் மற்றும் சிறைத்துறை விதி மீறல் குறித்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் இன்று சிறை கைதிகளிடம் விசாரணை நடத்தப் பட்டது.

“நான் சொல்றது பாதரட்சை இல்லை,தோல் செருப்பு”

10649504 925523734144259 6912074781457211637 n - 2026

“செருப்பு இருக்கா?” என்று பெரியவர் கேட்டுவிட்டு”நான்
சொல்றது பாதரட்சை இல்லை,தோல் செருப்பு”

(பெரியவாளின் அபூர்வ ஜீவகாருண்ய வைத்தியம்)​

சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு(மூலமாக)

கட்டுரையாளர்-ரா.வேங்கடசாமி

* தட்டச்சு-வரகூரான் நாராயணன்.ஒரு முறை பெரிய செல்வந்தர் ஒருவர் தனதுகாரில்
மடத்திற்கு வந்து நிற்கிறார். அவரதுமுகத்தில் வேதனை.அது அவர் வளர்க்கும்நாயின்
மேல் கொண்ட கவலையால் ஏற்பட்டது.சென்ற ஒரு வார காலமாக அவரது நாய்
உணவுஉட்கொள்ளவில்லை.குரைக்கவும் இல்லை.என்ன நேர்ந்தது என்று தெரிந்து
கொள்ள முடியாமல் எஜமானர் மிருக வைத்தியரிடம்கொண்டு சென்றார்.வைத்தியருக்கும்
அந்தநாயின் போக்கு புதிராக இருந்தது. அதனால்அவரால் அதைக் குணப்படுத்த
இயலவில்லை.உண்ணாமல் மெலிந்து சக்தியில்லாமல்கிடக்கும் அந்த வாயில்லா ஜீவனின்
அவஸ்தையைதாங்க இயலாத செல்வந்தருக்கு மனதில் ஒரே வழிதான் தோன்றியது.காஞ்சி
மகானே கதி என்றுஇருக்கும் அந்த பக்தர், மனதில் நம்பிக்கையுடன் தன்செல்ல
நாயுடன் காஞ்சிமடத்திற்கு வந்து சேர்ந்தார்.நாயை தனது காரிலேயே விட்டுவிட்டு
உள்ளே போய்,மகானிடம் சென்று நின்றார்.இப்படி தனது நாய்க்கு

*ஒரு குறை என்று நிவர்த்தி தேடி வந்தது மடத்தில்அபூர்வமாக எல்லோருக்கும்
தோன்றியது.என்றாலும்அவரது கவலை தோய்ந்த முகத்தைப் பார்த்தபோதுஅதற்கு
ஸ்ரீகாஞ்சிமகான் அருள வேண்டும் என்றுமடத்து அன்பர் ஸ்ரீபாலுவுக்கு மனதில்
தோன்றியது.அவருக்கு வந்திருந்தவரின் மனவேதனை நன்குபுரிந்தது. ஆகவே
ஸ்ரீபெரியவாளிடம் இந்த *

*செல்வந்தரின் முறையீட்டைப் பற்றி ஸ்ரீ பாலுமெதுவாக எடுத்துரைத்து, அதற்குப்
பிறகு பெரியவாஅருள வேண்டுமென விண்ணப்பித்தார்.கருணைகரைந்தது.”நாயை இங்கே
கொண்டுவந்து சிரமப்படுத்த

* வேண்டாம் நானே அங்கே வர்ரேன்” என்று அந்த ஜீவகாருண்ய மகான், மெதுவாய்
ஸ்ரீமடத்தின்

* வாசலில் கார் கார் நிற்குமிடத்திற்கு வந்து நின்றார்.”கார் கதவை திறந்து
விடுங்கோ” என்று மகான் சொல்ல,கதவு திறக்கப்பட்டதும் நாய் எதற்கோ
கட்டுப்பட்டது *

*போல் மெதுவாக காரை விட்டு இறங்கி நின்றது.”செருப்பு இருக்கா?” என்று பெரியவர்
கேட்டுவிட்டு”நான் சொல்றது பாதரட்சை இல்லை,தோல் செருப்பு”என்றார். தொடர்ந்து
ஒரு சிப்பந்தி அணிந்திருந்தசெருப்பை கொண்டு வருகின்றார். அந்த நாயின்
ஒருபக்கம் வைக்கச் சொல்கிறார். மகான் உடனே பாலுவைப்பார்த்து ” நீ போய் ஒரு
கிண்ணம் நிறைய பால் கொண்டுவா!” என்று கூற, அவரும் மடத்தினுள் சென்று
பாலைக்கொண்டு வந்து வைக்கிறார்.ஸ்ரீபெரியவா தனது கமலங்களை மூடி
தியானிப்பதுபோல் சில நிமிடங்கள் செய்கிறார். அதுவரைசக்தியில்லாமல் சோர்வாகக்
கிடந்த நாய் ‘மட மட’வென்று அருகே வைத்த பால் அத்தனையும் குடித்துவிடுகிறது.
அதற்கு புது தெம்பு உண்டானது போல்’வள்வள்’ என்று விடாமல் சில
நிமிடங்கள்குரைத்தபின் சமாதானமாகிறது.இதைப் பார்த்தசெல்வந்தருக்கும்,அங்கே
இருந்த அனைவருக்கும் இந்த மகிமை ஆச்சரியத்தை உண்டாக்குகிறது.ஆனால் பெரியவாளோ,”
இதில் அதிசயக்க ஒன்றுமேஇல்லை” என்னும் அர்த்தத்தோடு தனது மேன்மையைமறைக்கும்
அடக்கத்தோடும் சொல்கிறார்,”திருடங்க வந்தா மந்திர சக்தியாலே நாயை
கட்டிப்போட்டுடுவா.தோல் செருப்பாலே அதை போக்கிடலாம்”என்று சொல்லிவிட்டு
ஸ்ரீமடத்தில் நுழைந்தார்.இந்த ஒரு மாபெரும் தெய்வத்திடம் நாம்
கொள்ளும்சரணாகதி, நமக்கெல்லாம் நல்கதி நல்கி சகலஐஸ்வர்யங்களையும், சர்வ
மங்களங்களையும்அள்ளி வழங்குமென்பது சாத்யமல்லவா?.

பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு 5 அறைகள்: வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பு

Cells Were Left Unlocked For VK Sasikala s Personal Use - 2026

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு 5 அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதனை அவர் பயன்படுத்தினார் என தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. (அம்மா) அணியின் பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறைவாசம் அனுபவித்து வரும் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வந்தாலும், அவருக்கு சிறையில் எந்தவொரு சிறப்பு சலுகையும் வழங்கப்படவில்லை என்றும், சாதாரண கைதி போலவே அவர் நடத்தப்படுகிறார் என்றும் சிறைத்துறை அதிகாரிகள் கூறி வந்தனர்.

இந்நிலையில், பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த 10ஆம் தேதி டிஐஜி.,யாக இருந்த ரூபா ஆய்வு செய்து, அங்கு சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருப்பதாகக் கூறினார். இதுதொடர்பாக கடந்த 12ஆம் தேதி சிறைத்துறை டிஜிபி.,யாக இருந்த சத்தியநாராயண ராவிடம் அவர் அறிக்கையும் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் சசிகலாவுக்கு தனி சமையல் அறை உள்பட சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக ரூ.2 கோடி லஞ்சம் வாங்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டி இருந்தார். இதனை சத்தியநாராயண ராவ் மறுத்து வந்தார்.

இந்நிலையில் சசிகலாவை சந்திக்க வருபவர்களுடன், அவர் பேசுவதற்காக தனி அறை ஒதுக்கப்பட்டு அங்கு நாற்காலிகள் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியானது. மேலும் பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு 5 அறைகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சசிகலா தூங்குவதற்கு வசதியாக ஒரு அறையும் (பெட்ரூம்), தனி சமையல் அறையும், அவர் பயன்படுத்தும் பொருட்கள் வைக்க ஓர் அறையும், அவரை சந்திக்க சிறைக்கு வருபவர்களுடன் பேசுவதற்காக பார்வையாளர் அறையும், யோகா உள்ளிட்ட உடற்பயிற்சி செய்ய மற்றொரு அறையும் என மொத்தம் 5 அறைகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த அறைகள் பற்றி வெளியே தெரியாதபடி முன்பக்க கதவுகளில் துணி போட்டு மூடப்பட்டுள்ளன. சசிகலா தங்கி இருக்கும் சிறை அறைக்கு மற்ற பெண் கைதிகள் செல்ல முடியாத அளவுக்கு பாதுகாப்பாக, இரும்புக் கதவு உள்ளது.

ரூ.2 கோடி லஞ்சம் பெற்றுக் கொண்டு சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ரூபா கூறிய குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில், சசிகலாவுக்கு 5 அறைகள் ஒதுக்கப்பட்டு இருப்பது தொடர்பான வீடியோ காட்சிகள் நேற்று ‘டைம்ஸ் நவ்’ மற்றும் சில கன்னட தொலைக்காட்சி சேனல்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வெளியானது.

சிறையில் ஆய்வு செய்தபோது தான் எடுத்திருந்த வீடியோ காட்சிகள் அழிக்கப்பட்டிருப்பதாக ரூபா தனது 2 ஆவது அறிக்கையில் குறிப்பிட்டிருந்த நிலையில், தற்போது அந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருப்பதாகக் கூறி வெளியான வீடியோ காட்சிகள் சசிகலா அறைதானா என்பதை கர்நாடக சிறை அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை.

நைட்டியில் உலா வரும் சிறைக் கைதி சசிகலா: வீடியோ வெளியாகி பரபரப்பு

sasikala in jail - 2026

பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகள், சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளதாக வெளியான புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது உண்மைதான் என்று கூறும் வகையில் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறைத்துறை டிஐஜியாக இருந்த ரூபா சிறையில் ஆய்வு மேற்கொண்டு அம்மாநில டிஜிபி தத்தாவுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பினார். இந்த விவகாரம் பெரும் புயலைக் கிளப்பியது. அதில் சசிகலா சிறை அதிகாரிகள், சிறைத்துறை டிஜிபி ஆகியோருக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து பல்வேறு சலுகைகளையும், வசதிகளையும் அவர் பெற்றதாகக் கூறப்பட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை உருவாக்கிய நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்த கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டார். இதையடுத்து இந்தச் சம்பவத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த டிஐஜி ரூபாவும், புகாருக்கு உள்ளான சத்யநாராயண ராவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் சசிகலா சிறையில் நைட்டியுடன் உலா வரும் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் சசிகலாவின் குரல் தெளிவாகக் கேட்கிறது. மேலும் சிறையில் சசிகலாவுக்கு உள்ள வசதிகளும் அந்த வீடியோவில் சுட்டிக் காட்டப்படுகிறது. சிறையில் கைதிகளுக்கான உடையை அணியாமல் சசிகலா நைட்டியுடன் உலா வருவது, டிஐஜி ரூபா சொன்ன குற்றச்சாட்டுகளை நிரூபிப்பது போல் உள்ளது…

Video source: Prajaa TV

யாரிவன்: அறிமுகக் காட்சியில்!

யாரிவன்: அறிமுகக் காட்சியில்!

[su_youtube url=”https://youtu.be/uFTvV31TQSM” width=”720″ autoplay=”yes”]

வாஞ்சிநாதன் 131வது பிறந்தநாள் விழா

செங்கோட்டையில் சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் 131 வது பிறந்தநாள் விழா
முத்துசாமி பூங்காவில் உள்ள வாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் நடந்தது.

மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடந்த விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் பூ.
முத்துராமலிங்கம் தலைமை தாங்கி வாஞ்சிநாதனின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து
மரியாதை செலுத்தினார்.

இதில் தென்காசி கோட்டாட்சியர் ராஜேந்திரன், நாட்டு நலப்பணித் திட்ட மாவட்ட
தொடர்பு அலுவலர் ஜீவா உள்ளிட்ட அரசு அதிகாரிகள், ஆசிரிய-ஆசிரியைகள் மற்றும்
மாணவ,மாணவிகள் பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

P 20170717 111039 - 2026

வீரவாஞ்சி சிலைக்கு மரியாதை

IMG 20170717 WA0020 - 2026

நெல்லை மாவட்டம் செங்கோட்டை யில் வீர வாஞ்சிநாதன் 131வது பிறந்தநாளை
முன்னிட்டு அவரது மணிமண்டபத்தில் உள்ள திரு உருவ சிலைக்கு நெல்லை மாவட்ட
வருவாய் அலுவலர் முத்து ராமலிங்கம் ,தென்காசி கோட்டாட்சியர் ராஜேந்திரன்,
உள்ளிட்ட அதிகாரிகள் ,மாணவ,மாணவிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளராக வெங்கய்ய நாயுடு!

venkaiah-naidu

புது தில்லி:

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் பாஜகவின் சார்பில் வேட்பாளராக வெங்கய்ய நாயுடு அறிவிக்கப் பட்டிருக்கிறார். அவர் பெயரை கட்சியின் தலைவர் அமித் ஷா அறிவித்தார்.

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் யார் போட்டியிடுவது என்று பலத்த விவாதம் கட்சிக்குள் எழுந்தது. இருப்பினும், பலரின் தேர்வாக வெங்கய்ய நாயுடுவின் பெயரே இருந்தது.

அவர், நாடாளுமன்றத்தில் திறம்படச் செயலாற்றி வருபவர். பழுத்த அனுபவம் கொண்டவர். குடியரசுத் துணைத் தலைவர்தான், மாநிலங்களவைக்கும் தலைவராக இருந்து வழிநடத்துபவர் என்பதால், இதற்கு நாடாளுமன்ற அனுபவமும் தேவைப்படுகிறது. எனவே வெங்கய்ய நாயுடு பொருத்தமாக இருப்பார் என்று கருதப் பட்டது.

இத்தகைய பின்னணியில் இன்று கட்சியின் தலைவர் அமித் ஷா தலைமையில் கட்சியின் நாடாளுமன்றக் குழு கூடி, வெங்கய்ய நாயுடு பெயரை தேர்வு செய்தது. மேலும் சிலர் பெயர் அடிபட்டாலும், இறுதியில் இவர் தேர்வாகியிருக்கிறார். இதன் மூலம் தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒருவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த அமித் ஷா, வெங்கய்ய நாயுடு நாளை மனுத் தாக்கல் செய்வார் என்று கூறினார்.

“உன் பாட்டி எப்படி செத்துப்போனாள்? தெரியுமோ?”

295603 479182172136829 1054166438 n 2 - 2026

“உன் பாட்டி எப்படி செத்துப்போனாள்? தெரியுமோ?”
(அந்த ரகசியம் பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது?

.அது பரம ரகசியம்!)​

சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு.தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.

* தட்டச்சு-வரகூரான் நாராயணன்.நடுத்தர வயது தம்பதிகள்
தரிசனத்துக்குவந்தார்கள். முகத்தில் ஏக்கம் தெரிந்தது.”கல்யாணமாகி பத்து
வருஷமாச்சு…

*சந்ததி இல்லை..”‘மேலே சொல்லு’ என்று கேட்கிறமாதிரிபெரியவாள் பார்த்தார்கள்.

“ராமேஸ்வரத்தில் நாகப் பிரதிஷ்டை..

பண்ணினேன். சந்தானகோபால மந்திரம்ஆயிரக்கணக்காகப் பண்ணினேன்…”பெரியவாள்
கண்களை மூடிக்கொண்டுமௌனமாக
இருந்தார்கள்.”உன் பாட்டி எப்படி செத்துப்போனாள்?தெரியுமோ?”வந்தவருக்கு,
சாட்டையால் அடித்தாற்போல்இருந்தது. ‘இத்தனை பேர்கள் எதிரில், அதைஎப்படிச்
சொல்வது?’பெரியவாள் சொன்னார்கள்.”உன் தாத்தா ரொம்ப முன்கோபி.சதா
காலமும்பாட்டியைத் திட்டுவார்.அடிப்பார். அவர் அட்டகாசம் பொறுக்கலே.
ஒருநாள் உன் பாட்டிகொல்லைக் கிணத்திலே விழுந்து
தற்கொலைபண்ணிண்டுட்டா…””உன் குடும்பத்துக்கு ஸ்திரீ சாபம் இருக்கு.
நல்லஜோஸ்யர் – உபாசகர்களிடம் கேட்டு பரிஹாரம் செய்.அப்புறம் புத்திரப்
பிராப்தி உண்டாகும்…”தம்பதிகள் நெகிழ்ந்தே போனார்கள்.பாட்டி கிணற்றில்
விழுந்தது அந்த பையனுக்குதெரியும். (அவன் மனைவிக்குக்கூட அதுவரைசொன்னதில்லை!)
அந்த ரகசியம் பெரியவாளுக்குஎப்படித் தெரிந்தது?.அது பரம ரகசியம்!

கர்னாடக ஐ.பி.எஸ் அதிகாரிகள் 5 பேர் இடமாற்றம்

IMG 20170717 WA0007 - 2026

கர்னாடக ஐ.பி.எஸ் அதிகாரிகள் 5 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.