Home Blog Page 5590

மாம்பழ சங்கம் 237 வது கிறிஸ்தவ தோத்திர பண்டிகை

20170713 161612 - 2026

மாம்பழ சங்கம்

இன்று 237 வது

கிறிஸ்தவ தோத்திர பண்டிகை

என்னது மாம்பழ சங்கம் கிறிஸ்தவ தோத்திர பண்டிகையா ? என ஆச்சர்யமா இருக்கா
?

ஆமாங்க திருநெல்வேலி டயோசீசனில் நடக்கும் பண்டிகை இது ?

வாடிகனில் போய் இதை கேட்டால்
வாட் மாம்பழம் வாட் தோத்திரம் என்பார் போப்பாண்டவர்

பாளையங்கோட்டை சித்த மருத்துவ கல்லூரி அருகிலுள்ள நூற்றாண்டு மண்டபத்தில்
நடைபெறும்

அந்த பகுதி முழுவதும் பிச்சைகாரர்கள் கூட்டமாக. (நெசமா தாங்க) ஜே ஜே என
இருக்கும்

கிறிஸ்தவ பள்ளிகளுக்கு விடுமுறை

237 வது ஆண்டு பண்டிகை

ஆணி மாதம் கடைசி செவ்வாய் மாலை துவங்கி மறுநாள் புதன்கிழமை நிறைவு பெறும்

என்னப்பா கிறிஸ்து தோன்றி கிறிஸ்தவ விழாக்கள் தோன்றி 2000 வருஷமாச்சே

இது மட்டும் என்ன 237 வருஷம் என கேட்கிறீர்களா

அமெரிக்க , ஐரோப்பா போன்ற கிறிஸ்தவ நாடுகளில் தெரியாத விழா
அவ்வளவு ஏன் மதுரை சென்னை நாகபட்டினம் வேளாங்கண்ணியில் கூட நடைபெறாத விழா
திருநெல்வேலியில் மட்டும் ஏன் ?

அதுவும் தமிழ் மாதங்களை புறந்தள்ளி கிறிஸ்தவ ஆங்கில தேதிகளில் இந்துக்களே
பிறந்தநாள் கொண்டாடும் நிலையில்

ஆணி மாதம் கடைசி செவ்வாய் நாளை கணக்கிட்டு கிறிஸ்தவ விழா வா? என ஆச்சரியமா
இருக்கா ?

இந்த பண்டிகையின் நோக்கம் என்ன?

உலங்கெங்கிலும் கிறிஸ்தவத்திற்கும் இந்த பண்டிகைக்கும் என்ன தொடர்பு?

பைபிளில் மாம்பழசங்கம் பற்றி எங்குள்ளது

என கிறிஸ்தவர்களிடம் கேளுங்கள்

தெரியாது என்பர்.
தெரிந்தாலும் விழா பிண்ணனியை சொல்ல மாட்டார்கள்

இந்த விழாவின் பிண்ணணி தெரிந்தால் இன்னும் ஆச்சரியத்தில் வாயடைத்து போவீர்கள்.

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் (மூன்று சிறு ஆறுகள் சங்கமிக்கும்)
தாமிரபரணி கரையில் அமைந்துள்ள கோவில்
அருள்மிகு முத்துமாலையம்மன் கோவில்

இம்மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற இக்கோவில் கொடை விழா மிகவும் சிறப்பு
வாய்ந்தது
அனைத்து சமுதாயத்தினரும் வழிபடும் கோவில் என்றாலும் கூட
இந்து நாடார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட திருக்கோவில் ஆகும்.

அவர்கள் பல்லாண்டுகளாக கொடை விழாவை சிறப்பாக நடத்துகின்றனர்.
(தற்போது அதில் அறமில்லா நிலைய துறை தலையிட்டு கெடுபிடி செய்து வருதும் இந்து
இயக்கங்கள் போராடி வருவது ஒரு பக்கம்)

இந்த கொடைவிழா வெகு விமரிசையாக நடைபெறும். நெல்லை மாவட்டத்தின் பல்வேறு
பகுதிகளில் உள்ள இந்துக்கள் குறிப்பாக நாடார் சமுதாய மக்கள் மாட்டு
வண்டியிலும் பாதயாத்திரையாகவும் தற்காலங்களில் ஆட்டோவிலும் வேணிலும்
குடும்பத்தோடு வந்து கிடாய் வெட்டி பொங்கலிட்டு சாப்பிட்டு மிதமுள்ள கறியை
வண்டியின் உச்சியில் காய வைத்து தொங்கவிட்டு மறுநாள் புதன்கிழமை மதியத்திற்கு
மேல் ஊருக்கு திரும்புவார்கள்.

இந்த கொடை விழா நடைபெறுவது ஆனி கடைசி செவ்வாய்க்கிழமை

நெல்லை மாவட்ட நாடார் சமுகத்தினர் பலர் கிறிஸ்தவர்களாக மதம் மாற்றப்பட்ட
பின்னரும் பாரம்பரியமான இந்த பழக்கத்திலிருந்து மாறாமல் முத்துமாலையம்மன்
கோவில் கொடைக்கு சென்று வழிபட்டு வந்தனர்.

இதை தடுத்து முத்துமாலையம்மனை மறக்கடிக்க செய்து கிறிஸ்தவத்திலேயே அவர்களை
தக்க வைத்து கொள்வதற்காக உருவாக்கப்பட்ட விழா தான்

அதே போல ஆனி கடைசி செவ்வாய் மாலை துவங்கி மறுநாள் புதன்கிழமை மாலை முடிவடையும்

மாம்பழ சங்கம் தோத்திர பண்டிகை 237து ஆண்டு

வாடிக்கையாளரை கவர்ந்திழுக்க உலகிலேயே ஆடி கழிவு முறையை (RMKV) உருவாக்கிய
திருநெல்வேலி மண்ணுக்கு இது புதிதல்ல

அதே முறை தான்

எங்கே மதம் மாறிய கிறிஸ்தவர்கள் முத்துமாலையம்மன் கொடைக்கு சென்று மீண்டும்
இந்துவாகி விடுவார்களோ என்ற அச்சத்தில்

அவர்களை அங்கு போக விடாமல் தடுத்து திசைதிருப்ப

அதே ஆனி கடைசி செவ்வாயில் கொண்டாடப்படும் விழா தான் இந்த மாம்பழசங்கம்

“வா, சங்கரா, இப்படி வந்து உட்கார் ” –பெரியவா

246400 479182102136836 1433845875 n 2 - 2026

“வா, சங்கரா, இப்படி வந்து உட்கார் ” –பெரியவா

(கண் தெரியாத சங்கரனுக்காக காஷ்டமௌனம் கைவிட்ட பெரியவா)—–( நீங்கள்
எல்லோரும் விடியற் காலையில் என்னைக் கண்டு சந்தோஷப்படுகிறீர்கள் ஆனால் கண்
தெரியாத சங்கரனுக்கு எப்படி
சந்தோஷம் ஏற்படும்? அதனால்தான் என் குரலைக் கேட்டாவது சந்தோஷப்படட்டுமென்று
பேசினேன்” என்றார்கள்)

சொன்னவர்-திருவாடானை ‘வன்தொண்டர்’ சங்கர அய்யர்.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

புதுக்கோட்டையில் ஆறாவது வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போது ‘வெள்ளையனே
வெளியேறு’ போராட்டத்தில் கலந்து கொண்டு துப்பாக்கிச் சூட்டினால் அவருடைய
கண்கள் பாதிக்கப்பட்டன. முதுமலையில் தலைமறைவாக இரண்டு வருஷம் இருந்தார்.
இரண்டு கண்களும் முழுதும் குருடாய் விட்டன.சொல்ல முடியாத துக்கத்துடன் தேவகோட்டை
ஜமீந்தார் என்று பிரசித்தி பெற்ற
கொடை வள்ளலான நாட்டுக்கோட்டை செட்டியாருடன் 1950-ல் முதல் முதலில் ஸ்ரீபெரியவாளை
தரிசனம் செய்தார். அதுவே அவர் வாழ்க்கையில் திருப்புமுனை.

ஸ்ரீபெரியவாள், “சங்கரா, நீ தொண்டு செய்வதற்காகவே உன்னைக் கடவுள் இப்படி
சோதனைக்குட்படுத்தியிருக்கிறார். ஒரு குறைவும் வராது. தொண்டு செய்து கொண்டே
இரு” என்று ஆசீர்வாதம் செய்த உடனேயே பல வருடங்களாக அனுபவித்த துக்கம் இருந்த
இடம் தெரியாமல் மனது இலேசாகி விட்டது.

பிறகு,தமிழை நன்றாகக் கற்று சைவ,வைணவ நூல்களை,முழுவதும் மனப்பாடம்
செய்யும் அளவிற்குத்
தேர்ச்சி பெற்று,குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார்.
அருணகிரிநாதரின் கந்தரனுபூதி இவருக்குப் பிரியமான நூல். இவருடைய சொந்தக்காரப்
பெண் ஒருத்தி தானாக முன் வந்து விவாஹம் செய்து கொண்டாள். சங்கர அய்யர் ஊர்
ஊராகச் சென்று
பையன்கள்,பெண்களுடன் பஜனை செய்வது வழக்கம்.நாடகமும் நடத்துவார்.
குழந்தைகளுக்கு பரீக்ஷை வைத்து பரிசுகள் கொடுப்பார். இதில் கிருஸ்தவ,முஸ்லீம்
மாணவர்கள் கூட சேருவதுண்டு

இவர் செய்யும் தமிழ் சேவையைப் பாராட்டி கிருபானந்தவாரியார் இவருக்கு
‘வன்தொண்டர்’ என்று பட்டம் சூட்டினார்.

ஸ்ரீபெரியவாளை தரிசனம் செய்யும் போதெல்லாம் தேவாரம்,திருவாசகம்,திருக்குறள்
முதலியவைகளைப்பற்றித்தான் பேச்சு. ஸ்ரீபெரியவாளைப் பற்றிக்கூறினாலே கண்ணீர்
பெருகும். ‘அவர்களைப் போல்தமிழறிந்தவர்கள் வேறு யார் உளர்?’ என்ற வியப்பு.

இப்பொழுது அவருக்கு வயது எழுபத்தாறு. (கட்டுரை வெளியான ஆண்டு 2005) அவருடைய எழுபது
வயதில், இப்போது முன்னேற்றமடைந்த கண் சிகிச்சையினால் கண்பார்வை திரும்பக்
கிடைக்கும்
என்று நண்பர்கள் விளக்கிய போது அவர் “ஸ்ரீபெரியவாள் அனுக்ரஹத்தினால் கண்
தெரியாமலேயே
சந்தோஷமாயிருக்கிறேன்.இனிமேல் கண் பார்வை பெற்று என்ன ஆக வேண்டியிருக்கிறது?”
என்று மறுத்து விட்டார்.

1958ம் வருஷம் ஸ்ரீபெரியவாள் சென்னை சம்ஸ்கிருத கலாசாலையில் முகாமிட்டிருந்த
போது விடியற்காலையில் விஸ்வரூப தரிசனத்திற்காக தேவகோட்டை ஜமீந்தாருடன்
சென்றிருந்தார்.
அப்பொழுதெல்லாம் பெரியவாள் காலை வேளையில் காஷ்ட மௌனமாக இருப்பது வழக்கம்.
ஆனால் இவர்கள் இருவரும் வந்ததும் பெரியவாள், “வா, சங்கரா, இப்படி வந்து
உட்கார் ” என்று
சொன்னதும் எல்லோருக்கும் ஆச்சர்யம்.

சாயங்காலம் தீப நமஸ்காரம் ஆன பின்பு ஸ்ரீபெரியவாள்,”இன்று காலையில்
மௌனத்தை விட்டுப்
பேசியது உங்கள் எல்லோருக்கும் ஆச்சர்யம். ஆனால் ஒருவருக்கும் காரணம் தெரியவில்லை.
நீங்கள் எல்லோரும் விடியற் காலையில் என்னைக் கண்டு சந்தோஷப்படுகிறீர்கள் ஆனால்
கண் தெரியாத சங்கரனுக்கு எப்படி சந்தோஷம் ஏற்படும்? அதனால்தான் என்
குரலைக் கேட்டாவது
சந்தோஷப்படட்டுமென்று பேசினேன்” என்றார்கள்.

சபாஷ்… ரூபா திவாகர்… இதுதான் அரசுப் பணி

IMG 20170713 WA0007 - 2026

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் நடக்கும் முறைகேடுகளை வெளிச்சத்துக்குக்
கொண்டு வந்திருக்கிறார் கர்நாடக சிறைத்துறையின் முதல் பெண் டி.ஐ.ஜி ரூபா
திவாகர் ஐ.பி.எஸ். சிறைத்துறை டி.ஜி.பி மீது அவர் சுமத்திய
குற்றச்சாட்டுகளுக்கு உயர் மட்டக் குழு விசாரணையை அமைத்திருக்கிறார் முதல்வர்
சித்தராமையா. ‘என்னுடைய பணியின் ஓர் அங்கம் இது. சிறையில் நடந்த முறைகேடுகள்
அனைத்துக்கும் ஆதாரம் இருக்கின்றன’ என அதிர வைக்கிறார் ரூபா.

கர்நாடக சிறைத்துறையின் டி.ஐ.ஜியாக பதினைந்து நாள்களுக்கு முன்பு
நியமிக்கப்பட்டார் ரூபா திவாகரன் ஐ.பி.எஸ். பணிக்குச் சேர்ந்த நாள் முதலாகவே,
சிறைத்துறையில் நடக்கும் மோசடிகள் குறித்த ஆதாரங்களைச் சேகரித்து வந்தார்.
கடந்த 10 ஆம் தேதி பரப்பன அக்ரஹாரா சிறையில் அதிரடி சோதனையை நடத்தினார்.
இதுகுறித்து விளக்கம் கேட்டு சிறைத்துறை டி.ஜி.பி சத்திய நாராயண ராவ் நோட்டீஸ்
அனுப்பினார். இதற்குப் பதிலளித்த ரூபா, ‘ சிறைக்குள் சசிகலாவுக்குத் தேவையான
அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன. தனி சமையலறையே செயல்பட்டு
வந்துள்ளது. இதற்காக, இரண்டு கோடி ரூபாய் வரையில் லஞ்சம் பெற்றுள்ளனர்’ என
விளக்கம் அளித்தார். இந்த விளக்கம் பத்திரிகைகளில் வெளியாகி, டி.ஜி.பிக்குக்
கூடுதல் நெருக்கடியைக் கொடுத்தது. துறையின் உயர் அதிகாரி மீதான
குற்றச்சாட்டுகளுக்கு இன்று அவர் விளக்கம் அளித்தபோது‘ இந்த ஊழலில்
டி.ஜி.பிக்கும் பங்கு உண்டு’ எனப் பகிரங்கமாகவே சுட்டிக் காட்டினார்.

“இதுதான் அவருடைய சுபாவம். அரசுப் பணியில் நேர்மையாகச் செயல்படுவது என்பது
அதிகாரிகளின் கடமைகளில் ஒன்று. அதை மிகச் சரியாகக் கடைபிடித்து வருகிறார்.
அவருடைய குடும்பத்தில் பெற்றோர் இருவரும் அரசு அதிகாரிகள். அவருடைய தங்கை
ரோகிணி, ஐ.ஆர்.எஸ் அதிகாரி” என விவரித்த பெங்களூரு அரசு அதிகாரி ஒருவர்,
“வெறுமனே பேட்டிகளின் மூலம் மட்டுமே, அதிர வைக்கும் அதிகாரியாக அவர்
இருந்ததில்லை. ஐ.பி.எஸ் பணியில் நேர்மையாக செயல்பட்டவதற்குப் பல பரிசுகளை
வாங்கியிருக்கிறார். அதேபோல், பலவித சோதனைகளையும் கடந்தே வந்திருக்கிறார்.
அவர் பிறந்து வளர்ந்ததெல்லாம் கர்நாடகா மாநிலம், தாவனகரே பகுதிதான். படிக்கும்
காலத்திலும் சிறந்த மாணவியாக வலம் வந்தார். அவருடைய 15-வது வயதில் அப்போதைய
பிரதமர் வி.பி.சிங் கையால், ‘சிறந்த என்.சி.சி மாணவி’ என்ற விருதையும்
பெற்றார். பத்தாம் வகுப்பு மற்றும் பியூசி படிப்புகளில் கர்நாடக மாநில ரேங்க்
பெற்றவர் என்பது கூடுதல் தகவல்.

கல்லூரியிலும் முதுநிலை உளவியல் படிப்பைத் தங்கப்பதக்கத்துடன் நிறைவு செய்த
பெருமை ரூபாவுக்கு உண்டு. அவருடைய முக்கியமான பொழுதுபோக்கே அழகிப் போட்டிகளில்
பங்கு பெறுவதுதான். ‘மிஸ் தாவனகரே’ பட்டத்தையும் வென்றுள்ளார். துப்பாக்கிச்
சுடுதல் போட்டிகளில் அவர் குவித்துள்ள பதக்கங்களுக்கு அளவே இல்லை.
பரதநாட்டியம், ஹிந்துஸ்தானி இசை என அனைத்தும் அவருக்கு அத்துப்படி. 2000-ம்
ஆண்டு நடந்த அகில இந்திய குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்றவர், காக்கிச்
சட்டையின் மீதிருந்த காதலால் ஐ.பி.எஸ் பணியைத் தேர்வு செய்தார்.
பயிற்சிக்காலத்திலேயே ஐந்தாம் இடத்தைப் பிடித்து, ‘சிறந்த அதிகாரி’ எனப் பெயர்
வாங்கியவர். 2003-ம் ஆண்டு முனிஷ் மோட்கில் என்பவரைக் காதல் திருமணம் செய்து
கொண்டார். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த முனிஷ் மோட்கில் ஐஏஎஸ், தற்போது
கர்நாடகாவின் குல்பர்கா மாவட்டத்தின் மின்சார நிறுவன இயக்குநராக உள்ளார். இந்த
ஆட்சிப் பணி தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்” என்றார் விரிவாக.

“ரூபா பணிபுரியும் இடங்களில் எல்லாம் பெண்களின் பாதுகாப்புக்குக் கூடுதல்
முக்கியத்துவம் கொடுப்பார். ‘எவ்வளவு இடர்ப்பாடுகள் வந்தாலும்,
கர்நாடகாவைவிட்டு நகர மாட்டேன்’ என அடிக்கடி சொல்வார். ஒருமுறை பணி நிமித்தமாக
வேறு மாநிலத்துக்கு அவர் கணவர் இடம் பெயர்ந்தபோதும், கர்நாடகாவைவிட்டு அவர்
நகரவில்லை. அவர் பணியாற்றிய இடங்களில் எல்லாம் அதிரடி இல்லாமல் இருந்ததில்லை.
2007-ம் ஆண்டு பா.ஜ.கவின் முன்னணி தலைவர்களில் ஒருவரான உமா பாரதி, ஹூப்ளி
மாநகரத்தில் கால் வைத்தவுடன் கைது செய்தார். இந்த நடவடிக்கையை சக அதிகாரிகளே
எதிர்பார்க்கவில்லை. அரசியல்ரீதியாக எந்த நெருக்கடி என்றாலும், அதை
எதிர்கொள்வதில் ரூபாவுக்கு நிகர் அவர்தான்” என உற்சாகமாகப் பேசிய ரூபாவின்
நண்பர் ஒருவர்,

“பெங்களூரு காவல்துறை கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்றபோது, ‘மக்களுக்குச் சேவை
செய்யத்தான் காவல்துறை’ என உறுதியான நிலைப்பாடு எடுத்து, அரசியல்வாதிகளுக்கும்
முக்கியப் பிரமுகர்களுக்கும் அளித்து வந்த அதிகப்படியான போலீஸ் பாதுகாப்பைத்
தளர்த்தினார். இதனைத் தொடர்ந்து, ‘பதவியில் இல்லாத முன்னாள் முதல்வர்
எடியூரப்பாவுக்கு அதிகப்படியான சேவைகள் வழங்கப்படுகின்றன’ எனக்கூறி பாதுகாப்பு
வாகனங்களையும் போலீஸ் அதிகாரிகளையும் குறைத்து அதிரடி காட்டினார். பொறுப்பான
காவல்துறை அதிகாரியாக மட்டுமல்லாமல், பெண் உரிமை, பாதுகாப்பு ஆகியவற்றுக்காகக்
குரல் கொடுப்பதை அடிப்படை கடமையாக வைத்திருக்கிறார் ரூபா திவாகர்” என்றார்
நெகிழ்ச்சியோடு.

370வது சட்டப் பிரிவை நீக்குங்கள்; காஷ்மீர் இந்தியாவின் அங்கம் என ஒரே வாரத்தில் உலகம் உணரும்: சிவசேனா

uddhav thackeray - 2026

மும்பை:

காஷ்மீர் குறித்த சிறப்புப் பிரிவு 370வது சட்டப் பிரிவை நீக்குங்கள், அப்போது காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத அங்கம் என ஒரே வாரத்தில் உலகம் உணர்ந்து கொள்ளும் என்றும், அமர்நாத் யாத்திரையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுடன் போரிட பசு பாதுகாவலர்களை அனுப்புங்கள் எனவும் சிவசேனா கட்சி காட்டமாக விமர்சித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் அதிகார பூர்வ பத்திரிகையான சாம்னாவில் வெளியான கட்டுரையில்,

‘இதுபோன்ற தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தப் போவது யார்? பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு வெற்றுத் தாள்களில் கண்டனம் தெரிவித்துவிட்டு, வெறுமனே கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தால் போதுமா? காஷ்மீரில் செயல்பட்டு வரும் அரசு முற்றிலும் செயலிழந்து விட்டது. காஷ்மீரில் நடந்து வருபவை எல்லாம் நாட்டின் ஒற்றுமைக்கு ஆபத்தைத்தான் விளைவிக்கும். காஷ்மீரில் பயங்கரவாதிகள் வன்முறையில் ஈடுபடுகின்றனர், பயங்கரவாதச் செயல்களை நடத்தி வருகின்றனர். தற்போது காஷ்மீரில் நடக்கும் பயங்கரவாதச் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் 56 இஞ்ச் மார்பளவு கொண்டவரின் அரசு தேவைப்படுகிறது.

பாகிஸ்தானுக்கும் பயங்கரவாதிகளுக்கும் கடும் எச்சரிக்கை விடவேண்டும். காஷ்மீரில் சட்டப்பிரிவு 370ஐ நீக்கி விட்டால் போதும், ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத மாநிலம் என்பதை ஒரே வாரத்தில் உலகம் உணர்ந்து கொள்ளும்’ என்று கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே கூறுகையில், ‘மத்தியில் ஆள்பவர்கள், விளையாட்டு, கலாசாரம் போன்ற விவகாரங்களுக்கு அரசியல் சாயம் பூச வேண்டாம் என்கின்றனர். ஆனால் இப்போது மதம் மற்றும் அரசியல் விவகாரங்களில்தான் பயங்கரவாதத் தாக்குதல் அதிகரித்து வருகிறது. மாடுகளை இறைச்சிக்காகக் கொண்டு செல்பவர்களைக் கண்டுபிடித்து அவர்களிடம் இருந்து மாடுகளைப் பறிமுதல் செய்து வரும் பசுப் பாதுகாவலர்களை, அமர்நாத் யாத்திரையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுடன் போரிட ஏன் அனுப்பக் கூடாது?’’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதுபோல், சிவசேனா கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் கூறுகையில், அமர்நாத் யாத்திரையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் பக்தர்கள் மீது நடத்தப்பட்டதல்ல. ஒட்டுமொத்த நாட்டின் மீதும், மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜக., மீதும் நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும். இந்தத் தாக்குதலுக்கு கடும் பதிலடி கொடுக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட பாஜக., ‘பிரதமர் பதவிக்குப் போட்டியிடும் மோடி 56 இஞ்ச் மார்பளவு கொண்டவர். அதனால் அவர் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குவார்’ என பிரசாரம் செய்தது.

அதை அடுத்து தேர்தலில் பாஜக., வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. அதன் பின்னர், அண்டை நாடான பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், 56 இஞ்ச் மார்பளவு கொண்ட பிரதமர் அந்தத் தாக்குதலை உடனே தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில் அமர்நாத் யாத்திரீகர்கள் மீது, பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் பக்தர்கள் 7 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 19 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்நிலையில்தான், பாஜக.,வுடன் கூட்டணி வைத்துள்ள சிவசேனா, தனது கட்சி பத்திரிகையான ’சாம்னா’வில், இவ்வாறு காட்டமாக மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக.,வை விமர்சித்துள்ளது.

“இதயத் துடிப்பை இயங்கச் செய்த மகாபெரியவா!”

10406745 859208287442471 99817598003990377 n 2 - 2026

“இதயத் துடிப்பை இயங்கச் செய்த மகாபெரியவா!”

“இனிமே ஒடம்புக்கு ஏதாவதுன்னா,பகவானைக் கூப்டு!
போயும்,போயும் என்னையா கூப்டுவே?-பெரியவா

(அன்னிக்கு என்னை என்னோட பகவான்தான்
காப்பாத்தினார்.! என்னோட தெய்வம் நீங்கதானே!”)

நன்றி-இன்றைய குமுதம் லைஃப்-கௌரி சுகுமார்.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர், அஸ்ஸாமில் உள்ள டீ
எஸ்டேட்டில்,பொறுப்பான பதவியில் இருந்தார்.
மகாபெரியவாளிடம் அப்படியொரு நம்பிக்கை,ப்ரேமை,
அபார பக்தி கொண்டவர் அவர்.

வேலை அஸ்ஸாமில் என்பதால் குடும்பத்தோடு அங்கேயே
குடியேறி வசித்தார்.காலம் வேகமாக நகர்ந்து அவர்
வேலையிலிருந்து ஓய்வு பெறும் நேரம் வந்தது. அவரது
பணித்திறமையை அறிந்த அங்கிருந்தவர்கள் அவருக்கு,
மேலும் நிறைய சம்பளத்தோடு அங்கேயே வேலை
தருவதாகவும் அங்கேயே இருக்குமாறும் சொன்னார்கள்.
ஆனால் அதை ஏற்காமல்,அப்படியே நிராகரித்தார்.

“ஓய்வுக்குப் பிறகும் சம்பாதிப்பதற்கு அரிய வாய்ப்பு
கிடைக்கிறது. அதை ஏன் மறுக்கிறீர்கள்? என்ன காரணம்?
என்று சிலர் கேட்டார்கள்.

“பணம் சம்பாதிச்ச வரை போறும்.இனிமே ஆத்ம திருப்திதான்
சம்பாதிக்கணும்.அதுக்கு மகா பெரியவா காலடியல என்னோட
மிச்ச வாழ்நாளை செலவிடப்போறேன்…!” தன்னுடைய
அசைக்க முடியாத முடிவைச் சொன்னார்.

யாருக்கு வரும்? பணம் சம்பாதித்தது போதுமென்ற மனஸ்?

புறப்பட வேண்டிய நாளுக்கு சில நாட்கள் முன்னதாகவே
குடும்பத்தாரை முதலில் காஞ்சிபுரத்துக்கு அனுப்பிவிட்டார்.
அவருக்கு இன்னும் முடித்துக் குடுக்க வேண்டிய பொறுப்புகள்
கொஞ்சம் இருந்தது. அவருடைய பொறுப்பான பதவிக்காக,
வீட்டில் இருக்கும் பணியாட்கள் தவிர, அவரோடு எப்போதுமே
ஒரு பணியாளும் இருப்பான்.

எல்லாரும் ஊருக்குப் போன ரெண்டு மூணு நாட்களில்
தன்னுடைய வேலைகளை முடித்துக் கொண்டு மறுநாள்
மெட்ராஸுக்கு புறப்பட டிக்கெட் ரிஸர்வ் செய்திருந்தார்.

முந்தின நாள் இரவு, தன்னோடு கூட இருந்த பணியாளை
அனுப்பிவிட்டார்.இவர் மட்டும் தன்னந்தனியாக எஸ்டேட்
வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார்.

நடுராத்திரி திடீரென்று அவரால் மூச்சு விட முடியவில்லை.
எழுந்து ஒரு வாய் ஜலம் குடிக்கலாம் என்றால், நெஞ்சில்
ஒரு பெரிய பாறாங்கல்லை அழுத்துவது போல் சுமை!
இதயத்துடிப்பே சீரற்றுத் துடித்து கொஞ்சம் கொஞ்சமாக
நின்றுபோய்விடும்போல் தோன்றியது.

திணறினார்,தவித்தார்,உருண்டார்,புரண்டார்…அத்தனை
வேதனையிலும் மனசுக்குள் ‘ஆபத்பாந்தவா! அனாத
ரக்ஷகா!சந்திரசேகரா! காஞ்சி மடத்துக் கருணாகர தெய்வமே!
என்று அலறினார்.எப்படியோ தட்டுத் தடுமாறி, எப்போதும்
தன்னுடைய தலைமாட்டில் வைத்திருக்கும்
மகா பெரியவாளுடைய படத்தை எடுத்து நெஞ்சோடு
அணைத்துக் கொண்டார்.

‘பெரியவா எனக்கு என்னவோ பண்றது.நெஞ்சை அடைக்கிறது
என்னால மூச்சு விட முடியலை! நீங்கதான் எனக்கு ரக்ஷை!
மனசுக்குள் மருகியபடியே பெரியவா படத்தை இறுக்கி
அணைத்துக் கொண்டபடி,கண்களில் கண்ணீர் வழிய, தாங்க
முடியாத வலியோடு தவித்தவர்,எப்படியோ அப்படியே
தூங்கிப் போனார்!

மறுநாள் நன்றாக விடிந்ததும்தான் தூக்கம் கலைந்தது.
தூங்கி எழுந்தபோது,படுக்கையிலிருந்து விழுந்த பெரியவா
படத்தைப் பார்த்ததும்தான், தான் நேற்றிரவு பட்ட கஷ்டம்
அவருக்கு நினைவுக்கே வந்தது.

அன்று ஊருக்குப் போக வேண்டும் என்பதால்,எதற்கும்
டாக்டரிடம் ஒரு நடை போய், செக்கப் பண்ணிக்கொள்ளலாம்
என்று டாக்டரிடம் போனார்.

இ.சி.ஜி. எடுத்து ர்ப்போர்ட்டை பார்த்தார் டாக்டர்.

“உங்களுக்கு நேத்திக்கு ராத்திரி ரொம்ப சிவியரா மாசிவ்
அட்டாக் வந்திருக்கு! நீங்க என்னடான்னா, ஒண்ணுமே
நடக்காத மாதிரி இப்படி ஆஸ்பத்திரிக்கு நடந்தே
வந்திருக்கீங்களே? ஆச்சரியமா இருக்கு! உண்மையைச்
சொல்லணும்னா, நீங்க இந்தக் கடுமையான அட்டாக் வந்த
பிறகு பிழைச்சிருக்கீங்கறதே பெரிய விஷயம்! இப்ப இந்த
ஸெகண்டே இங்கே அட்மிட் ஆயிடுங்க.ஒரு அடி கூட
எடுத்து வைக்கக்கூடாது!”

மிகக் கடுமையான ஹார்ட் அட்டாக்கிலிருந்து அந்த
தீனபந்துவைத் தவிர வேறு யார் அவரைக் காப்பாற்றியிருக்க
முடியும்?

பயங்கர வலி வந்ததும்,இவர் நெஞ்சோடு சேர்த்துக்
கட்டியணைத்துக் கொண்ட மகாபெரியவா,அப்போதே
அவரது ஹார்ட்டை சரி செய்ததோடு,வலியால் அவஸ்தைப்
பட்ட தன்னை, அணைத்துக்கொண்ட குழந்தையை தூங்கப்
பண்ணியும் இருக்கிறார்.

மறுநிமிஷம் உடல் முழுக்க குப்பென்று வியர்த்தது அவருக்கு.
தான் பிழைத்தது மறுபிழைப்பு என்று அவருக்குத் தோன்றியது.
மகாபெரியவாளை நினைத்துக்கொண்டு,அவர் இருக்கும் திசை
நோக்கி கையெடுத்துக் கூப்பி வணங்கினார். கண்ணீரை அடக்க
முடியவில்லை அவரால்.தெய்வத்தின்,குருவின்
துணையிருந்தால் வேறென்ன கவலை?

டாக்டர் அட்மிட் ஆகச் சொன்னதை மறுத்தார். “நான் இன்னிக்கே
ஊருக்குப் போயாகணும்! என்ன ஆனாலும் சரி ஆசார்யாளோட
காலடியிலயே போய் சரணாகதி அடைஞ்சுடறேன். அவர்
என்னைப் பார்த்துப்பார். என்னோட அந்த தெய்வம் என்னைக்
காப்பாத்தும்!” அசைக்க முடியாத நம்பிக்கையோடு அன்றே
ரிஸர்வ் பண்ணிய டிக்கெட்டில் ஊருக்குக் கிளம்பிவிடார்.

ஹ்ருதயத்தைத்தான் எப்பவோ பரமாசார்யாகிட்டே
ஒப்படைச்சாச்சே.அப்புறம் என்னத்துக்கு பயம்?
துளிக்கூட வலி இல்லாம வந்து சேர்ந்தார்.

ஊரு வந்ததும்,குடும்பத்தாரிடம் ஏன் மனைவியிடம் கூட,
எதுவுமே சொல்லவில்லை. ‘முதலில் பெரியவாளை தரிசனம்
பண்ண வேண்டும்!புறப்படுங்கோ’ அப்படின்னு மட்டும் சொல்லி
தரிசனம் பண்றதுக்காக காஞ்சி மடத்துக்கு வந்து சேர்ந்தார்.

ஆசார்யாளுக்கு முன்பாகச் சென்று அந்த பக்தரின்
குடும்பத்தினர் எல்லாரும் போய் நமஸ்காரம் பண்ணியதும்,
இந்த பக்தரை குறுகுறுவென்று பார்த்த பரமாசார்யா,
மெல்லிய குரலில் கேட்டார்…”இப்போ ஒடம்பு எப்படியிருக்கு?
தேவலையா?

ஆசார்யா அப்படிக் கேட்டதும் அந்த பக்தரின் மனைவியும்
மற்றவர்களும் திகைத்துப் போனார்கள்.!

“ஏன்? ஒங்க ஒடம்புக்கு என்ன ஆச்சு? பெரியவா ஏன் இப்படிக்
கேட்கிறார்?” தவிப்போடு கேட்டார்கள்.

பக்தர் பேசாமல் நிற்க, பெரியவாள் சிரித்துக் கொண்டே,
“இனிமே ஒடம்புக்கு ஏதாவதுன்னா,பகவானைக் கூப்டு!
போயும்,போயும் என்னையா கூப்டுவே? அன்னிக்கு ஒன்னை
பகவான்தான் காப்பாத்தியிருக்கார்”.-என்று சொன்னார்.

கொஞ்சமும் யோசிக்காமல் அந்த பக்தர் சொன்னார்.

“ஆமாம் பெரியவா! அன்னிக்கு என்னை என்னோட
பகவான்தான் காப்பாத்தினார்.! என்னோட தெய்வம்
நீங்கதானே!”

கண்களில் நீர் பெருக்கெடுக்க மகாபெரியவாளை
மறுபடியும் நமஸ்கரித்த பக்தர்,பெரியவா தந்த பழத்தைப்
பிரசாதமாகப் பெற்றுக்கொண்டு நகர்ந்தார்.

பகவத் கீதையைக் கேட்டால் பயமா?

Bhagavad gita - 2026

பகவத் கீதையைக் கேட்டால் பயமா?
– பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் -ராஜி ரகுநாதன்
(Source: Rushipeetham Editorial, March, 2017)

ஒரு இளம் பெண் பேசும்போது கூறினாள், ” எனக்கு பகவத் கீதை என்ற பெயரைக்
கேட்டாலோ அதிலுள்ள சுலோகங்களைக் கேட்டாலோ பயமாக உள்ளது. உடம்பு நடுங்குகிறது”
என்று.

“ஏனம்மா? எதனால்?” நான் ஆச்சர்யமாகக் கேட்டேன். அதற்கு அவள் கூறிய பதில்
மேலும் திகைப்பை ஏற்படுத்தியது.

“யாரேனும் மரணமடைந்தால், சவ வண்டியில் எடுத்துச் செல்லும் போது இந்த
ரெக்கார்டு போடுவார்கள். அதுவே என் மனதில் முத்திரை விழுந்து விட்டது.
பெரியவர்கள் யாராவது இறந்து போனால் டி.வி. யில் கூட பகவத் கீதை சுலோகங்களை
போட்டு துக்கம் அனுஷ்டிப்பார்கள். அதனால் எனக்கு கீதை சுலோகம் என்றாலே பயம்
ஏற்படுகிறது”.

மற்றுமொரு இடத்தில் வேறொரு சந்தர்ப்பம்-
ஒரு சபை ஆரம்பிக்கும் போது மேடைமேல் யாரோ ஒருவர் மைக்கில் பகவத் கீதை
படித்தார். அப்போது அங்கிருந்த ஒரு அரசியல் தலைவர் எழுந்து, “சுபமாக சபை
ஆரம்பிக்கும் போது கீதையை ஏனய்யா பாடுகிறீர்கள்?” என்று எரிச்சலடைந்தார்.

அநேகமாக நிறைய பேரிடம் இது போன்ற அபிப்ராயம் இருப்பது தெரிகிறது. இதெல்லாம்
அஞ்ஞானத்தால் விளையும் அனர்த்தங்கள். இதன் மூலம் இந்துக்கள் தம் தர்ம
விஷயத்தில் எத்தனை தூரம் விலகியுள்ளார்கள், அறியாமையில் மூழ்கி வாழ்கிறார்கள்
என்பது புரிகிறது.

இதற்கு காரணம் என்ன?

பகவத் கீதையை வெறும் மரண சமயத்தில் மட்டுமே ரெகார்டு போட்டு அலற வைப்பது
ஏற்பில்லாத, பொருத்தமில்லாத செயல். உண்மையில் பகவத் கீதைக்கும் மரண
ஸம்ஸ்காரத்திற்கும் தொடர்பே கிடையாது. அந்த மாதிரி நேரங்களில் பகவத் கீதை,
விஷ்ணு சஹஸ்ர நாமம், சிவ நாமம் போன்றவற்றுக்கு தொடர்போ தேவையோ இல்லை.

சனாதன தர்மத்தின் நிலை மற்ற மதத்தவர்களைப் போன்றதல்ல. பிறப்பு முதல் இறப்பு
வரை பல்வேறு ஷோடச சம்ஸ்காரங்கள் உள்ளன. அந்தந்த சந்தர்பங்களில் செய்ய வேண்டிய
கர்மாக்கள், மந்திரங்கள் தனித் தனியாக உள்ளன. எல்லாவற்றிலும் ஒரே நூலை
படிக்கும் வழக்கமில்லை.

ஞானத்திற்காக பகவத் கீதையே தவிர, மரண சமய வைதீக கர்மாக்களுக்காக அல்ல. நம்
சம்பிரதாயத்தில் அந்த கிரியைகளும் சம்ஸ்காரங்களும் சிறப்பான விஞ்ஞானத்தோடு கூட
இணைந்துள்ளன. அவற்றுக்கும் பகவத் கீதைக்கும் தொடர்பு இல்லை.

கீதை உயிரோடு இருப்பவருக்கானது. சிறப்பாக வாழ விரும்புபவர்கள் படித்து
நடைமுறைப்படுத்த வேண்டிய ஞான சாஸ்திரம்.

இந்த விஷயத்தை மறந்து விட்டு வெறும் மரண நேரத்து கானமாக அதனைப் பாடுவது மகா
அபராதம். உடனே பொறுப்புள்ள பெரியவர்கள் முனைந்து மயானத்திலும், சவ
வாகனத்திலும், துக்க மேடைகளிலும் கீதை படிப்பதைத் தடுக்க வேண்டும்.

மற்றுமொரு விஷயம். இதர மதத்தவர்கள் அவர்களின் மரண வேளைகளில், அவர்களுடைய மத
கிரந்தங்களைத்தான் படிக்கிறார்கள். ஆனால் அதன் மூலம் அம்மதத்தவர்களுக்கு
பயமோ, அதன் மேல் இளக்கார பாவனையோ இல்லை. ஆனால் நம்மவர்களுக்கு மட்டும் இந்த
இரண்டுமே ஏற்பட்டுள்ளன.

சிறு வயதிலிருந்தே வீடுகளில் பிள்ளைகளுக்கு நம் மத நூல்களைப் பற்றி
தெரிவிக்காத பெரியவர்களே முதல் குற்றவாளிகள். வீட்டில் நம் மத நூல்களை
வைத்திருப்பதில்லை. ஸ்லோகங்களை சொல்லித் தருவதில்லை. அவற்றின் பொருள் கூட
யாருக்கும் தெரிவதில்லை.

முஸ்லீம் சகோதரர்கள் உருது கற்றுக் கொண்டு குரானை சிறுவயது முதலே அத்யயனம்
செய்கிறார்கள். தங்கள் மத ஆச்சாரங்களைக் கடை பிடிக்கிறார்கள். ஆனால் நம்
வீடுகளில் சம்ஸ்கிருதம் சொல்லிக் கொடுப்பதில்லை. இன்னும் சொல்லப் போனால் தாய்
மொழி செய்யுள் கூட வராது.

கீதையைப் பற்றிய புரிதல் தான் இல்லை. சரி. எந்த சந்தர்ப்பத்தில் எதைச் செய்ய
வேண்டும் என்று கூடத் தெரியாத தாழ்ந்த நிலையில் உள்ளோம். இதன் காரணமாக சுய
தர்மத்தில் நிஷ்டை ஏற்படுவதில்லை. கடைசியில் ‘கோவிந்தா’ நாமத்தைக் கேட்டால்
கூட சிலருக்கு சவ யாத்திரை நினைவுக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

மனிதனை கடமை உணர்வுள்ளவனாக்கி தனி மனித மேம்பாட்டை மலரச் செய்து, அவனுள் உள்ள
ஆத்ம சக்திகளை விழிப்படையச் செய்து பயன்படும்படிச் செய்யும் சக்தி கீதா
போதனையில் உள்ளது. இது விஷயம் பற்றி பல மேல் நாட்டு அறிஞர்கள் அங்கீகரித்து
வெற்றிக்கான சூத்திரங்களாக, தனி மனித வளர்ச்சிக்கான பாடங்களாக படித்து
வருகிறார்கள். நாம் மட்டும் கண்டு கொள்ளாத அலட்சியத்தில் உள்ளோம்.

மற்றொருபுறம் மத மாற்றம் செய்யும் மேதாவிகள் வீசி எறியும் பிஸ்கட்டுகளுக்காக
ஏங்கி, அடிமை வேலை செய்யும் பாரத தேச மேதாவிகள் கீதை போன்ற சத்
கிரந்தங்களுக்கு இல்லாத அர்த்தங்களைக் கற்பித்து, தப்பும் தவறுமாக எதிர்
வியாக்யானம் செய்கையில் ‘எண்ணச் சுதந்திரம்’ என்ற பெயரில் அவற்றை ஏற்று
கண்டிக்காமல் தூங்குகிறார்கள் கீதை அபிமானிகள்.

ஒரு கீதை மட்டுமே என்று இல்லை. வேதங்களைக் கூட ஏதேதோ மொழி பெயர்ப்பு நூல்களை
படித்து விட்டு, மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடி போடும் விதமாக
விக்ருத வியாக்கியானங்கள் செய்கிறார்கள்.

தம் மதத்தில் உள்ள சிறப்பு எதுவோ அதை மட்டும் சொல்லி விட்டு சும்மா இருந்தால்
போதாதா? மற்ற மதங்களைப் பற்றி பேசும் உரிமை, புரிதல் அவர்களுக்கு இல்லை.
சட்டப்படி குற்றம் கூட.

நம்மவர்களிடம் உள்ள புரிதல் குறைபாடு, இதரர்களிடம் இருக்கும் துர்மார்க்கமான
வஞ்சனை இரண்டும் சேர்ந்து ஹிந்து மதத்தில் தேவையற்ற அனர்த்த தோரணைகளை
ஏற்படுத்துகின்றன.

ஹிந்து சமுதாயம் தம் சம்பிரதாயம் என்ன? தர்ம ஞானம் என்ன? என்று அறிய முயற்சி
செய்ய வேண்டும். அவற்றை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இதற்கு ஸ்பஷ்டமாக ஆதாரத்தோடு சொல்லத் தகுந்த பெரியவர்கள் முனைந்து முயற்சித்து
விழிப்பு ஏற்படுத்த வேண்டும்.

பாவனா வழக்கில் ‘பலாத்கார’ பிரிவுகளில் திலீப் கைது; ‘அம்மா’ அமைப்பிலிருந்து நீக்குவதாக மம்முட்டி அறிவிப்பு!

Kavya Bhavan Dileep - 2026

திருவனந்தபுரம்:

நடிகை பாவனா வழக்கில் நடிகர் திலீப் அதிரடியாக நேற்று கைது செய்யப்பட்டார். இதை அடுத்து, அவரை திரைப்பட நடிகர்கள் சங்கம் உள்ளிட்ட சங்கங்களில் இருந்து நீக்குவதாக மம்முட்டி தெரிவித்தார். திலீப் மீது ‘பாலியல் பலாத்கார’ குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு சிக்கல் நீடிக்கிறது.

நடிகை பாவனா கடந்த பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி, கேரள மாநிலம் கொச்சியில் காரில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு மர்ம கும்பல் அவரை வழிமறித்து கடத்தியது. காரில் வைத்து அவருக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுக்கப்பட்டது. இந்தச் சம்பவம் கேரளாவை உலுக்கி எடுத்தது. ஓரிரு நாளில் குற்றச்செயலில் ஈடுபட்ட கார் ஓட்டுநர் மார்ட்டின் அந்தோணி கைது செய்யப்பட்டான். அவன் பல்சர் சுனில் என்பவனைக் குறித்தும், அவனது கூட்டாளிகள் குறித்தும் போலீஸாரிடம் தெரிவித்தான். இதை அடுத்து பல்சர் சுனில் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இந்தச் சம்பவத்தில் வேறு சிலரின் தூண்டுதலும் சதியும் இருப்பதாக போலீஸார் சந்தேகித்தனர். எனவே சதி குறித்த பின்னணியை அறிய ஐ.ஜி. தினேந்திர காஷ்யப் தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது. கூடுதல் டி.ஜி.பி. சந்தியா, வழக்கின் மேற்பார்வை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இந்தச் சம்பவத்தில் மலையாள நடிகர் திலீப்புக்கு தொடர்பு இருப்பதாக துவக்கத்தில் இருந்தே கூறப்பட்டது. ஆனால் அவர் அதை மறுத்து வந்தார். பல்சர் சுனில் யாரென்றே தனக்குத் தெரியாது என்று கூறிவந்தார்.

இந்நிலையில்தான் திடீர் திருப்பமாக இந்த வழக்கில் தொடர்புடையதாக நடிகர் திலீப் நேற்று காலை கைது செய்யப்பட்டார். நடிகை பாவனாவைக் கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்ய சதி செய்ததாக அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், பாவனா மீது கொண்ட தனிப்பட்ட பகை காரணமாகவே நடிகர் திலீப் இத்தகைய சதித்திட்டம் தீட்டியதாகவும் போலீஸார் கூறினர். நடிகர் திலீப்புக்கு எதிராக போலீஸார் 19 முக்கிய ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளனர். இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக பல்சர் சுனிலும் 2 வது குற்றவாளியாக நடிகர் திலிப்பும் சேர்க்கப்பட்டுள்ளனர். முதல் குற்றவாளி சுனிலுக்கு நடிகர் திலீப் இந்தக் குற்றச் செயலுக்கு ரூ.2 லட்சம் வழங்கியுள்ளார்.

கைது செய்யப்பட்ட திலீப் அங்கமாலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பட்டார். இன்று காலை கொச்சியில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள அலுவா துணைச் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு சிறையில் 2ஆம் எண் செல்லில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு கைதி எண் 523 வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அங்கமாலி சிறைச் சாலையில் இருந்து இன்று நடிகர் திலீப் அங்கமாலி நீதிமன்றம் கொண்டு செல்லப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டார். கேரள போலீஸார் நடிகர் திலீப்பிடம் விசாரணை நடத்த அனுமதி கோரினர். போலீஸார் திலீப்பை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸாருக்கு அனுமதி அளித்தது.

இதனிடையே நடிகர் திலீப் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. பாவனா கடத்தலில் திலீப் நேரடியாக ஈடுபடாத நிலையிலும், அவர் மீது பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தின் கடுமையான சட்டப் பிரிவுகளும் திலீப் மீது சுமத்தப் பட்டுள்ளன.

120(பி) (கூட்டு சதி), 342 (தவறான தகவல்களை தந்தது), 376(டி) (கூட்டு பலாத்காரம்), 411 (ஆவணங்களை மறைக்க முயற்சி செய்தல்), 506(1) (மிரட்டல்), 201 (வழக்கு தொடர்பான தடயங்களை மறைத்தல்), 212 (குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்தல்), 34 (திட்டமிட்டு செயல்படுதல்) உள்ளிட்ட 9 பிரிவுகளில் திலீப் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டு பலாத்கார சட்டப் பிரிவின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் திலீப்புக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் பாவனா விவகாரத்தில் கைதான திலீப், கேரள நடிகர் சங்கம்- மலையாள திரைப்படக் கலைஞர்கள் சங்கம் ’அம்மா’வில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த சங்கத்தில் திலீப் பொருளாளராக இருந்தார். கொச்சியில் பானம்பள்ளி நகரில் நடிகர் மம்முட்டியின் வீட்டில் நடைபெற்ற சங்கத்தின் செயற்குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் முன்னணி நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், பிருதிவிராஜ், ஆஷிப் அலி, தேவன், ரம்யா நம்பீசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சங்கக் கூட்டம் முடிந்ததும் நடிகர் மம்முட்டி செய்தியாளர்களிடம் பேசியபோது, நடிகர் திலிப் அம்மா சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கபடுகிறார். நாங்கள் பாதிக்கப்பட்ட நடிகைக்கு தொடர்ந்து ஆதரவளிப்போம் என்றார். குறிப்பிட்ட ஒருவரை நாங்கள் எப்போதும் ஆதரித்தது இல்லை. இந்த அமைப்பு எலோருக்குமானது எனக் கூறினார்.

’அம்மா’ அமைப்பு மட்டுமல்லாது, கேரளத் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், கேரளா திரைப்பட ஊழியர் கூட்டமைப்பு ஆகியவற்றில் இருந்தும் திலீப் நீக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, திலீப்பை திருமணம் செய்திருந்த நடிகை காவ்யா மாதவனுக்கு எதிராகவும் இரண்டு வலுவான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக போலீஸார் கூறுகின்றனர். எனவே பாவனா வழக்கில், காவ்யா மற்றும் அவரது தாயை போலீஸார் இன்று தங்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. பாவனாவைக் கடத்திய பல்சர் சுனில், காவ்யாவின் கடைக்கு இரண்டு முறை சென்றது, அடுத்துள்ள கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. அந்த வீடியோ பதிவுகளை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.

வழக்கில் முதல் குற்றவாளியான பல்சர் சுனில் இதற்கு முன் நடிகரும் எம்.எல்.ஏ.,வுமான முகேஷிடம் ஓட்டுநராகப் பணியாற்றியுள்ளார் என்பதால் முகேஷிடம் போலீஸார் விசாரிக்கவுள்ளனர்.

திலீப் சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரிடம் வளரும் தனது மகளை தன்னிடம் ஒப்படைக்கக் கோரி அவரது முன்னாள் மனைவி மஞ்சு வாரியார் நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளார்.

அமர்நாத் தாக்குதலுக்கு மோடியின் கொள்கைதான் காரணமாம்: சொல்வது ராகுல்

rahul gandhi - 2026

புது தில்லி:

அமர்நாத் சென்ற யாத்ரீகர்கள் மீது பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலுக்கு மோடியின் கொள்கைகள்தான் காரணம் என்று டிவிட்டரில் கூறியுள்ளார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி.

காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள அமர்நாத் குகைக்கோவில் பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக பஸ்சில் சென்ற பக்தர்கள் மீது இரு தினங்களுக்கு முன் இரவில் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் 6 பெண்கள் உள்பட 7 பக்தர்கள் உயிரிழந்தனர். உளவுத் துறை இதுபோன்ற தாக்குதல் நடத்தப் படலாம் என்று எச்சரிக்கை விடுத்திருந்தும், தாக்குதலை தடுத்து நிறுத்துவதில் மத்திய அரசு தோல்வி அடைந்துவிட்டதாக எதிர்க் கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தன் டுவிட்டரில் இதற்கு மோடியின் கொள்கைகளே காரணம் என்று கூறியுள்ளார்.

மோடியின் கொள்கைதான் காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு இடமளித்துள்ளது. இந்தியாவுக்கு இது மிகப்பெரிய வியூக தோல்வி. தனது குறுகிய கால அரசியல் வளர்ச்சிக்காக பிடிபி உடனான கூட்டணியை ஏற்படுத்திக் கொண்ட மோடியால், இந்தியாவுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. அப்பாவி இந்திய மக்கள் சிந்தும் ரத்தம் பிரதமர் மோடியின் தனிப்பட்ட வளர்ச்சிக்கு சமம் என விமர்சனம் செய்துள்ளார் ராகுல் காந்தி.

அமர்நாத் யாத்திரை தாக்குதல் நடந்த போது டுவிட்டரில் ராகுல் வெளியிட்ட தகவலில் இது மிகப்பெரிய மற்றும் ஏற்றுக் கொள்ளமுடியாத பாதுகாப்பு குறைபாடு, இதற்கு பிரதமர் பொறுப்பு ஏற்க வேண்டும், இவ்வாறு மீண்டும் நடக்க அனுமதிக்க கூடாது என குறிப்பிட்டு இருந்தார்.

 

போலி பாஸ்போர்ட்டுக்கு உடந்தை: காவலரைத் தொடர்ந்து தபால்காரர் கைது

passport - 2026

சென்னை:
சென்னையில் போலி பாஸ்போர்ட் தயாரிப்பில் உடந்தையாக இருந்ததாக, பாஸ்போர்ட் சரிபார்ப்பில் மோசடி செய்த காவலர் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு உடந்தையாக இருந்த தபால்காரர் இன்று கைது செய்யப்பட்டார்.

திருவல்லிக்கேணி பள்ளப்பன் தெருவைச் சேர்ந்த ராமு என்பவரை போலி பாஸ்போர்ட் தயாரிப்பு வழக்கில் கடந்த மாதம் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். போலி பாஸ்போர்ட் தவிர, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ரே‌ஷன் கார்டு ஆகியவற்றையும் போலியாக தயாரித்து உள்ளார்.

ராமுவிடம் நடத்திய விசாரணையில் அவருக்கு சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய உளவுப்பிரிவு காவலர் ஏட்டு முருகன் உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. பாஸ்போர்ட் வழங்குவதற்கு சான்றிதழ் சரிபார்ப்புப் பணியில் ஈடுபட்டு வந்த ஏட்டு முருகன், ராமுவுடன் கைகோத்து அவர் தயாரிக்கும் போலி ஆவணங்களை உண்மையான ஆவணங்கள்தான் என்று சான்றிதழ் வழங்கியுள்ளார். விசாரணையில் இந்த விவகாரம் தெரிய வந்ததை அடுத்து, ஏட்டு முருகன் நேற்று கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் போலி பாஸ்போர்ட்டு விவகாரத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டதில், வேறு சிலருக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதில் கண்ணகி நகரைச் சேர்ந்த தபால்காரர் தனசேகர் என்பவர், இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அண்ணா சாலை தலைமை தபால் நிலையத்தில் பணியாற்றிய இவர், விரைவுத் தபால்களை விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. தபால்காரர் தனசேகர் ஏட்டு முருகனுக்கு உதவியாக இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் இன்று கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் குறித்து மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையர் வேங்கடாசலபதி தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் திருவல்லிக்கேணி பகுதியில் ஒருவர் கைது செய்யப் பட்டிருப்பது இப்பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் வழங்கிய போலி பாஸ்போர்ட்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டால் மேலும் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிப்படலாம்.

அமர்நாத் யாத்ரீகர்கள் மீதான தாக்குதல்: இந்து முன்னணி கண்டனம்

vaishnavi-devi-temple-kashmir

சென்னை:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்ற யாத்திரீகர்கள் மீது இஸ்லாமிய ஜிஹாத் பயங்கரவாதிகள் நிகழ்த்திய கண்மூடித்தனமான மனிதாபிமானமற்ற கொடூரத் தாக்குதலுக்கு இந்து முன்னணி தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
இது குறித்து மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்ட அறிக்கையில்,
அமர்நாத் யாத்ரீகர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது..

அமர்நாத் பனிலிங்க தரிசனத்திற்கு சென்ற யாத்ரீகள் மீது காஷ்மீர் பிரிவினையைத் தூண்டும், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியிருப்பதை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. இஸ்லாமிய அடிப்படைவாதம் மனிதாபிமானமற்றது என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் யாத்ரீகர்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. இந்த ஆண்டும் இந்த அறிவிப்பானது வெளியிடப்பட்டது. பயண ஏற்பாடுகளும் அதற்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டாலும், அதனையும் மீறி தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது, கவலை அளிக்கிறது.

அப்பாவிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் கோழைத்தனமாது, மனிதத் தன்மையற்ற செயல். இதனை குழப்ப காஷ்மீர் காவல்துறை புதுப்புது அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. அந்த அறிக்கையில், பயங்கரவாதிகளைப் பிடிக்க பாதுகாப்பு வீரர்கள் முற்பட்டதால், பயங்கரவாதிகள், பாதுப்பு வீரர்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் திசை மாறி யாத்ரீகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என கூறுவது ஏற்கக்கூடியதாக இல்லை. அதுபோல குறிப்பிட்ட நேரத்தில் செல்லாமல், பாதுகாப்பு இல்லாமல் அவர்கள் சென்றதாக கூறும் வாதமும் அபத்தமானது. இந்த அமர்நாத் யாத்திரை என்பது நேரிடையாக யாரும் மேற்கொண்டுவிட முடியாது. அமர்நாத் பயணம் என்பது திட்டமிட்டு, பாதுகாப்போடு செல்வதற்கு தகுந்த ஏற்பாடுகள் முதலானவை முன்னதாகவே அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படுகின்றன. அதனையும் மீறி இதுபோன்ற தாக்குதல் நடைபெற்றிருக்கிறது என்பதை கவனத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் மேலும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

இந்துக்களை அச்சுறுத்தி, உயிர் பயத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் இதுபோன்ற தாக்குதலில் இஸ்லாமி அடிப்படைவாத, பிரிவினைவாதக் குழுக்கள் செய்கின்றன. இதனை எதிர்கொள்ளும் துணிச்சலும், தீரமும் இந்துக்களுக்கு உண்டு. பல ஆண்டுகளுக்கு முன்னர், காஷ்மீர் பயங்கரவாதிகள் இந்த யாத்திரைக்கு சவால் விட்ட போதுதான் இந்த பக்தி பயணமானது நாடுநெடுகிலும் எழுச்சியை ஏற்படுத்தியது. உயிரை துச்சமென எண்ணி, பனி மலை மீது செல்லும் பயணத்தை மேற்கொள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். அப்போதிலிருந்து மத்திய அரசும், காஷ்மீர் மாநில அரசும் இணைந்து இந்த பயணத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செயல்படுத்தி வருகின்றன.

எனவே, இந்த வருடத்தின் யாத்திரை நிறைவுபெற இன்னும் நாட்கள் இருக்கும் காரணத்தினால், முழுமையான பாதுகாப்பும் உளவுதுறையை திறம்பட பணி செய்ய வைத்து பக்தர்களை பாதுகாக்க தேவையான எல்லா நடவடிக்கைகளையும், அடிப்படை வசதிகளையும் போர்கால நிலையில் எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசாங்கங்களை இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

அமர்நாத் யாத்திரையில் உயிர்நீத்த பலிதானிகளின் ஆன்மா நற்கதி அடைய இந்து முன்னணி பிரார்த்திக்கிறது, அவர்களை இழந்து வாடும் அவர் தம் குடும்பதாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது … என்று கூறியுள்ளார்.