Home Blog Page 5591

“அது யார், ஜகத்குரு?”-ஒரு பண்டிதர்

“அது யார், ஜகத்குரு?”-ஒரு பண்டிதர்

(“கை-கால் இல்லாத குருவிகள் கூடு கட்டுகின்றன நமக்குக் கைகால் உண்டு.
.என்றாலும்,பறவைகள் மாதிரி கூடுகட்டமுடியவில்லை.குருவிகளிடம் ஒரு கிரியா சக்தி
இருக்கிறது. அது,என்னிடம் இல்லை. அதனால், குருவி, என்னுடைய குரு…” என்று
சொல்லி, கன்னத்தில் போட்டுக் கொண்டு கைகூப்பி வணங்கின-பெரியவா)

“நீங்கள் தான் ஜகத்குரு” என்று மனமாரப் போற்றிப் பணிந்தார்கள்.-பண்டிதர்கள்

சொன்னவர்; ப்ரும்மஸ்ரீ ராமகிருஷ்ண தீக்ஷிதர்,காஞ்சிபுரம்.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

1933ம் வருஷம் காசி யாத்திரையின் போது நடந்த நிகழ்ச்சி. பனாரஸ் ஹிந்து
யூனிவர்ஸிடிக்கு, ஒரு மாலைப்போதில்ஸ்ரீ பெரியவாள் ‘விசிட்’.

பெரியவாள் போனபோது, மண்டக்குளத்தூர் பிரம்மஸ்ரீ சின்னசாமி சாஸ்திரிகள், பாடம்
சொல்லிக்கொண்டிருந்தார். அப்பைய தீட்சிதர் எழுதிய ‘விதிரஸாயனம்’ என்ற
மீமாம்ஸாசாஸ்திரம். ஸ்ரீ தீட்சிதரின் நடையழகில் ஸ்ரீ பெரியவாள் சொக்கிப்
போனார். உடன் வந்திருந்த ‘ஆத்ம வித்யா பூஷணம் ‘இஞ்சிக்கொல்லை பிரும்மஸ்ரீ
ஜகதீஸ்வர சாஸ்திரிகளிடம்சொல்லிச் சொல்லி சந்தோஷப்பட்டார். (பின்னர்தான்,அப்பைய
தீட்சிதரின் எல்லாக் கிரந்தங்களையும் ஸ்ரீ பெரியவாள் படித்தார்.

காசிமன்னர்அரண்மனையில்,பெரியவாளுக்குவரவேற்பு.நகரத்தின்முக்கியப்
பிரமுகர்கள்வந்திருந்தார்கள்.ஏராளமான பண்டிதர்கள்.

அவர்கள் மனத்தில் ஓர் இளக்காரம்; இனம் புரியாத அசூயை. ‘இவர் என்ன ஜகத்குரு
என்று பட்டம் போட்டுக்கொள்வது?… ரெண்டு கேள்வி கேட்டு, மடக்கி விடலாம் !…’

பெரியவாள் வந்து அமர்ந்ததும், ஒரு பண்டிதர், ஆவேசமாகக்கே ட்டார், “அது யார்,
ஜகத்குரு?”

“நான் தான் !…” என்றார், பெரியவாள்.

“ஓஹோ?..நீங்க ஜகத்துக்கே குருவோ?”

“இல்லை. ஜகதாம் குரு: ந (நான் ஜகத்துக்கெல்லாம் குரு- என்ற அர்த்தத்தில்
சொல்லவில்லை.

ஜகதிபத்யமானா: ஸர்வே மம குரவ:”

(உலகில் உள்ள எல்லாப் பிராணிகளும், எனக்குக் குருக்கள்- என்ற பொருளில், நான்
ஜகத்குரு)

வடநாட்டுப் பண்டிதர்கள் திகைத்துப் போனார்கள்.

இவ்வளவு அருமையான, எளிமையான விளக்கத்தை அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

பெரியவாள்,அந்தப்பெரியஅறையின்சுவர்களின்மேற்பகுதியில் ,புறாக்களுக்காக
அமைக்கப்பட்டிரூந்த சிறு சிறு பொந்துகளில் கட்டப்பட்டிருந்த குருவிக்
கூடுகளைப் பார்த்தார்.

பண்டதர்களிடம் காட்டி, “கிமிதம்”? (இது என்ன?) என்று கேட்டார்.

“நீட:” (கூடு)

“கேன நிர்மிதம்?” (யாரால் கட்டப்பட்டது?)

“சடகே..” (குருவிகள்)

“கை-கால் இல்லாத குருவிகள் கூடு கட்டுகின்றன நமக்குக் கைகால் உண்டு.
.என்றாலும்,பறவைகள் மாதிரி கூடுகட்டமுடியவில்லை.குருவிகளிடம் ஒரு கிரியா சக்தி
இருக்கிறது. அது,என்னிடம் இல்லை. அதனால், குருவி, என்னுடைய குரு…” என்று
சொல்லி, கன்னத்தில் போட்டுக் கொண்டு கைகூப்பி வணங்கினார்.

இதை நேரில் கண்ட வடநாட்டுப் பண்டிதர்கள் பிரமித்துப் போய்விட்டார்கள்

. “நீங்கள் தான் ஜகத்குரு” என்று மனமாரப் போற்றிப் பணிந்தார்கள்.

பெரியவாள் காசியில் இருந்த கடைசி நாள் வரை, அவர்கள் எல்லாரும் தினமும்
முகாமுக்கு வந்து நமஸ்காரம் செய்து கொண்டிருந்தார்கள்

“அப்பாவியின் பாட்டுக்கு, அபயம் கிடைத்தiது”

295603 479182172136829 1054166438 n 1 - 2026

​ ஸ்ரீ ரா. கணபதி அவர்கள்
எழுதியதிலிருந்து……………………………… அந்த பொன்னடிகள்தாம்
பெயர் தெரியாத எத்தனை குக்க்ராமங்களில் பட்டு, பல காலம் கூட தங்கி, அவற்றை
புனித ஸ்தலங்களாக புகழ் பெறவைத்திருக்கின்றன. ஸ்ரீ பெரியவா, காட்டுப்பள்ளியில்
1965 ம் வருஷத்துக்கு முன், சந்தவேளூர் என்ற ஊரை, சிவலோகமாக்கினார்.அவ்வருஷ
சிவராத்ரியை அங்கே நடத்தினார். பிற்பகல் நாலு மணி இருக்கலாம். பொக்கையும்
போரயுமான படிக்கட்டுகளும், பாசியும் பசலையுமான தண்ணீரும் கொண்ட குளக்கரையில்
இந்த நூற்றாண்டு கண்ட அந்த உண்மையான வேதகால சந்நியாசி அமர்ந்திருந்தார்.
விந்தையாக கழுத்தில் மலர் மாலை அணிந்திருந்தார்.சன்யாசிகள் மாலை அணியலாமா
அன்று ஒரு வாதமே எழுந்ததுண்டு. அனால் பெரியவா மாலை அணியும் முறையை புரிந்து
கொண்டு பார்த்தால்அதை தனக்கு அலங்காரமாக அவர் தரிக்கவேயில்லை என்று தெரியும்.
மாலையை அவர் கழுத்தில் போட்டுக்கொள்ளாமல்சிரசிலேயே வைத்து கொள்வது வழக்கம்.
சிரசில் குருமூர்த்தியான அம்பிகையின் பாதம் இருப்பதாக சாஸ்திரம்.
பெரியவாளுக்கோ அந்தசாஸ்திரம் அனுபவமே! அதனால் குரு அஞ்சலியாக அம்பாள்
சரணத்திற்கு அலங்காரமாகத்தான் அவர் “அலங்கல் அணிந்தருள்வது” அப்புறம் அது
நழுவி கழுத்தில்விழும்போது அவளது பிரசாதமேயன்றி சுய அலங்காரமல்ல. அப்படி
கழுத்தில் சரிந்ததை உடனே களைந்து விடுவதேஅவரது பொது வழக்கம். இன்று
வழக்கத்திற்கு மாறாக மாலையும் கழுத்துமாகவே மனோஹர தரிசனம் அளித்தார்.
இளைஞரொருவர் அவரது திருமுன்பாடிக்கொண்டிருந்தார். நான் செய்த பாக்கியம்
பெரியவாளை தரிசித்தது மட்டுமல்ல; நான் போகும்போது பாடகர் பாட்டின் முடிவு
பகுதிக்குவந்திருந்ததுதான்! அவர் சரணத்தின் பின்னிரு வரிகளுக்கு வந்து ஓரிரு
நிமிஷத்திலேயே அதை முடித்தது என் பாக்கியமே! அப்பேர்ப்பட்ட”தேவகானம்” !
“கராஜுனி ஹ்ருதய சரோஜவாசினி முராரி சோதரி பராசக்தி ந்னு” என்று அவர்
திருப்பியபோது, நல்ல வேளை, என் கோபம் சிரிப்பாக மாறியது! முந்தைய பாத
இறுதியில் வரும் “த்யா” என்பதோடு இணைத்து “த்யாகராஜுனி ஹ்ருதய சரோஜ” என்று பாட
வேண்டியதைத்தான் அந்தபுண்ணியவான் “கராஜுனி” என்று அமர்க்களமாக தாளம் தட்டி
சிதைத்து பாடினார். பெரியவாளின் பெருமைகள் அனந்தம் என்றால் உபசார வாக்கல்ல.
சத்தியமாகவே அனந்தம்தான்! அந்த பெருமைக்கு இரு கண்மணிகள்அல்லது இரு சுவாச
கோசங்கள் போல பொறுமையும், எளிமையும். மற்ற விஷயங்களை பொறுத்து கொண்டாலும்
பொறுத்து கொள்ளலாம்; ஒரு தேர்ந்த ரசிகனால், ரசக்குறைவானதை பொறுத்து கொள்வது
மாத்திரம் ரொம்ப ரொம்ப ஸ்ரமமானது! அந்த ஸ்ரமசாத்தியத்தைதான் நம்பெரியவா
அனாயாசமாக சாதித்திருக்கிறார்! ஏனென்றால், இன்று ‘பாட்டு பாடுதல்” என்ற அந்த
பாடு படுதலுக்கு ராகம் மட்டுமின்றி,சாஹித்யமும் ஆளாயிற்று. இசை கொலை பிளஸ்
மொழி கொலை! “வினாயகுநிவெல்லன்னு ப்ரோவவேனினு வினா வேல்புலேவரம்மா” என்ற
பல்லவியை எடுத்து, அதில் எத்தனை அக்ஷர பிழை, ஸ்வர பிழை
செய்யலாமோஅவ்வளவும்செய்து,ஒருவழியாகதலைகட்டினார்.
பொறுமையின் அவதாரமான பெரியவா இனித்த முகமாகவே பாட்டை கேட்டு கொண்டிருந்தார்.
பாடி முடித்தவர் , “பாட்டு சரியா இருந்துதா?” என்று கேட்டார்.
“என்ன தைரியம்?” என்று ஆச்சரியப்பட்டேன். பெரியவா என்ன சொல்ல போகிறார் என்று
ஆர்வமாக கேட்டேன். அவர் சொன்ன பதில் மேலும்ஆச்சரியமாக இருந்தது. “எனக்கு சரியா
இருந்தது. ஒனக்கு வேண்டியது அதானே?” என்றார். “ஆமாம் பெரிவா, எனக்கு வேற
ஒண்ணும் வேணாம்” என்று பாட்டுக்காரர் தண்டமாக விழுந்து கும்பிட்டார். அவரிடம்
வேடிக்கையாக பேச ஆரம்பித்தார் பெரியவா. “இது என்ன ராகம்?” “மத்யமாவதி”
“மத்யமாவதியா? அபூர்வ ராகம்னே சிலதை சொல்றதுண்டோன்னோ, அப்படி அபூர்வம பாடினே”
“பெரிவா அனுக்ரகம்” பாட்டுக்காரரிடம் என் கோபமும் சிரிப்பும் போய் பரிவு
உண்டாயிற்று. நன்குபரிச்சயமான ராகத்தையே உருமாற்றி ஏதோ அபூர்வ ராகம் போல அவர்
பாடினார், என்பதையே அந்த பொல்லாத கிழவனார் குறும்பில் குத்தவதை
புரிந்துகொள்ளாத அப்பாவியாக இருக்கிறாரே என்ற பரிவு. இம்மாதிரி அப்பாவிகளிடம்
பெரியவாளின் கருணை இரு மடங்காக பெருகும். பின் ஏன் குறும்பிலே குத்தினார்
என்றால், அவர்கள் பெரும்கருணையில் பாதியளவே பெறுகின்ற “புத்திசாலி” களான
நம்முடைய புத்திக்கும் வேடிக்கை வினோதம் காட்டத்தான்! குத்தல் நமக்குத்தான்
தெரியுமே தவிர, குத்தப்படுபவர்களுக்கு தெரியாது. அதுதான் அவர்கள்
அப்பாவிகளாச்சே! குழந்தையிடம் நாம்,அம்மா குத்து, திம்மா
குத்து”விளையாடும்போது, பிறருக்குத்தான் மிகவும் பலமாக குத்துவது போல
தெரியுமேயொழிய குழந்தையின் கையில் குத்து மெத்தாகத்தானேவிழும்! பரிஹசிப்பதாக
நமக்கு காட்டும்போதே, “இவரை விட அழகாக உரையாட நவகண்டத்தில் ஒருவர் உண்டா”
எனத்தக்க நாயகர். “மத்யமாவதின்னா என்ன?” அப்பாவியை விடவும் அப்பாவி போல்
கேட்டார். “ராகத்தின் பேரு” பாட்டுகாரரிடமிருந்து அப்பாவி பதில் வந்தது.
“அதுதான், நான் என்ன ராகம்னு கேட்டப்பவே மத்யமாவதின்னுட்டியே! அதையேதான
மறுபடியும் சொல்றே? மத்யமாவதின்ன என்னஅர்த்தம்?” “மத்யமம்னா “நடு” இல்லியா?
நடு பாகம் அவதியா இருந்த மத்யமாவதியா?” “பெரிவா எப்படி சொல்றேளோ அப்படி”
“புத்திசாலி”களான நாம், அந்த அப்பாவி போல அப்படி பெரியவா சொல்வதை வேதவாக்காக
கொள்வோமா? “எழுத்தாளன்”ன்னு என்னை கூப்பிட்டு,”மத்யமாவதிக்கு நான் குடுத்த
defenition கேட்டியோ?” “பாட தெரியாதவா பாடினா…….. மத்யமாவதி மத்யமத்துலே
மட்டுமில்லாம ஆரம்பம் – மத்யமம் அந்தம் எல்லாமே அவதியாத்தான்இருக்கும்”
என்றேன். சட்டென ஏதோ நினைத்து கொண்டார்ப்போல், பாட்டுக்காரரை பார்த்து, “நீ
இந்த பாட்டு பாடினதுக்கு என்ன காரணம்?” “அனாத ரக்ஷகி ஸ்ரீ காமாக்ஷி -ன்னு
வரதுதான்” “அதனால…” அடேயப்பா! அப்பாவியினும் அப்பாவியாக என்ன நடிப்பு!!
“பெரிவாளுக்கு காமக்ஷிதான் எல்லாம்; பெரிவாளே காமக்ஷிதான்-கிறதால” ஆஹா!!
அப்பாவி என்ன போடு போட்டு விட்டார்? “புத்திசாலி”களால் இயலாத எத்தகைய சகஜ
பாவத்துடன் சத்தியத்தை சொல்லி விட்டார்! சற்றேனும் இது போல அந்த புத்திசாலிகள்
சொன்னாலும், உடனே பேச்சை ‘அபௌட்டர்ன்” திருப்பி விடும் பெரியவா, அன்று அதை
தாமும் சகஜமாக ஏற்று கொண்டு “காமக்ஷிதான் எனக்கு எல்லாம், நானே காமக்ஷிதான் [
இப்படி அவர் இயல்பாக கூற கேட்டபோது உள்ளங்கால் முதல்உச்சந்தலை வரை ஜிவ்வென்று
சிலிர்த்தது!] ..ங்கரையே…நீ என்ன கண்டு பிடிச்சியோ? எதை வெச்சு
கண்டுபிடிச்சே? ” “பெரிவா” அப்பாவி தேம்ப ஆரம்பித்தார்,”கண்டு பிடிக்கல்லாம்
எனக்கு ஒண்ணும் தெரியாது, பெரிவா! ரொம்ப பேர் அப்படித்தான் சொல்லியிருக்கா.
எனக்கும் பெரிவாளை பாத்தா அப்பிடித்தான் தோணித்து” என்று தேம்பலுக்கிடையே
குழறி முடித்தார். அப்பாவி! உன்பாக்யமே பாக்கியம்!! பூலோகம் காணாத புஷ்ப்பமா
பெரியவா உட்க்கார்ந்திருந்தார். தேம்பல் தேய்ந்தது. குறும்பு குத்தலில்
மீண்டும் இறங்கினார் குருநாதர். “சரி……அனுபல்லவிலே “காமாக்ஷி”ன்னுனா
இருக்கு? ஒரு வேளை பாட்டு பிள்ளையார் பேர்ல இருக்குமோ என்னமோ! நீ பாட்டுக்கு
காமாக்ஷிபாட்டுன்னு பாடிட்டியே?” “என்ன தப்பா இருந்தாலும் பெரிவா
மன்னிச்சுக்கணும்” என்று அழ இருந்த பாட்டுக்காரரை, “அழாதேப்பா! அழாதேப்பா!
என்று சந்தனமாகஆற்றி கொடுத்தார். “தப்பு ஒண்ணும் சொல்லலேப்பா! “விநாயக”ன்னு
ஆரம்பிச்சுட்டு “காமாக்ஷி”ன்னு போறதேன்னு கேட்டேன்.அவ்வளவுதான். போகட்டும்,
பாட்டு என்ன பாஷை?” குறும்பு குத்தல்தான்! “தெலுங்கு” என்றார் பாட்டுக்காரர்.
“அப்படியா!” என்ற பெரியவா ஒரு “திம்திமா” குத்தே விட்டார்! அபூர்வ
ராகம்பாடினாப்ல, அபூர்வ பாஷையும் பாடரயோன்னுனா ஆச்சர்ரியப்பட்டேன்!” “பெரிவா
அனுக்ரகம்!” திம்திமாவையும் மெத்திலும் மெத்தாக ஏற்ற பதில்.பாட்டுக்காரர்
குறித்து முதலில் கோபமுற்றவன், அப்புறம் சிரித்தவன், பின்னர் பரிவு கொண்டவன்,
இப்போது அழுதுவிடுவேன் போலாயிற்று! “பாக்யசாலி !” உன் அப்பாவித்தனம் எனக்கு
வாய்க்குமா?” “புரிஞ்சாலும் சரி, புரியாவிட்டாலும் போகட்டும் [குறும்பு
குத்தல்] பெரியவா பேசறா, கேட்டுண்டயிருப்போம்னு ஒக்காந்திருக்கியே……
பஸ்போய்ட போறதுப்பா! என்ன டைம்?” என்று பறந்தார். பாட்டுக்காரரை பற்றி
சொன்னார். வலக்கை, இடக்கை தெரியாத ஆயப்பசங்களிடம் கீதையை தனக்குள் அடக்கி
கொண்டிருந்த ஞானச்சாரியனுக்கு இருந்த அதே பரிவு. பாட்டுக்காரருக்கு வேலூர்
தாண்டி ஏதோ கிராமமாம். “ஸ்வல்ல்ப்ப பூஸ்திதி. அதுதான் ஜீவனோபாயம். படிப்பு
பண்ற க்ருத்ரிமம் தெரியாம இருந்துண்டிருக்கான் [படிப்பு ஏறாததை இத்தனை அழகாக
ஏற்றம் கொடுத்து சொல்ல அந்த எளிமை தெய்வத்தால்தான் முடியும். இங்கே நம் அத்தனை
பேருக்கும் குறும்பு குத்தல்] விதந்து தாயாரும் ஒரே பிள்ளையான இவனுமா
இருந்துண்டிருக்கா. கல்யாணத்தை பத்தி யோஜனை போகலையாம். அவா பாட்டுக்கு ஒரு
கஞ்சியை, கூழை குடிச்சுண்டு ஒருத்தருக்கு ஒரு ஹானி செய்யாம நிம்மதியா
இருந்திண்டுருக்கா. பாட்டுன்னா இவனுக்கு கொழந்தை நாள்லேர்ந்து ஒரு ஆசையாம்.
சிக்ஷை சொல்லிக்க வசதி கெடயாது. யார் ஆத்திலயாவது,ஹோட்டல்லயாவது ரேடியோ,
ரெகார்ட் வெச்சா ஓடி ஓடி போய் கேக்கறதாம். தனக்கு இருக்கற க்ராஹ்ய சக்தியிலே
எவ்வளவு பிடிச்சுக்கமுடியறதோ பிடிச்சுக்கறதாம். லட்சியமும், மனோபாவமும்தான்
முக்யமே தவிர, கார்யத்ல என்ன சாதிக்க முடியுங்கறதா முக்கியம்! அப்படி,அங்க
இங்க ஓடி தன்னால முடிஞ்ச மட்டும் பாட்டு கத்துண்டு இருக்கான். என்ன பத்தி
கேள்விபட்டதிலேந்து… [பாட்டுக்காரரை பார்த்து]எப்போப்பா கேள்விப்பட்டே?”
“கனகாபிஷேகம் நடந்துதே அப்போ” “அதாவது, ஏழெட்டு வருஷமா, அம்பாள், கிம்பாள்”
ன்னு என்னை பத்தி யாரோ சொல்லி கேட்டதுலேர்ந்து என்கிட்டே ஒரே பக்தி
வந்துடுத்தாம்.எனக்கு பாடி காட்டணும் காட்டணும்..ன்னு ஆசையாம். “அதெல்லாம்
நம்மை அல்லௌ பண்ணுவாளன்னும் பயமாம். அதோட, காஞ்சிவரம் வந்துட்டு போறதுன்ன
ரெண்டு, மூணு ஆகுமே, அதுக்குகூட வசதி இல்லாத ஸ்ரமமாம்”…. பாட்டுக்காரரின்
தேம்பல் பெரியவாளை இழுத்தது. அருள்மயமாக அவர் பக்கம் திரும்பி, “அழாதேப்பா!
பணம் காசு வரும் போகும். நீஅதுக்காக பறக்காம இருக்கியே, இந்த மனசு யாருக்கும்
வல்லே; வரது துர்லபம். ஐநூறு ஆயிரம் சம்பாதிக்கற இளம் பசங்ககூட [சொன்னது
40வருஷங்கள் முன்னால்] அமெரிக்காவுக்கு ஓடலாமான்னு பாக்கற நாள்ல, பசங்களை
சொல்வானேன்? ஆயிரம், ரெண்டாயிரம் சம்பாதிச்சுரிடையர்ஆனவாகூட extension க்காக
இல்லாத தில்லு முல்லு பண்ற இந்த நாள்ல, போறும்கிற எண்ணம் வரதே இல்லே…ஏதோ வர
மாதிரிக்ஷணம் வந்தாலும் ஓடி போய்டறது. ஒனக்கு அது தன்னால வந்திருக்கு. அது
போகவும் படாது. என்னை பாக்கறதுக்காக கூட பணம் காசுவந்தா தேவலையேன்னு
நெனைக்காதே. நா… ஒன் கூடவேதான் இருக்கேன்னு வெச்சுக்கோ…….” யாருக்கு
கிடைக்கும் அந்த சர்வகால சஹவாச வாக்குறுதி! பாக்கிய அப்பாவி நெடுஞ்சாண்கிடையாக
நமஸ்கரித்தார்.
“என்னைபத்திகேட்டதுலேர்ந்துபாக்கணும்,பாடணும்னுதவிக்கஆரம்பிச்சுட்டான்……..ஏழெட்டு
வருஷமா எனக்காக தவிச்சிருக்கான். தபஸ் இருக்காப்ப்லேயே……..இப்பத்தான்
வாழ்நாள்ல மொதல் தரமாsavings ன்னு ஒரு பத்து பதினஞ்சு கையிலே
சேந்துதாம்…..அது அப்படியே பெரியவாளுக்குன்னு [பெரியவா அடக்கிகொண்ட போதிலும்
அவரதுஉள்ளுருக்கம்அந்த வார்த்தைகளில் ஜாடை காட்டியது]
பஸ் சார்ஜ் போக, மீதிக்கு எனக்கு புஷ்பம், பழம், இதோ மாலைபோட்டுண்டிருக்கேனே,
இது எல்லாம் வாங்கிண்டு ஓடி வந்துட்டான் [ஓஹோ! மாமுனிவர் கழற்றாமல்
அணிந்திருந்த மாலையின் ரகசியம்இதுதான?] திரும்பி போறதுக்கு சரியா என்ன பஸ்
சார்ஜோ அவ்வளவுதான் கையிலே வேச்சுண்டிருக்கான்” அடாடா! அப்பாவி! உன் பக்தி
மட்டுமில்லை, அபரிக்ரஹமும், த்யாகமும்கூட எங்களுக்கு கனவிலும் வராது! அந்த
பாகியசாலிக்கு ஏதேனும் பணிபுரிய வேண்டுமென எனக்கு உந்துதல் ஏற்ப்பட்டதால்,
“ராத்திரி பூஜை பாத்துட்டு போறமாதிரிதான்வந்திருக்கேன். அதனால, அவரை எங்க
வண்டியிலே கிராமத்துக்கு கொண்டு விட்டுட்டு வர சொல்லவா?” உடனே பெரியவா
பளிச்சென்று சொன்னார் “அந்த சவுகர்யத்துக்கேல்லாம் அவனை காட்டி கொடுக்காதே!
[காட்டிகொடுக்காதே….என்ன அர்த்தபுஷ்ட்டியான பதப்ரயோகம்!]
“பாத்தியா…….பெரிய எழுத்தாளர் ஒன்கிட்ட எவ்வளவு பிரியமா இருக்கார்?
அதுக்காக அவர் எழுதறது, எதையாவது படிச்சுட்டு திண்டாடாதே! அவர் பணம், காசு
கொடுத்தா தொடாதே! கார் சவாரி பண்ணி வெக்கறேன்னாலும் ஒத்துக்காதே !” பையன்
சொன்னார் “நான் படிக்க மாட்டேன் பெரிவா! எனக்கு அதெல்லாம் புரியாது; காசும்
யார்கிட்டேயும் வாங்கறதில்லே, பெரிவா; கார் சவாரிக்கேல்லாம் ஆசைப்படலை பெரிவா!
பெரிவா ஆசிர்வாதந்தான் வேணும்” “வேண்டியமட்டும் தரேன் ” என்று வாரிவிட்ட
வள்ளல் பாகியசாலியிடம் “ஒனக்கு நாழியாச்சு…..சட்னு போய் சந்திர
மௌலீஸ்வரருக்கு நமஸ்காரம் பண்ணிட்டு வா, பிரசாதம் தரேன்” “சந்திர மௌலீஸ்வரர்னா
எந்த சுவாமி? எங்கே கோவில் இருக்கு?” என்று பெரியவாளையே கேட்டார், தன
அறியாமையாலேயே கண்களை மல்க செய்த பாக்கியசாலி.
“சந்திர மௌலீஸ்வரர்தான் இந்த மடத்துக்கு சுவாமி. அதோ அங்கேதான் நாங்க அவரை
வெச்சுண்டு தங்கி இருக்கோம். போய் நமஸ்காரம்பண்ணிட்டு ஓடி வா” “மடத்து சுவாமி
காமாக்ஷி அம்மன் இல்லியா?” “அவளுந்தான். அவ மடத்துக்கு மட்டும் இல்லாம ஊர்
உலகத்துக்கெல்லாம் பொதுவா காஞ்சிபுரத்ல பொது கோவில்லஇருக்கா……..அவளேதான்
இந்த மடத்தை பாத்துக்கறதுக்காக, இந்த மடத்து சாமியார்கள் மட்டும் பூஜை
பண்ணறதுக்காக – ஆனா மடத்துக்காக மட்டும் இல்லாம, லோகம் பூராவுக்குமாக பூஜை
பண்றதுக்காக – சந்திர மௌலீஸ்வரர்ன்னு அவளோட ஆத்துக்காரர் [ எளியவர்க்கேற்ற
எளியபத பிரயோகம்] அவரை ஸ்படிக லிங்க ரூபத்திலே இங்கே அனுப்பிச்சு வெச்சு, அவர்
பக்கத்திலே தானும் வேறே ஒரு மாதிரி ரூபத்திலே [ ஸ்ரீசக்ரம், மேரு என்றெல்லாம்
சொல்லி அவரை திண்டாட வைக்காத அருமை பாருங்கள்] இருக்கா. கவசமும் அலங்காரமும்,
புஷ்ப்பமுமாபோட்டிருக்கரதாலே ஒனக்கு லிங்கம், அம்பாள்ன்னு எல்லாம் ஒண்ணும்
ஸ்பஷ்ட்டமா தெரியாது. அதுக்காக தேடிண்டு இருக்காதே! “இங்கேசுவாமி இருக்கார்
ன்னு ” நெனச்சுண்டு ஒரு நமஸ்காரத்தை பண்ணிட்டு ஓடி வா” அவர் போனதும் என்னிடம்
“நீ அவனை கார்ல அனுப்பி வெச்சு கார், மோர் ன்னு போய் கிராமத்தல எறங்கரான்னு
வெச்சுக்கோ, அப்பா ஒருமெதப்பு எண்ணம் வந்தாலும் வந்துடலாம். அவனுக்கு எதுக்கு
அதெல்லாம்? அவனுக்கு வசதி வேண்டாம், சவுகர்யம் வேண்டாம், status,தோரணை ஒண்ணும்
வேண்டாம். அறிவு, வித்வத்கூட வேண்டாம். ஆமாம், வேண்டாந்தான்! சொல்றேன் கேளு”
“சமீப காலமா வேலூர்லேர்ந்து ஒரு பாட்டு வாத்யார் என்கிட்டே வந்துண்டு
இருக்கார். ஓரளவு விஷயம் தெரிஞ்சவர்; அதைவிட [குறும்பானசிரிப்புடன்]
பொறுமைசாலின்னும் தெரியறது………நான் சொன்னேன்னா…..இவனுக்கு ப்ரீயாவே
கத்துக்கொடுப்பார். அப்படி பண்ண அவருக்குஅபிப்ராயமில்லேன்னு தெரிஞ்சாலும்,
நான் யார் தலையிலாவது கை வெச்சு அவனுக்காக சம்பளம் கட்டறதுக்கு ஈஸியா
ஏற்பாடுபண்ணிடலாம்…….ஆனா அந்த மாதிரி எதுக்கும் அவனை நான் காட்டி கொடுக்க
நெனைக்கலே …..சரியா பாடறதுங்கர சாமர்த்தியம் கூடஅவனுக்கு வேண்டாம். அவன்
பாட்டுக்கு இருக்கறபடி இருக்கட்டும். இப்ப பாடறபடியே பாடிண்டு போகட்டும்.
தற்கால புத்திசாலி உலகத்திலேயும் தப்பி தவறி, இந்த மாதிரி அசடா இருக்கறவா,
நித்திய அசடாவே இருக்கட்டும். அவாளை கெடுக்க வேண்டாம்னே எனக்கு இருக்கு”
சந்திர மௌலீஸ்வரர் யாரென்று தெரியாமலே, நடமாடும் சந்திர மௌலீஸ்வரியால் இன்றைய
புத்திசாலி உலகுக்கு மாற்று மருந்தாக போற்றப்பட்ட பாகியசாலி, அவர் சொன்னபடியே
நமஸ்கரித்து விட்டு வந்தார். “நமஸ்காரம் பண்ணிக்கோ நாழியாச்சு!”பிரிய
மனமின்றி, கண்ணீரும் கம்பலையுமாக பாக்கியசாலி நமஸ்கரித்தார்………..நீ
பாடினியே, அந்த விநாயகனை ரக்ஷிக்கராப்ல ஒன்ன அம்பாள் எப்பவும் ரக்ஷிசுண்டு
இருக்கட்டும்” என்று ஆசிர்வதிக்கவே ஏற்ப்பட்டதிருக்கரத்தை தூக்கினார்

சீனா பாயி சின்ன பசங்களா?

FB IMG 1499710410168 1 - 2026

அன்று மணிசங்கர் அய்யர் பாகிஸ்தானுக்குப் போய் எப்படியாவது மோடியை கவிழ்க்க
உதவி செய் என்று காலில் விழுந்து கெஞ்சி விட்டு வந்தான்..

இன்று அரை வேக்காட்டு பப்பு போய் சீனத் தூதரை சந்தித்துவிட்டு
வந்திருக்கிறான்,… சீன அதிபர் இந்திய பிரதமரை G20 மாநாட்டில் சந்திக்க
வாய்ப்பில்லை என்று கசப்புடன் அறிவித்து, பிறகு மோடியுடன் வேண்டா வெறுப்பாக கை
குலுக்கியதை அறிந்த பிறகும் , நம் எல்லையில் அத்து மீறி சீனன் சாலை போடுகிறான்
என்று அறிந்த பிறகும், இந்த அம்மாக் கோண்டு அங்கே போய் ஏதோ சாதித்து விட்டதாக
தம்பட்டமடிக்கிறது.

காங்கிரஸ், கழகங்கள் , இவற்றில் சேர்ந்து விட்டாலே அல்லது அந்த வம்சத்தில்
பிறந்து விட்டாலே வெக்கம், மானம் , சூடு, சொரணை, அறிவு எல்லாம் அத்துப்
போய்விடும் போல…

எச்சில் சோத்துக்கு குப்பைத்தொட்டியை பிறாண்டும் பட்டிகள் போல இவர்கள்
எதிரிகளிடத்தில் மண்டியிடத் துவங்கிவிடுகிறார்கள் தங்கள் பிழைப்புக்காக…

இங்கே ஏன் கழகங்களை இழுக்கிறாய் , காவி அது இதுன்னு யாராச்சும் வந்தீங்க,
கபிணி, ஹேமாவதியில் துவங்கி ஈழம் வழியாக மீத்தேனில் முடிக்க
வேண்டியிருக்கும்…

மாநில துரோகம், தேச துரோகம் , கார் டயரை விழுந்து கும்பிடும் மானங்கெட்ட
பிழைப்பு , பரம்பரை அல்லது இஷ்ட இணைப்பு கொத்தடிமைத்தனம், இவற்றில் கழகன் ,
காங்கிரஸ்காரன் யாருக்கும் எந்தக் கூச்சமும் கிடையாது…

அட வெக்கங்கெட்ட பட்டிகளா !!!

சீன தூதரை ராகுல் சந்தித்து காங்கிரஸ் நடத்திய நாடகம்; துரோக அரசியலால் மக்கள் கொதிப்பு!

rahul-gandhi

புது தில்லி:

அண்டை நாடான சீனா, சண்டை போடும் முன்னேற்பாடுகளுடன் நம் நாட்டின் எல்லையில் வாலாட்டிக் கொண்டிருக்கும் தருணத்தில், சீன தூதரை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சந்தித்ததும், அதனை ரகசியமாக்க முயன்று பின் தோற்றதும், நாட்டில் இன்று பரவலாகப் பேசப்பட்டதுடன், மக்களிடையே கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் உள்ள சிக்கிம் மாநிலம், பூடான் நாட்டின் டோக்லாம், சீனாவின் டோங்க்லாங் ஆகிய பகுதிகள் சந்திக்கும் ஒரு முனையில், சீன ராணுவம் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டது. இதனை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தி, தனது கண்காணிப்பை பலப்படுத்த நிரந்தர கூடாரம் அமைத்துள்ளது. இந்நிலையில், சீன அரசு ஊடகமான குளோபல் டைம்ஸில் இந்தியாவைச் சீண்டும் வகையில் கட்டுரைகளும் கருத்துகளும் ஆதிக்க மனப்பான்மையில் வெளியிடப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக எல்லையில் போர்ப்பதற்றம் ஏற்பட்டுள்ளது.

FB IMG 1499710410168 - 2026

இத்தகைய பின்னணியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 7 ஆம் தேதி, மோடி ஏன் சீனா விவகாரத்தில் மௌனமாக இருக்கிறார்? என்று கேள்வி எழுப்பினார். ஆனால், சீன ராணுவத்தின் ஆக்கிரமிப்பு தொடர்பாகவோ, சீனா தனது அரசு ஊடகத்தின் மூலம் சீண்டி வருவது தொடர்பாகவோ எந்தத் தகவலையும் ராகுல் குறிப்பிடவில்லை.

இந்நிலையில், சீன தூதரகம் 9ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை நேற்று வெளியிட்ட அறிவிப்பில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும், இந்தியாவிற்கான சீன தூதர் லூ சவோஹூய்யும் சந்தித்து பேசினர். இந்தியா – சீனா இப்போதைய உறவுகள் குறித்து இருவரும் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டனர் என தெரிவிக்கப்பட்டது. சீன தூதரகம் இந்தச் செய்தியை வெளியிட்ட நிலையில், இன்று காலை காங்கிரஸ் கட்சி அதனை மறுத்துள்ளது. ஆனால், சற்று நேரம் கழித்து சீன தூதரை ராகுல் காந்தி சந்தித்துப் பேசினார் என காங்கிரஸ் ஏற்றுக் கொண்டது.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, சீன மற்றும் பூடான் நாட்டு தூதர்களை சந்தித்து பேசினார். முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனும் சந்தித்துப் பேசினார் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப்சிங் சுர்ஜேவாலா கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில் ஊடகங்களைச் சகட்டுமேனிக்கு சாடியவர், சீனாவிற்கு சென்ற மூன்று மத்திய அமைச்சர்கள் மற்றும் பிரதமர் ஜி20 மாநாட்டில் பாராட்டு தெரிவித்தது தொடர்பாக கேள்வி எழுப்பாமல், ஊடகங்கள் இப்படி போலி செய்திகளை இதுவரையில் வெளியிடுகின்றன!, நாங்கள் இன்னும் அனைத்து அண்டைய நாடுகளுடன் அரசு ரீதியான உறவுகளைக் கொண்டுள்ளோம் என்பதை மறு ஆய்வு செய்ய வேண்டும். மரியாதை நிமிர்த்தமாகவே பல நாடுகளின் தூதர்களையும் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசி வருகிறார்கள் எனக் கூறியுள்ளார் சுர்ஜேவாலா.

இப்போது, ராகுல் காந்தியின் அரசியல் பல்வேறு கேள்விகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பரவலாக சில கேள்விகளை சமூக வலைத்தளங்களில் மக்கள் எழுப்பி வருகின்றனர்.

அரசியலுக்காக நாட்டை அடமானம் வைக்கிறதா காங்கிரஸ் ? சீனத் தூதரை ராகுல் சந்திக்கவில்லை என்றது காலையில் சொன்னது காங்கிரஸ். எல்லை விவகாரங்களைத் தெரிந்து கொள்ள சீன தூதரை சந்தித்ததாக இன்று மதியம் ராகுல் காந்தி தெரிவித்தார்.

இவ்வாறு ராகுல் காந்தி சீனத் தூதரை சந்தித்ததை காலையில் தனது வலைத்தளத்தில் வெளியிட்ட சீன தூதரகம், இவ்வாறு செய்தி வெளியான சில மணித் துளிகளில் அந்தச் செய்தியை வலைத் தளத்திலிருந்து நீக்கியது. ஏன் இவ்வாறு நடந்தது? செய்தியை வலைத்தளத்தில் இருந்து நீக்க வேண்டிய நிர்பந்தம் சீன தூதரகத்துக்கு வந்தது எதனால்? இதன் பின்னணி என்ன?

ராகுல் காந்தி சீன தூதரைச் சந்திக்கவில்லை, இந்தச் செய்தி வெளியுறவு அமைச்சகம் மற்றும் ஐ.பி யின் திட்டமிட்ட பொய்ப் பிரசாரம் என்று காலையில் அறிக்கை விட்டது காங்கிரஸ் கட்சி. சந்தித்தது உண்மை என்றால், ஏன் இந்த அறிக்கையை கட்சி வெளியிட்டது ?

ராகுல் சீன தூதரை சந்தித்த நிகழ்வை காங்கிரஸ் கட்சி மறைக்க முற்பட்டது ஏன்?

மணிசங்கர் போன்ற காங்கிரஸ் தலைவர்களின் வெளிப்படையான பாகிஸ்தான் ஆதரவு நிலைபாட்டை வைத்தும, ராணுவத்திற்கு எதிரான சந்திப் தீக்ஷித்தின் பேச்சையும் வைத்துப் பார்க்கும் போது, அரசியலில் பா.ஜ.க வை வீழ்த்த காங்கிரஸ் அன்னிய எதிரிகளுடன் கைகோக்கிறதோ என்ற சந்தேகம் வலுக்கிறது என்று பலரும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

சீனாவுடனான பதற்ற சூழலில், ஒரு எதிர்க்கட்சி துணைத்தலைவர் ராகுல் சந்தித்துப் பேசியிருப்பது பெரும் பரபரப்பையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது

ஐஎஸ்., பயங்கரவாதிகளிடம் சிக்கிய 39 இந்தியர்கள்: மீட்கும் முயற்சியில் அமைச்சர் பயணம்

isis-terrorist

புதுதில்லி:

ஈராக் நாட்டுக்கு கட்டட வேலைக்குச் சென்ற இந்தியர்கள் 2014 ஆம் ஆண்டு முதல் பிணைக்கைதிகளாக இருந்துள்ளனர். மோசூல் நகரம் ஐஎஸ் பயங்கரவாதிகளின் கைகளில் இருந்து விடுபட்டுள்ள நிலையில், இவர்கள் 39 பேரும் கண்டுபிடிக்கப்பட்டு இந்தியா திரும்புவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களை கடைசியாக சர்ச் ஒன்றில் மறைந்திருந்தபோது சிலர் பார்த்துள்ளனர். இவர்கள் 39 பேரையும் விடுவிக்கும் முயற்சியாக, பாதுகாப்புத் துறை இணையமைச்சர் தளபதி வி கே சிங் ஈராக் சென்றுள்ளார்.

சிரியா நாட்டின் எல்லையோரம் உள்ள ஈராக்கின் மொசூல் நகரை மூன்றாண்டுகளுக்கு முன்னர் ஐ.எஸ். பயங்கரவாதிகள் கைப்பற்றினர். அத்துடன், அங்கே வசித்து வந்த கிறிஸ்தவர்கள், யாஸிதிகள் மற்றும் குர்த் இன மக்களை ஊரை விட்டு அடித்து விரட்டினர். பின்னர் அங்கே இஸ்லாமிய அரசை அமைத்துள்ளதாக அறிவித்தனர். இந்நிலையில், ஐஎஸ் பயங்கரவாதிகளை அங்கிருந்து விரட்டுவதற்காக ஈராக் ராணுவம் சில மாதங்களாக உச்சகட்ட தாக்குதலை மேற்கொண்டடு. இதன் விளைவாக மோசூல் நகரம் மீண்டும் அரசின் வசமாகியுள்ளது.

இந்நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு பெட்ரோல் கிணறு கட்டுமானப் பணிகளுக்காக அங்கே சென்று வேலை பார்த்த இந்தியர்கள் 39 பேரை ஐ.எஸ். பயங்கரவாதிகள் கடத்திச் சென்றிருந்தனர். கடத்தப்பட்டவர்கள் என்ன ஆனார்கள் என்ற தகவல் தெரியாமல் அவர்களின் குடும்பத்தார் திண்டாடி வந்த நிலையில், அவர்களில் சிலரை அங்கிருந்த சர்ச் ஒன்றில் பார்த்ததாக சிலர் தகவல் தெரிவித்தனர். இருப்பினும், மோசூல் நகரம் முழுவதும் இதுவரை ஐஎஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்ததால் கடத்தப்பட்ட இந்தியர்களை மீட்பதில் சிக்கல் நீடித்தது. தற்போது, மோசூல் நகரம் மீண்டும் அரசின் வசம் வந்துள்ளது. இதற்கு இந்தியா பாராட்டு தெரிவித்துள்ளதுடன், கடத்தப்பட்ட இந்தியர்களை உடனடியாகத் தேடிக் கண்டுபிடித்து ஒப்படைக்குமாறு இந்திய அரசு ஈராக் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கு தேவையான ஒத்துழைப்பை அளிக்க தயாராக இருப்பதாக ஈராக் அரசும் உறுதி அளித்தது.

இந்நிலையில், இதற்கான ஏற்பாடுகளை விரைவுபடுத்தும் நோக்கில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் இன்று ஈராக் நாட்டில் உள்ள எர்பில் நகருக்கு புறப்பட்டார். இந்தத் தகவல் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இதில் சிக்கிக்கொண்ட 39 பேரில் பெரும்பாலோர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இது குறித்து அம் மாநில முதல்வர் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுடன் தொலைபேசியில் பேசினார்.

அதற்கு அவர், மத்திய அரசும் பல்வேறு வழிகளில் இந்தியர்களைக் கண்டுபிடித்து இந்தியா அழைத்துவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உறுதி கூறினார்.

“அந்த நரிக்குறவர்களுக்குத்தான் எவ்வளவு பெரும் பேறு?”

295603 479182172136829 1054166438 n - 2026

“அந்த நரிக்குறவர்களுக்குத்தான் எவ்வளவு பெரும் பேறு?”

(வேதவித்துக்கள் உண்ட உச்சிஷ்டத்தை சாப்பிட்டு,
பாவமெல்லாம் போய்,அடுத்த பிறவியில் நல்ல
வேதியர்களாகப் பிறந்து ஆனந்தமாக இருக்கத்தான்,
இப்படிச் செய்யறது…”-பெரியவா.)

சொன்னவர்; பழக்கடை பி.ஆர்.தியாகராஜன்.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்

கும்பகோணம் மடத்து தெருவிலுள்ள ஸ்ரீ காஞ்சி
காமகோடி பீடம் மடத்தில், ஒரு சமயம் ஏராளமான
வைதிக சிரேஷ்டர்களுக்கு சமாராதனை ஏற்பாடிகி-
-யிருந்தது.அப்போது, வைதிகர்களுக்கு நானும்
பரிமாறுவேன்.

மகாசுவாமிகள்,என்னைத் தனியே கூப்பிட்டார்.
“இன்னிக்கு,இலைக்கு பட்சணம் லட்டு!
தெரியுமோல்லியோ?”

“தெரியும்”–நான்

“நீ தானே பரிமாறுவே?..அவர்கள் வேண்டாம்,வேண்டாம்
என்று கையைக் கொண்டு வந்து மறுத்தாலும், நீ பாட்டுக்கு
ஒவ்வொருத்தருக்கும் லட்டு ரெண்டு,மூணுன்னு
போட்டுண்டே போ! அவாளெல்லாம் உன்னைத் திட்டுவா.
எறியும்படி வைக்கிறானே? என்று கோபப்படுவா,
காது கொடுக்காதே”

சுமார் அறுபது வைதிக சிரோன்மணிகள் போஜனப் பந்தியில்
உட்கார்ந்திருந்தார்கள்.அவர்களுக்குப் பரிமாறியதில்
நூற்றைம்பது லட்டுகளைக் காலி செய்து விட்டேன்!

பெரியவா சொன்னது போல,என் காதுபடவே என்னைத்
திட்டினார்கள். இந்தத் திட்டுகளுக்கு மேல் உயர்ந்து
பெரியவாளின் கருணை இருந்தது.!

அப்போதெல்லாம், ஒரு இரட்டை மாட்டுவண்டி மடத்துக்
கொல்லைப்புறத்தில் இருக்கும். பெரியவா அந்த வண்டியை
கழுவச் சொன்னார்கள்.ஆசனம் கொண்டு வரச் சொன்னார்கள்.
அதில் உட்கார்ந்து கொண்டார்கள்.

வைதிகர்கள் உணவருந்தி முடிந்தவுடன் எச்சில் இலைகளை
கொல்லையில் கொண்டு வந்து போட்டார்கள்,சிப்பந்திகள்.
அப்போது ஓடி வந்தார்கள்,ஐம்பது நரிக்குறவர்கள்.ஆண் – பெண்
-குழந்தைகளாய். ஏக சந்தோஷம்,அவர்களுக்கு.அவர்கள்
பாஷையில் காச்சு மூச்சென்று ஒரு இரைச்சல்,ஒரு கும்மாளம்!
இலைகளில் மிகுந்திருந்த பண்டங்களை அள்ளி அள்ளிச்
சாப்பிட்டார்கள். லட்டுகளைப் பொறுக்கி மூட்டை கட்டிக்
கொண்டார்கள்.

பெரியவா,வண்டியிலிருந்தபடியே,இந்த ஆனந்த அமர்க்களத்தை
மனம் நெகிழப் பார்த்து மகிழ்ச்சியுடன் ரஸித்துக்
கொண்டிருந்தார்கள்.

“நீ போய், போஜனம் செய்து விட்ட வைதிகர்களை
அழைச்சிண்டு வா.”

வந்தார்கள் வைதிகர்கள். நரிக்குறவர்களின் முகத்தில்
பேரானந்தத்தைக் கண்டார்கள்.

“தியாகுவை கோபித்துக் கொண்டீர்களே! நீங்களே பாருங்கள்.
இவர்களுக்கு இப்படிச் சாப்பிடத்தான் பிடிக்கும். நேராக கையில்
லட்டைக் கொடுத்தால் கூட இவ்வளவு சந்தோஷம் வராது.”

“நமக்கும்,நேரடியாகத் தரும் பழக்கம் இல்லை.”
(நேரடியாகக் கொடுத்தால்,சமையற் கட்டில் மீதமிருக்கும்
லட்டுகள் சேஷமாக-மடி,ஆசாரம் பார்ப்பவர்கள் உண்ணத்
தகாததாகப் போய்விடும்.)

இப்படி இலையில் போட்டு, மிகுந்து எறியப்பட்டதை
நரிக்குறவர்கள் சாப்பிடுவதால் அவர்களுக்கு என்ன மேன்மை?

..இந்தக் கேள்விக்குப் பெரியவா கொடுத்த பதில்,
நெஞ்சம் உள்ள எல்லோரையும் நெகிழச் செய்யும்.

“ஏதோ, முன்வினைக் கொடுமையால் நரிக்குறவர்களா
ஜன்மம் எடுத்து,குப்பைத் தொட்டியில் போட்ட எச்சில்
உணவுப் பண்டங்களை சாப்பிடும் துர்பாக்கியம் அவர்களுக்கு.
இன்று வேதவித்துக்கள் உண்ட உச்சிஷ்டத்தை சாப்பிட்டு,
பாவமெல்லாம் போய்,அடுத்த பிறவியில் நல்ல
வேதியர்களாகப் பிறந்து ஆனந்தமாக இருக்கத்தான்,
இப்படிச் செய்யறது…”

பெரியவாளின் விளக்கத்தைக் கேட்டவர்களுக்கெல்லாம்
உடம்பில் மின்னலைப் பரவினாற்போலிருந்தாம்.கரூணை
என்றால்,இதுவல்லாவா, கருணை.

அந்த நரிக்குறவர்களுக்குத்தான் எவ்வளவு பெரும் பேறு?

வேத பண்டிதர்கள் எல்லோரும் பெரியவாளின் அவ்யாஜ
கருணையை எண்ணி, அசந்து போனார்கள்.அப்போது
பந்தியில் சாப்பிட்ட வைதிகர்களில் ஒன்றிரண்டு பேர்கள்
இன்னமும் சென்னையில் உள்ளார்கள்.

பால் நிறுவனங்கள் குறித்து அமைச்சர் பேசக் கூடாது: நீதிமன்றம் வாய்ப்பூட்டு

madras-high-court

சென்னை:

பால் நிறுவனங்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் எதுவும் பேசக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தமிழக பால்வளத் துறை அமைச்சருக்கு வாய்ப்பூட்டு போட்டுள்ளது.

பால்வளத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தனியார் பால் நிறுவனங்கள் பாலில் கலப்படம் செய்வதாகக் குற்றம்சாட்டி வந்தார். இது பொதுமக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பியது. இந்நிலையில், பால் கலப்படம் குறித்து உரிய விளக்கம் அளிக்குமாறு பொதுமக்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

இதனிடையே, ஹட்சன், டோட்லா, விஜய் பால் நிறுவனங்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அதில் தீங்கு விளைவிக்கும் வகையில் தனியார் பாலில் எதும் கலக்கப்படவில்லை என்றும், அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி அவதூறு பரப்புவதைத் தடுக்குமாறும் கோரியிருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தனியார் பால் நிறுவனங்கள் மீது ஆதாரம் ஏதுமின்றி பேசக் கூடாது என்று உத்தரவிட்டது. இதுதொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தது நீதிமன்றம்.

இந்நிலையில், நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றுள்ள பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச் சங்கம், பால் கலப்பட சிறப்பு தடைச் சட்டத்தை நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே இயற்றிட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது. இன்று அச்சங்கத்தின் சார்பில் அதன் நிறுவுனர் ச.ஆ. பொன்னுசாமி வெளியிட்ட அறிக்கையில்,

“தனியார் பால் நிறுவனங்கள் ஹைட்ரஜன் பெராக்சைடு, பார்மாலின் உள்ளிட்ட உயிருக்கு தீங்கிழைக்கும் ரசாயனப் பொருட்களை கலப்படம் செய்கின்றன, தனியார் பால் நிறுவனங்களின் பாலை குடிப்பதால் குழந்தைகளுக்கு புற்று நோய் வருகிறது” என சர்ச்சைக்குரிய வகையில் பேசி வரும் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள் தனியார் பால் நிறுவனங்கள் குறித்து தகுந்த ஆதாரமின்றி பேசுவதற்கு தடை விதிக்க கோரி சில தனியார் பால் நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இன்று (10.07.2017) தனியார் பால் நிறுவனங்கள் குறித்து தகுந்த ஆதாரமின்றி பேசுவதற்கு தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த தீர்ப்பை எங்களது “தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்” சார்பில் மனதார வரவேற்கிறோம்.

மேலும் நாளை (11.07.2017) தமிழக சட்டப்பேரவையில் “பால் மானியக் கோரிக்கை மீதான விவாதம்” நடைபெற இருக்கும் சூழ்நிலையில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் பாலில் கலப்படம் செய்வோருக்கு “ஆயுள் தண்டனை” விதிக்கின்ற வகையில் அந்தந்த மாநில அரசுகள் சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என 2013, 2014ம் ஆண்டுகளில் இடைக்கால உத்தரவும், 2016ம் ஆண்டில் இறுதி உத்தரவும் பிறப்பித்த உச்சநீதிமன்றத்தின் ஆணையை கவனத்தில் கொண்டு இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக நிறைவேற்றிட பச்சிளம் குழந்தைகள் முதல் வயதானவர்கள், நோயாளிகள் என பொதுமக்கள் அனைவருக்கும் அத்தியாவசிய, அவசியமான உணவுப் பொருளாக விளங்கும் “பாலில் கலப்படம் செய்வோருக்கு ஆயுள் தண்டனை” விதிக்கின்ற வகையில் நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே “பால் கலப்பட சிறப்பு தடைச் சட்டம்” நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

“பால் கலப்பட சிறப்பு தடைச் சட்டம்” இயற்றுவதோடு மட்டுமில்லாமல் கலப்பட பால் நிறுவனங்களை கண்டறிந்து இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கவும், கலப்பட பாலை முற்றிலுமாக ஒழிக்கவும் தமிழக அரசு சார்பில் ஒரு “ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில், பால் தொழில்நுட்பம் தெரிந்த அதிகாரிகள், பால் முகவர்கள், தொழிலாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், மக்கள் பிரதிநிதிகள்” என “ஐவர்” அடங்கிய “அதிரடிப்படை நிபுணர் குழு”வை அமைக்க வேண்டும், ஏனெனில் நாளொன்றுக்கு பல கோடிக்கணக்கான பால் பாக்கெட்டுகளை அரசு மற்றும் தனியார் பால் நிறுவனங்கள் தயாரித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அனுப்புகின்றன. அவ்வாறு சந்தைப்படுத்தப்படும் பால் பாக்கெட்டுகளை தமிழகத்தின் ஏதோ ஒரு பகுதியில் மட்டும் ஆய்வுக்காக எடுத்து சோதனை செய்து விட்டு ஒரு நிறுவனம் தரமான நிறுவனம் என்றோ அல்லது தரமற்ற நிறுவனம் என்றோ முடிவு செய்வது சரியல்ல.

எனவே அதிரடிப்படை நிபுணர் குழுவினர் வாரந்தோறும் அரசு மற்றும் தனியார் பால் நிறுவனங்கள் ஒவ்வொன்றின் தொழிற்சாலைகளுக்கும் நேரிடையாக சென்று அந்நிறுவனத்தில் பாக்கெட் செய்யப்படும் பாலின் மாதிரிகளை எடுத்து அங்கேயே ஆய்வு செய்ய வேண்டும். அப்போது பாலில் கலப்படம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அந்நிறுவனத்தை இழுத்து மூடி சீல் வைப்பதோடு, அந்நிறுவனத்தின் உயரதிகாரிகள், உரிமையாளர்கள் மீது பிணையில் வெளி வர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து சிறையில் அடைக்கும் வகையில் அதிகாரம் கொண்டதாக “பால் கலப்பட சிறப்பு தடைச் சட்டத்தை இயற்ற வேண்டும் என மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம்.

அதுமட்டுமன்றி கலப்பட பால் தொடர்பான விழிப்புணர்வு தகவல்களை பதிவிடவும், அதிரடிப்படை நிபுணர் குழுவின் நடவடிக்கைகளை திறந்த மனதோடு, ஒளிவு மறைவின்றி பொதுமக்களுக்கு தெரிவிக்க தமிழக அரசு சார்பில் “சிறப்பு இணையதளம்” தொடங்கவும் சுகாதாரத்துறை மற்றும் பால்வளத்துறைக்கு உத்தரவிட வேண்டும்.

மேலும் பொதுமக்கள் நலன் சார்ந்த “பால் கலப்பட சிறப்பு தடைச் சட்டத்தை நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே இயற்றிட தமிழகத்தில் இருக்கும் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்” எனவும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.

பாகிஸ்தானுக்காக காஷ்மீரில் சீன ராணுவம் களமிறங்கும்! : சொல்கிறது சீன அரசு ஊடகம்!

indo-china-borderபாகிஸ்தான் கேட்டுக் கொண்டால், இந்தியா பாகிஸ்தான் இடையே சர்ச்சைக்குள்ள பகுதியில் சீன ராணுவம் களம் இறங்கும், அது காஷ்மீராகவும் இருக்கலாம் என்று சீன அரசின் ஊடகமான குளோபல் டைம்ஸ் கட்டுரையில் குறிப்பிடப் பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள சிக்கிம் மாநிலத்தின் சில பகுதிகள், பூடான் நாட்டின் டோக்லாம், சீனாவின் டோங்லாங் ஆகிய பகுதிகள் ஒரு முனையில் சந்திக்கின்றன. இந்தப் பகுதியில் சீன ராணுவம், இதனை தங்கள் பகுதி என்று சொல்லி, ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளது. சீன ராணுவத்தின் செயலை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தி உள்ளது. பூடானும் சீனாவுக்கு தனது கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்திய எல்லைப் பாதுகாப்பில் முக்கியப் பகுதியாகத் திகழும் சிக்கிமை ஆக்கிரமிக்க முயலும் சீன ராணுவத்தின் அடாவடித்தனத்தை இந்திய ராணுவத்தினர் ஓர் அரண் போல் நின்று முறியடித்துள்ளனர். மேலும் சீனா எத்தனையோ மிரட்டல்களை விடுத்த போதும், அந்தப் பகுதியில் இருந்து திரும்புவதில்லை என இந்திய ராணுவத்தினர் அறிவித்து விட்டனர். இதனால் வெறுத்துப் போயுள்ள சீனா, தொடர்ச்சியாக அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. அதற்கு ஏற்ப சீன அரசு ஊடகமும் இந்தியாவுக்கு ஆத்திரமூட்டும் வகையில் செய்திகளை வெளியிட்டு வருகிறது.

சிக்கிம் மாநில எல்லை அருகே உள்ள நிலப்பரப்பின் ராணுவ முக்கியத்துவத்தை உணர்ந்துள்ள இந்தியா, அங்கிருந்து தனது ராணுவ வீரர்களை விலக்கக் கூடாது என்பதில் மிகவும் உறுதியாக உள்ளது. அதுபோல சீனாவும் அங்கிருந்து பின்வாங்கக் கூடாது என்ற முடிவில் இருக்கிறது. இந்நிலையில் டோங்லாங் எல்லை பிரச்னையில் இந்தியாவின் எந்த சமரசத்தையும் ஏற்க மாட்டோம் என சீனா அறிவித்தது.

இருப்பினும் சீனாவின் இத்தகைய நெருக்கடிகளுக்கு பதிலடியாக, டோக்லாம் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் நிரந்தரமாகத் தங்கும் வகையில் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இரவு-பகலாக 24 மணி நேரமும் தங்கியிருக்க வசதியாக கூடாரங்கள் கட்டப்பட்டுள்ளன. அதிலுள்ள வீரர்களுக்கு இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருந்து உணவு மற்றும் ராணுவ தளவாடங்கள் எடுத்துச் செல்வதற்கான நேரடி இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், டோக்லாம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களில் இருந்து சீன வீரர்களின் ஒவ்வொரு அசைவையும் மிக, மிக எளிதாக கண்காணிக்கும் வசதியையும் இந்திய வீரர்கள் செய்துள்ளனர். இதன் மூலம் சீனாவின் எத்தகைய மிரட்டலுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா தயாராக இருப்பது தெரியவந்துள்ளது.

தற்போது சீன அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ், இந்தியாவை மேலும் சீண்டும் விதமாகவும், இதுவரையிலும் பாகிஸ்தானின் பயங்கரவாதத்தை தாங்களே ஊட்டி வளர்த்தோம் என்பதைச் சொல்லாமல் சொல்லும் விதமாகவும் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளது. அதாவது, பாகிஸ்தானுக்காக காஷ்மீரில் மூன்றாவது நாட்டு ராணுவம் களமிறங்கும் எனக் குறிப்பிட்டுள்ளது.

சிக்கிம் செக்டாரில் சீனாவின் சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தும் பூடானுக்கு ஆதரவாகக் களம் இறங்கும் இந்தியாவின் அதே லாஜிக், காஷ்மீர் விவகாரத்தில் சீனாவுக்குப் பொருந்தும் என திக்டாங்க் என்பவர் கருத்து தெரிவித்துள்ளார். சீன அரசு ஊடகமான குளோபல் டைம்ஸில், சீன மேற்கு நார்மல் பல்கலைக்கழகத்தின் இந்தியாவிற்கான ஆய்வுகளை மேற்கொள்ளும் இயக்குநர் லோங் ஜிங்சுன், இதேபோல், பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்று காஷ்மீருக்குள் மூன்றாவது நாடு தலையிட முடியும் என கூறியுள்ளார். பூடான் பகுதியைப் பாதுகாக்க இந்தியாவுக்கு பூடான் கோரிக்கை விடுத்திருந்தால், இந்திய ராணுவம் பூடான் எல்லைக்குள்தான் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். இரு நாட்டுக்கும் இடையிலான பிரச்னைக்குரிய பகுதியில் கூடாது” என லோங் ஜிங்சுன் கூறியுள்ளார்.

“இந்தியா கூறும் லாஜிக்கின் படி பார்த்தால், பாகிஸ்தான் அரசு கோரிக்கை விடுத்தால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பிரச்னையில் உள்ள பகுதிக்குள் மூன்றாவது நாட்டின் ராணுவம் இறங்க முடியும்; அது, இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீர் உள்பட” என குளோபல் டைம்ஸ் கட்டுரை தெரிவிக்கிறது. இவ்வகையில் பார்த்தால், பாகிஸ்தானைத் தூண்டிவிட்டும், பாகிஸ்தானின் பயங்கரவாதச் செயல்களுக்கும் துணை போகும் நாடு சீனா என்பதை வெளிப்படையாக அந்நாடு தெரிவித்து வருவதாகவே கருத இடமிருக்கிறது.

ஒரு மணி நேரத்தில் 7 செ.மீ.: சென்னையில் கொட்டித் தீர்த்த மழை!

 

raining

சென்னை:

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நேற்று இரவு மழை கொட்டித் தீர்த்தது. ஒரு மணி நேரத்தில் 7 செ.மீ. அளவுக்கு மழை கொட்டி சாதனை புரிந்தது.

சென்னையில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இருப்பினும், ஞாயிற்றுக்கிழமை நேற்று இரவு கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால், சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.

ஞாயிற்றுக்கிழமை நேற்று இரவு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது. தாம்பரம், கூடுவாஞ்சேரி, பல்லாவரம், அண்ணாநகர், மணலி, திருவல்லிக்கேணி, பூந்தமல்லி என சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகளிலும், புற நகர்ப் பகுதிகளிலும் கன மழை பெய்தது. பத்து நிமிடங்களில் 4 செ.மீ மழை பொழிந்தது. வானத்திலிருந்து தண்ணீர் கொட்டியது போல் மழைப் பொழிவினை மக்கள் உணர்ந்தனர். சுமார் ஒரு மணி நேரத்தில் 7 செ.மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்ததால், சாலைகளில் வெள்ளம் அதிக அளவில் தேங்கி நின்றது.

இந்த வருடத்தில் ஒரே நாளில் பெய்த அதிகபட்ச மழைப் பொழிவு நேற்று பெய்த மழைதான்! சென்னையின் முக்கியப் பகுதிகளான அண்ணாசாலை, ராயப்பேட்டை ஆகிய பகுதிகளில் வெள்ளம் தேங்கி நின்றதால் வாகனங்கள் மிதந்து சென்றன. மழை நின்றதும் ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்கள் சென்றதால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுரங்கப் பாதைகளில் வெள்ளநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.

மழை பெய்யத் தொடங்கிய போதே கே.கே.நகர், அசோக் பில்லர், வடபழனி, கிண்டி உள்ளிட்ட நகரின் தாழ்வான இடங்களிலும் முக்கிய இடங்களிலும் 2 மணி நேரத்துக்கும் மேலாக மின் விநியோகம் நிறுத்தப் பட்டது.

இதனிடையே, சென்னை பிராட்வே பகுதியில், மழையில் நடந்து சென்றபோது அறுந்து கிடந்த மின் கம்பியை தவறுதலாக மிதித்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மீத்துகுமார் சிங் என்ற நபர் மின்சாரம் பாய்ந்து பலியானார்.

ஜிஎஸ்டி தாக்கம்: திருப்பதி தேவஸ்தான விடுதிக் கட்டணம் உயர்ந்தது

tirupathi

திருப்பதி:

ஜிஎஸ்டி., வரி விதிப்பினை அடுத்து, திருப்பதி தேவஸ்தானத்தின் பயணிகள் தங்கும் விடுதிக் கட்டணம், திருமண மண்டபத்துக்கு உரிய கட்டணம், கோவிலில் விற்கப்படும் தங்க டாலர் உள்ளிட்டவற்றின் விலை உயர்ந்துள்ளது.

ஜிஎஸ்டியில், ரூ.1000 முதல் ரூ.2000 வரையிலான விடுதிக் கட்டணம் மீது 12% வரை வரியும், ரூ.2000க்கு மேற்பட்ட விடுதிக் கட்டணம் மீது 18 % வரியும் தேவஸ்தானம் வசூலித்து வருகிறது. திருப்பதி கோவில் மண்டபத்தில் நடக்கும் திருமணத்துக்கான கட்டணம் ரூ.10,000 மீது 18 % வரை வரி வசூலிக்கப்படுகிறது. கோவிலில் விற்கப்படும் தங்க டாலர் விலையுடன் 3 சதவீதம் சேர்த்து ஜிஎஸ்டி வரியுடன் விற்கப்படுகின்றன. இதனால் இவை அனைத்திலும் சற்று விலை உயர்வு காணப்படுகிறது.

இருப்பினும், ஜிஎஸ்டியில் இருந்து திருப்பதி கோயில் கட்டணங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுக்கு தேவஸ்தானத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.