Home Blog Page 5592

ஆமதாபாத் எப்போது பாரம்பரிய நகராகும் தெரியுமா?: சு.சுவாமி பதில்!

subramaniam swamy

யுனெஸ்கோ சார்பில் இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் புராதன நகரம் என்ற அந்தஸ்தை ஆமதாபாத் பெறுகிறது. ஐ.நா. சபைக்கான கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான ‘யுனெஸ்கோ’ உலகின் மிகவும் பழமையான நகரங்கள் மற்றும் பாரம்பரிய சின்னங்களையும் புராதன பட்டியலில் இணைத்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பட்டியல் அறிவிக்கப்பட்டது.
அதில் குஜராத் மாநிலத்தில் உள்ள ஆமதாபாத், புராதன சிறப்பு மிக்க நகராக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் யுனெஸ்கோ சார்பில் இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் புராதன நகரம் என்ற அந்தஸ்தை ஆமதாபாத் பெறுகிறது. பாரீஸ், வியன்னா, பிரேசல்ஸ், ரோம், எடின்பர்க் ஆகிய புகழ்பெற்ற நகரங்கள் அடங்கிய புராதன நகரங்கள் பட்டியலில் ஆமதாபாத்தும் இணைந்துள்ளது. 15ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட சுமார் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆமதாபாத் நகரம், சுல்தான் அகமது ஷா என்பவரால் உருவாக்கப்பட்டது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி, எப்போது அகமதாபாத்துக்கு கர்ணாவதி என்ற அதன் பழைமையான பெயரைச் சூட்டுகிறோமோ அப்போதுதான், அதற்கு பாரம்பரிய நகர் எனும் பெயர் பொருந்தும் என்று கூறியுள்ளார்.

 

ரஜினி ஒரு 420: தொடர்ந்து விமர்சிக்கும் சுப்பிரமணிய சுவாமி!

சென்னை:

நடிகர் ரஜினிகாந்த், கேசினோவில் சூதாடுவதை விட்டுவிட்டு இலங்கைக்குச் சென்று தமிழக மீனவர்களை மீட்க முடியுமா என்று சுப்பிரமணியசாமி கேள்வி எழுப்பியுள்ளார். அவர் தனது டிவிட்டர் பதிவில் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் ஒரு 420 என தொடர்ச்சியாக விமர்சித்து வரும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி, மீண்டும் ரஜினியை தனது டுவிட்டர் பதிவில் விமர்சித்துள்ளார். இது, அவரது ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

எல்லை தாண்டும் தமிழக மீனவர்களுக்கு கடும் அபராதம் விதிக்க இலங்கை அரசு புதிய சட்டத்தை இயற்றியுள்ளது. இதை தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ள சுப்பிரமணியசாமி, நடிகர் ரஜினிகாந்த், கேசினோவில் சூதாடுவதை விட்டுவிட்டு, இலங்கைக்குச் சென்று மீனவர்களைக் காப்பாற்ற முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். அவரது டுவிட்டர் பதிவுக்கு பலரும் பதில் அளித்துள்ளனர். தனிப்பட்ட வகையிலும் அவரை விமர்சித்து பல டுவிட்டர் பதிவுகள் அவரது பக்கத்தில் ரசிகர்களால் பதியப்பட்டுள்ளன.

 

புராதன நகரம் ஆகிறது ஆமதாபாத்: யுனெஸ்கோ அறிவிப்பு

ahmedabad

யுனெஸ்கோ சார்பில் இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் புராதன நகரம் என்ற அந்தஸ்தை ஆமதாபாத் பெறுகிறது. ஐ.நா. சபைக்கான கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான ‘யுனெஸ்கோ’ உலகின் மிகவும் பழமையான நகரங்கள் மற்றும் பாரம்பரிய சின்னங்களையும் புராதன பட்டியலில் இணைத்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பட்டியல் அறிவிக்கப்பட்டது.

அதில் குஜராத் மாநிலத்தில் உள்ள ஆமதாபாத், புராதன சிறப்பு மிக்க நகராக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் யுனெஸ்கோ சார்பில் இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் புராதன நகரம் என்ற அந்தஸ்தை ஆமதாபாத் பெறுகிறது. பாரீஸ், வியன்னா, பிரேசல்ஸ், ரோம், எடின்பர்க் ஆகிய புகழ்பெற்ற நகரங்கள் அடங்கிய புராதன நகரங்கள் பட்டியலில் ஆமதாபாத்தும் இணைந்துள்ளது. 15ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட சுமார் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆமதாபாத் நகரம், சுல்தான் அகமது ஷா என்பவரால் உருவாக்கப்பட்டது.

இதுகுறித்து, பாரம்பரியச் சின்னங்களை ஆய்வு செய்யும் தில்லியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சோகைல் ஹாஸ்மி தெரிவித்தபோது, “இந்தியாவின் பல்வேறு நகரங்கள் தங்களுடைய பாரம்பரியத்தை பேணி வருகின்றன. தற்போது ஆமதாபாத் புராதன நகராக தேர்வு செய்யப்பட்டிருப்பதால், இதை விட பழைமை வாய்ந்த தில்லி, மும்பை, பாட்னா, அலாகாபாத், மதுரை ஆகிய நகரங்களும் இந்தப் பட்டியலில் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்பு உருவாகும்” என்றார்.

நானும் இந்தி எதிர்ப்பில் கலந்து கொண்டவன்தான்: வெங்கய்ய நாயுடு

venkaiah-naidu

சென்னை:
நானும் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் கலந்து கொண்டவன் தான் என்று கூறினார் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு.

சென்னையில் மோடி தலைமையிலான மத்திய அரசின் மூன்று ஆண்டு சாதனை விளக்கக் கருத்தரங்கம், ஜிஎஸ்டி விளக்கக் கூட்டம் கலைவாணர் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது பேசிய வெங்கய்ய நாயுடு, இதனைத் தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், 113.26 கோடி மக்கள் ஆதார் பதிவு செய்துள்ளனர். ஆதார் உங்களுக்கான அடையாள அட்டை தான். எனவே ஆதார் நம் உரிமை என நீங்கள் நினைக்க வேண்டும்.

நானும் சிறு வயதில் இந்தி எதிர்ப்புக் கூட்டங்களில் பங்கேற்றுள்ளேன். ஆனால் பின்னாளில் தில்லிக்குச் சென்ற பின்னர் அந்த நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டேன். தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, தமிழ் என அனைத்து மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள். அதில் எந்தத் தவறுமில்லை. ஆனால் உங்கள் தாய்மொழியில் புலமை வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும். மத்திய அரசு இந்தியை நம்மிடம் திணிக்கவில்லை. நம்முடைய தொடர்பு மொழி அது. அதனைக் கற்றுக் கொள்ள வேண்டும். அதற்காக சிலர் எதிர்ப்பது ஏன் என தெரியவில்லை” என்று பேசினார்.

முதலிரவில் மணமகன் மாயம்: அதிர்ச்சியில் மணமகள்!

marriage
முதலிரவு என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஒரு நிகழ்வு. ஆனால் ஒருவர், தனது முதலிரவு அன்று, காணாமல் போய் அதையும் தனக்கும் தனக்கும் மனைவிக்கும் மறக்க முடியாத நிகழ்வாக ஆக்கியுள்ளார்.
நெல்லையில் முதலிரவு அன்று மாப்பிள்ளை திடீரென காணாமல் போனதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 
திருநெல்வேலி மாவட்டம் விகேபுரம் அருகே செட்டிமேடு மெயின் ரோட்டை சேர்ந்த ஜோசப் என்பவருக்கும், தாட்டம்பட்டியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் சமீபத்தில் இருவீட்டார் சம்மதத்தின் பேரில் திருமணம் நடந்தது. திருமணத்தை அடுத்த அனைத்து சடங்குகளும் நல்லமுறையில் நடந்த நிலையில் இரவு முதலிரவுக்காக பெண் வீட்டார் ஏற்பாடு செய்தனர்
இந்த நிலையில் திடீரென மாப்பிள்ளை காணாமல் போனது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் வீட்டாரின் உறவினர்கள் மாப்பிள்ளையை எல்லா இடங்களிலும் தேடினர். ஆனால் நள்ளிரவு ஆகியும் மாப்பிள்ளையை கண்டுபிடிக்க முடியாததால் வேறு வழியின்றி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். முதலிரவு அன்றே மாப்பிள்ளை திடீரென எஸ்கேப் ஆனது அந்த பகுதியை பெரும் பரபரப்பை ஆழ்த்தியுள்ளது

இன்னும் நான் காப்பி,டீ சாப்பிட ஆரம்பிக்கவில்லை”-குறும்பாகச் சொன்ன மகா பெரியவா

10482143 599228513527816 46027082804070919 n 1 - 2026

“இன்னும் நான் காப்பி,டீ சாப்பிட ஆரம்பிக்கவில்லை”-குறும்பாகச் சொன்ன மகா
பெரியவா

(பீபெர்ரி தரமான வெரெய்டி குண்டுக் காப்பிகொட்டையும், அஸ்ஸாமிலிருந்து
வரவழைத்த ஸ்பெஷல் டீ பொடியும் இருப்பதாகச் சொன்ன மார்வாரி, அவற்றை ‘ஸ்வாமிஜி
மஹராஜ்’ காலை எழுந்தவுடன் உப்யோகித்துக் கொண்டால் பரம பாக்கியம்என்று கூறின
மார்வாரிக்கு பெரியவாளின் பதில் மேலே)

கட்டுரை-ரா கணபதி.
கருணைக் கடலில் சில அலைகள் புத்தகத்திலிருந்து
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

காஞ்சிக்கும்,ஸ்ரீபெரும்பூதூருக்கும் இடையேயுள்ள சந்தவேளுரில் அவர்
முகாமிட்டிருந்த சமயம். பக்கத்து ஊர் மார்வாரி ஒருவர், கூடை கூடையாகவும் தட்டு
தட்டாகவும் மடத்திற்கு வேண்டிய மளிகைச்
சரக்குகள் அனைத்தும் கொண்டு வந்து சமர்ப்பித்தார்.

அங்கணம் போதாமல் பரப்பப்பட்டிருந்த அவற்றில் எங்கோயிருந்த ஒரு தட்டைப்
பெரியவாள் குறிப்பிட்டுககாட்டி அருகே எடுத்துவரச் சொன்னார்.அதில் நன்கு
பாக்கிங் செய்த பொட்டலங்கள் இருந்தன.
தெரிந்தே அந்த தட்டைக் கொண்டுவரச் சொன்னவர் தெரியாதவர் போல, ‘அதில் என்ன
இருக்கிறது’ என்று மார்வாரி பக்தரைக் கேட்டார்.

பீபெர்ரி தரமான வெரெய்டி குண்டுக் காப்பிக் கொட்டையும், அஸ்ஸாமிலிருந்து
வரவழைத்த ஸ்பெஷல் டீ பொடியும் இருப்பதாகச் சொன்ன மார்வாரி, அவற்றை ‘ஸ்வாமிஜி
மஹராஜ்’ காலை எழுந்தவுடன் உப்யோகித்துக் கொண்டால் பரம பாக்கியம்என்று
கூறினார்)
“கிரஹசாரம்! இப்படிச் சொல்கிறானே” என்று மடத்துச் சிப்பந்திகள் பேசிக்
கொண்டனர்.

அன்புள்ளத்தையே நோக்கும் ஸ்ரீசரணரின் திரு முகத்தில்புன்னகை பொன் பூசியது.

“இன்னும் நான் காப்பி,டீ சாப்பிட ஆரம்பிக்கவில்லை” என்று குறும்பாகச்
சொன்னார்.தம்மையே எகத்தாளம் செய்து கொள்ளும் குறும்புதான்! ஆசாரத்தின்
கடும் காவலர்
என்று நாம் அவரைக் கருதினாலும், அவரோ தாம் அதில் முழு மார்க் வாங்கவில்லை
என்றும், நாளுக்கு நாள் முந்தைய மார்க்கை விடக் குறைவாகவே வாங்கிக்
கொண்டிருப்பதகாவும்தான் சொல்லிக் கொண்டார்.அதனால்தான் ‘இன்னும்’ என்ற அந்த
அர்த்தபுஷ்டியுள்ள பதப்பிரயோகம்.

“பெரியவா இதெல்லாம் சேத்துக்க மாட்டா, எங்களையும்..” என்று சிப்பந்தியொருவர்
மார்வாரியிடம்தொடங்க,
பெரியவாள், சொடக்குப் போட்டு அவரை அடக்கி விட்டு “போய்
பாராக்காரனையெல்லாம்அழைச்சுண்டு வா” என்று உத்தரவிட்டார்.

ஸ்ரீமடத்தில் ‘பாரா’ என்ற காவல் செய்யும் தொழிலாளிகள் அழைத்து வரப்பட்டனர்.

“ஸேட்ஜி நெறய்யக் கொண்டு வந்திருக்கார். ஒங்களுக்கேதான் எடுத்துக்கோங்கோ!”
என்றார்.

அவர்கள் பரம சந்தோஷமாக காப்பி, டீ பொட்டலங்களை அள்ளிக் கொண்டு போனார்கள்.

“ஒன்னால் இவாளுக்கு ரொம்ப உபகாரம்” என்று ஸ்ரீசரணர் ‘ஸேட்ஜி’யைப் பார்த்துச்
சொன்னார்.
அதில் அங்கீகார முத்திரை பூர்ணமாகத் தொனித்தது.

குற்றம் செய்து விட்டோம் போலிருக்கிறதே என்று இடையே துவண்டு போன ஸேட்ஜிக்குப் பரம
சந்தோஷம்

கீழப்பாவூர் பெரிய குளம் கால்வாய் தூர்வாறும் பணி கே.ஆர்.பி.பிரபாகரன் எம்பி தொடங்கி வைத்தார்.

KRP KPR PERIYKULAM 9.7.1711 - 2026

*நெல்லை மாவட்டம்கீ ழப்பாவூர் பெரிய குளம் **54** ஏக்கர் **85** சென்ட்
பரப்பளவு அமைந்துள்ளது. பெரியகுளத்திற்கு தண்ணீர் மேற்கு தொடர்ச்சி மலை
பகுதியான செங்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள மலைப்பகுதியில் இருந்து
வருகிறது. இதனால் போதிய தண்ணீர் வருவது பாதிக்கிறது.இதனால் பல விவசாயி
நிலங்களுக்கு நீர்வரத்து இன்றி பாசனம் தடைபடுகிறது.*

*மேற்கு தொடர்ச்சி மலையில் மழை பெய்து தண்ணீர் வரத்து சமயங்களில் இந்த
அமலைசெடிகள் மற்றும் முட்செடிகளால் நீர் வரத்தின் வேகம் குறைவும். போதிய அளவு
தண்ணீர் தேக்க முடியாத நிலை உள்ளது. *

*கீழப்பாவூர் பெரிய குளத்திற்கு வரும் சுமார் **3.200** கிலோ மீட்டர் தூர
கால்வாயை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என கீழப்பாவூர் பகுதி விவசாயிகள்
பிரபாகரன் எம்பி யிடம் கோரிக்கை வைத்தனர்.*

*கோரிக்கையினை ஏற்று கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி குளத்தில் காணப்படும்
ஆக்கிரமிப்பு செடிகளை அகற்றுவதாக உறுதியளித்தார் ,இதையடுத்து பொதுப்பணித்துறை
சார்பில் தூர் வாரும் பணி துவங்கியது *

*முதற்கட்டமாக கீழப்பாவூர் பெரியகுளத்திற்கு தண்ணீர் வரும் நுழைவு கால்வாய்
(வாய்கால் பாலம் ) பகுதியில் ஆக்கிரமித்து இருந்த அமலை செடிகள் மற்றும்
முட்செடிககளை அகற்றும் பணியின் தொடங்கி வைத்தார் *

*பின்னர்கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி கூறுகையில்**, **இக்கால்வாய் நீண்ட
காலமாக தூர் வாரப்படாமல் இருந்து வருகிறது. தற்போது மேலப்பாவூரில் இருந்து
கீழப்பாவூர் பெரியகுளம் வரையிலான **3.200** கி.மீ. தொலைவிற்கு இக்கால்வாய்
முற்றிலுமாக தூர் வாறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகள் நிறைவு
பெறும் பட்சத்தில் கீழப்பாவூர் பெரியகுளத்திற்கு தண்ணீர் தடையின்றி வரும்.
அத்துடன் நாகல்குளம்**, **கடம்பன்குளம்**, **தன்பத்து குளம் ஆகிய
குளங்களுக்கும் விரைவில் தண்ணீர் செல்லவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால்
விவசாயிகள் மிகுந்த பயன்பெறுவர் என்றார்.*

*இந்நிகழ்ச்சியில் சிற்றாறு வடிகால் பாசன உப கோட்ட உதவி செயற்பொறியாளர்கள்
சுப்பிரமணிய பாண்டியன்**, **சண்முகவேலு**, **முன்னாள் ஊராட்சி தலைவர்
ராதா**, **தீப்பொறி
அப்பாத்துரை**, **வி.கே.கணபதி**, **பாஸ்கர்**, **கண்ணன்**, **கணேசன் உட்பட
பலர் கலந்து கொண்டனர்.*

*பெரியகுளம் மூலம் சுமார் **1600** ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று
வருகிறது. மேலும் பெரியகுளம்*

சாணியைச் சிறு சிறு உருண்டையாக்கி வாயில் இட்டுக் கொண்டிருந்த பெரியவா

10406745 859208287442471 99817598003990377 n 1 - 2026

சாணியைச் சிறு சிறு உருண்டையாக்கி வாயில் இட்டுக் கொண்டிருந்த பெரியவா.
(பிரமிப்பில் ஆழ்த்திய பெரியவர்!) ( சன்யாசி என்பவன் முதலில் நாக்கு ருசியை
வெல்ல வேண்டாமா… அது தான் இப்போ சாணியை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். ஏ
நாக்கே…! உனக்கு கீரையும், சாணியும் ஒன்று தான். எல்லாம் கடவுள் படைப்பு
தான் என நாக்கிற்குப் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறேன்!’)

ஜூலை 08,2017,-பிரமிப்பில் ஆழ்த்திய பெரியவர்!-திருப்பூர் கிருஷ்ணன்.

காஞ்சிப் பெரியவர் அடிக்கடி பட்டினி கிடப்பார். உணவின் ருசி எப்படி
இருந்தாலும் பொருட்படுத்தாமல் சாப்பிடுவார். ஆனால் மடத்தின் சமையல்காரரோ
பெரியவரின் பசி, ருசி குறித்து மிகுந்த அக்கறை கொள்வார்.

ஒருநாள் கீரை மசியல் பரிமாற உடனே சாப்பிட்டார் பெரியவர். சமையல்காரர் மேலும்
கொஞ்சம் பரிமாற மீதம் வைக்க கூடாது என்பதால் சாப்பிட்டார்.

சரி தான்…. கீரை மசியல் பெரியவருக்கு மிக பிடிக்கிறது என்ற முடிவுக்கு
வந்தார் சமையல்காரர்.
அன்று முதல் நாலைந்து நாள் தினமும் கீரை உணவில் இடம் பிடித்தது.

ருசிக்காக அல்லாமல் பசிக்காக மட்டும் சாப்பிடும் பெரியவர் சாப்பிடும் போது,
”என்ன நாலைஞ்சு நாளா தொடர்ந்து கீரை மசியல்?”எனக் கேட்டார்.

சமையல்காரர் தயங்கியபடி ”பெரியவா… மசியலை விரும்பிச் சாப்பிடப் பார்த்தேன்.
அதனால தொடர்ந்து கீரையைச் சமைத்தேன்” என்றார்.

‘ஓகோ!’ என்ற பெரியவர் வேறேதும் சொல்லவில்லை.

மறுநாள் மதியம் சாப்பிட அழைக்க வந்த போது பெரியவரைக் காணவில்லை. எங்கே எனத்
தேடிய போது ஆச்சர்யம் காத்திருந்தது.

மாட்டுக் கொட்டிலில் சாணத்தின் அருகில் குழந்தை போல உட்கார்ந்திருந்தார்
பெரியவர்.சாணியைச் சிறு சிறு உருண்டையாக்கி வாயில் இட்டுக் கொண்டிருந்தார்.

”சுவாமி….என்ன காரியம் செய்கிறீர்கள்?” என்றார் சமையல்காரர்.

பெரியவர் சிரித்தபடி ”உன் மீது தப்பில்லை. நாக்கு எனக்கு கட்டுப்படாமல் கீரை
சாப்பிட ஆசைப்பட்டுள்ளது. அதை உணர்ந்த நீயும் நாலைஞ்சு நாளா கீரை சமைத்தாய்.
சன்யாசி என்பவன் முதலில் நாக்கு ருசியை வெல்ல வேண்டாமா… அது தான் இப்போ
சாணியை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். ஏ நாக்கே…! உனக்கு கீரையும்,
சாணியும் ஒன்று தான். எல்லாம் கடவுள் படைப்பு தான் என நாக்கிற்குப் பாடம்
நடத்திக் கொண்டிருக்கிறேன்!’

பெரியவரின் வைராக்கியம் கண்ட சமையல்காரர் பிரமிப்பில் ஆழ்ந்தார்

டாக்டர் வாக்கிங் என்றார் பெரியவா பிரதட்சிணம் என்று சொன்னார்

246400 479182102136836 1433845875 n 1 - 2026

“,டாக்டர் வாக்கிங் என்றார். பெரியவா பிரதட்சிணம் என்று
சொன்னார்…!”(பெரியவாளின் வேடிக்கை வைத்தியம்)

“நாங்க இரண்டு பேரும் சொன்ன மருந்து அத்வைதம்; பேரு மட்டும்
த்வைதம்-என்கிறே?”-பெரியவா தொண்டரிடம்.

(இப்படி ‘இலேசாக’ப் பேசுவது பெரியவாளுக்குரொம்ப பிடிக்கும்.)

.

சொன்னவர்; ஓர் அணுக்கத் தொண்டர்.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

எடை அதிகமாகக் கூடிவிட்ட ஒரு பெண்மணி
பெரியவாள் தரிசனத்துக்கு வந்தாள். குனிந்து
வந்தனம் செய்ய முடியவில்லை. வெட்கமும்
பக்தியும் போட்டியிட கைகளைக் கூப்பிக்கொண்டு
நின்றாள்.

“எனக்கு சர்க்கரை வியாதி. வெயிட் குறைக்கணும்
என்கிறார் டாக்டர். தினமும் ஒரு மணி நேரம்
வாக்கிங் போகச் சொல்கிறார்.என்னால் பத்துநிமிடம்
கூட நடக்க முடியல்லே…” என்று முறையிட்டாள்.

கஷ்டமில்லாத ஒரு பரிகாரத்தை சொல்லி,பெரியவா
அனுக்ரஹம் பண்ணணும்-என்ற ஆதங்கம் தொனித்தது.

“டாக்டர்கள் என்றாலே இப்படித்தான்! மெடிகல்
புஸ்தகத்தில் என்ன எழுதியிருக்கோ,அதை
ஒப்பிப்பார்களே தவிர, நடைமுறை சாத்தியமா
என்று பார்க்கமாட்டார்கள்…..”

பெண்மணிக்குக் கொஞ்சம் தைரியம் வந்தது.
“ஆகா! என்ன அதிருஷ்டம்! பெரியவா இப்போ ரொம்ப
சுலபமான வழியைச் சொல்லப்போகிறார்கள்.

கண்களில் ஆவல் பொங்கிற்று.

“உடம்பு நோய் இல்லாமல் இருக்கணும்-
தெய்வக்ருபை வேணும்….”

பெண்மணியின் நெஞ்சு படபடத்தது.

“உன் வீட்டிக்குப் பக்கத்தில் ஏதாவது
கோயில் இருக்கோ…?”

“இருக்கு..பெரிய சிவன் கோயில்…”

“நல்லதாப் போச்சு….தினம் காலையும் மாலையும்
ஆறு பிரதட்சிணம் பண்ணு..தினம் நூறு அடி தூரம்
துடைப்பத்தால் பெருக்கிக் கூட்டி சுத்தம் செய்..”

பெண்மணி,சரி என்று சந்தோஷத்துடன் கூறி
பிரசாதம் பெற்றுச் சென்றாள்.

பெரியவாளுக்குக் கைங்கர்யம் செய்து கொண்டிருந்த
சிஷ்யர், சிரிப்பை அடக்க முடியாமல் தவித்தார்.

“…..தப்பா சொல்லிட்டேனோ….!”

“இல்லே,டாக்டர் வாக்கிங் என்றார். பெரியவா
பிரதட்சிணம் என்று சொன்னார்…!”

“நாங்க இரண்டு பேரும் சொன்ன மருந்து அத்வைதம்;
பேரு மட்டும் த்வைதம்-என்கிறே?”

இப்படி ‘இலேசாக’ப் பேசுவது பெரியவாளுக்கு
ரொம்ப பிடிக்கும்.

“மண்ணாங்கட்டி என்று பெயர் வை”

18698 10153209347029244 3030028360467212073 n - 2026

“மண்ணாங்கட்டி என்று பெயர் வை”
(கவலைப்படாதே.உங்களுக்கு ஒரு பையன் பிறப்பான்.-தம்பதிகளுக்கு ஆறுதல்கூறி பேர்
வைக்கச்சொன்ன-பெரியவா)

(பெரியவாளுடைய சில உத்திரவுகள் ரொம்பவும் வேடிக்கையாக இருக்கும்! + அகச்
சுவையும் இருக்கும்) இரண்டு சம்பவங்கள் இன்றைய போஸ்டில்.)

சொன்னவர்; ஓர் அணுக்கத் தொண்டர்.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

முப்பத்தைந்து வயதைத் தாண்டாத தம்பதிகள்.
முகத்தில் சோகம் அப்பிக்கொண்டிருந்தது.

பெரியவாளுக்கு வந்தனம் செய்தார்கள்.

“ஒரே பிள்ளை…..போ..யி..டுத்து…”

இருவரும் கூட்டாக அழுதார்கள்.அழுகை ஓர்
ஆறுதல்.சிறிது நேரத்திற்குப் பின் அழுகை நின்றது.

“இந்தப் பிரபஞ்சத்திலே எதுவும் நம்முடையது இல்லே.
பணம் – சொத்து, பிள்ளை – குட்டி,அண்ணன் – தம்பி
எதுவுமே சொந்தம் இல்லே.கவலைப்படாதே.
உங்களுக்கு ஒரு பையன் பிறப்பான்.
மண்ணாங்கட்டி என்று பெயர் வை….”

அருகிலிருந்தவர்களுக்கு இதைக் கேட்டதும்,
வாய்விட்டு சிரிக்க வேண்டும் போலிருந்தது.
(ஆனால் சிரிக்கவில்லை)

கொசுறு செய்தி.

ஓர் ஆண்டுக்குப் பிறகு அந்தத் தம்பதிகள்
மண்ணாங்கட்டியுடன் தரிசனத்துக்கு வந்தார்கள்.
……………………………………………………
…………………………….

மரத்தாலான சிறு குடம்,டம்ளர்,உத்தரிணி,தட்டு,
கிண்ணங்கள் கொண்டுவந்து சமர்ப்பித்தார் ஒரு பக்தர்.

பெரியவாள் ஒவ்வொன்றாகக் கையிலெடுத்து
ஆசையுடன் தடவிக் கொடுத்தார்கள்.

பின்னர், குறும்புச் சிரிப்புடன் சொன்னார்கள்.

“இங்கே (ஸ்ரீமடத்தில்) தான்
மரப்பாத்திரங்களுக்கு மதிப்பு; குடுமிக்கு மதிப்பு;
சந்த்யாவந்தனம் செய்பவர்களுக்கு மதிப்பு…!”

இதை நகைச்சுவை போலச் சொன்னார்களே தவிர,இது
லைட்டான விஷயம் அல்ல.பெரியவாளின் அகச் சுவை