Home Blog Page 5634

சி.பி.எஸ்.இ.,க்கு இணையாக தமிழக பாடத் திட்டங்கள்: செங்கோட்டையன்



சிபிஎஸ்இக்கு இணையாக தமிழகத்தில் பாடத்திட்டங்கள் 3ஆண்டுகளுக்குள்
மாற்றப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
அவர் கூறியவை…

முதல் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை தமிழக பாட திட்டம் சி.பி.எஸ்.இ.,
பாடத்திற்கு இணையாக மாற்றப்படும்.

புதிய பாடத்தில் தமிழர் பண்பாடு, கலாசாரம் சேர்க்கப்படும்.

*பாட திட்டம் மாற்றம், பிளஸ் 1 வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக அரசாணை
வெளியிடப்பட்டுள்ளது

*1, 6, 9, 11 வகுப்புகளுக்கு 2018-19 கல்வியாண்டில் பாடதிட்டம் மாற்றப்படும்

*2,7,10,12ம் வகுப்புகளுக்கு2019ல் பாடத்திட்டம் மாற்றப்படும்

*3,4,5,8 ம் வகுப்பு பாடத்திட்டங்கள் 2020ல் மாற்றப்படும்

*புதிய பாடத்தில் 6 முதல் 12ம் வகுப்பு வரை ஐ.டி., கல்வி கற்றுத்தரப்படும்

*பிளஸ், பிளஸ்2வில் தேர்ச்சி பெற பாடவாரியாக 35 சதவீத மதிப்பெண் எடுக்க
வேண்டும்

*பிளஸ் 1 தேர்வில் தோல்வியடைந்தால், பிளஸ்2வில் அந்த தேர்வை எழுதலாம்

*ஜூன், ஜூலையில் சிறப்பு தேர்வு நடைபெறும் பிளஸ்1, பிளஸ்2 தேர்வில் தேர்வு
மதிப்பெண் 1200லிருந்து 600 ஆகவும், தேர்வு நேரம் 2.30 மணி நேரமாகவும்
குறைக்கப்பட்டுள்ளது

*பிளஸ்1, பிளஸ்2வுக்கு பின் ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்

*முதுநிலை ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது

*தேர்வு மூலம் ஆசிரியர்கள் தேர்வாகும் வரை தற்காலிக ஆசிரியர்கள்
நியமிக்கப்படுவார்கள்

*புதிய பாடதிட்டத்தில் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்

“இனிமேல் படி…படி….என்று சொல்லாதே”


(“வாசி….வாசின்னு நாலஞ்சு தடவை சொல்லிப்பாரு..
சிவா…சிவான்னு பகவன் நாமா வரும்…”)

சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு
தொகுப்பாளர்-கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்

பத்து வயதுப் பையன் தரிசனத்துக்கு வந்தான்.

“அவனை விஜாரி” என்று பெரியவாள்
ஜாடை காட்டினார்கள்.

ராயவரம் பாலு என்ற அணுக்கத் தொண்டர்
அவனிடம் போய், ‘என்ன பெயர்? என்ன
பண்ணுகிறாய்?’ என்றெல்லாம் விஜாரித்துவிட்டு
வந்து பெரியவாளிடம் சொன்னார்.

“ராமகிருஷ்ணானாம்…..அஞ்சாவது படிக்கிறானாம்..
அப்பா, சமையல் வேலை செய்யறாராம்……
ரெண்டு தங்கை…”

பெரியவாள் வலது கையை சற்றே உயர்த்திக்
காட்டிவிட்டு பிரசாதம் கொடுக்கச் சொன்னார்கள்.

திருநீறு – குங்குமத் தட்டை அவனிடம் நீட்டிய பாலு,
“நன்றாகப் படி” என்றார்.

பாலு திரும்பி பெரியவாள் அருகில் வந்ததும்,
“இனிமேல் படி…படி….என்று சொல்லாதே” என்றார்கள்.

பாலுவுக்குப் புரியவில்லை.பள்ளிக்கூடத்தில்
படிக்கும் பையனைப் பார்த்து, படி..படி..என்று
அறிவுரை கூறுவது தவறில்லையே?..பின் ஏன்
படி..படி.. என்று சொல்ல வேண்டாம் என்கிறார்கள்?

“இனிமேல் பசங்களைப் பார்த்தால்
வாசி..வாசின்னு நாலைந்து தடவை சொல்லு..”

அட..,இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

“வாசி….வாசின்னு நாலஞ்சு தடவை சொல்லிப்பாரு..
சிவா…சிவான்னு பகவன் நாமா வரும்…”

அட!

மரா..மரா..சொன்னால்,ராம என்ற பகவன் நாமா!

வாசி…வாசி..சொன்னால் சிவா என்ற பகவன் நாமா!

அட……!

ரஜினி வந்தால் பாஜக.,வுக்கு கூடுதல் பலம் சேரும்: தமிழிசை சௌந்தர்ராஜன்

BJP TN leader Tamizhisai soundararajan - 2026

சென்னை:
ரஜினி வந்தால் பாஜக.,வுக்கு கூடுதல் பலம் சேரும். ஆனால், ரஜினி மட்டுமே கட்சிக்கு பலமல்ல என்று கூறினார் தமிழக பாஜக., தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன்.

தமிழிசை சௌந்தரராஜன் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியவை:

பா.ஜனதாவுக்கு ரஜினி வந்தால் கூடுதல் பலம் சேரும். ஆனால், பா.ஜனதாவுக்கு ரஜினி மட்டுமே பலமல்ல. காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர், கூட்டணிக்கு ஆள் வராத கட்சி பாரதீய ஜனதா. அதனால்தான் ரஜினியை கூப்பிடுகிறார்கள் என்று கூறி இருக்கிறார். முதலில் திருநாவுக்கரசர் அவரது கட்சியை பார்க்க வேண்டும்.

ஸ்டாலின், திருநாவுக்கரசர், திருமாவளவன் ஆகியோர் ரஜினி பாரதீய ஜனதாவில் சேரக்கூடாது என்று அறிக்கை வெளியிட்டுள்ளனர். இவர்களுக்கு ஏன் இந்த பதட்டம்? தேசியத் தலைவர் அமித் ஷா, ரஜினி பா.ஜ.க.,வுக்கு வரலாம் என்று கூறியிருப்பதற்கு ரஜினி எந்தவொரு பதிலும் கூறவில்லை என்று சொல்கிறார்கள். எங்கள் கருத்தை நாங்கள் சொல்கிறோம். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம். அதனால்தான் பலத்தை கூட்டுகிறோம்.

பிரதமர் மோடி ஓ.பன்னீர் செல்வத்துக்கு நேரம் ஒதுக்குகிறார். தன்னை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை என்று ஸ்டாலின் கூறியுள்ளார். பிரதமரும், ஓ.பன்னீர்செல்வமும் என்ன பேசினார்கள் என்று கூறியுள்ளார். யூகங்கள் அடிப்படையில் பேசுகிறார்கள். பிரதமருக்கு யாரை, எதற்கு என்ன காரணத்திற்காக பார்க்க வேண்டும் என்று தெரியும்.

அ.தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. அ.தி.மு.க. அரசு சாதனை என்று கூறுவதற்கு எதுவுமே இல்லை. ஓராண்டுக்குள் கட்சி 2 ஆக உடைந்துள்ளது. 3 முதல்வர்கள் மாறி உள்ளனர். 3 அமைச்சரவை பதவி ஏற்றுள்ளது. சின்னத்தை தொலைத்துள்ளனர். இடைத்தேர்தலில் ஓட்டுக்கு நோட்டு கொடுத்து தேர்தல் ரத்தாகி உள்ளது. ஊழல் வழக்கில் 2 பொதுச்செயலாளர்களும் சிறையில் உள்ளனர். இந்த ஆட்சியில் டாஸ்மாக் ஊழல், மணல் குவாரி ஊழல் என இன்னும் ஊழல் முற்றிலுமாக ஒழியவில்லை.

தமிழக அமைச்சர்கள் பலர் வீடுகளில் வருமான வரி சோதனை நடந்துள்ளது. இதுதான் நடந்த நிகழ்வுகளாக இருக்கிறது. நேர்மையான, வெளிப்படையான நிர்வாகம் இந்த ஓராண்டு அ.தி.மு.க. அரசில் இல்லை. இனிமேலாவது இந்த அரசாங்கம் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். மத்திய பாரதீய ஜனதாக் கட்சியின் அரசு 3 ஆண்டு ஆட்சி காலத்தில் ஒவ்வொரு துறையிலும் அமைச்சர்கள் தங்கள் சாதனைகளை வெளியிட்டுள்ளனர். அதே போல் எடப்பாடி அரசு அமைச்சர்களும் தாங்கள் செய்த சாதனைகளை வெளியிட வேண்டும்.

– என்று அவர் கூறினார்.

ஊழலில் திளைக்கும் அதிமுக அரசு அகற்றப்படுவதே மக்கள் விருப்பம்: ராமதாஸ்

ramadoss - 2026

சென்னை:

ஊழலில் திளைக்கும் அதிமுக., அரசு அகற்றப்பட வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக உள்ளது என்று பாமக., நிறுவுனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:

தமிழ் நாட்டில் அதிமுக அரசு அமைக்கப்பட்டதன் முதலாமாண்டு நிறைவு விழாவை அக்கட்சியின் ஒரு பிரிவினர் இன்று கொண்டாடுகின்றனர். கடந்த 5 மாதங்களில் மூன்று முதலமைச்சர்களையும், ஐந்து முதலமைச்சர் வேட்பாளர்களையும் பார்த்த இந்த அரசு, ஒராண்டைக் கவிழாமல் கடந்திருக்கிறது என்பதைத் தவிர இந்தக் கொண்டாட்டத்திற்கு வேறு காரணங்கள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை.

பதவி ஏற்ற ஒராண்டு காலத்திற்குள் எந்த அரசாவது இவ்வளவு வெறுப்பையும், கோபத்தையும் மக்களிடம் சந்தித்திருக்குமா? என்ற வினாவுக்கு, ‘ இல்லை’ என்று மிகவும் எளிதாக பதிலளித்து விடலாம். அந்த அளவுக்கு தமிழக மக்களின் வெறுப்புக்கும் , கோபத்திற்கும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான பினாமி அரசு ஆளாகியிருக்கிறது. பொதுவாக எந்த அரசும் மக்களின் முழுமையான ஆதரவைப் பெற முடியாது. எனினும், ஒப்பீட்டளவில் அதிக நல்லத் திட்டங்களை ஓர் அரசு செயல்படுத்தும் போது அது மக்களின் ஆதரவைப் பெற்ற அரசாக மாறும்.

ஆனால், கடந்த ஓராண்டை 3 முதலமைச்சர்களின் உதவியுடன் நிறைவு செய்துள்ள இந்த அரசு சொல்லிக்கொள்ளும்படியாக எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள போராடுவது, ஜெயலலிதாவின் மரணம் குறித்த மர்மம் வெளியாகிவிடாமல் தடுப்பது ஆகியவற்றைத் தவிர வேறு எந்தப் பணியும் இந்த ஆட்சியில் நடைபெறவில்லை. திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தமிழகத்தின் உரிமைகள் தாரை வார்க்கப்படுவது வழக்கமானது தான். இதற்கு கடந்த காலங்களில் ஏராளமான உதாரணங்கள் உள்ளன. ஆனால், எடப்பாடி தலைமையிலான பினாமி ஆட்சியில் தமிழகத்தின் உரிமைகளை தாரைவார்ப்பது மட்டும் தான் முழு நேரப்பணியாக நடைபெற்று வருகிறது.

தொழிற்கல்வி மாணவர் சேர்க்கைக்கு ஒட்டுமொத்த இந்தியாவிலும் நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்ட போதும் கூட தமிழகத்தில் நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படவில்லை. 1984-ஆம் ஆண்டு முதல் 2006-ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் நடைமுறையில் இருந்த நுழைவுத் தேர்வு முறை 2007-ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. இதனால் தமிழகத்தில் கிராமப்புற மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை படிக்க முடிந்தது. சமூக நீதியை பாதுகாக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைக்கு முதல் காரணம் பாட்டாளி மக்கள் கட்சி தான். ஆனால், நீட் என்ற பெயரில் மருத்துவப் படிப்புக்கு நுழைவுத் தேர்வு அறிமுகம் செய்யப்பட்ட போது அதைத் தடுத்து முறியடிக்க அதிமுக அரசு தவறிவிட்டது. இதனால், தமிழகத்தில் கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு என்பது கனவாக மாறிவிட்டது.

உணவுப் பாதுகாப்பு சட்டத்தை மக்களின் விருப்பத்திற்கு மாறாக செயல்படுத்தியது, மின்வாரியத்தின் கடனை தமிழக அரசின் தலையில் கட்டுவதற்கான உதய் திட்டத்தை ஏற்றுக் கொண்டது, காவிரிப் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமைகளைக் காக்க நடவடிக்கை எடுக்காதது என பினாமி அரசின் வேதனைகளை பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம். இந்திய அரசியலில் மத்திய அரசு, மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள் என பல்வேறு படிநிலைகள் உருவாக்கப்பட்டிருப்பதன் காரணமே அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும் என்பதும், மக்களுக்கான தேவைகளை அந்தந்த நிலைகளில் உள்ள நிர்வாக அமைப்புகள் தான் சரியாக செய்ய முடியும் என்பதும் தான். ஆனால், மாநில அரசுகளுக்கு உரிய அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்படாததால் தான் 50 ஆண்டுகளுக்கு முன்பே பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்களைத் திரட்டி மாநில சுயாட்சிக்காக பேரறிஞர் அண்ணா அவர்கள் குரல் கொடுத்தார்.

ஆனால், அண்ணாவின் பெயரால் கட்சி நடத்தும் அதிமுக, இந்த முழக்கங்களை வலியுறுத்தி குரல் கொடுக்காமல், தமிழகத்தின் உரிமைகளை மத்திய அரசுக்கு தாரை வார்த்துக் கொண்டிருக்கிறது. மத்திய அரசுடன் மாநில அரசு இணக்கமாக நடந்துகொள்வதில் தவறு இல்லை. அவ்வாறு நடந்து கொண்டால் தான் மாநிலத்தின் தேவைகளை மிகவும் எளிதாக நிறைவேற்றிக் கொள்ள முடியும். ஆனால், தமிழக முதலமைச்சர் எடப்பாடியோ தமிழகத்தின் உரிமைகளை பாதுகாப்பதை விடுத்து, ஆட்சியை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக மத்திய அரசின் கால்களில் விழுந்து கிடப்பது அவலத்திலும், அவலமாகும்.

இவற்றையெல்லாம் விடக் கொடுமை மதுவுக்கு எதிராகப் போராடும் மக்களை எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு நடத்தும் விதம் தான். பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்தில் மூடப்பட்ட 3321 மதுக்கடைகளையும் குடியிருப்புப் பகுதிகளில் திறக்க பினாமி அரசு துடிப்பது மன்னிக்க முடியாதது ஆகும். குடியிருப்பு பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்படுவதைக் கண்டித்து போராட்டம் நடத்தும் பொதுமக்களை கண்ணியமாக நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் ஆணையிட்ட பிறகும் அவர்கள் மீது அடக்குமுறையை தமிழக அரசு கட்டவிழ்த்து விடுவது மன்னிக்க முடியாத குற்றமாகும்.

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணி தான் முதலில் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. ஆனால், இப்போது தினகரன் ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்கள் அணி, தோப்பு வெங்கடாசலம் – செந்தில் பாலாஜி அணி, பட்டியலினத்தைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் அணி என எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. இந்த எதிர்ப்புகளை சமாளிக்கவும், அதற்காக ஊழல் செய்யவும் தான் பினாமி அரசுக்கு நேரம் சரியாக உள்ளது.

தமிழகத்தில் 1921-ஆம் ஆண்டிலிருந்து கணக்கில் கொண்டால் 1991-96 காலத்திலான ஜெயலலிதா அரசு தான் மக்களின் அதிகபட்ச கோபத்திற்கு ஆளாகியிருந்தது. ஆனால், அதை விஞ்சும் அளவுக்கு எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது தமிழக மக்கள் கடுங்கோபம் கொண்டுள்ளனர். ஊழலில் திளைக்கும் இந்த அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என்று விரும்புகின்றனர். இந்த ஆட்சி நீடிக்க வேண்டுமா? என்பது குறித்து தமிழக மக்களிடம் பொதுக் கருத்துக் கணிப்பு நடத்துவதன் மூலம் இந்த உண்மையை உணர்ந்து கொள்ளலாம். எனவே, தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஊழல் அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

சூர்யா உள்ளிட்ட 8 நடிகர்களுக்கு பிடிவாரண்ட்

speech 8 actors case - 2026

கடந்த 2009-ஆம் ஆண்டு நடிகை புவனேஸ்வரி பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். அந்தச் சம்பவம் தமிழ் சினிமா உலகில் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியது. அப்போது கைது செய்யப்பட்ட நடிகை புவனேஸ்வரி தனது வாக்குமூலத்தில் மேலும் சில நடிகைகள் இதில் ஈடுபட்டார்கள் என்று கூறியதாக சில ஊடகங்கள் அவர் குறிப்பிட்ட நடிகைகளின் படத்துடன் செய்தி வெளியிட்டன.

இதனாலும் திரை உலகில் சர்ச்சை ஏற்பட்டது. பத்திரிகையாளர்களுக்கு எதிராக கண்டனக் குரல்கள் எழும்பின. நடிகைகளுக்கு ஆதரவாகவும், பத்திரிகைகளுக்கு எதிராகவும் கண்டனக் கூட்டம் நடத்தினர். அந்த கண்டனக் கூட்டத்தில் நடிகர்கள் பலரும் பத்திரிகையாளர்கள் குறித்து தரக்குறைவாகப் பேசினர். இதையடுத்து, பத்திரிகையாளர்களை கடுமையாக விமர்சித்த நடிகை ஸ்ரீபிரியா, சத்யராஜ், விஜயகுமார், சரத்குமார், சூர்யா, அருண் விஜய், விவேக், இயக்குனர் சேரன் உள்ளிட்ட 8 பேர் மீது பல்வேறு பிரிவுகளில் பத்திரிகையாளர்கள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை உதகை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. விசாரணைக்கு சம்பந்தப்பட்ட நடிகர்களை நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டது. ஆனால், அவர்கள் ஆஜராகாமல் இருந்ததால், நடிகர் சூர்யா உள்ளிட்ட 8 பேருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்து உதகை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பாகிஸ்தான் நிலைகளைக் குறிவைத்து எல்லையில் ராணுவம் தாக்குதல்

indian army fire pakistan posts - 2026

Indian Army strikes Pakistan posts in Nowshera in punitive fire

புது தில்லி:

எல்லையில் உள்ள பாகிஸ்தான் நிலைகளைக் குறி வைத்து இந்திய ராணுவம் தாக்குதல்களைத் தொடங்கியிருக்கிறது. பங்கரவாத தடுப்பு நடவடிக்கையாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்குள் தங்கள் நாட்டில் இருந்து எல்லைப் பகுதி வழியாக பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்ய பாகிஸ்தான் வழக்கம் போல் துப்பாக்கியால் சுட்டும், குண்டுகளை வீசியும் உதவி செய்யும். இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவ நிலைகளைக் குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது. மேலும் தாக்குதல் நடத்தப்பட்டதற்கான வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்களையும் இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே இந்திய- பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள இந்திய கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் தீவிரவாதிகள் ஊடுருவல்களுக்கான முயற்சிகளும் நடைபெற்று வந்தன. இந்நிலையில் இந்திய ராணுவம் தரப்பில் அவ்வப்போது பதிலடி தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஆனால் அது குறித்து இந்திய ராணுவம் அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த ராணுவ அதிகாரிகள், பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது நடத்தப்படும் தாக்குதல் குறித்து அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர். நவ்ஷெரா பகுதியில் உள்ள பாகிஸ்தான் ராணுவ நிலைகள் பீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளன.

பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்து வருவதாகவும், ஊடுருவல்களுக்கு உதவும்வகையில் பாகிஸ்தான் ராணுவம் செயல்பட்டு வருவதாகவும் இந்திய ராணுவ உயரதிகாரிகள் கூறினர்.

Ghar Wapsi: 22 Muslims re-convert into Hinduism in Faizabad, UP

ghar wapsi 22 muslims return to hinduism in up - 2026

Lucknow:

At least 22 Muslim people, including women and children, returned into Hinduism in Faizabad, Uttar Pradesh, on Sunday.

Those who accepted Hindu religion, following proper rituals and tradition, belong to Ambedkar Nagar district in Faizabad. It is said that all those who decided to get converted trace their ancestry to Hinduism only. In fact, around 25 years ago their families adopted Islam.

Ghar Wapsi ceremony conducted in Faizabad, Uttar Pradesh. The entire ‘ghar wapsi’ ceremony was done in a very secretive manner at an Aryasamaj Temple in Faizabad to avoid any controversy.

Kailash Chandra Srivastava of the Rashtriya Swayamsevak Sangh performed the process of conversion of the 22 Muslims. Srivastava clarified that it was not a forced conversion ceremony. “All those, who were converted to the Hindu religion, left Islam without being lured,” Srivastava said.

However, the state government has refused to make any comment in the matter. At a time when religious polarization is increasing in the country, the latest conversion episode might be used by the opposition political parties to attack the ruling Bharatiya Janata Party which shares close ties with RSS. Ghar Wapsi (Home Coming) is a name given to a series of religious conversion activities, started by Vishva Hindu Parishad and the RSS, to facilitate reconversion to Hinduism.

 

உ.பி.யில் தாய் மதம் திரும்பிய 22 முஸ்லிம்கள்

ghar wapsi 22 muslims return to hinduism in up - 2026

ஃபைஸாபாத்:

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஃபைஸாபாத் நகரில் நேற்று 22 முஸ்லிம்கள் ‘கர் வாப்ஸி’ மூலம் தாய் மதம் திரும்பினர். குழந்தைகள், பெண்கள் உட்பட அம்பேத்கர் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த 22 முஸ்லிம்கள் இந்து மதம் திரும்பினர்.

இவ்வாறு இந்து மதத்துக்குத் திரும்பியவர்களின் முன்னோர்கள் இந்துக்கள் எனவும், ஏதோ சில காரணங்களால் அவர்கள் 20-25 வருடங்களுக்கு முன் முஸ்லிம் மதத்தைத் தழுவியதாகவும் கூறப்படுகிறது.

ஆர்ய சமாஜத்தின் கோவிலில் நடைபெற்ற இந்நிகழ்வு கடைசி வரை ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. முறையான சடங்குகள் முடிந்த பின்னர் அவர்களுக்கு இந்து மதச் சிறப்புகள் குறித்து எடுத்துக் கூறப்பட்டது. ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த கைலாஷ் சந்திர ஸ்ரீவத்சவா தலைமை வகித்துப் பேசிய போது, ”இஸ்லாத்தில் இருந்து எந்த ஆதாயத்தையும் எதிர்பார்க்காமல் அவர்கள் இந்து மதத்துக்குத் திரும்பினர்” என்று கூறினார்.

அஸாமில் காணாமல் போன விமானம்: 2 பேர் நிலை?

Su 30 MKI Nasik - 2026

புது தில்லி:
இந்திய சீன எல்லையில் அஸாம் மாநிலப் பகுதியில் பறந்து கொண்டிருந்த இந்திய விமானப் படைக்குச் சொந்தமான சுகோய் – 30 ரக விமானம், திடீரென ரேடார் உடனான தொடர்பை இழந்து மாயமானது.

இன்று காலை 9.30க்கு அசாம் மாநிலம் தேஜ்பூர் படைத் தளத்திலிருந்து இரண்டு விமானிகளுடன் சுகோய் – 30 ரக விமானம் பறக்கத் தொடங்கியது. தேஜ்பூரிலிருந்து 60 கி.மீ., தொலைவில் பறந்து கொண்டிருந்த போது, இந்த விமானம் ரேடாரின் தொடர்பை இழந்தது. இந்த இடமானது ஏற்கெனவே சர்ச்சைக்குரிய இந்திய – சீன எல்லைப் பகுதி என்பதால், மாயமான விமானம் விபத்துக்குள்ளானதா அல்லது வேறு ஏதும் சதி வேலை காரணமா என விமானப் படையினர் தேடுதல் வேட்டையைத் துவக்கியுள்ளனர். மேலும், இந்த எல்லைக்கோட்டுக்கு அருகில் சீனா விமானப் படை தளமும் இருப்பதால், அந்நாட்டு ரேடார் சிக்னல்களால் சுகோய் – 30 ரக விமானம் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

தேசத் துரோக வழக்கில் ஜாமீன் கேட்கிறார் வைகோ

vaiko - 2026

சென்னை:
தேசத்துரோக வழக்கில் சிறையில் உள்ள மதிமுக., பொதுச் செயலர் வைகோ., தற்போது ஜாமீன் கேட்டு விண்ணப்பித்திருக்கிறார்.

சென்னை ராணிசீதை மன்றத்தில் கடந்த 2009 ஜூலை 15-ந்தேதி ‘குற்றம் சாட்டுகிறேன்’ என்ற ஆங்கில மொழியில் இருந்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட புத்தகத்தை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டு பேசினார். அப்போது விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசிய வைகோ மீது தேச விரோத வழக்கு பதிவு செய்யப்பட்டது.

எழும்பூர் 13-வது குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்த இந்த வழக்கு கடந்த ஏப்ரல் 4-ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது வைகோ நேரில் ஆஜராகி, இந்த வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் அல்லது தன்னை சிறையில் அடைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

அப்போது, அவரை சொந்த ஜாமீனில் செல்லும்படி நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. ஆனால் அதை அவர் ஏற்கவில்லை. இதை அடுத்து, அவரை 15 நாள் சிறையில் அடைக்க நீதிபதி கோபிநாத் உத்தரவிட்டார். இதன்படி புழல் சிறையில் அடைக்கப்பட்ட வைகோ, கடந்த 17-ந்தேதி எழும்பூர் நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர் படுத்தப்பட்டார்.

தேச விரோத வழக்கை விசாரிக்கும் அதிகாரம் செசன்சு நீதிமன்றத்துக்குதான் உள்ளது என்பதால், வழக்கை சென்னை மாவட்ட முதன்மை செசன்சு நீதிமன்றத்துக்கு மாற்றி, எழும்பூர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கு கடந்த 27-ந்தேதி நீதிபதி நசீமா பானு முன்பு விசாரணைக்கு வந்த போது, சிறையில் இருந்து வைகோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இருப்பினும், அப்போதும் வைகோ ஜாமீனுக்கு விண்ணப்பிக்கவில்லை. இந்நிலையில், இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி வைகோ திடீரென இன்று சென்னை மாவட்ட முதன்மை செசன்சு நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.