Home Blog Page 5635

ஐபிஎல்-10: வெற்றிக் கோப்பையுடன் கோயிலுக்குச் சென்ற மும்பை அணி

Siddhivinayak temple ipl10 mumbai team - 2026

மும்பை: ஐபிஎல்-10 தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியினர் கோப்பையுடன் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்து நன்றி தெரிவித்தனர்.

ஐ.பி.எல்.-10 தொடரின் இறுதிப் போட்டியில் மும்பை அணி புனே அணியை 1 ரன் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் மூன்று முறை கோப்பை வென்ற முதல் அணி என்ற பெருமையைப் பெற்றது. அந்த அணிக்கு ரூ.15 கோடி பரிசாக வழங்கப்பட்டது. கோப்பையைக் கைப்பற்றிய மும்பை அணியினர் மும்பையில் புகழ்பெற்ற சித்தி விநாயகர் கோவிலுக்குச் சென்றன. கோப்பையுடன் சென்ற அவர்களுடன் மும்பை அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி மற்றும் அவரது அலுவலக அதிகாரிகள் ஆகியோரும் சென்றனர். கோப்பையை விநாயகரிடம் வைத்து பூஜித்து, நன்றி தெரிவித்தனர்.

நடிகை ஸ்ரீதேவியின் 300வது படம் ‘மாம்’

mom first look starring sridevi - 2026
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் தானே டப்பிங்கில் பேசுகிறார் ஸ்ரீதேவி 
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தனது வசிகர அழகாலும் திறமையான நடிப்பாலும் கவர்ந்த நடிகை ஸ்ரீதேவி சினிமா துறையில் காலூண்றி 50 வருடங்கள் ஆகின்றது. 1967ம் வருடம் ஜூலை 7ம் நாள் துணைவன் என்ற படத்தின் மூலமாகக் குழுந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை ஸ்ரீதேவியின் 300வது படமாக “மாம்” வெளியாகவுள்ளது.
ஸ்ரீதேவியின் 50 ஆண்டுச் சாதனையைக் கொண்டாடும் விதமாக இப்படத்தின் தயாரிப்பாளரும், நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கப்பூர் “மாம்” படத்தை ஜுலை 7, 2017 அன்று வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.
மேலும் இப்படத்தின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என அனைத்து பதிப்புகளிலும் நடிகை ஸ்ரீதேவி டப்பிங்கில் பேசுவுள்ளதாகப் படக்குழுவினரால் கூறப்படுகிறது.
அனைத்து ரக ரசிகர்களும் எதிர்பார்க்கும் “மாம்” திரைப்படத்தை Zee ஸ்டூடியோஸ், போனி கபூர் இணைந்து வழங்க a Mad Films & Third Eye Productions தயாரித்துள்ளனர். இப்படத்தை ரவி உத்யவார் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Sridevi to dub in Tamil, Telugu ,Malayalam and Hindi for her 300th film MOM !
Superstar Sridevi completes 50 years in the Indian film industry , starting off as a child artiste with the Tamil movie Thunaivan and over the years has worked in multilingual films.
MOM happens to be Sridevi’s 300th film and 2017 marks her 50th year in films. As a special gesture, her producer-husband Boney Kapoor has decided to release MOM on the same day her debut film released – July 7, 1967. Owing to the superstar’s massive popularity down south, the film  will be releasing nationwide in three languages including Tamil, Telugu and Malayalam besides Hindi and the actress will dub for the languages herself.
 A source associated with the project reveals, “Sridevi has decided to dub the film in her voice in all the four languages. The actress, who started out as a child artiste, has been a part of movies in all the aforementioned languages for five decades now.”
Zee Studios & Boney Kapoor presents MOM , a Mad Films & Third Eye Productions’ film . Starring Sridevi , Akshaye Khanna and Nawazuddin Siddiqui , the film has been directed by Ravi Udyawar , with music by A R Rahman.
The film releases 7th July,2017 !

சாதியைச் சொல்லி திட்டுகிறார்: பாலாஜி மீது மனைவி புகார்

balaji actor - 2026

நகைச்சுவை நடிகர் பாலாஜி மீது அவரது மனைவி நித்யா போலீஸில் புகார் அளித்துள்ளார். அதில், கணவர் (பாலாஜி) தன்னை சாதிப்பெயரை சொல்லி திட்டுவதாகவும், கொடுமைப்படுத்துவதாகவும் கூறப்பட்டு இருந்தது.

பாலாஜி, நித்யா இருவரும் தனியார் தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அவர்களுக்குள் பிரச்னை இருந்ததாக அந்நிகழ்ச்சியிலே ஒளிபரப்பி இருந்தனர். இவர்களுக்கு போர்ஷிகா என்ற 6 வயது பெண் குழந்தை ஒன்று உள்ளது. மாதவரத்தில் வசித்து வருகின்றனர்.

பல திரைப்படங்களில் நடித்துள்ளவர் நடிகர் பாலாஜி. லிங்கா படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்துள்ளார். வடிவேலு, விவேக் உள்ளிட்ட நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். தற்போது விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக வருகிறார்.

மாதவரம் காவல் நிலைத்தில் பாலாஜி மீது நித்யா அளித்த புகாரில், ஜாதியைச் சொல்லித் திட்டுகிறார் அந்தப் புகாரில், தனது சமுதாயத்தைக் குறிப்பிட்டு சொல்லி திட்டுகிறார். அடிக்கிறார். கொடுமை செய்கிறார் என்று கூறியுள்ளார்.

மாதவரம் போலீஸார் இதுவரை வழக்குப் பதிவு செய்யவில்லை. விசாரணை நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ஒங்களுக்கும் ஒரு குச்சி ஐஸ் வாங்கித் தரட்டா?”-பெரியவாளிடம் ஒரு குழந்தை


“ஒங்களுக்கும் ஒரு குச்சி ஐஸ் வாங்கித் தரட்டா?”-பெரியவாளிடம் ஒரு குழந்தை

“நான் சொல்ற ரெண்டு குழந்தைகளுக்கு நீ குச்சி ஐஸ்வாங்கித் தர்றியா?”
(பணியாளரின் குழந்தைகளுக்குக் காட்டிய பரிவு)-பெரியவா.

கட்டுரையாளர்-பி.சுவாமிநாதன்
தட்டச்சு வரகூரான் நாராயணன்

குழந்தைகள் என்றாலே மகா பெரியவாளுக்கு அத்தனை இஷ்டம். அவர்களைத் தன் அருகே
காந்தம் போல் இழுத்து, அவர்களுடன் நகைச்சுவையாகப் பேசிக் கவர்ந்து விடுவார்.

அந்தத் தெய்வத்திடமும் குழந்தைகள் மயங்கிப் போய் விடும்.குழந்தைகளுக்குக்
கொடுப்பதற்கென்று மகா பெரியவாளிடம்எப்போதும் கல்கண்டு ஸ்டாக் இருந்து கொண்டே
இருக்கும்.

ஒரு முறை மகா பெரியவா காமாட்சி அம்மனைத் தரிசித்துவிட்டு காஞ்சி
ஸ்ரீமடத்துக்குள் நுழைந்து கொண்டிருந்தார்.

அப்போது ஸ்ரீமடத்தின் வாசலில் பணக்காரக் குடும்பத்தைச்சேர்ந்த சிறு குழந்தை
(நாலைந்து வயது இருக்கலாம்) ஒன்று குச்சி ஐஸைக் கையில் வைத்துக்கொண்டு ரசித்து
சுவைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தது.

ஸ்ரீமடத்தின் உள்ளே நுழையப் போன மகா பெரியவா, வாசலில் நின்று கொண்டு இந்தக்
குழந்தை குச்சி ஐஸ்சாப்பிடும் அழகைப் பார்த்து மேலும் நகராமல் அப்படியே நின்று
விட் டார். ஆனால் குழந்தை வேறு எங்கோ பார்த்தபடி ஐஸை நக்கிக் கொண்டிருந்தது.

ஒரு சொடக்குப் போட்டுக் குழந்தையின் பார்வையைத்தன் பக்கம் திருப்பிய மகா
பெரியவா, “என்ன,ஐஸ்சாப்பிடறியா” என்று மழலை பாஷையில் கேட்டார்.

“ஆமா….” என்று மழலையில் துடுக்கத்தனமாகப் பதில்சொன்ன குழந்தை,
“இருங்கோ…ஒங்களுக்கும் ஒரு ஐஸ்வாங்கித் தரட்டா?” என்று ஆர்வ மிகுதியில்
கேட்டு விட்டது.

மகா பெரியவாளின் கைங்கர்யத்தில் இருந்த சிப்பந்திகளும்மகானைத் தொடர்ந்து வந்த
ஒரு சில பக்தர்களும் அந்தக்குழந்தையை அடக்கும் வகையில் ஏதோ சொல்ல வாய்
திறக்க.. அவர்கள் அனைவரையும் கை தட்டி ‘ஸ்ஸ்ஸ்..’ என்று அடக்கி விட்டார் மகா
பெரியவா.

தான் கேட்ட கேள்விக்கு மகா பெரியவா ஏன் இன்னும் பதில்சொல்லாமல் இருக்கிறார்
என்று யோசித்த குழந்தை, தான் குச்சி ஐஸ் வாங்கித் தந்தால் மகா பெரியவா
சாப்பிடமாட்டார்போலிருக்கிறது என்று தீர்மானித்து விட்டது. உடனே, மகா பெரியவா
மேல் கோபம் கொண்டு முகத்தை வேறு பக்கம்திருப்பிக் கொண்டது. ஆனாலும் ஐஸை
சாப்பிடுவதை மட்டும் நிறுத்தவில்லை.

இந்த ரசமான காட்சிகளை மகா பெரியவா உட்பட அங்கு கூடி இருந்த அன்பர்கள் பலரும்
ரசிக்கத்தான் செய்தார்கள்.

மீண்டும் ஒரு சொடக்குப் போட்டுக் குழந்தையின் பார்வையைத்திருப்பி, “என்ன
குழந்தே… கோபமாயிட்டே போலிருக்கு… நான் எனக்குதான் வேண்டாம்னுதான்
சொன்னேன்.சரி….நான் சொல்ற ரெண்டு குழந்தைகளுக்கு நீ குச்சி ஐஸ்வாங்கித்
தர்றியா?”என்று மிகவும் சாந்தமான குரலில் அந்தக்குழந்தையின் முகம் கோணாத
வகையில் அமைதியாகக்கேட்டார் மகா பெரியவா.

இந்தக் குழந்தையின் பெற்றோர் அநேகமாக,ஸ்ரீமடத்துக்குள்மகா பெரியவா
தரிசனத்துக்காகக் காத்திருக்கிறார்கள்போலிருக்கிறது. குழந்தை ஐஸ் கேட்டதால்,
கையில் காசை கொடுத்து அனுப்பிவிட்டார்கள். போலிருக்கிறது. தனக்கு ஐஸ்வாங்கியது
போகக்கையில் கொஞ்சம் காசும் மிச்சம் வைத்திருந்தது.

மகா பெரியவா கேட்டதும் அந்தப் பெண் குழந்தையின் முகத்தில் ஒரு சந்தோஷம்.
“சொல்லுங்கோ…நானே வாங்கித் தர்றேன்” என்றது.

உடனே ஸ்ரீமடத்தில் அப்போது பணியில் இருந்த மேலே சொன்னபணியாளரின் இரண்டு பெண்
குழந்தைகளையும் அழைத்து வரச்சொன்னார். ஒரு சிப்பந்தி ஓடிப் போய், ஸ்ரீமடத்தின்
உள்ளிருந்துஅந்த இரு பெண் குழந்தைகளையும் சட்டென்று அழைத்து வந்தார்.

மகா ஸ்வாமிகள் அருகே அவர்கள் வந்தவுடன், “”தோ…இந்த ரெண்டு பேர்தான் நான்
சொன்னவா. இவர்களுக்கும்குச்சி ஐஸ் வாங்கிக் கொடேன், சாப்பிடட்டும்” என்று
சொல்ல…அந்தப் பணக்கார வீட்டுப் பெண் குழந்தை வாசலின் அருகே நின்று
கொண்டிருந்த ஐஸ் வண்டிக்கு அருகே ஓடிச் சென்றுவாங்கிக்கொண்டு வந்து கொடுத்தது.

பணியாளரின் இரண்டு குழந்தைகளும் முகத்தில் மகிழ்ச்சி பொங்கஅந்தக் குச்சி ஐஸை
வாங்கிச் சப்பி சாப்பிட ஆரம்பித்தன.

மகா பெரியவா முகத்தில் அப்படி ஒரு ஆனந்தம். பணக்கார வீட்டுக்
குழந்தையும்,ஏழையின் இரண்டு குழந்தைகளும்ஒருசேர ஐஸ் சாப்பிடும் அழகை ஒரு சில
நிமிடங்களுக்கு நின்று வேடிக்கைப் பார்த்தார் மகா பெரியவா.

“பாவம்…இந்த வேலைக்காரனோட குழந்தை எல்லாம்குச்சி ஐஸைப்
பாத்திருக்குமா…இல்லே, இது போன்ற தின்பண்டங்களைத்தான் வாங்கிச்
சாப்பிட்டிருக்குமா?” என்று ஸ்ரீமடத்தின் சிப்பந்திகளைப் பார்த்துச் சொல்லி
விட்டு, விடுவிடுவென ஸ்ரீமடத்தினுள் நுழைந்தார்.

‘ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர’ என்ற கோஷம் முழங்க பக்தர்கள் கூட்டம் அவரைப் பின்
தொடர்ந்து உள்ளே சென்றது.

சடங்கின் போது ஏன் பூணூலை இடம்வலம் தோள்களில் மாற்றிக்கொண்டே இருக்கிறோம்…?

kanchi periyava - 2026

சடங்கின் போது, ஏன் பூணூலை இடம், வலம் தோள்களில் மாற்றிக்கொண்டே இருக்கிறோம்…?” – மஹா பெரியவா.

தெய்வ காரியங்களுக்கு பக்தி வேண்டும். பித்ரு காரியங்களுக்கு சிரத்தை வேண்டும். பக்தியோடு செய்வது யக்ஞம் ; சிரத்தையோடு செய்வது சிராத்தம். தெய்வகாரியங்களைப் பண்ணும்போது சிகையை நன்றாக முடிந்து கொண்டு, யக்ஞோபவீதம் (பூணூல்) இடது தோளில் இருக்கும்படியாக, சிரத்தையோடு செய்ய வேண்டும்.

இதற்காகத்தான் சிகை, யக்ஞோபவீதம் இரண்டும் இருக்கின்றன. சந்நியாசிகளுக்கு இவை இரண்டும் இல்லை. பித்ரு காரியத்தையும், பல தேவதைகளின் உபாஸனையையும் விட்டுவிட்டு, நேரே பரமாத்ம உபாஸனையை எந்தவிதமான லௌகிக அபே¬க்ஷயும் இன்றிச் செய்பவர்கள் அவர்கள். நேராகவே கடவுளிடம் போகிற பிற மதஸ்தர்களுக்கும் சிகை, யக்ஞோபவீதம் இல்லை.

ஏன் இப்படித் தேவர்களுக்கு இடது தோளில் பூணூலோடும், பித்ருக்களுக்கு வலது தோளில் பூணூலோடும் காரியம் பண்ணி வேண்டும் என்று சொல்கிறேன்:

கிழக்கு முகமாக இருந்து கொண்டே காரியங்களைச் செய்ய வேண்டும். வடக்கு தேவர்களிடம் போகிற திசை, உத்தராயனம் என்பது அதுதான். உத்தரம் என்றால் வடக்கு. தெற்குதான் பித்ருக்கள் இருக்கும் பக்கம். ‘ தென்புலத்தார் ‘ என்று திருவள்ளுவர்கூடச் சொல்கிறாரல்லவா ? தக்ஷிணம் என்றால் தெற்கு. தக்ஷிணாயனம் என்பது பித்ரு லோக மார்க்கம்….. ‘ உத்தராயணம் ‘ என்பதில் மூன்று சுழி ‘ ண ‘ போட்டும், ‘ தக்ஷிணாயனம் ‘ என்னும்போது இரண்டு சுழி ‘ ன ‘ என்பது ‘ ண ‘ வாக மாறிவிடும். இது வியாகரண விதி. தற்காலத்தில் மனம் போனபடி பத்திரிகைகளில் எழுதுவதால் இதைச் சொல்ல நேர்ந்தது.

உத்தராயண தேவ மார்க்கத்தையும், தக்ஷிணாயன பித்ரு மார்க்கத்தையும் பற்றிப் பகவான் கீதையில் சொல்லியிருக்கிறார். நாம் கிழக்குமுகமாக இருந்துகொண்டு பித்ரு காரியம் பண்ணும்போது, எந்தத் தோள் தெற்குப் பக்கமாக இருக்கிறது? வலது தோள்தான். அதனால்தான் பித்ரு காரியத்தில் யக்ஞோபவீதம் அந்தத் தோளின்மேல் இருக்கும்படியாகப் போட்டுக்கொள்ள வேண்டும் என்பது.

” பிரதக்ஷணம் பண்ணுவது ” என்கிறோமே, இதற்குக் கூட தக்ஷிண (தெற்கு) திசையை நோக்கி என்றுதான் அர்த்தம். முக்காலே மூன்றுவாசிக் கோயில்களில் ராஜகோபுரம் கிழக்குப் பார்த்தான் இருக்கும். அதற்குள் நுழைந்து நாம் பிரதக்ஷிணம் ஆரம்பிக்கும்போது, முதலில் தெற்குப் பார்க்கத்தான் போவோம்.

இதே மாதிரி, நாம் கிழக்குமுகமாக இருந்துகொண்டு தேவகாரியம் பண்ணும்போது, தேவர்களின் திசையான வடக்கு திசையைப் பார்க்க இருப்பது நம்முடைய இடது தோள்தான். அதனால்தான், தேவ காரியங்களில் பூணூல் இடது தோள்தான். அதனால்தான், தேவ காரியங்களில் பூணூல் இடது தோள்மேல் இருக்க வேண்டும் என்பது.

தேவகாரியம், பித்ரு காரியம் இரண்டும் செய்யாத மற்ற வேளைகளில், அதாவது உத்யோக வேளை முதலானதுகளின் போது, பூணூலை ஒரு தோளின் மேலேயும் இல்லாமல், கழுத்திலிருந்தே மாலைமாதிரித் தொங்கவிட்டுக் கொள்ள வேண்டும். இதை யாரும் அனுஸரிக்கக் காணோம். பித்ரு காரியம் தவிர மற்ற எல்லா ஸமயங்களிலும் இடது தோள் மேலேயே யக்ஞோபவீதத்தைப் போட்டுக் கொள்கிறார்கள்.

தேவ காரியத்தின் போது இடது தோளுக்கு மேல் பூணூல் இருப்பதற்கு ‘ யக்ஞோபவீதம் ‘ என்றும், பித்ரு காரியத்தின் போது வலது தோளுக்கு மேல் இருப்பதற்கு ‘ ப்ராசீனாவீதம் ‘ என்றும், மநுஷ்யர்களுக்கான லோக காரியங்கள் செய்யும் மற்ற எல்லா ஸமயத்திலும் மாலை மாதிரித் தொங்குவதற்கு ‘ நிவீதம் ‘ என்றும் பெயர். பிருஹதாரண்யக உபநிஷத்தில் ஒரு ஞானி இந்த எல்லாத் தினுஸுக் கர்மாக்களையும் விட்டு விட்டுப் பிச்சைக்கார ஸந்நியாஸியாகப் புறப்படுவதைப் பற்றி வருகிறது. ( III.5.1) . அதற்கு ஆசார்யாள் பாஷ்யம் பண்ணும் போது, தேவ-பித்ரு-மநுஷ்ய கர்மாக்களை பண்ணுவதற்காகவே க்ருஹஸ்தனுக்குப் பூணூல் இருக்கிறதென்றும், எனவே, இந்த கர்மாக்களை விட்டுவிட்ட ஸந்நியாஸிக்குப் பூணூல் கிடையாதென்றும் ச்ருதி வாக்யங்களைக் காட்டி ஸ்தாபிக்கிறார். அந்த அலசலில், ” நிவீதம் மநுஷ்யாணாம் ” – மநுஷ்யர்களுக்கான காரியத்தின்போது (பூணூலை) மாலையாகப் போட்டுக்கொள்ள வேண்டும். என்று ச்ருதி ப்ரமாணமே இருப்பதாகக் காட்டியிருக்கிறார். ஆனாலும் நடைமுறையில் பலகாலமாகவே அந்த வழக்கம் எடுபட்டுப் போயிருக்கிறது.

பிரணாப் முகர்ஜியின் காஞ்சிபுரம் வருகை திடீர் ரத்து

pranab mukherjee - 2026

சென்னை:
இந்திய குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியின் காஞ்சிபுரம் வருகை பாதுகாப்புக் காரணங்களுக்காக திடீரென ரத்துசெய்யப்பட்டிருக்கிறது.
பிரணாப் முகர்ஜி வரும் 24ஆம் தேதி காஞ்சீபுரம் செல்வதாக இருந்தது. வரதராஜப் பெருமாள் கோயில், காமாட்சி அம்மன் கோவில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு, காஞ்சி சங்கரமடத்துக்குச் செல்வார் என்றும், பின் ஏனாத்தூரில் உள்ள சங்கரா பல்கலைக்கழகத்தில் ராமானுஜர் ஆயிரமாவது ஜெயந்தியை முன்னிட்டு மாணவ-மாணவிகளிடையே உரையாற்றுவார் என்றும் பயணத்திட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்காக, சின்ன காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் ஹெலிபேட் அமைக்கும் பணி முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டது. மேலும், மத்திய தொழில்நுட்ப பாதுகாப்பு படையினர் மற்றும் இந்து சமய அறநிலையத் துறையினர் கோவில்களில் பாதுகாப்பு மற்றும் முன் ஏற்பாடுப் பணிகளை கடந்த சில நாட்களாக மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில் பிரணாப் முகர்ஜியின் காஞ்சிபுரம் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே அங்கு மேற்கொள்ளப்பட்டு வந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் நிறுத்தப்பட்ட்டன.

காஞ்சிபுரத்தில் பிரணாப் முகர்ஜி பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் பாதுகாப்புக் குறைபாடுகள் உள்ள காரணத்தால் பயணம் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும், நாளை ஊட்டி செல்லும் பிரணாப் முகர்ஜி, அங்கு லவ்டேல் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெறும் ஆண்டு விழாவில் பங்கேற்கிறார். பின் ஊட்டி ராஜ்பவன் சென்று தங்கி, புதன் கிழமை காலை ஊட்டி தாவரவியல் பூங்காவுக்குச் சென்று பார்வையிடுகிறார். பின் ஹெலிகாப்டர் மூலம் கோவை விமான நிலையம் திரும்பி, தனி விமானம் மூலம் தில்லி திரும்புகிறார்.

ரஜினி வரக்கூடாது: எதிர்ப்பு தெரிவித்து உருவபொம்மை எரிப்பு

IMG 20170515 125222 - 2026

சென்னை:

ரஜினி அரசியலுக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடைபெற்றது. தமிழர் முன்னேற்றப் படையினர் எனும் அமைப்பினர் இன்று காலை ரஜினி வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பின்னர் அந்த அமைப்பினர் சென்னை கதீட்ரல் சாலையில் ரஜினியின் உருவபொம்மையை எரித்து, ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்லி, ரஜினிக்கு எதிராக கோஷங்கள் இட்டு, ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று ஒரு தரப்பு பேசிக் கொண்டிருக்க, அவருக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏற்கெனவே இது குறித்து தனது பேச்சில் குறிப்பிட்ட் ரஜினி காந்த், சமூக வலைத்தளங்களில் தனக்கு எதிராக மேற்கொண்ட பிரசாரம் குறித்து வருந்துவதாகக் கூறினார்.

சமாதானப் பேச்சு நடந்திருந்தால் எல்லாம் கிடைத்திருக்கும்: அதற்குள் ராஜீவ் கொலையானார்: கண்கலங்கிய ப.சிதம்பரம்!

chidambaram - 2026

சென்னை:
சமாதானப் பேச்சுவார்த்தை நடந்திருந்தால், இலங்கைத் தமிழர்களுக்கு எல்லாம் கிடைத்திருக்கும்; ஆனால், அதற்குள் அவரைப் படுகொலை செய்துவிட்டார்கள் என்று ராஜீவ் நினைவு தினத்தில் கண்கலங்கிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991 மே 21-ஆம் தேதி ஸ்ரீ பெரும்புதூரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் படுகொலை செய்யப்பட்டார். அவரது நினைவு தினம் வருடந்தோறும் மே 21ம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. நேற்று ராஜீவ் நினைவு தினம் நாடு முழுதும் கடைபிடிக்கப்பட்டது.

தமிழகத்திலும் காங்கிரஸ் கட்சியினர் ராஜீவ் நினைவு தினத்தை ஒட்டி, அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சென்னையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய ப.சிதம்பரம், ராஜீவ் குறித்த நினைவுகளைக் கூறி கண்கலங்கிப் பேசினார். “மகாத்மா காந்தி, ஆபிரகாம் லிங்கன், ஜான் கென்னடி உள்ளிட்டோர் சமாதான தூதுவர்களாக இருந்ததால் கொல்லப்பட்டனர். ராஜீவும் அவ்வாறு இருந்ததால் போராளிகள் சிலரால் கொல்லப்பட்டார். சமாதான பேச்சுவார்த்தை நடந்திருந்தால் தமிழர்களுக்கான சுயாட்சி உரிமை, மொழி உரிமை, சம குடியுரிமை உள்ளிட்டவை கிடைத்திருக்கும். ஆனால் அதற்குள் அவர் கொலை செய்யப்பட்டு விட்டார். அவர் மேற்கொண்ட சமாதான நடவடிக்கைகளை சிலர் விரும்பவில்லை என்பதுதான் உண்மை என்று பேசினார் ப.சிதம்பரம்.

முன்னதாக, தில்லியில் உள்ள வீர பூமியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

 

அத்வானி உள்ளிட்டோர் மீதான அயோத்தி சர்ச்சைக்குரிய கட்டட இடிப்பு வழக்கு: இன்று விசாரணை

ayodhya disputed babri building demolished - 2026

புது தில்லி:

அத்வானி உள்ளிட்டோர் மீதான அயோத்தி சர்ச்சைக்குரிய கட்டட இடிப்பு வழக்கில் இன்று விசாரணை நடைபெறுகிறது.

உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில், அத்வானி உள்ளிட்டோர் மீதான, அயோத்தி சர்ச்சைக்குரிய கட்டட இடிப்பு வழக்கு விசாரணை, லக்னௌவில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் திங்கட் கிழமை இன்று மீண்டும் தொடங்குகிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த சர்ச்சைக்குரிய கட்டடம் கடந்த 1992 டிசம்பர் 6ல் இடிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் கர சேவகர்களுக்கு எதிராக லக்னௌ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இதில், குற்றச் சதியில் ஈடுபட்டதாக பாரதீய ஜனதா மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, உ.பி. முன்னாள் முதல்வரும், தற்போதைய ராஜஸ்தான் ஆளுநருமான கல்யாண் சிங் உள்ளிட்ட 13 பேர் மீது ரேபரேலி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இருப்பினும், இந்த வழக்கில் இருந்து அத்வானி உள்ளிட்டோரை கடந்த 2001-ம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றம் விடுவித்தது.

இதை எதிர்த்து சி.பி.ஐ. தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், அத்வானி உள்ளிட்டோர் மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது. மேலும் ஒரு சம்பவத்தில் இருவேறு நீதிமன்றங்களில் விசாரணை நடத்தக்கூடாது என உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், அத்வானி உள்ளிட்டோர் மீதான குற்றச்சதி வழக்கையும் லக்னௌ சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி கடந்த மாதம் 19-ந் தேதி உத்தரவிட்டது.

அத்துடன் இந்த வழக்கில் ஒரு மாதத்துக்குள் விசாரணையை தொடங்கி 2 ஆண்டுக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், இதற்காக இந்த வழக்கை தினந்தோறும் விசாரிக்க அறிவுறுத்தியது. அதன்படி இந்த வழக்கின் விசாரணை லக்னௌ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று தொடங்குகிறது.

முன்னதாக வழக்கில் தொடர்புபடுத்தப்பட்ட முன்னாள் எம்.பி. வேதாந்தி, விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர்களான கண்பத் ராய், வைகுந்த் லால் சர்மா உள்ளிட்ட 5 பேர் லக்னோ நீதிமன்றத்தில் சரணடைந்து உடனடி ஜாமீன் பெற்றனர். அதுபோல் அத்வானி உள்ளிட்ட தலைவர்களும் ஜாமீன் பெற வேண்டும். கல்யாண் சிங் தற்போது ஆளுநராக இருப்பதால், அவர் அப்பதவியில் இருந்து விலகிய பின் அவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

15 வருடம் சுதந்திரமா இருந்தாச்சு; இனி சிறைக்குச் செல்லலாம்: கிரிமினல்களுக்கு யோகி ஆதித்யநாத் பதில்

yogi adityanath - 2026

லக்னௌ:
15 வருசமா சுதந்திரமாக இருந்துவிட்டீர்கள், இனி சிறைக்குச் செல்லத் தயாராகுங்கள் என்று கூறியுள்ளார் உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்.

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்று முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு பதிலடி தரும் வகையில் ஞாயிற்றுக் கிழமை நேற்று ஒரு நிகழ்ச்சியில் பேசிய யோகி ஆதித்யநாத், கிரிமினல்களிடம் இரக்கம் காட்டுவது என்ற பேச்சுக்கே இடமில்லை’ என கறாராகத் தெரிவித்தார்.

சட்டத்தை மீறுபவர்கள், அரசியல் ரீதியாக தஞ்சம் அடைந்துகொண்டு மாநிலத்தின் அமைதியைக் குலைப்பவர்களை சட்டத்தின் கையில் ஒப்படைப்பதில் எந்தவிதத்திலும் தயங்கப் போவதில்லை. அரசும் நிர்வாகமும் கண்டிப்புடன் அவர்களைக் கையாளும். கடந்த 15 வருடங்களாக சிலர் சுதந்திரமாக நினைத்தபடி இருந்துவிட்டனர். அவர்கள் ஒரு நாளில் தங்களை மாற்றிக் கொள்ள இயலாது. அவர்கள் இப்போதும் கூட தங்கள் குணத்தை சில பகுதிகளில் வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்கள் நிச்சயம் சிறைக்குச் செல்வார்கள். விவசாயிகளை மற்றவர்கள் சுரண்ட அனுமதிக்க மாட்டேன். விவசாயிகள் நலனை புறக்கணிக்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளின் உற்பத்தி பொருட்கள், நல்ல விலைக்கு வாங்கப்பட வேண்டும். என்று பேசினார் யோகி ஆதித்யநாத்.